Friday, 2 October 2009

ஹாங்க் ஓவர்-குறைப்பது எப்படி?

முதலில் ஹாங்க் ஓவரில் என்னென்ன பிரச்சினைகள் வரும்? என்று பார்ப்போம். பெரும்பாலும் தலைவலிதான் அதிகம் இருக்கும்.

தலைவலிக்கு அடுத்து சோர்வு, குமட்டல், உடல் காய்ச்சல் அடிப்பதுபோல் இருப்பது, எச்சில் அதிகம் சுரத்தல், கவனமின்மை எல்லாம் வரும். இது நிறையப்பேருக்குத்தெரியும் என்று நினைக்கிறேன்!! இதற்கு மருந்து உண்டா? உண்டு! மருந்துன்னு கிடையாது.. ஆனா சில வழிமுறைகள் இருக்கு. என்ன என்ன வழிகள் என்று பார்ப்போமே!!

1.பழ ஜூஸ், தண்ணீர் ரொம்பத் தேவை! ஏன் என்றால் உங்கள் உடம்பில் தண்ணீர் குறைந்து விடும்!!(அந்தத் தண்ணி அடிச்சா...  சாதாத தண்ணி குறையும்!!எப்படி.....). நிறைய ஜூஸும், தண்ணியும் குடிங்க!!

2.காபி சாப்பிடவேண்டாம். இதுவும் உடலில் ஹாங்க் ஓவரைக் கூட்டும்.

3.ஜூஸில் ஆரஞ்சு ஜூஸ் நிறைய குடிங்க.

4. ஊறுகாய், டின் மீன் எடுத்து அடிங்க! ஹாங்க் ஓவர் குறையும்.

5.ஒரு ”பிளடிமேரி” காக்டெயில் அடிங்க!! பிளடி மேரின்னா

லெமன் ஜூஸ் -1 பங்கு

தக்காளி சாறு- 6 பங்கு,

வோட்கா-3 பங்கு,கொஞ்சம் உப்பு, மிளகுத்தூள்

மிக்ஸ் பண்ணினால் ”பிளடி மேரி”.

” பிளடி மேரி செய்ய வோட்கா இல்லையா? ஓகே !

விர்ஜின் மேரி”- விர்ஜின் மேரிக்கு ஆல்கஹால் தேவையில்லைங்க! என்ன வேணுங்கிறீங்களா?

1.3 அவுன்ஸ் தக்காளி சாறு

2.1/2 அவுன்ஸ் லெமன் ஜூஸ்

3.பெப்பர் தூள்.

4.அப்புறம் ஐஸ், .

மிக்ஸ் பண்ணி சாப்பிடுங்க!!

6.முதலில் ஒரு குளியல் போடுங்க!! முன்னாடியே சொல்ல மறந்துவிட்டேன். சரியா?

7.கொஞ்சம் சாதாரண உடல் பயிற்சி செய்யலாம். நல்லா பச்சைத் தண்ணி குடித்துவிட்டு ஒரு ஓட்டம் போனீங்கன்னா நல்லா இருக்கும்!!

8.தலைவலி மாத்திரை மட்டும் போடாதீங்க. ஈரல் கெட்டுப் போகும்.மேலும் வயிற்றில் இரத்தம் கசிவுகூட ஏற்படலாம்!!

இது போதும் என்று நினைக்கிறேன்!! வார ஓய்வை நல்லாக் கொண்டாடுங்க!!

43 comments:

அகல்விளக்கு said...

//(அந்தத் தண்ணி அடிச்சா... சாதாத தண்ணி குறையும்!!எப்படி.....)//

டாக்டர்ன்றதா புருப் பண்றீங்க.



நல்ல தகவல்கள். நன்றி.

அறிவிலி said...

குடிக்காமயே போதை வர்றதுக்கு ஏதாவது வழி இருக்கா டாக்டர்?போதைக்கு போதை, உடம்பும் கெடாது....
:)))))))

பி.கு. - ஹேங் ஓவர் இருந்தாலும் பரவாயில்லை.

நாமக்கல் சிபி said...

Thanks for the tips

ரோஸ்விக் said...

குடிக்கவும் வழி சொல்லி....குடிச்சது தெளியவும் வழி சொன்னது அருமை....
இது தான் தேவ(தேவா) வாக்கு.

அமர பாரதி said...

ஹாங்க் ஓவர்-குறைப்பதற்கு வழி:

1. இரவு 10 மணிக்குள் படுக்கச் செல்வது
2. படுக்கும் போது ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பது. இது இரவு நேர டீ-ஹைட்ரேஷனை சமன் செய்யும்.

எல்லாவற்றையும் விட அருமையான வழி குடிக்காமல் இருப்பது.

KARTHIK said...

நல்ல தகவல்

இந்தமாதிரி சமயங்கள்ல காலைல எழுந்ததையும் வீட்டுல இருந்தா பழைய சோத்தி தண்ணி
இல்லனா ஆப்பி ஜீஸ் 200 ml

அதுவும் இல்லனா மறுபடியும் ஒரு பெக் :-))

களப்பிரர் - jp said...

மிகவும் பயனுள்ள தகவல்கள் டாக்டர் !!!

தேவன் மாயம் said...

அகல் விளக்கு said...
//(அந்தத் தண்ணி அடிச்சா... சாதாத தண்ணி குறையும்!!எப்படி.....)//

டாக்டர்ன்றதா புருப் பண்றீங்க.



நல்ல தகவல்கள். நன்றி.

02 October 2009 05:51//

நன்றி நண்பரே!!

பாலா said...

(அந்தத் தண்ணி அடிச்சா... சாதாத தண்ணி குறையும்!!எப்படி.....)//


raththulaiye kalanthathu sir avlo sekiram pirikkamudiyaathulla athaan

தேவன் மாயம் said...

அறிவிலி said...
குடிக்காமயே போதை வர்றதுக்கு ஏதாவது வழி இருக்கா டாக்டர்?போதைக்கு போதை, உடம்பும் கெடாது....
:)))))))

பி.கு. - ஹேங் ஓவர் இருந்தாலும் பரவாயில்லை.

02 October 2009 06:00///

குடிக்காமல் போதை காதலில்தான் வரும்!!

தேவன் மாயம் said...

நாமக்கல் சிபி said...
Thanks for the tips//

நன்றி நண்பரே!!

02 October 2009 06:05


ரோஸ்விக் said...
குடிக்கவும் வழி சொல்லி....குடிச்சது தெளியவும் வழி சொன்னது அருமை....
இது தான் தேவ(தேவா) வாக்கு.///

ஆகா!! குடிக்கிறவுங்களுக்கு ஏதாவது சொல்லனுமே!!

02 October 2009 06:18

தேவன் மாயம் said...

அமர பாரதி said...
ஹாங்க் ஓவர்-குறைப்பதற்கு வழி:

1. இரவு 10 மணிக்குள் படுக்கச் செல்வது
2. படுக்கும் போது ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பது. இது இரவு நேர டீ-ஹைட்ரேஷனை சமன் செய்யும்.

எல்லாவற்றையும் விட அருமையான வழி குடிக்காமல் இருப்பது.

02 October 2009 06:18//

நல்லாசொல்லிவிட்டீர்!!

தேவன் மாயம் said...

கார்த்திக் said...
நல்ல தகவல்

இந்தமாதிரி சமயங்கள்ல காலைல எழுந்ததையும் வீட்டுல இருந்தா பழைய சோத்தி தண்ணி
இல்லனா ஆப்பி ஜீஸ் 200 ml

அதுவும் இல்லனா மறுபடியும் ஒரு பெக் :-))

02 October 2009 06:20//

மறுபடியும் ஒரு பெக் ஓகே!! அதையும் தாண்டினால் நான் சொன்ன வழிகள்!!

தேவன் மாயம் said...

களப்பிரர் - jp said...
மிகவும் பயனுள்ள தகவல்கள் டாக்டர் !!!

02 October 2009 06:25
//

பயன் இருந்தால் நன்று!!

தேவன் மாயம் said...

பாலா said...
(அந்தத் தண்ணி அடிச்சா... சாதாத தண்ணி குறையும்!!எப்படி.....)//


raththulaiye kalanthathu sir avlo sekiram pirikkamudiyaathulla athaan//

ஓகோ!! ரத்தத்தின் ரத்தம்னா இதுதானா!!!

பீர் | Peer said...

ஹாங்க் ஓவர்...ஹாங்க் ஓவர் ன்றீங்களே அப்டின்னா என்னா டாக்டர்??? :(

Jerry Eshananda said...

டாக்டர் மேட்டர் சும்மா கிக் ஏறுது,ஒரு சந்தேகம் இந்த ”பிளடிமேரி”,அப்புறம் ”விர்ஜின் மேரி”
ரெண்டையும், சரக்கு அடிக்கிறதுக்கு முன்னால அடிக்கனுமா?இல்ல பின்னால அடிக்கனுமா?அப்படியே அடிச்சாலும் என் பொண்டாட்டி "ரோஸ் மேரிக்கு " வாடை தெரியாம
இருக்க ஒரு ஐடியா கொடுங்க டாக்டர்.

Ashok D said...

உண்மையில் ரொம்ப உபயோகமான பதிவு :B

தேவன் மாயம் said...

பீர் | Peer said...
ஹாங்க் ஓவர்...ஹாங்க் ஓவர் ன்றீங்களே அப்டின்னா என்னா டாக்டர்??? :(

02 October 2009 06:50 //

பீருக்குத்தெரியுமா ஹாங்கோவர் பற்றி! அடித்தவனுக்குத்தானே தெரியும்!!

Ashok D said...

hang overa சமாளிக்க ஒரு easyயான வழி.. எந்த சரக்கடிச்சு hangover ஆச்சோ அதே சரக்க கார்த்தால ஒரு small போட்டாக்க. ஹாங் ஓவ்ர்.. டண்டனாடன்.. ஒடியே போகும்...

தேவன் மாயம் said...

ஜெரி ஈசானந்தா. said...
டாக்டர் மேட்டர் சும்மா கிக் ஏறுது,ஒரு சந்தேகம் இந்த ”பிளடிமேரி”,அப்புறம் ”விர்ஜின் மேரி”
ரெண்டையும், சரக்கு அடிக்கிறதுக்கு முன்னால அடிக்கனுமா?இல்ல பின்னால அடிக்கனுமா?அப்படியே அடிச்சாலும் என் பொண்டாட்டி "ரோஸ் மேரிக்கு " வாடை தெரியாம
இருக்க ஒரு ஐடியா கொடுங்க டாக்டர்.

02 October 2009 07:09//

குடுக்கிறேன்!!உங்க வீட்டு நம்பர் குடுங்க!

ஈரோடு கதிர் said...

நண்பர்களை படிக்கச் சொல்லியிருக்கேன்

நன்றி

தேவன் மாயம் said...

D.R.Ashok said...
hang overa சமாளிக்க ஒரு easyயான வழி.. எந்த சரக்கடிச்சு hangover ஆச்சோ அதே சரக்க கார்த்தால ஒரு small போட்டாக்க. ஹாங் ஓவ்ர்.. டண்டனாடன்.. ஒடியே போகும்...

02 October 2009 07:52/
அதையும் தாண்டிப்போனால்தான் இது!

தேவன் மாயம் said...

கதிர் - ஈரோடு said...
நண்பர்களை படிக்கச் சொல்லியிருக்கேன்

நன்றி

02 October 2009 07:53//

நல்லா !

சொல்லரசன் said...

//தேவன் மாயம் said...
பீர் | Peer said...
ஹாங்க் ஓவர்...ஹாங்க் ஓவர் ன்றீங்களே அப்டின்னா என்னா டாக்டர்??? :(

02 October 2009 06:50 //

பீருக்குத்தெரியுமா ஹாங்கோவர் பற்றி! அடித்தவனுக்குத்தானே தெரியும்!!//

அப்ப நீங்க விளக்கமா சொல்லுங்க டாக்டர் ஹாங்கோவர் பற்றி!!!!!

☀நான் ஆதவன்☀ said...

பயனுள்ள தகவல். நன்றி :)

தேவன் மாயம் said...

சொல்லரசன் said...
//தேவன் மாயம் said...
பீர் | Peer said...
ஹாங்க் ஓவர்...ஹாங்க் ஓவர் ன்றீங்களே அப்டின்னா என்னா டாக்டர்??? :(

02 October 2009 06:50 //

பீருக்குத்தெரியுமா ஹாங்கோவர் பற்றி! அடித்தவனுக்குத்தானே தெரியும்!!//

அப்ப நீங்க விளக்கமா சொல்லுங்க டாக்டர் ஹாங்கோவர் பற்றி!!!!!

02 October 2009 08:10 ///

சொல்ஸ் !! நீங்க சொல்லுங்க!! நான் கேட்டுக்கிறேன்!!

Unknown said...

// ஹாங்க் ஓவர்-குறைப்பது எப்படி? //


" கிரிகட் ஓவர்.... ,
மைக் டெஸ்டிங் ஒன்.. டூ.. த்ரீ.. ஓவர்... ,
கண்ட்ரோல் ரூம் ஓவர்.. , "
இந்த ஓவரெல்லாம்தான் கேள்வி பட்டிருக்குறேன்......!! அதென்னுன்ங்க டாக்டரே ஹாங்க் ஓவர்........???




// மருந்துன்னு கிடையாது.. //

அப்போ அரசு டாஸ் அன்காடியா .....?




// பழ ஜூஸ், தண்ணீர் ரொம்பத் தேவை! //

யாருக்கு ...? கடக்காரருக்கா ....?



// அந்தத் தண்ணி அடிச்சா... சாதாத தண்ணி குறையும்!!எப்படி.... //

அலார்ட்டாத்தான் இருக்குறீங்க .... !!




// காபி சாப்பிடவேண்டாம் //


அப்போ குடிக்கலாமா....?



// ஜூஸில் ஆரஞ்சு ஜூஸ் நிறைய குடிங்க //

பச்ச... சிவப்பு... கலர்ல குடிக்க கூடாதா டாக்டர்....?



// டின் மீன் எடுத்து அடிங்க! //

டின் பீர்'ஆ ? டின் மீன்'ஆ ? எது எழுத்துப்பிழை....?




// வோட்கா-3 பங்கு //


அதுதான் நமக்கு மெயின் பங்கே.....?

நீங்க நெம்ப நல்ல டாக்டர்...




// ”பிளடிமேரி” ”விர்ஜின் மேரி” //

எனக்கு மெர்ஸலு குப்பம் மேரியத்தான் தெரியும் டாக்டர்....




// முதலில் ஒரு குளியல் போடுங்க!! //


ச்சீஈஈஈ ..... கெட்ட பழக்கம்....




// நல்லா பச்சைத் தண்ணி குடித்துவிட்டு ஒரு ஓட்டம் போனீங்கன்னா நல்லா இருக்கும்!! //

அதுக்கு மாற்றா பார்லி தண்ணி குடித்துவிட்டு ஒரு ஆட்டம் போடலாமா டாக்டர்...??



// ஈரல் கெட்டுப் போகும் //

நோ ப்ராப்ளம் டாக்டர்.... அதுதான் கசாப்பு கடையில கிலோ கணக்குல தொங்க உட்டுருக்காங்களே... வாங்கி மாத்திக்கலாம்...!!



தகவலுக்கு நன்றிங்க டாக்டர்....!!

Gobneath said...

நன்றாக இருந்தது.

மாதவராஜ் said...

பகிர்வுக்கு நன்றி.

துபாய் ராஜா said...

மருந்தாக அருந்தினால் விருந்துண்ணலாம்.
விருந்தாக அருந்தினால் மருந்துண்ணவேண்டி வரும்.

எல்லாவற்றிலும் சிறந்த எளிய வழி கண்ட கருமத்தையும் குடிக்காமல் இருப்பதுன்னு சொல்லியிருக்கலாம் டாக்டர்....

ஆ.ஞானசேகரன் said...

என்னமோ சொல்லுரீங்க புரிஞ்சமாதுரி தெரியலயே?

மங்களூர் சிவா said...

நல்ல தகவல்.

S.A. நவாஸுதீன் said...

நமக்கு சம்பந்தம் இல்லேன்னாலும் தேவையானவங்களுக்கு தேவையான பதிவு தேவா சார்

ஷங்கி said...

மத்த சிலபேரு சொன்ன மாதிரி பேசாம குடிக்காம இருந்திர வேண்டியதுதான்! ஆனாலும் டிப்ஸ் அருமை.

சிங்கக்குட்டி said...

நல்ல ஒரு வாரஇறுதி பதிவு வாழ்த்துக்கள்.

கபிலன் said...

தெளிய வச்சதுக்கு ரொம்ப நன்றிங்க டாக்டர். நிச்சயமா ரொம்ப உபயோகமான பதிவுங்க : )

Jawahar said...

இது எல்லாத்தையும் விட ரொம்ப சுவாரஸ்யமான ஒரு வழி இருக்கு. இதைச் சொன்னது என் டாக்டர் நண்பன். இன்னும் ஒரே ஒரு லார்ஜ் சாப்பிடுங்கள். ஒரே ஒரு லார்ஜ்தான்.

என் நண்பர்களில் மொடாக் குடியர்கள் பலர் ஒரு லார்ஜை மிச்சம் வைத்துச் சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன்.

ஆபீஸ் போக வேண்டிய கட்டாயம் என்றால் பச்சை வெங்காயத்தை மென்று விட்டுப் போங்கள். அதன் எபெக்ட் அடங்குமுன் ஆல்கஹால் எபெக்ட் அடங்கி விடும்!

http://kgjawarlal.wordpress.com

அப்துல்மாலிக் said...

எந்த சரக்கடிச்சாலும் அதே சரக்க்குலே கால்வாசி அடிச்சால் சமன் செய்துடுமாமுலே அப்படியா?

நமக்கு தேவையில்லாத மேட்டரு, இருந்தாலும் மூக்கை நுழைப்பதில் தப்பில்லைதானே

மடிப்பாக்கம் டமாரு said...

இப்ப தான் எந்திருச்சேன். ஆரஞ்சு ஜூஸ் நல்ல வேலை பாக்குது டாக்டர் ! நன்றி !

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

ரொம்ப உபயோகமான பதிவு டாக்டர் .நன்றி.

பீர் | Peer said...

//ஜெரி ஈசானந்தா. said...

டாக்டர் மேட்டர் சும்மா கிக் ஏறுது,ஒரு சந்தேகம் இந்த ”பிளடிமேரி”,அப்புறம் ”விர்ஜின் மேரி”
ரெண்டையும், சரக்கு அடிக்கிறதுக்கு முன்னால அடிக்கனுமா?இல்ல பின்னால அடிக்கனுமா?அப்படியே அடிச்சாலும் என் பொண்டாட்டி "ரோஸ் மேரிக்கு " வாடை தெரியாம
இருக்க ஒரு ஐடியா கொடுங்க டாக்டர்.//

அசத்திட்டீங்க... ஜெரி. ரசித்தேன்.

தினேஷ் said...

அய்யா தாமதமாக வந்துவிட்டேனே நேற்றே பார்த்திருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும்..

எதுக்கும் இன்னிக்கு போய் ஒரு பிளடிமேரிய தள்ள வேண்டியதுதான்

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory