அன்பு நண்பர்களே!
”தற்காலிக இறப்பு நிலை” அல்லது மூச்சை அடக்கி தற்காலிகமாக உடலை இறப்பு நிலைக்குக் கொண்டு செல்லுதல் என்பது நம் நாட்டில் நீண்ட காலமாக சித்தர்களும், யோகிகளும் கடைப் பிடித்துவரும் ஒரு யோக முறை. இந்தத் தற்காலிகமாக மூச்சை நிறுத்துதல், உடல் இயக்கத்தை மிகவும் குறைவான நிலைக்குக் கொண்டு செல்லுதல் பல நூற்றாண்டுகளாக அறியப்பட்டிருந்தாலும் நவீன அறிவியலால் இன்னும் விளக்கப்படாத ஒரு விசயமாகவே இருக்கிறது.
இந்தக் கலையானது உலகம் முழுதும் யோகிகளால் செய்யப்படும் ஒரு செயல் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
இந்த நிலையில் நாம் பார்க்கும்போது ஒருவருடைய இதயத்துடிப்பு, சுவாசித்தல் ஆகியவை தற்காலிகமாக சில நிமிடங்களிலிருந்து சிலமணிநேரங்கள்வரை நிறுத்திவைக்கப்படுகிறது.
1987ல் Colonel Townshend கர்னல் டவுன்ஷெண்ட் என்பவர் புகழ்பெற்ற பிரிட்டிஷ் மருத்துவர்களின் முன்னிலயில் அரைமணி நேரம் மூச்சையும்,இதயத்துடிப்பையும் நிறுத்தி அவர்களை ஆச்சரியப்படுத்தினார்.
மேல் சொன்ன கதை ஒன்றும் பிரமாதமில்லை. 1838ல் இந்திய யோகி ஒருவர் கல்கத்தாவிலுள்ள கிராமங்களில் நீண்ட சவ நிலைக்குச்சென்று பின் உயிர் திரும்பும் அதிசயத்தைச் செய்துகாண்பித்துப் பிரபலமடைந்திருந்தார். இதனை அப்போதிருந்த ஐரோப்பிய அதிகாரி காப்டன் வாட் முன்னிலையில் செய்துகாட்டச் சொன்னார்கள்.
மகாராஜா ரஞ்சித்சிங், காப்டன்.வாட் முன்னிலையில் அந்த யோகியின் உடலில் உள்ள துவாரங்கள் அனைத்தும் காற்றுப் புகாவண்ணம் மெழுகால் அடைக்கப்பட்டன! முழு நிர்வாணமாக ஒரு கோணிப்பையில் அவரை அடைத்து ராஜமுத்திரையிடப்பட்டு மரப்பெட்டியில் அந்தக்கோணிப்பையை வைத்துப் பூட்டி சீல் வைத்தனர். இந்தப் பெட்டியை காவல் அறையில் வைத்து 24 மணிநேரமும் காவல்வீரர்கள் காவல் காத்தனர். இதற்கு நடுவில் அடிக்கடி பெட்டியைத்திறந்து உடல் உள்ளே இருக்கிறதா? என்று பார்வையிட்டார் மகாராஜா.
நம்புங்கள்! பத்து மாதங்கள் கழித்து அத்துறவியைப் பெட்டியிலிருந்து வெளியில் எடுத்தனர். சிறிது வெண்ணீர் அவர் உடலில் ஊற்றப்பட்டது. துறவி கண் திறந்தார். எல்லோருடனும் சகஜமாகப்பேச ஆரம்பித்தார்.
மூவாச்சமாதி என்று இதனை நமது சமய இலக்கியங்கள் கூறுகின்றன.
தயவுக்குறள் மூலமும் உரையும் என்ற பதிப்பில் மூச்சடக்கி பன்னெடுங்காலம் உயிருடன் கடவுளை தியானித்தது குறிப்பிடப்பட்டுள்ளது.
தயவுக் குறள் 101-110 மூலமும் உரையும்
http://www.vallalarspace.com/Saravanaananda/Articles/1304
மூச்சடக்கி மெய்ம்மறந்து மூவாச் சமாதிருந்தும்
ஏச்சடக்கார்க் கீசனரு ளில்.
மூவா = அழியாத, மூச்சடக்கி பன்னெடுங்காலம் அழியாது உட்புதைந்து கிடத்தல் மூவாச் சமாதியாக இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது செயற்கையாக
சமாதி நிலையை ஏற்படுத்தமுடியுமா என்று ஆராய்கிறார்கள். துருவத்தில் வாழும்
வெண்கரடி பனிக்காலத்தைத் தூங்கியே கழிக்கும். அப்போது அது உண்ணாது; நீரருந்தாது; அதன் இதயத்துடிப்பு குறைந்துவிடும். இதை Hibernation என்று சொல்வார்கள். இந்த நிலையில் இருக்கும் வித்தையை துருவக்கரடி மட்டுமல்லாது நிறைய உயிரினங்கள் கற்று வைத்துள்ளன!!
நாமும் மருந்துகளைச் செலுத்தி, அல்லது BioFeedback முறைகள் மூலம், அல்லது யோகசித்திப் பயிற்சிகளின்மூலம் இந்த நிலைகளைத்
தோற்றுவிக்கமுடியுமா என்று முயற்சிகளைச் செய்துகொண்டுதான் இருக்கிறோம்.
இந்த ஆராய்ச்சியில் வெற்றிபெற்றால்
1.மனிதனின் ஆயுளை நீட்டிக்கலாம்.
2.மனிதனை இந்நிலைக்குக் கொண்டு சென்று விண்கலங்களில் ஏற்றி நீண்டதூர காலக்ஸிகளில் உள்ள கிரகங்களில் இறக்கி, உயிர்ப்பித்து மீண்டும் சமாதி நிலையில் ஒரு 10 வருடம் விண்பயணம் செய்து பூமியை அடையலாம்!!
இந்த வித்தையை மனிதன் கற்றுவிட்டால் மனிதன் காலத்தை வென்றுவிடலாம்!! நடக்குமா?
32 comments:
நடந்தால் தாங்குமா இந்த உலகம்....
//2.மனிதனை இந்நிலைக்குக் கொண்டு சென்று விண்கலங்களில் ஏற்றி நீண்டதூர காலக்ஸிகளில் உள்ள கிரகங்களில் இறக்கி, உயிர்ப்பித்து மீண்டும் சமாதி நிலையில் ஒரு 10 வருடம் விண்பயணம் செய்து பூமியை அடையலாம்!! //
:-))
ஆஹா.. டாக்டர் இப்பவே கிளம்பிட்டாரே!!!!!!!
யோகால இதெல்லாம் சாத்தியம்தான் போல சார்
பதிவின் உள்ளடக்கம் சிறப்பு.
சூரியன் said...
நடந்தால் தாங்குமா இந்த உலகம்....
05 October 2009 00:16//
நாம் வேறு உலகத்துக்கு போய் விடுவோமே!!
சென்ஷி said...
//2.மனிதனை இந்நிலைக்குக் கொண்டு சென்று விண்கலங்களில் ஏற்றி நீண்டதூர காலக்ஸிகளில் உள்ள கிரகங்களில் இறக்கி, உயிர்ப்பித்து மீண்டும் சமாதி நிலையில் ஒரு 10 வருடம் விண்பயணம் செய்து பூமியை அடையலாம்!! //
:-))
ஆஹா.. டாக்டர் இப்பவே கிளம்பிட்டாரே!!!!!!!
05 October 2009 00:20//
நான் ரெடி!! நீங்க ரெடியா?
பாலா said...
யோகால இதெல்லாம் சாத்தியம்தான் போல சார்
05 October 2009 00:20///
ஆமாதான் போல!!
சென்ஷி said...
பதிவின் உள்ளடக்கம் சிறப்பு.
05 October 2009 00:23//
நன்றி நண்பரே!!
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் மண்ணில் இடமேது !
:)
பிறப்பு போலவே இறப்பும் இயற்கை இதைப் புரிந்து கொண்டால் மரணம் பயம் கொள்ளத் தக்கது அல்ல.
:))
கோவி.கண்ணன் said...
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் மண்ணில் இடமேது !
:)
பிறப்பு போலவே இறப்பும் இயற்கை இதைப் புரிந்து கொண்டால் மரணம் பயம் கொள்ளத் தக்கது அல்ல.
:))
05 October 2009 00:56//
உண்மைதான்!!
பத்து மாதங்கள் கழித்து அத்துறவியைப் பெட்டியிலிருந்து வெளியில் எடுத்தனர். சிறிது வெண்ணீர் அவர் உடலில் ஊற்றப்பட்டது. துறவி கண் திறந்தார். எல்லோருடனும் சகஜமாகப்பேச ஆரம்பித்தார்.
யப்பா!! படிக்கும்போதே மூச்சு முட்டுதே சார்.
ஆச்சரியமான விஷயங்கள்தான்
S.A. நவாஸுதீன் said...
பத்து மாதங்கள் கழித்து அத்துறவியைப் பெட்டியிலிருந்து வெளியில் எடுத்தனர். சிறிது வெண்ணீர் அவர் உடலில் ஊற்றப்பட்டது. துறவி கண் திறந்தார். எல்லோருடனும் சகஜமாகப்பேச ஆரம்பித்தார்.
யப்பா!! படிக்கும்போதே மூச்சு முட்டுதே சார்.
ஆச்சரியமான விஷயங்கள்தான்
05 October 2009 01:07///
உண்மைதான் நண்பரே!!
//இந்த வித்தையை மனிதன் கற்றுவிட்டால் மனிதன் காலத்தை வென்றுவிடலாம்!! நடக்குமா?//
ம்ம்ம்.... நல்ல பகிர்வு சார்... பாராட்டுகள்
Dear தேவன் மாயம்
it is not impossible this time
because only limited good soul live the earth so most of the bad and worst soul around us.
if you want more details come full moon day early morning at 2.00 am Sathura kiri malai then the time we meet one Sittar his name Sankaralinga swamial he know like this many art ( vithaikkal)
Note that time you don't speak any lines to sittar he know everthing your full story and 7 Jenmmam... so be careful to talk..
ok if wish joint with us..
V.R.David Raj
Bangalore.
Anonymous said...
Dear தேவன் மாயம்
it is not impossible this time
because only limited good soul live the earth so most of the bad and worst soul around us.
if you want more details come full moon day early morning at 2.00 am Sathura kiri malai then the time we meet one Sittar his name Sankaralinga swamial he know like this many art ( vithaikkal)
Note that time you don't speak any lines to sittar he know everthing your full story and 7 Jenmmam... so be careful to talk..
ok if wish joint with us..
V.R.David Raj
Bangalore.
05 October 2009 01:38///
It is very interesting!! thank you for your interest in replyig my post. plese give your email id so that i can contact you!
டாக்டர்,பதிவு அதிசயம்தான்.
ஆனாலும் வயோதிபம் தொடாத வாழ்வானால் இன்னும் கொஞ்சக்காலம் கூடுதலாக வாழலாம்.இல்லையேல் இப்போ இருப்பதே போதும்.
மாண்டவர் மீளமுடியாது,மாண்டவர் போல் சுவாசத்தையும் துடிப்பையும் அடக்குபவர்கள் மீளமுடியும் அதுவும் சரியான பயிற்சியிருந்தால் மட்டுமே.
நல்ல அருமையான தகவல் பகிர்வு அன்பரே...
//இந்த வித்தையை மனிதன் கற்றுவிட்டால் மனிதன் காலத்தை வென்றுவிடலாம்!! நடக்குமா?//
நடந்தால் நல்லவர்கள் வாழமாட்டார்கள் என்றே கருதுகிறேன்.
சிலர் யோகா மூலம் மாசக் கணக்கில் இந்த நிலையில் இருப்பர் என கேள்விப் பட்டிருக்கிறேன்.. வருடகணக்கிலும் சாத்தியமென்பது ஆச்சரியமா இருக்கு...
யோகால இவ்வளவு இருக்கா?ஆசர்யமா இருக்கு..
மருத்துவரே உங்களுக்கு முந்தைய இடுகையில் பதிவு போட்டுருந்தேன்.நீங்கள் பார்க்கவில்லை என நினைக்கிறேன்.
என் ப்ளாக்கில் உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன்,ஏற்கவும்..
தேவா சார், பிறப்பு இருந்தால் நிச்சயம் இறப்பு இருந்துதான் ஆகும், இல்லியே இவ்வுலகில் நிற்க கூட இடமிருக்காது
யோகாவால் நான் கேள்விப்பட்ட வகையில் கொஞ்சம் சாத்தியம், ஆனால் 10 மாதம் உயிரோடு இருந்தார் என்பது ஆச்சரியப்பட வேண்டியது
நல்ல பதிவு
புது மேட்டர் டாக்டர்!
நன்றி : )
ரொம்ப ஆச்சரியம்மா இருக்கு..
அதே சமயத்தில் யோகாவில் பல நிலைகளை தாண்டிய பிறகு தான் இது சாத்தியமாக கூடும்..
இயற்கைக்கு மாறான இந்த இயல்புகள் அருமைதான், ஆனால் நினைத்துப் பார்த்தால் பயமாகவும் இருக்கிறது ....
ஆச்சர்யமான தகவல் தான்!
இந்தியாவில் பல ஆராய்ச்சிக்கு நாம் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
சரி அத விடுங்க.உங்க கட்டுரைப் பொருள் நன்றாக இருக்கிறது.
வித்தியாசமான இடுகை.
மிகச் சிறப்பு
ஆஹா.. அப்புடியா....!! அப்போ இறந்துபோன நடிகை " சில்க் சுமிதா " மறுவடியும் உயிரோட திரும்ப வர வாய்ப்பிருக்கா....??? ஆஆஅவ்வ்வ்வ்வ்வ்......
ஆவலுடன்,
லவ்டேல் மேடி
உயிர் உதறுகிறது...உண்மை கண்டு...
அய்யோ எங்கேந்து டாக்டர் இவ்ளோ தகவல்கள் எடுக்கறீங்க - நேரம் இருக்கா ம்ம்ம்ம்ம்
டாக்டர் சார் தங்கள் வருகைக்கு நன்றி. மாண்டவர் மீண்டால் பதிவு சூபர்ப். டாக்டர் சொன்னால் நம்பலாம்
Post a Comment