Sunday, 11 October 2009

எங்கள் பல்கலைக் கழகத்துக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கு!!!

இந்தியா பல துறைகளில் முன்னேறியுள்ளது. இந்தியர்கள்கள் உலகின்  மிகத் திறமையானவர்கள், அவர்கள் எந்த விதத்திலும் பிறநாட்டவர்களுக்குக் குறைந்தவர்கள்  அல்ல என்று நான் மிகவும் பெருமைப்படுகிறேன். தற்பொழுதுகூட திரு. வெ.ராமகிருஷ்ணனுக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது. மிக்க சந்தோசம்! ஒவ்வொரு முறை நோபல் பரிசு அறிவிக்கப்படும்போதும் என் மனதில் ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருக்கும். அதனைச் சொல்லுகிறேன்.

“Our university system is, in many parts, in a state of disrepair…In almost half the districts [340] in  the  country,  higher  education  enrolments  are  abysmally  low,  almost  two-third  of  our universities and 90 per cent of our colleges are rated as below average on quality parameters… I am  concerned  that  in many  states  university  appointments,  including  that  of  vice-chancellors, have been politicised and have become subject to caste and communal considerations, there are complaints of favouritism and corruption.” 
Prime Minister Manmohan Singh’s address at the 150th Anniversary Function of University of Mumbai, June 22, 20071 ”

மேலேயுள்ள பத்தியில் நமது பிரதமர். மன்மோகன் சிங் கூறியிருப்பதைப்பாருங்கள்.

1.இந்தியாதான் உலகிலேயே அதிக உயர்கல்வி நிலையங்களைக் கொண்டுள்ளது. 364 பல்கலைக் கழகங்கள்,17625 கல்லூரிகள்( இப்போது இன்னும் அதிகமாக இருக்கும்.

2. ஏறக்குறைய 164 உயர் ஆராய்ச்சி மையங்கள் இந்தியாவில் உள்ளன! ஆதாரம்: விக்கி.

இவ்வளவு நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள்  இருந்தும் ஏன் இந்திய ஆராய்ச்சி நிறுவனங்களால் உயர் ஆராய்ச்சியில் பிரகாசிக்க முடியவில்லை?

3.ஒரு வியாதிக்கு மாத்திரையிலிருந்து, கம்பியூட்டர் பாகங்கள், அறுவைசிகிச்சைக் கருவிகள்,  நானோ தொழில் நுட்பம்வரை ஆராய்ச்சிகள் மிக அவசியம். எத்தனை காலம்தாம் நாம் அன்னியர்களுக்கு ராயல்டி கொடுத்துக்கொண்டு இருப்பது? 

4.ஏன் நமது அரசோ, அறிவியல் அறிஞர்களோ இதைப் பற்றி கருத்தில்கொள்ளவில்லை?

இதைப் பற்றி ஆராயும்போது சில கருத்துக்கள் கிடைத்தன.

1.ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது “ வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு இந்தியா வாருங்கள் “ என்று ஆராய்ச்சியாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதன்படி இந்தியா வந்த ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். கொஞ்ச நாளிலேயே அவர்களுக்குக் கிடைத்த கசப்பான அனுபவங்களால் பெரும்பாலானோர் திரும்பிச்சென்றுவிட்டனர்.

2.ஆசிய நாடுகளிலேயே இந்தியாவில்தான் குறைந்த அளவு மாணவர்கள் ஆராய்ச்சித்துரைக்கு வருகிறார்கள்.

பிலிப்பைன்ஸ்-(31 percent), தாய்லாந்து-(19 percent), மலேசியா-(27 percent) சீனா- (13 percent) இந்தியா- 7-8 percent அமெரிக்கா-81 percent, இங்கிலாந்து-54 percent ஜப்பான் - 49 percent.

3.இந்திய அரசு மிகக் குறைந்த தொகையே உயர்கல்விக்கு செலவிடுகிறது. ஒரு மாணவனுக்கு,

மலேசியா-11790 அமெரிக்க டாலர்.

சீனா-2728$

பிரேசில்-3986$

இந்தோனேசியா-666$,

பிலிப்பைன்ஸ்-625$,

அமெரிக்கா-9629$,

இந்தியா-406$ !!!

4.அமெரிக்காவில் படிக்கும் உலக மாணவர்களில் 14% இந்தியர். அமெரிக்கா இதன்மூலம் 13.4 பில்லியன் டாலர் வருமானம் பெருகிறது.

நம் பல்கலைக்கழகங்களும் அரசும் போகும் போக்கில் இந்தியாவில் மாணவர்கள் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சிகளை மேற்கொள்வது மிகச்சிரமம்.

இந்நிலையில் வெளிநாட்டுப்ப்ல்கலைக்கழகங்களை அனுமதித்தால் கல்வித்தரம் வளருமா? என்ற கேள்வியும் எழுந்து அதன்படி இந்தியாவில் 150 வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் வந்துள்ளன!!!கொடுமை என்னவென்றால் இந்தியாவில் இவற்றைக்கட்டுப்படுத்த சரியான விதிமுறைகள் இல்லை.

இவற்றில் பல பல்கலைக்கழகங்கள் 50 மாணவர்கள் மட்டுமே கொண்டுள்ளன! இவற்றிற்கு எப்படி பல்கலைக்கழக அந்தஸ்து தரப்பட்டது?ஏனென்றால் அவை 100% சொந்தப்பணத்தில் தொடங்கப்பட்டவை!!!?

ஆனால் சீனாவிலும், சிங்கப்பூர்,மலேசியா போன்ற நாடுகளிலும் அந்நாட்டு அரசு கடுமையான விதிமுறைகளைக் கடைப்பிடிக்கிறது.

சுட்டி: Full report on The Times of India site

இந்தியாவில் இந்த நிலை மாறவேண்டும். உலகத்தையே அரசுச் செலவில் சுற்றிவரும் துணைவேந்தர்களும், பேராசிரியர்களும், கல்வி அமைச்சர்களும் இதனைச் சற்று சிந்திக்க வேண்டும். 

காந்தி,நேருவிலிருந்து இன்றைய மன்மோகன் சிங், ப.சிதம்பரம் வரை நம் மாணவர்களின் தலைவிதியை எழுதுபவர்கள் ஹாவர்டிலும், ஆக்ஸ்போர்டிலும் படித்தவர்களே!!

எதிர்கால மாணவர்கள் தலைவிதியை கோணலாகி எழுதி மிக்க கடன்சுமையுள்ள குடிமகனாக மாற்றிவிடாதீர்கள்.

”என் பல்கலைக்கழகத்திற்கு, என் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு பரிசுகிடைத்துள்ளது” என்ற செய்திகளைக் கேட்கும்நாள் எந்நாளோ?

34 comments:

S.A. நவாஸுதீன் said...

தலைப்பைப் பார்த்துவிட்டு வெ.ராமகிருஷ்ணன் உங்க செட்டோன்னு நினைத்து ஒரு நொடி அசந்துட்டேன்.

அருமையான் பதிவு தேவா சார். நீங்கள் சொல்லும் அந்த நாள் விரைவில் வரும் என்ற நம்பிக்கையும் இருக்கு.

அமுதா கிருஷ்ணா said...

இன்றைய விலைவாசியில் ஆராய்ச்சி மாணவனுக்கு வழங்கப்படும் தொகை மிக குறைவு..4 வருடம் +2விற்கு பின்னால் படித்துவிட்டு கைநிறைய சம்பாதிப்பதை விட்டுவிட்டு 30 வயது வரை ஆராய்ச்சியில் ஈடுபட யாரும் தயாராக இல்லை என்பதே உண்மை...

முரளிகண்ணன் said...

மிக நல்ல பதிவு.

வினோத்கெளதம் said...

//இன்றைய விலைவாசியில் ஆராய்ச்சி மாணவனுக்கு வழங்கப்படும் தொகை மிக குறைவு..4 வருடம் +2விற்கு பின்னால் படித்துவிட்டு கைநிறைய சம்பாதிப்பதை விட்டுவிட்டு 30 வயது வரை ஆராய்ச்சியில் ஈடுபட யாரும் தயாராக இல்லை என்பதே உண்மை...//

இவங்க சொல்லுவது ஏற்றுக்கொள்ள கூடியது..பெரும்பாலனோர் உயர்ப்படிப்புக்கு பின்பு ஆராய்ச்சி துறையில் தன் காலத்தை செலவிட விரும்ப மாட்டார்கள்..
அதுக்கு ஒன்னு பெரிய மண்டை வேண்டும் இலையெனில் பொருளாதார சூழ்நிலை கொஞ்சம் நன்றாக இருக்க வேண்டும்..இவங்க தான் நீங்க சொல்ற அந்த 10 %..

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்ல பதிவு, பகிர்வு, ஆதங்கம்!

இதெல்லாம் என்று மாறுமோ அப்போது வல்லரசு என்னும் பட்டம்,ஆசை வந்தால் மகிழலாம்!

துபாய் ராஜா said...

நியாயமான வருத்தம்.

ஏக்கம் தீரும் நாள் விரைவில் வரும் என நம்புவோம்...

பாலா said...

கைகுலுக்கி
வாழ்த்து சொல்லணும் போல இருக்கு சார்
அருமை தகவல்களும் .பதிவும்

ஆ.ஞானசேகரன் said...

//இந்தியாவில் இந்த நிலை மாறவேண்டும். உலகத்தையே அரசுச் செலவில் சுற்றிவரும் துணைவேந்தர்களும், பேராசிரியர்களும், கல்வி அமைச்சர்களும் இதனைச் சற்று சிந்திக்க வேண்டும்.

காந்தி,நேருவிலிருந்து இன்றைய மன்மோகன் சிங், ப.சிதம்பரம் வரை நம் மாணவர்களின் தலைவிதியை எழுதுபவர்கள் ஹாவர்டிலும், ஆக்ஸ்போர்டிலும் படித்தவர்களே!!

எதிர்கால மாணவர்கள் தலைவிதியை கோணலாகி எழுதி மிக்க கடன்சுமையுள்ள குடிமகனாக மாற்றிவிடாதீர்கள். //

உங்களின் ஆதங்கம் சரியானதே....

சென்ஷி said...

வெறுமனே வாழ்த்துக்கள் சொல்லிட்டு போகலாம்ன்னு வந்தவனை இப்படி புள்ளிவிவரம் போட்டு மனசை தாக்க வச்சுட்டீங்க..

உங்க கனவு இனிமே நம்ம கனவு ஆகிடுச்சு டாக்டர்..

அருமையான பதிவு!

தேவன் மாயம் said...

S.A. நவாஸுதீன் said...
தலைப்பைப் பார்த்துவிட்டு வெ.ராமகிருஷ்ணன் உங்க செட்டோன்னு நினைத்து ஒரு நொடி அசந்துட்டேன்.

அருமையான் பதிவு தேவா சார். நீங்கள் சொல்லும் அந்த நாள் விரைவில் வரும் என்ற நம்பிக்கையும் இருக்கு.

11 October 2009 02:54///

உங்களிடமும் என்னிடமும் உள்ள நம்பிக்கை ஒளிவீசட்டும்!!

தேவன் மாயம் said...

அமுதா கிருஷ்ணா said...
இன்றைய விலைவாசியில் ஆராய்ச்சி மாணவனுக்கு வழங்கப்படும் தொகை மிக குறைவு..4 வருடம் +2விற்கு பின்னால் படித்துவிட்டு கைநிறைய சம்பாதிப்பதை விட்டுவிட்டு 30 வயது வரை ஆராய்ச்சியில் ஈடுபட யாரும் தயாராக இல்லை என்பதே உண்மை...

11 October 2009 03:12///

குறுகிய கால பிளான் தனிமனித வாழ்வுக்கு உதவும்.நாட்டின் எதிர்காலத்துக்கு உதவாது!!

தேவன் மாயம் said...

வினோத்கெளதம் said...
//இன்றைய விலைவாசியில் ஆராய்ச்சி மாணவனுக்கு வழங்கப்படும் தொகை மிக குறைவு..4 வருடம் +2விற்கு பின்னால் படித்துவிட்டு கைநிறைய சம்பாதிப்பதை விட்டுவிட்டு 30 வயது வரை ஆராய்ச்சியில் ஈடுபட யாரும் தயாராக இல்லை என்பதே உண்மை...//

இவங்க சொல்லுவது ஏற்றுக்கொள்ள கூடியது..பெரும்பாலனோர் உயர்ப்படிப்புக்கு பின்பு ஆராய்ச்சி துறையில் தன் காலத்தை செலவிட விரும்ப மாட்டார்கள்..
அதுக்கு ஒன்னு பெரிய மண்டை வேண்டும் இலையெனில் பொருளாதார சூழ்நிலை கொஞ்சம் நன்றாக இருக்க வேண்டும்..இவங்க தான் நீங்க சொல்ற அந்த 10 %..

11 October 2009 06:06///

வளரும் நம் நாட்டுக்கு இன்னும் அதிகம் தேவை!!

தேவன் மாயம் said...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...
நல்ல பதிவு, பகிர்வு, ஆதங்கம்!

இதெல்லாம் என்று மாறுமோ அப்போது வல்லரசு என்னும் பட்டம்,ஆசை வந்தால் மகிழலாம்!

11 October 2009 06:12//

மிகச்சரி!!

தேவன் மாயம் said...

துபாய் ராஜா said...
நியாயமான வருத்தம்.

ஏக்கம் தீரும் நாள் விரைவில் வரும் என நம்புவோம்...

11 October 2009 06:30//

வரட்டும் ! வரவேண்டும்!!

தேவன் மாயம் said...

பாலா said...
கைகுலுக்கி
வாழ்த்து சொல்லணும் போல இருக்கு சார்
அருமை தகவல்களும் .பதிவும்

11 October 2009 06:32//

நான் சொன்னது சரிதானே!!

தேவன் மாயம் said...

ஆ.ஞானசேகரன் said...
//இந்தியாவில் இந்த நிலை மாறவேண்டும். உலகத்தையே அரசுச் செலவில் சுற்றிவரும் துணைவேந்தர்களும், பேராசிரியர்களும், கல்வி அமைச்சர்களும் இதனைச் சற்று சிந்திக்க வேண்டும்.

காந்தி,நேருவிலிருந்து இன்றைய மன்மோகன் சிங், ப.சிதம்பரம் வரை நம் மாணவர்களின் தலைவிதியை எழுதுபவர்கள் ஹாவர்டிலும், ஆக்ஸ்போர்டிலும் படித்தவர்களே!!

எதிர்கால மாணவர்கள் தலைவிதியை கோணலாகி எழுதி மிக்க கடன்சுமையுள்ள குடிமகனாக மாற்றிவிடாதீர்கள். //

உங்களின் ஆதங்கம் சரியானதே....

11 October 2009 06:42//

புரிந்துணர்வுக்கு நன்றி ஞான்ஸ்!

தேவன் மாயம் said...

சென்ஷி said...
வெறுமனே வாழ்த்துக்கள் சொல்லிட்டு போகலாம்ன்னு வந்தவனை இப்படி புள்ளிவிவரம் போட்டு மனசை தாக்க வச்சுட்டீங்க..

உங்க கனவு இனிமே நம்ம கனவு ஆகிடுச்சு டாக்டர்..

அருமையான பதிவு!

11 October 2009 06:53//

மிக்க மகிழ்ச்சி சென்ஷி!!

Sinthu said...

Good analysis and synthesis about India and students..

தேவன் மாயம் said...

Sinthu said...
Good analysis and synthesis about India and students..//

நன்றி சிந்து!!

ஸ்ரீ said...

விரைவில் அந்த நாள் வரும் என எங்க தாத்தாவும், அப்பாவும் எதிர்பார்த்ததைப் போல நானும் எதிர்பார்க்கிறேன் .

யாழினி said...

நல்லதொரு பதிவு தேவன் மாயம் வாழ்த்துக்கள்!

Jana said...

சிறப்பான ஒரு பதிவு. வாழ்த்துக்கள்.

SurveySan said...

நன்று!

அபுஅஃப்ஸர் said...

நிறைய தெரியாத விஷயங்களை விலாவாரியா புட்டு வெச்சிட்டீங்க..

நிச்சயமா படிக்கும்போதே வேலை, குடும்பம் பற்றி நினைக்கும் நாம் ஒரு சராசரி மக்கள், நம்மை சார்ந்தவர்களும் அதே... அதனால் படித்துவிட்டு ஆராய்ச்சியில் காலத்தை செலவுசெய்தால் பைத்தியக்காரன் என்று அனைவராலும் ஒதுக்கப்படுவார்கள்

சிந்திக்க வேண்டிய பதிவு.... நிச்சயம் வல்லரசாகும் காலம் வெகு அருகில்...

கார்த்திகைப் பாண்டியன் said...

சிந்திக்க வேண்டிய பதிவு.நியாயமான வருத்தம்.ஏக்கம் தீரும் நாள் விரைவில் வரும் என நம்புவோம்...

அமுதா said...

அருமையான பதிவு!

பாலகுமார் said...

கருத்துள்ள பதிவு, வாழ்த்துக்கள் சார்!

தேவன் மாயம் said...

ஸ்ரீ said...
விரைவில் அந்த நாள் வரும் என எங்க தாத்தாவும், அப்பாவும் எதிர்பார்த்ததைப் போல நானும் எதிர்பார்க்கிறேன் .

11 October 2009 07:30///

இது தொடர்கதைங்கிறீங்களா!!

தேவன் மாயம் said...

யாழினி,
ஜனா,
சர்வேசன்,
பாலகுமார்,
அமுதா,
கார்த்திகைபாண்டியன்

ஊக்கத்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!!

11 October 2009 22:1

தேவன் மாயம் said...

அபுஅஃப்ஸர் said...
நிறைய தெரியாத விஷயங்களை விலாவாரியா புட்டு வெச்சிட்டீங்க..

நிச்சயமா படிக்கும்போதே வேலை, குடும்பம் பற்றி நினைக்கும் நாம் ஒரு சராசரி மக்கள், நம்மை சார்ந்தவர்களும் அதே... அதனால் படித்துவிட்டு ஆராய்ச்சியில் காலத்தை செலவுசெய்தால் பைத்தியக்காரன் என்று அனைவராலும் ஒதுக்கப்படுவார்கள்

சிந்திக்க வேண்டிய பதிவு.... நிச்சயம் வல்லரசாகும் காலம் வெகு அருகில்...

11 October 2009 11:51//

இந்நிலை மாறவேண்டும்!! மாறுமா?

கதிர் - ஈரோடு said...

மிக நல்ல இடுகை

மங்களூர் சிவா said...

/
எதிர்கால மாணவர்கள் தலைவிதியை கோணலாகி எழுதி மிக்க கடன்சுமையுள்ள குடிமகனாக மாற்றிவிடாதீர்கள்.
/

கண்டிப்பா!

நட்புடன் ஜமால் said...

பிரார்த்தனைகளுடன் ...

திருப்பூர் மணி Tirupur mani said...

நல்ல தகவல்! நானும் எனது பதிவில் இட்டுக்கொள்கிறேன்-நன்றி!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory