வீட்டில் டி.வி.டி க்களிலேயே படம் பார்க்கும் இந்நாளில் பேராண்மை திரைப் படத்தை நான் தியேட்டரில் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. இந்தப் படத்தில் கண்ட சில முக்கிய விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
1.சராசரி தமிழ்க் கதாநாயகனுக்காகக் கதையை மாற்றி அவருக்காக பிரத்தியேகக் காட்சிகளைப் புகுத்தி ஏகப்பட்ட பில்டப்பில் நடந்து வரும் கதாநாயகனை இதில் காணோம்.
2.பழங்குடி இன மக்கள் இந்தியக் காட்டுப் பகுதிகளில் துன்புறுத்தப் படுவதையும் இடம் பெயர்வதையும் சிறிதளவேணும் காட்ட முயன்றிருப்பது அருமை.
3.படம் ஆரம்பித்ததிலிருந்து கதாநாயகி எங்கே என்று தேடும் சராசரி தமிழ்ப் படபாணியிலிருந்து துணிச்சலாக விலகி நாயகி இல்லாத ஒரு தமிழ்ப் படம்! ஆச்சரியம்!
4.தமிழ் சினிமாவின் அத்தியாவசியப் பொருளான காமெடி ட்ராக்கை கையிலெடுத்தாலும் அடக்கி வாசித்திருப்பது டைரக்டரின் தைரியம்தான்.
5.கல்லூரிப்பெண்களின் துடுக்குத்தனங்களை நன்றாகச் சித்தரிக்கும் அதே நேரம் இரட்டை அர்த்த வசனங்களைத் தவித்திருக்கலாம்.
6.மார்க்ஸியத்தை அவ்வப்போது தொடும் இயக்குனர் அதேபோல் பழங்குடியினர் பிரச்சினையையும் ஊறுகாய்போல் தொட்டிருக்கிறார். ஆகையினால் பழங்குடியினர் இடம்பெயருவதெல்லாம் மனதைத் தொடாமல் மேம்போக்காக உள்ளது.(படத்தின் மையக்கதை வேறு என்பது ஒரு காரணம்).
7.உடல் தகுதியில்லாத கதாநாயகர்கள் போல் அல்லாமல் தற்கால தமிழ்க் கதாநாயகர்கள் உடல் விசயத்தில் அக்கறை காட்டுவது, சிக்ஸ்பேக் அமைப்புக்களுடன் வருவது வரவேற்கத் தகுந்த விசயம். ஜெயம் ரவியின் உடல் உழைப்பும் படத்தில் தெரிகிறது.
8.சரித்திரத்தில் இடம் பெறாத, பெயர் தெரியாத எண்ணற்ற வீரர்கள் காடுகளிலும் எல்லைப் புறத்திலும் தாய் நாட்டுக்காக உடல்,உயிர் இழக்கும் தியாகத்தைப் படமாக்க நினைத்திருப்பது போற்றப்பட வேண்டிய விசயம்.
தமிழ்ப் படத்துக்கே உரிய சில குறைகள் இருந்தாலும் அவற்றை நான் இங்கு எழுதவில்லை.
26 comments:
சரியாச் சொன்னீங்க.
இது குறை விமர்சனம் இல்லை, நிறை விமர்சனம்.
//தமிழ்ப் படத்துக்கே உரிய சில குறைகள் இருந்தாலும் அவற்றை நான் இங்கு எழுதவில்லை.//
ஹைய்ய்ய்...
எஜ்கேப்பா......
அகல் விளக்கு said...
சரியாச் சொன்னீங்க.
இது குறை விமர்சனம் இல்லை, நிறை விமர்சனம்.
30 October 2009 08:08
அகல் விளக்கு said...
//தமிழ்ப் படத்துக்கே உரிய சில குறைகள் இருந்தாலும் அவற்றை நான் இங்கு எழுதவில்லை.//
ஹைய்ய்ய்...
எஜ்கேப்பா.....///
நிறைகள் நிறைய இருப்பதுபோல் குறைகள் குறைவாக உள்ளது. ஹி ஹி!
அப்போ படத்தை பார்த்துடுவோம்...
ண்ணா சூப்பருங்கன்னா...
தேவா சார் , அருமையான விமர்சனம்
டாக்டர் அருமையான தெளிவான விமர்சனம்
Mrs.Menagasathia said...
அப்போ படத்தை பார்த்துடுவோம்...
30 October 2009 08:37 ///
ஒரு புது முயற்சிக்கு ஆதரவாக இருக்கும்!
D.R.Ashok said...
ண்ணா சூப்பருங்கன்னா...
30 October 2009 08:38//
அய்யோ அப்படியா!
Starjan ( ஸ்டார்ஜன் ) said...
தேவா சார் , அருமையான விமர்சனம்
30 October 2009 08:4//
முதல் விமரிசனம்ங்க!
அத்திரி said...
டாக்டர் அருமையான தெளிவான விமர்சனம்
30 October 2009 08:50///
படம்பார்த்துவிட்டீர்களா!
பேராண்மை பட இயக்குநர் ஜெகநாதன் எடுத்த முதல் இரண்டு படங்களுமே (இயற்கை & ஈ) வித்தியாசமானவை தான். மிக அருமையா சொல்லியிருக்கீங்க. நிறைவான விமர்சனம்.
ஜோசப் பால்ராஜ் said...
பேராண்மை பட இயக்குநர் ஜெகநாதன் எடுத்த முதல் இரண்டு படங்களுமே (இயற்கை & ஈ) வித்தியாசமானவை தான். மிக அருமையா சொல்லியிருக்கீங்க. நிறைவான விமர்சனம்.///
சொல்ல மரந்துவிட்டேன். இயற்கை உணவுக்கும் ஆதரவாக மரபணு உணவுகளை மெதுவாகச் சாடியுள்ளார்!!
hmmm இந்தப் படத்தைப் பார்த்து விட வேண்டியது தான் போல ... :)
மருத்துவரே என்னாச்சு... நீங்களும் சினிமா விமர்சனம் எழுத ஆரம்பிச்சுட்டீங்க..
விமர்சனம் ரொம்ப நல்லாத்தான் இருக்கு. ஆனால் முதன் முதலாக உங்க பதிவுல இப்படியொரு இடுகையைப் பார்த்தவுடன், இப்படி கேட்க தோணிச்சு.. கோச்சுகிடாதேயும்.
நல்ல விமர்சனம் நடுநிலைபோல் தெரியுது
டாக்டர் சார் ... எனக்கு ரொம்ப ஆச்சிரியமா இருக்கு ... உங்க பிளாக் ல சினிமா விமர்சனம் பார்க்க
நல்ல நடு நிலையான பதிவு
(சன் டிவி கிட்ட இருந்து செக் வந்துருச்சா ???)
டாக்டர், விமர்சனம் அருமை...
சூப்பர் ஆக சொல்லி இருக்கீங்க
படம் இன்னும் பார்க்கவில்லை. கண்டிப்பாக பார்க்கனும்.
படத்தை நல்லா உள்வாங்கி எழுதிரக்கீங்க!!! இயக்குனர் ஜனநாதன் நல்ல இயக்குனர். அவரது இயற்கை, ஈ பார்த்துவிட்டு அவர் ரசிகனாகிவிட்டேன்.
சொல்லிட்டீங்கல்ல பார்த்துடவேண்டியதுதான்.
நானும் திரையில் பார்த்தேன் ... நல்லா சொல்லியிருக்கிங்க மருத்துவரே
ரொம்ப நல்ல படம்..இல்லையா தேவா சார்?
கண்டிப்பாக பார்க்கலாம்
படம் நல்லா இருக்கு நானும் நேற்றைக்கு தான் பார்த்தேன்
நானும் திரையரங்கில் தான் பார்த்தேன், அருமையான திரைப்படம்.
-பதுமை.
Post a Comment