இன்றைய பெண்களின் பிரச்சினைகள்!-பாகம்-1
http://abidheva.blogspot.com/2009/10/1.html.
இன்றைய மருத்துவர்களின் நோயாளிகளை கவனித்தால் ஒன்று புலனாகும். 25-45 வயதுடைய பெண்களிடம் குறிப்பாக சில பிரச்சினைகள் அதிகரித்திருப்பதைக் காணலாம். அவை
1.உடல் சோர்வு
2.தூக்கமின்மை
3.சின்னச் சின்ன விசயங்களிலெல்லாம் எரிச்சல் படுதல்
4.உடல் வலி
5.மனச்சோர்வு
6.குற்ற மனப்பான்மை
7.இறப்பைப் பற்றிய சிந்தனை
8.தற்கொலை எண்ணங்கள் ஆகியவையே அவை. இதனை சாதாரண சோர்வு என்று எடுத்துக்கொண்டு சிகிச்சைபெறும் அவர்களின் பிரச்சினைகள் தீருவதில்லை. பெரும்பாலும் நிறைய மருத்துவர்களிடம் காட்டியும் பிரச்சினை சாதாரணமாகத் தீருவதில்லை.
அவர்களை ஆராயும்போது சரியான நேரத்தில் உண்ணாமை, சரியாகத் தூங்காமை,அதிகரிக்கும் உடல் எடை ஆகியவையும் காணப்படுகின்றன. வீட்டுக்குள்ளேயும்,அலுவலகத்துக்குள்ளேயும் வசிக்கும் பெரும்பான்மையான பெண்களுக்கு விட்டமின் டி குறைபாடு வருகிறது என்றால் நம்மால் நம்ப முடியாது.
பெரும்பான்மையான நகரப் பெண்கள் கிராமத்துப் பெண்களைவிட நடக்க, படிகளில் ஏற, தரையில் உட்கார்ந்து எழுந்துகொள்ள சிரமப்படுவதின் காரணங்களில் இது முக்கியமானது.இதன் தொடர்ச்சியாக எலும்பு தேய்மானம், ஆஸ்டியோபோரோசிஸ்,இடுப்பெலும்பு சவ்வு விலகுதல் ஆகியவை மிக இளம் வயதிலேயே ஏற்படுகிறது.
தற்காலப் பெண்கள் ஆண்களுடன் போட்டியிட்டு பலதுறைகளிலும் சாதித்துவருகிறார்கள்.இதுவரை ஆண்கள் ஏற்றுக்கொண்ட அலுவலக முடிவுகள் எடுத்தல், அலுவலக சிக்கல்களுக்கு தீர்வுகாணுதல், அதிகப் பணத்தைக் கையாளுதல், சரியான நேரத்தில் பணங்களை செலுத்துதல், வங்கிக் கணக்குகளைக் கையாளுதல், இடம், பொருள்,சொத்துக்கள் வாங்குதல் ஆகியவை அவர்களுடைய புதிய உபரியான வேலைகளாகச்சேர்ந்துள்ளன.
இவை படிக்கும்போது எளிமையாகத்தோன்றும். ஆனால் நடைமுறையில் கையாளுவதற்கு மிகவும் கடினமானவை.
இப்படி பாதிக்கப்பட்ட பெண்கள் பெரிய வேலைகளில் இடைவிடாத சந்திப்புகள், கான்ஃபரன்ஸ் என்றிருக்கையில் அவர்களால் இந்தப் பிரச்சினைகளுக்கு மருத்துவர்கள் கூறும் சிகிக்கைகளை நடைமுறையில் கடைப்பிடிக்க முடிவதில்லை.
இதனால் அவர்கள் இன்னும் அதிகமான மனச்சோர்வு, உடலும் மனமும் சக்தியிழத்தல் ஆகியவற்றுக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் உள்நோயாளியாக சிகிச்சை பெறும் அளவுக்கு பாதிக்கப் படுகிறார்கள்.
இவற்றால் அவர்களுக்கு வரும் வியாதிகளத் தொகுத்தால் ஒரு நீண்ட பட்டியலே வருகிறது.
1.மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் மனநிலை மாற்றங்கள், அதிக வலி,
2.சினைப்பை நீர்க்கட்டிகள்(பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ்)
3.இளம் வயதிலேயே நீரிழிவுநோய்,
4.உயர் இரத்த அழுத்தம்
5.கருவுறாமை
6.உடல் எடை கூடுதல்
7.முடிகொட்டுதல்
8.தோலில் கொப்புளங்க்ள் தொன்றுதல்
9.கருச்சிதைவு
10.முகத்தில் முடி வளருதல்
11.ஒற்றைத் தலைவலி
12.ஆஸ்டியோபோரோஸிஸ்
13.பாலியல் பிரச்சினைகள் இவை அனைத்தையும் தனித்தனியாகவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவைகளை சேர்த்தும் பார்ப்பூம்.முதலில்
முக்கியமான பிரச்சினையான பி.சி.ஓ.டி.(பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ்) எனப்படும் கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் பற்றிப் பார்ப்போம். பி.சி.ஓ.டி - அதிகமாக ஆன் ட்ரோஜன் சுரப்பதால் கருமுட்டைகள் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.இதனால் கர்ப்பம்தரிப்பதில்லை.
அதிக மன அழுத்தம் சுரப்புக்களை அதிகரிக்கிறது. இதனால் சக்கரை கூடுதல், தசைகள் இறுக்கம்,தாழ்ந்த மூச்சு, இதயத்துடிப்பு அதிகரித்தல் ஆகியவை ஏற்படுகின்றன.மன அழுத்தத்தால் 1.கோபம்,எரிச்சல் அதிகமாதல்,பசி அதிகமாதல், சந்தோசமின்மை, ஆகியவை ஏற்படுகின்றன.2.உடல் பருமனாதல்-வயிற்றில் கொழுப்பு அதிகமாகுதல் 3.சிலருக்கு பசியின்மை, அனோரெஃஸியா,புல்லீமியா போன்ற தீவிரமான வியாதிகள் ஏற்படுகின்றன.4.உடலுறவில் நாட்டமின்மை ஆகியவை ஏற்படுகின்றன. மனப் பிரச்சினைகள், உறவுப் பிரச்சினைகளை அடுத்துப் பார்ப்போம்.
22 comments:
yes Doc. you are 200% right.
சூப்பர் டாப்பிக் சார்... கலக்குறீங்க.
நன்றி மருத்துவரே..
மேலும் தொடர வாழ்த்துகள்
அருமையான தொடர். பெண்கள் ப்ரச்சனைகளுக்கு தீர்வு என்ன என்று தெரிந்தாலும் கடைப்பிடிக்கமுடியாத்து வருத்தமே.
அருமை தொடருங்கள்
mugathillai valarukera mudiyai ellamal seiya oru vali koorunkal.
பெண்களின் பிரச்சனைக்கு தீர்வு மகளீர் மருத்துவர் கையில் இருக்கிறது. ஆனால் அவர்கள் நடந்து கொள்ளும் விதமோ.....
அனுசரனையாக இருந்து மருத்துவத்துடன் தேவையான அறிவுரைகளும் சொல்லும் கைனகாலஜிஸ்ட்ஸ் கிடைப்பதற்கும் பெண்கள் மாதவம் செய்திருக்க வேண்டும்.
அருமையான தொடருக்கு என் வாழ்த்துக்கள்
துளசி கோபால் said...
yes Doc. you are 200% right.///
மிக்க நன்றி!!
நாஞ்சில் பிரதாப் said...
சூப்பர் டாப்பிக் சார்... கலக்குறீங்க//
உங்கள் ஆதரவு என்றும் தேவை!!
இராகவன் நைஜிரியா said...
நன்றி மருத்துவரே..
மேலும் தொடர வாழ்த்துகள்
27 October 2009 12:57///
மிக்க நன்றிங்க!
சின்ன அம்மிணி said...
அருமையான தொடர். பெண்கள் ப்ரச்சனைகளுக்கு தீர்வு என்ன என்று தெரிந்தாலும் கடைப்பிடிக்கமுடியாத்து வருத்தமே.
27 October 2009 14:54///
அதற்கு ரொம்பப் பொறுமை தேவை!!
ஆ.ஞானசேகரன் said...
அருமை தொடருங்கள்
27 October 2009 17:56///
ஓகே!!
------------------------
Anonymous said...
mugathillai valarukera mudiyai ellamal seiya oru vali koorunkal.
27 October 2009 19:14//
கட்டாயம்/
----------------------------
புதுகைத் தென்றல் said...
பெண்களின் பிரச்சனைக்கு தீர்வு மகளீர் மருத்துவர் கையில் இருக்கிறது. ஆனால் அவர்கள் நடந்து கொள்ளும் விதமோ.....
அனுசரனையாக இருந்து மருத்துவத்துடன் தேவையான அறிவுரைகளும் சொல்லும் கைனகாலஜிஸ்ட்ஸ் கிடைப்பதற்கும் பெண்கள் மாதவம் செய்திருக்க வேண்டும்.
27 October 2009 20:13///
உண்மைதான்!!
ரொம்ப அருமையா சொல்றீங்க தேவா சார். பாராட்டுக்கள். தொடரட்டும் உங்களின் இந்த மிகச்சிறந்த மகத்தான பணி.
தகவல்கள் அருமை, இதற்கான தீர்வுகளையும் அலசுவீர்களா டாக்டர், பலருக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பெண்களுக்கு முக்கியமான மற்றும் தேவையான பதிவு இது. தீர்வுகளை பற்றியும் சிறு குறிப்பு தந்தால் இன்னும் பயனுள்ளதாய் இருக்கும்.
ஆனாலும் அடிக்கடி ஏற்படும் டென்சனைதான் குறைக்கவே முடிவதில்லை.
தகவல்களுக்கு நன்றி தேவா சார்..
கட்டாயம் தெரிஞ்சுக்கவேண்டிய,சிலர் அனுபவிக்கிற,பலர் எச்சரிக்கையாயிருக்கவேண்டிய தகவல்களைத் தந்திருக்கீங்க.
மேலும் தெரிஞ்சுக்க ஆவல்.
நன்றிகள்!
unavoidable,usefull informations.
thank you.
அன்பின் தேவா
அருமை அருமை பயனுள்ள இடுகை
பெண்களுக்குத் தேவையான இடுகை
நல்வாழ்த்துகள் தேவா
பயணுள்ள பதிவுங்க மருத்துவரே... வாழ்த்துக்கள்.
Post a Comment