Monday, 26 October 2009

இன்றைய பெண்களின் பிரச்சினைகள்!-பாகம்-1

 

தற்கால சூழ்நிலையில் படித்த பெண்கள் வினோதமான சில பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள்! சாதாரணமாக வேலைக்குச் செல்லும் இந்தியப் பெண்கள் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் புதிய பிரச்சினைகள் இவைதான் என்று அறிய முடியாமல் தடுமாறுகிறார்கள்.

பெண்கள் இதுவரை ஆண்கள் செய்து வந்த பொறுப்புகளைக் கூடுதலாக ஏற்றுக் கொள்ளும்போது ஏற்படும் வாழ்வியல் வியாதிகள் சாதாரணமானவை அல்ல. அவை அவர்களால் வாழ முடியாத சூழ்நிலைக்குக் கொண்டுசெல்லும் அளவுக்கு தற்போது பூதாகாரமாக வடிவெடுத்துள்ளன!

68% இந்திய வேலைக்குச் செல்லும் பெண்கள் வாழ்வியல் வியாதிகளான

1.Anxiety-மன நிலைக் கலக்கம்

2.Fear-பயம்

3.Uneasyness-இயல்பாக இருக்கமுடியாமை

4.Hysteria-ஹிஸ்டீரியா- வீட்டிலும், அலுவலக டென்ஷன்களிலும்!

இவற்றால் உறவுகளை சரிவர பராமரிக்க முடியாமை(Battling Relationship Issues),

பணியிடச் சுமைகளைச் சமாளிக்க இயலாமை ( Not able to copeup with job and studies pressure)

வீட்டிலிருப்போரிடமிருந்தும், அலுவலகத்தில் உள்ளோரிடமிருந்தும் விலகிப்போதல் ஆகியவை ஏற்படுகின்றன.

இத்தகைய நோய்க்குறிகளை மிகவும் படித்த பெண்கள், மற்றும் அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள், கணவன் ஆகியோர் கூட உணர முடிவதில்லை. அப்படிக் கூறினாலும் தான் படித்தவர், தனக்குத் தெரியாததா? என்ற அதீத நம்பிக்கையினால்  பிறர் கூறுவதை ஒத்துக்கொள்ளவோ, அதனைக் கேட்டு அதன்படி சீரமைப்பு முயற்சிகளிலோ ஈடுபடுவதில்லை. அவர்கள் தங்களுடைய மனநிலைக் குழப்பங்கள், மனநிலைமாற்றம் ஆகியவற்றை உணருவது இல்லை என்பது ஒருபுறமிருக்க, தன்னுடைய பிரச்சினைகளுக்குப் பிறர்தான் காரணம் என்று எண்ணி அதீத கோபம் வெறுப்பு ஆகியவற்றைத் தன் குடும்பத்தாரிடம் காட்டி அவர்களிடமிருந்து விலகிச் செல்கிறார்கள்.

பெரும்பாலான பெண்கள் குடும்பம்,வேலை ஆகிய இரண்டின் அழுத்தத்தையும் தாங்க முடியாமல் அவதியுறுவதே இன்றைய பெண்களின் மிகப் பெரும் பிரச்சினையாக உள்ளது.

இத்தகைய பிரச்சினைகள் இன்றைய இந்திய குடும்ப அமைப்பில் மிகப்பெரும் விரிசல்களை ஏற்படுத்துவதே மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.

முந்தைய இந்தியக் குடும்ப அமைப்பில் குழந்தைகளைக் கவனிக்கவும், வீட்டைக் கவனித்துக் கொள்ளவும் பெற்றோர்கள் இருந்தனர். ஆனால் இன்றைய நகர்ச் சூழ்நிலைகள் அப்படி அமைவதில்லை.

பெண்களே பெரிய பொறுப்பான அலுவலகங்களின் உயரிய வேலையையும், கணவன், குழந்தைகள் என்ற  குடும்பத்தின் பொறுப்புக்களையும் சுமக்கும்போது ஏற்படும் மனவியல் அழுத்தங்கள் இன்றைய பெண்கள் முன் உள்ள மிகப்பெரிய சவால்! இதில் எத்தனை பேர் வெல்கிறார்கள், எத்தனை பேர் தோற்கிறார்கள் என்பதே எதிர்காலத்தில் குடும்ப அமைப்புகள் இருக்குமா? மெல்ல அழியுமா? என்ற கேள்விகளின் விடையாக அமையும்!  

இந்தப் பிரச்சினைகள் என்ன விளைவுகளை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஏற்படுத்துகின்றன என்பதனை அடுத்தடுத்த பகுதிகளில் அலசுவோம்!

32 comments:

cheena (சீனா) said...

அன்பின் தேவா

நல்லதொரு பிரச்னையைக் கையில் எடுத்திருக்கிறீர்கள் - அலசி ஆராய்ந்து இடுகைகள் இடவும் - நல்வாழ்த்துகள்

தேவன் மாயம் said...

cheena (சீனா) said...
அன்பின் தேவா

நல்லதொரு பிரச்னையைக் கையில் எடுத்திருக்கிறீர்கள் - அலசி ஆராய்ந்து இடுகைகள் இடவும் - நல்வாழ்த்துகள்

26 October 2009 08:49///

மக்கள் எவ்வளவு விரும்புகிறார்கள் என்று பார்ப்போம்!

சொல்லரசன் said...

//இந்தப் பிரச்சினைகள் என்ன விளைவுகளை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஏற்படுத்துகின்றன என்பதனை அடுத்தடுத்த பகுதிகளில் அலசுவோம்!//

இன்றைய காலகட்டத்தில் கண்டிப்பாக அலசி ஆராயவேண்டிய பிரச்சனைதான்
டாக்டர்

சொல்லரசன் said...

//அப்படிக் கூறினாலும் தான் படித்தவர், தனக்குத் தெரியாததா? என்ற அதீத நம்பிக்கையினால் பிறர் கூறுவதை ஒத்துக்கொள்ளவோ, அதனைக் கேட்டு அதன்படி சீரமைப்பு முயற்சிகளிலோ ஈடுபடுவதில்லை.//


இன்று பெருபாலரிடம் இந்த எண்ணம் மேலொங்கி இருக்கிறது

தேவன் மாயம் said...

சொல்லரசன் said...
//இந்தப் பிரச்சினைகள் என்ன விளைவுகளை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஏற்படுத்துகின்றன என்பதனை அடுத்தடுத்த பகுதிகளில் அலசுவோம்!//

இன்றைய காலகட்டத்தில் கண்டிப்பாக அலசி ஆராயவேண்டிய பிரச்சனைதான்
டாக்டர்
//
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!!
-----------------------------
26 October 2009 09:10


சொல்லரசன் said...
//அப்படிக் கூறினாலும் தான் படித்தவர், தனக்குத் தெரியாததா? என்ற அதீத நம்பிக்கையினால் பிறர் கூறுவதை ஒத்துக்கொள்ளவோ, அதனைக் கேட்டு அதன்படி சீரமைப்பு முயற்சிகளிலோ ஈடுபடுவதில்லை.//


இன்று பெருபாலரிடம் இந்த எண்ணம் மேலொங்கி இருக்கிறது

26 October 2009 09:14///

தன் மீது அளவுகடந்த நம்பிக்கை, பதவி இன்னும் நிறைய விசயங்கள் உள்ளன!

Rajeswari said...

samooga nookudanaana pathivu..thodarndhu ethir paarkirom

பீர் | Peer said...

அதோடு தீர்வுகளையும் அலசுங்கள் டாக்டர்..

துளசி கோபால் said...

நல்ல இடுகை.

பெண்கள் வெளியில் போய் வேலை செய்து சம்பாதித்தாலும் வீட்டுக்குள் இருக்கும் பொறுப்புகள் இன்னும் அவள் மீதே இருப்பதும், வீட்டுவேலை எல்லாம் பெண்களுக்கானது என்று சிறுவயதுமுதல் மூளைச் சலவை செய்யப்பட்டு வளர்ந்த எங்களால், ஆண்கள் வீட்டுவேலையைத் தப்பித்தவறிப் பகிர்ந்துகொள்ள முன்வரும்போது குற்ற உணர்ச்சி கொள்வதுமாய் இருப்பதால் மன அழுத்தம் இன்னும் கூடி வருகிறது.

இராகவன் நைஜிரியா said...

மிக மிக அவசியமான இடுகை.

அடுத்த இடுகைகளை மிக ஆவலுடன் எதிர்ப் பார்க்கின்றேன்..

// 1.Anxiety-மன நிலைக் கலக்கம் 2.Fear-பயம் 3.Uneasyness-இயல்பாக இருக்கமுடியாமை 4.Hysteria-ஹிஸ்டீரியா- வீட்டிலும், அலுவலக டென்ஷன்களிலும்! //

இவை இப்போது ஆண்களிடமும் காணப்படுகின்றேதே?

// இத்தகைய நோய்க்குறிகளை மிகவும் படித்த பெண்கள், மற்றும் அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள், கணவன் ஆகியோர் கூட உணர முடிவதில்லை. //

தலைவலி என்றால் உணர இயலும். இது மாதிரி விஷயங்களை எப்படி உணருவது என்றும் எழுதுங்க.

Menaga Sathia said...

நல்லதொரு பதிவு!!

ஆ.ஞானசேகரன் said...

///இத்தகைய நோய்க்குறிகளை மிகவும் படித்த பெண்கள், மற்றும் அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள், கணவன் ஆகியோர் கூட உணர முடிவதில்லை. அப்படிக் கூறினாலும் தான் படித்தவர், தனக்குத் தெரியாததா? என்ற அதீத நம்பிக்கையினால் பிறர் கூறுவதை ஒத்துக்கொள்ளவோ, அதனைக் கேட்டு அதன்படி சீரமைப்பு முயற்சிகளிலோ ஈடுபடுவதில்லை.///

உண்மைதான் டாக்டர்

ஆ.ஞானசேகரன் said...

நல்ல அலசல் ஆய்வு செய்து எழுதுங்கள்

ரோஸ்விக் said...

இது அருமையான டாபிக். அருமையாகவும் எழுதியுள்ளீர்கள். மற்றவர்களின் எழுத்துக்களை விட உங்கள் எழுத்துக்களுக்கு மதிப்பு மிக அதிகம் நீங்கள் மருத்துவர் என்பதால். பயன்படுத்திக்கொள்ளுங்க.
இது நிதர்சனம். மற்றவர்கள் எழுதினால் ஆணாதிக்கம் என எளிதில் முத்திரை குத்தி விடுவார்கள்.
பணத்தை தேடி தேடியே மனிதன் குடும்பத்தோட பிணமாக வாழ்கிறான். செத்த கிளிக்கு எதுக்கு சிங்காரம்? :-)
உங்களை தொலை பேசியில் தொடர்பு கொள்ள ஆவலாய் உள்ளேன். உங்கள் எண் என்னிடம் உள்ளது.

துளசி கோபால் said...

//செத்த கிளிக்கு எதுக்கு சிங்காரம்? :-)//

அட! சூப்பர்!!!!

ரசித்தேன்:-)

Suresh Kumar said...

நல்ல அலசல் சார்

வால்பையன் said...

இந்த பிரச்சனை தற்பொழுது ஆண்களுக்கு உண்டு!

நானெல்லாம் ஒழுங்கா தூங்கி வருச கணக்காச்சு!

Suresh Ram said...

பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்
இ.பி.கோ 498A என்னும் வரதட்சிணைக் கொடுமைச் சட்டத்தால் பாதிக்கப்படும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் பற்றிய விவரங்கள், பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள், அறிவுரைகள்...
http://tamil498a.blogspot.com/

யாசவி said...

தல

அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்தபடி உள்ளேன்.

அப்படியே திர்வுக்கான வழிகளை சொல்லுங்கள்.


:)

Anonymous said...

ஹ்ம்ம்.. அதென்னமோ உண்மை தான்.. வீடு, அலுவல் இரண்டையும் சமாளிப்பது பெரும் சவாலே. ஆனால் பல பெண்களுக்கு வீட்டில் இருப்பதை விட அலுவலகத்தில் இருப்பதே நிம்மதி என்ற நிலையம் இருக்கிறது. அவ்வளவு pressure வீட்டில்!

அகல்விளக்கு said...

நல்ல பதிவு

தொடர்ந்து எழுதுங்கள்.

SUFFIX said...

பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் தாங்கள் தொடங்கி இருக்கும் இந்த தொடர் உபயோகமாக இருக்கும்.

SUFFIX said...

எந்த ஒரு பிரச்ணையையும் இழு இழு என இழுக்காமல், தம்பதியர் தங்களுக்குள் மனம் விட்டுப் பேசி தீர்வு காண்பது எளிய‌ முயற்சி.

S.A. நவாஸுதீன் said...

வேளைக்கு செல்லும் பெண்களின் இன்றைய நிலைமையை தெளிவுபட எழுதியிருக்கின்றீர்கள் தேவா சார். மிக முக்கியமான இடுகை. இதன் தொடர்ச்சியை விரைவில் எதிர்பார்க்கிறோம்.

pudugaithendral said...

வேலைக்கு போற பெண்கள் மட்டுமில்லையே தேவா, ஹோம் மேக்கர்களும் நிறைய்ய பாதிக்கப்படுகிறார்கள்.

நீங்கள் சொல்வது போல என்னற்ற பிரச்சனையை வேலைக்குப் போகும் பெண்கள் எதிர் கொள்கிறார்கள், இதனால் P.M.S, MENOPAUSE தொந்திரவுகள் எல்லாம் மு்ன் கூட்டியே வந்துவிடுகிறது.

இதே அளவு உடல்,மன உபாதைகளுடன் தான் ஹோம் மெக்கர்கள் இருக்கிறார்கள்.(இன்னும் கூட அதிகம்னு சொல்லலாம். வேலைக்கு்ப்போற பெண் என்பதால் சில சலுகைகள் ஓய்வுகள் கிடைக்கும். அது ஹோம் மேக்கருக்கு சான்சே இல்லை)

எங்களுக்காகவும் பதிவு வரும் எனும் ஆவலில்

புதுகைத் தென்றல்

pudugaithendral said...

மீ த 25த்

:))))))))

கார்த்திகைப் பாண்டியன் said...

புதிய தளத்தில் நிறைய தெரியாத விஷயங்களை சொல்லி இருக்கிறீர்கள்.. பகிர்வுக்கு நன்றி தேவா சார்..

ஷாகுல் said...

நல்ல பதிவு.

இது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களையும் பாதிக்குமல்லவா?

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் பார்ட்டு

அப்துல்மாலிக் said...

இன்றைய சிட்டி வாழ்க்கையில் ஆண்களுக்கும் பொருந்தும், பிள்ளைகளையும், அலுவலகத்தையும் கவணித்துக்கொள்ள....

நல்ல தொடர் அலசல்

விரைவில் எதிர்ப்பார்க்கிறேன்

Jerry Eshananda said...

பாகம் ஒன்றா? சும்மா பாத்தி கட்டி விளையாடுங்க டாக்டர்.

குமரை நிலாவன் said...

இன்றைய காலகட்டத்தில் கண்டிப்பாக அலசி ஆராயவேண்டிய பிரச்சனைதான்
தேவா சார்

அன்புடன் நான் said...

அறிய வேண்டிய விடயம் தான் தொடருங்க மருத்துவரே.

அமுதா said...

சீனா அய்யா கூறியதை வழிமொழிகிறேன்

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory