Wednesday, 14 October 2009

கொஞ்சம் தேநீர்- மௌனமாய்...

மக்கிச் சிதைந்த

சாளரங்களின்வழி

தரையெங்கும்

பரவியிருக்கிறது,

மவுனமாய் கசிந்த ஒளி,

 

சிதிலமடைந்த

கதவொன்றில் சிரித்தபடி

விளக்குடன்

வரவேற்கும்

செதுக்கப்பட்ட பதுமை!!

 

சிலந்தி வலைகளின்

பிடியில் உத்தரத்தில் தொங்கும்

என்றோ தொங்கவிடப்பட்ட

விளக்குகள்!

 

பூட்டப்பட்ட

சயன அறைக்குள்

பல சந்ததிகளின்

சூட்சுமம் பொதிந்த

பழைய கட்டில்!

 

இருளின் ஆழத்தில்

பாசிகளால் மறைக்கப்பட்டு,

சலனமற்றுக் கிடக்கிறது

இறைக்கப்படாத

தண்ணீர்,

 

காற்றின் அந்தரங்கங்களில்

கலந்து கிடக்கும்

என்றோ ஒலித்த

தாலாட்டு!

 

பூக்களைக் கொட்டியபடி

வாசலில் நிற்கும்

பூவரச மரம்,

 

தொங்கிக்கொண்டிருந்த

குருவிகளின் திசையறியாது,

வண்டு துளைத்து

மெலிந்த

தோட்டத்து ஒற்றை

மாமரம்!

 

கடந்துபோன

எச்சங்களின் நினைவைச்

சுமந்து கிடக்கும்

வண்டிப்பாதை!!

 

அரசமர இலைகளின்

சலசலப்பில்

சிதிலமடைந்த

செங்கற்களின் நடுவே

அமைதியாய்

காத்து நிற்கும் குலசாமி!

32 comments:

நாடோடி இலக்கியன் said...

சூழ்நிலையின் விவரிப்புகள் நன்றாக இருக்கிறது நண்பரே.

Unknown said...

' வருஷம் 16 ', ஜெயிலிலிருந்து கார்த்திக் வீடு வரும்
முதல் காட்சியை ஞாபகப் படுத்துகிறது.
'புரிகின்ற' அருமையான கவிதை

S.A. நவாஸுதீன் said...

கவிதை ரொம்ப டாப்பா இருக்கு தேவா சார்.
***********************************

”மக்கிச் சிதைந்த சாளரங்களின்வழி தரையெங்கும் பரவியிருக்கிறது, மவுனமாய் கசிந்த ஒளி”

”பூட்டப்பட்ட சயன அறைக்குள் பல சந்ததிகளின் சூட்சுமம் பொதிந்த பழைய கட்டில்!”

”காற்றின் அந்தரங்கங்களில் கலந்து கிடக்கும் என்றோ ஒலித்த தாலாட்டு!”

”தொங்கிக்கொண்டிருந்த குருவிகளின் திசையறியாது, வண்டு துளைத்து மெலிந்த தோட்டத்து ஒற்றை மாமரம்”

”சலசலப்பில் சிதிலமடைந்த செங்கற்களின் நடுவே அமைதியாய் காத்து நிற்கும் குலசாமி!”

***********************************

காட்சிகளை கண்முன் நிறுத்தும் கனமான வரிகள். அருமை தேவா சார்

SUFFIX said...

காட்சிகளை கண்முன் கொண்டு வந்து விட்டிர்களே டாக்டர்!!

அன்புடன் நான் said...

கவிதையில் தந்த கட்சிகள் அருமை.

க.பாலாசி said...

மிகுந்த ரசனையுடன் உங்களின் கவிதை.....காட்சியமைப்புகள் நன்று....

நாணல் said...

நேரில் பார்த்த மாதிரி இருக்கு கவிதை படித்ததில்... :)

நட்புடன் ஜமால் said...

விளையாடுது தேவா! வார்த்தைகள்

எங்கோ துவங்கி இடையில் இழுத்து சென்று முடிவில் நிறுத்திவிட்டீர்கள் ...

கோமதி அரசு said...

//இருளின் ஆழத்தில் பாசிகளால்
மறைக்கப்பட்டு,சலனமற்றுக்
கிடக்கிறது இறைக்கப்படாத தண்ணீர்.//

அருமையான வரிகள்.

Jerry Eshananda said...

அர்த்தபுஸ்டியான வரிகள்,செறிவான சொல்லாடல், நீங்கள் முழுமையான கவிஞர் என்று ஏற்று கொள்கிறேன்.

மதுரையான் - அருண் பிரசாத்.கு. said...

தேவா சார்.,
ஆழமான வரிகள். அருமை சார். நன்றி.

ஈரோடு கதிர் said...

கண்முன் விரியுது காட்சி

கவிதை அழகோ அழகு

ஷாகுல் said...

கவிதை சூப்பர் நான் பேய் கவிதையோனு நினைத்தேன் கடைசியில் சாமியில் முடித்து விட்டீர்கள் அருமை.

தேவன் மாயம் said...

நாடோடி இலக்கியன் said...
சூழ்நிலையின் விவரிப்புகள் நன்றாக இருக்கிறது நண்பரே.

14 October 2009 01:27//

ரசிப்புக்கு நன்றிங்க!

தேவன் மாயம் said...

Monks said...
' வருஷம் 16 ', ஜெயிலிலிருந்து கார்த்திக் வீடு வரும்
முதல் காட்சியை ஞாபகப் படுத்துகிறது.
'புரிகின்ற' அருமையான கவிதை

14 October 2009 01:29

///
புரிகின்ற கவிதையா!! சரிதான் நண்பா!

அப்துல்மாலிக் said...

மனுசனை கண்டதுண்டமா வெட்டுறீங்கோ அதே சமயம் ரனணை சொட்ட கவிதையும் எழுதுரீங்கோ

அசத்துங்க சார்

குமரை நிலாவன் said...

காட்சிகளை கண்முன் நிறுத்தும் கனமான வரிகள். அருமை தேவா சார்

தேவன் மாயம் said...

S.A. நவாஸுதீன் said...
கவிதை ரொம்ப டாப்பா இருக்கு தேவா சார்.
***********************************

”மக்கிச் சிதைந்த சாளரங்களின்வழி தரையெங்கும் பரவியிருக்கிறது, மவுனமாய் கசிந்த ஒளி”

”பூட்டப்பட்ட சயன அறைக்குள் பல சந்ததிகளின் சூட்சுமம் பொதிந்த பழைய கட்டில்!”

”காற்றின் அந்தரங்கங்களில் கலந்து கிடக்கும் என்றோ ஒலித்த தாலாட்டு!”

”தொங்கிக்கொண்டிருந்த குருவிகளின் திசையறியாது, வண்டு துளைத்து மெலிந்த தோட்டத்து ஒற்றை மாமரம்”

”சலசலப்பில் சிதிலமடைந்த செங்கற்களின் நடுவே அமைதியாய் காத்து நிற்கும் குலசாமி!”///

மிக்க நன்றி நவாஸ்!

தேவன் மாயம் said...

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...
காட்சிகளை கண்முன் கொண்டு வந்து விட்டிர்களே டாக்டர்!!///

நன்றிங்க ஷஃபிக்ஸ்!

==============================

14 October 2009 01:56


சி. கருணாகரசு said...
கவிதையில் தந்த கட்சிகள் அருமை.///

ரசிப்புக்கு நன்றி

=============================

14 October 2009 02:01


க.பாலாஜி said...
மிகுந்த ரசனையுடன் உங்களின் கவிதை.....காட்சியமைப்புகள் நன்று....//

பழைய வீடுகள் தெரியுதா!

===============================

14 October 2009 02:03


நாணல் said...
நேரில் பார்த்த மாதிரி இருக்கு கவிதை படித்ததில்... :)
///

சொல்லியது புரிந்ததில் மகிழ்ச்சி!

14 October 2009 02:19

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...
விளையாடுது தேவா! வார்த்தைகள்

எங்கோ துவங்கி இடையில் இழுத்து சென்று முடிவில் நிறுத்திவிட்டீர்கள் ...///

பிடித்ததா?
============================

14 October 2009 02:38


கோமதி அரசு said...
//இருளின் ஆழத்தில் பாசிகளால்
மறைக்கப்பட்டு,சலனமற்றுக்
கிடக்கிறது இறைக்கப்படாத தண்ணீர்.//

அருமையான வரிகள்.///


ரசிகரே வருக!
==========================

14 October 2009 02:51


ஜெரி ஈசானந்தா. said...
அர்த்தபுஸ்டியான வரிகள்,செறிவான சொல்லாடல், நீங்கள் முழுமையான கவிஞர் என்று ஏற்று கொள்கிறேன்.///

பெரிய மனசுக்கு நன்றி!

14 October 2009 03:51

தேவன் மாயம் said...

மதுரையான் - அருண் பிரசாத்.கு. said...
தேவா சார்.,
ஆழமான வரிகள். அருமை சார். நன்றி.
///

அருண் கருத்துக்கு நன்றி!!

==============================
14 October 2009 04:14


கதிர் - ஈரோடு said...
கண்முன் விரியுது காட்சி

கவிதை அழகோ அழகு///

பிடித்தால் சரி!
===============================

14 October 2009 04:29


ஷாகுல் said...
கவிதை சூப்பர் நான் பேய் கவிதையோனு நினைத்தேன் கடைசியில் சாமியில் முடித்து விட்டீர்கள் அருமை.
///

அங்கேதானே வாழ்க்கை முடியுது!
14 October 2009 04:52

தேவன் மாயம் said...

அபுஅஃப்ஸர் said...
மனுசனை கண்டதுண்டமா வெட்டுறீங்கோ அதே சமயம் ரனணை சொட்ட கவிதையும் எழுதுரீங்கோ

அசத்துங்க சார்///

எல்லாத்தையும் ரசிப்போம்!


=============================

14 October 2009 05:51


குமரை நிலாவன் said...
காட்சிகளை கண்முன் நிறுத்தும் கனமான வரிகள். அருமை தேவா சார்////

மனதைத் தொட்டால் சரி!
===============================

14 October 2009 05:59

பாலா said...

wow wow

நந்தாகுமாரன் said...

this poetry is bit 'refreshing' when compared to others in the series but i would say it still needs pruning (anyway this is my own individual perception) :)

தேவன் மாயம் said...

பாலா said...
wow wow
///

thanks Bala!!

======================
14 October 2009 06:24
Nundhaa said...
this poetry is bit 'refreshing' when compared to others in the series but i would say it still needs pruning (anyway this is my own individual perception) :)///

I appreciate your open comment that will make me sharper!!

14 October 2009 07:57

வெண்ணிற இரவுகள்....! said...

நியாபகத்தின் எச்சம் ,
கவிதையின் உச்சம் ...!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//கண்முன் விரியுது காட்சி

கவிதை அழகோ அழகு//
Repeat.

Unknown said...

ஆஹா... டாக்டரே....!!! விளம்பரம் இல்லா பழைய பாரதிராஜா படம்போல் கவிதை......

ப்ரியமுடன் வசந்த் said...

//காத்து நிற்கும் குலசாமி!//

செம்ம...

வரிக்கு வரி காட்சிகள் உருவகம் பெற்று நிற்கின்றன தேவா சார்

ஆ.ஞானசேகரன் said...

வரிக்கு வரி அழகு கூடியுள்ளது சார்

கார்த்திகைப் பாண்டியன் said...

வர்ணனைகள் அருமை தேவா சார்..

cheena (சீனா) said...

அன்பின் தேவா

கவிதை அருமை - ரசித்து எழுதி இருக்கீங்க - வர்ணனைகள் அபாரம்

நல்வாழ்த்துகள் தேவா

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory