Wednesday, 7 October 2009

மரணத்தை வெல்லலாம்!!

அன்பு நண்பர்களே!

இதற்கு முந்தைய பதிவில் மாண்டவர் மீண்டால் என்ற தலைப்பில் எழுதியிருந்தேன். ஆச்சரியம் பாருங்கள் இன்றைய செய்தியில் “நானோ’ தொழில்நுட்பம் மூலம்  இன்னும் 20 ஆண்டுகளிலெயே மரணத்தை வெல்ல முடியும் என்று   செய்தி வந்துள்ளது!

இதைச் சொல்லியிருப்பவர் ஒரு பிரிட்டீஷ் விஞ்ஞானி. ‘ரே குர்ஸ்வீல்’,Raymond Kurzweil-என்ற அவர் இதுபற்றி நிறைய ஆய்வுகள் செய்துள்ளார்.optical character recognition (OCR), text-to-speech synthesis, speech recognition technology, போன்ற துறைகளில் விற்பன்னர்.இவருக்கு பதினாறு பல்கலைக்கழகங்கள் டாக்டரேட் பட்டம் வழங்கியுள்ளன!!(நம்மூர் பலகலைக் கழகங்கள் இல்லை!!)

.

நானோ தொழில்நுட்பத்தின்மூலம் ’நானோ படகு-nano boat’ என்ற நுண்ணிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நானோ போட் மூலம் உடலில் உள்ள கட்டிகளுக்கு சிகிச்சை அளிக்கமுடியும். மேலும் இந்தக்கருவியை உடலில் செலுத்தி உடலில் இரத்தம் வராமல் அறுவை சிகிச்சை செய்ய முடியும்.

இவருடைய தினசரி உணவு என்ன தெரியுமா? 150வித விட்டமின்கள்,10 கப் பச்சைத் தேனீர், 10 கிளாஸ் அல்கலின் தண்ணீர்!!( தண்ணீர் என்றவுடன் மக்கள் 10 கிளாஸ் ’தீர்த்தம்’ என்று போயிடாதீங்க!! இஃகி!! இஃகி!!)

நானோ தொழில்நுட்பம் மூலம் செயற்கைக் கண், செயற்கை மனித உறுப்புக்கள் செய்யமுடியும் என்பது உண்மை. ஆனால் மனித மரணத்தை நிறுத்தமுடியுமா?

எலியில் நீரிழிவு நோயைக் குணப்படுத்தியிருப்பதாகக் கூறுகிறார் ரே!! அதேபோல் பார்க்கின்சன் என்னும் நடுக்குவாதத்துக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ரே புதிய மூளைக்குள் வைத்து பர்கின்சனைக் குணமாக்கும் கருவியைக் கண்டுபிடித்துள்ளதாகக் கூறுகிறார். சாகாமல் இருக்கிறோமோ இல்லையோ இந்த பார்க்கின்சன் வியாதி வந்த நோயாளிகள் தினமும் மாத்திரை போடவில்லையென்றால் அவர்கள் படும் கஷ்டம் சொல்லி மாளாது!!

நம்பிக்கைதானே வாழ்க்கை! 30 வயதில் இந்த விஞ்ஞானிக்கே நீரிழிவு நோய் வந்துவிட்டது. இப்பொழுது இவர் வயது 57.

உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் இந்நாள் வரை நீரிழிவை வென்று மிகப்பெரிய விஞ்ஞானியாகவும் இருக்கிறார். அதற்காகவே நான் இவரைப் பெருமையுடன் வாழ்த்துகிறேன்!! போற்றுவோர் போற்றட்டும்! புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும்!!!

20 comments:

தினேஷ் said...

தலை வணங்குகிறேன்..

முனைவர் இரா.குணசீலன் said...

அறிவியலின் விந்தை..
நேனோ தொழில்நுட்பம்!

நாம் விரும்பும் போது செத்துக் கொள்ளலாம் என்ற நிலையை நேனோ தொழில்நுட்பம் உருவாக்கும் என்ற செய்தியை நீண்ட நாட்களாகவே அறிவியல் சொல்லி வருகிறது.

செல்களில் முதிர்வு சாவுக்குக் காரணம்...

செல்களைப் புதுப்பிக்கும் போது நம் வாழ்நாள்காலம் நீள்கிறது என்று படித்ததாக நினைவு!

நம் சித்தர்கள் காயகல்பம் என்று இதனையே நீண்ட காலம் பயன்படுத்தினர்..

காயகல்பம் செல்களைப் புதுப்பிக்கும் என்று நம்பினர்..

செல்களில் மறுசுழற்சி பற்றி ஒரு கட்டுரை எழுதுங்கள் மருத்துவரே...

முனைவர் இரா.குணசீலன் said...

அந்த காலத்தில் அரசர், சித்தர், உள்ளிட்டவர்களின் வாழ்நாள் பற்றி கூறும் போது பலநூறு ஆண்டுகளாகக் குறிப்பிடுகின்றனர்.

சான்றாக ..

திருமூலர் 3000 ஆண்டுகாலம் வாழ்ந்தாராம்...

“காயமே இது பொய்யடா
வெறும் காற்றடைத்த பையடா..!

என்றெல்லாம் அவர்கள் வாழ்ந்தனராம்..

தாம் விரும்பும் போது இதயத் துடிப்பை நிறுத்தி
வேண்டும் போது துடிக்கச் செய்தனராம்..

இதெல்லாம் சாத்தியமா மருத்துவரே..?
சித்தர்களின் மருத்துவத்தை முழுவதும் புறந்தள்ளவும் முடியவில்லை..
முழுவதும் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.


இதயத் துடிப்பு
செல்களின் இயக்கம்
உயிர் - மூளை, இதயத்துக்கான தொடர்பு..

ஆகிய கூறுகளில் அறிவியல் விளக்கங்களை எதிர்பார்க்கிறேன் நண்பரே!

Ashok D said...

பதிவும் பின்னூட்டம்மும் :)

கலையரசன் said...

கேள்வி படாத தகவலா இருக்கு! உங்களுக்கு எப்படிங்க தெரியும்?

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//செல்களில் மறுசுழற்சி பற்றி ஒரு கட்டுரை எழுதுங்கள்//
stem cells பற்றிச் சொல்கிறாரா? இடுகை அருமை.

S.A. நவாஸுதீன் said...

இன்றைய செய்தியில் “நானோ’ தொழில்நுட்பம் மூலம் இன்னும் 20 ஆண்டுகளிலெயே மரணத்தை வெல்ல முடியும் என்று செய்தி வந்துள்ளது! இதைச் சொல்லியிருப்பவர் ஒரு பிரிட்டீஷ் விஞ்ஞானி. ‘ரே குர்ஸ்வீல்’

அபூர்வமான தகவல்கள் அடிக்கடி தந்து மிரள வைக்கின்றீர்கள் தேவா சார். ஆச்சரியமான செய்திதான். இன்னும் 20 வருடம் இவரும் உயிருடன் இருக்க வேண்டுவோம். (அப்பதானே ரிசல்ட் தெரியும்).

Anonymous said...

தேவன் மாயம்

"நடுக்குவாதத்துக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை"

it is very easy medicine...

வித்தகமாய் சூனிய முடக்கொத்தானுமே
சமூலமெடுத்து .........
வித்தராய மாயரைத்து மெத்தவே ஆவலாய்
உண்ணவே கட்டுகள் மலமும் சீதம்
விட்டுவிடுமே ..... பயிலக் கட்டுவலி
தான் நடுக்கு தானும் ஓடும்
திட்டமதாய் செயலாகும்.
- sankaralingam swamikkal

* நடுக்கு = நடுக்குவாதம்

V.R.David Raj
Bangalore.

ஆரூரன் விசுவநாதன் said...

நல்ல பதிவு, வாழ்த்துக்கள்

வால்பையன் said...

இவரு விஞ்ஞானி!

தேவன் மாயம் said...

சூரியன் said...
தலை வணங்குகிறேன்..

07 October 2009 03:39///

அறிவியலுக்கு!

தேவன் மாயம் said...

முனைவர்.இரா.குணசீலன் said...
அறிவியலின் விந்தை..
நேனோ தொழில்நுட்பம்!

நாம் விரும்பும் போது செத்துக் கொள்ளலாம் என்ற நிலையை நேனோ தொழில்நுட்பம் உருவாக்கும் என்ற செய்தியை நீண்ட நாட்களாகவே அறிவியல் சொல்லி வருகிறது.

செல்களில் முதிர்வு சாவுக்குக் காரணம்...

செல்களைப் புதுப்பிக்கும் போது நம் வாழ்நாள்காலம் நீள்கிறது என்று படித்ததாக நினைவு!

நம் சித்தர்கள் காயகல்பம் என்று இதனையே நீண்ட காலம் பயன்படுத்தினர்..

காயகல்பம் செல்களைப் புதுப்பிக்கும் என்று நம்பினர்..

செல்களில் மறுசுழற்சி பற்றி ஒரு கட்டுரை எழுதுங்கள் மருத்துவரே...

07 October 2009 03:56///

நீங்கள் சொல்லுவது சரிதான் . எழுத முய்ற்சி செய்கிறேன்..

தருமி said...

//..’நானோ படகு-nano boat’ என்ற நுண்ணிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது//

அந்தக் காலத்தில் fantastic voyage என்றொரு் கதை படித்தேன். கற்பனை நிஜமாகிறது.

தருமி said...

//காயகல்பம் செல்களைப் புதுப்பிக்கும் என்று நம்பினர்..//

another alchemy ... ?

தேவன் மாயம் said...

இதயத் துடிப்பு
செல்களின் இயக்கம்
உயிர் - மூளை, இதயத்துக்கான தொடர்பு..

ஆகிய கூறுகளில் அறிவியல் விளக்கங்களை எதிர்பார்க்கிறேன் நண்பரே!

07 October 2009 04:00///

தீவிரமா யோசித்துத்தான் இதை எழுத வேண்டும்!!

Jerry Eshananda said...

சம்போ ...சிவ சம்போ

ப்ரியமுடன் வசந்த் said...

ஹாட்ஸ் ஆஃப்....

பீர் | Peer said...

சூப்பர்

கோவி.கண்ணன் said...

தேவன்மாயம்

இதைப் படிச்சிட்டு சொல்லுங்க, அது இந்தப் பதிவுக்கு பொருத்தமனாது தான்.

:)

அப்துல்மாலிக் said...

நல்ல பதிவு

பகிர்வுக்கு நன்றி

உங்கள் பதிவு என்ஸைக்ளோபீடியா ரேஞ்சுக்கு இருக்கு, நிறைய அரிய தகவல்கள்

தொடருங்க சார்

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory