இந்தியாவே இலங்கை என்ன
நீ கழற்றி வீசிய
காலணியா!
இல்லம் விட்டு
வெளியேற்றிய
வேண்டாத பிள்ளையா?
இரத்தம் கடலாகி
உன் பாதம்
தொடும்போது
நீ கண் விழித்து
என்ன பயன்!!!
அலைகடல் தாண்டி
அழும் ஓலம் கேட்கவில்லையா?
எழுந்திரு!!!
சுவாசிக்க மூச்சுகள்
முடியும்முன்!!
துடிக்க இதயங்கள்
மறக்கும் முன்!!!
உலர்ந்த அந்த
உயிர்களுக்கு
உன் சுவாசம் கொடு!
உன் குழந்தைகளை
அணைத்து
உயிர்ப்பால் ஊட்டு!!!!!!!
27 comments:
நல்ல உருக்கம்!
விடியல் வாய்க்க வேண்டும்!!
வார்த்தைகளில் வலி தெரிகின்றது. எழுதுவோம் தொடர்ந்து எழுதுங்கள் அவர்கள் காதுகளில் கேட்கும் வரை.
நல்ல உருக்கம்!
விடியல் வாய்க்க வேண்டும்!!///
நன்றி காரூரன்!!
வார்த்தைகளில் வலி தெரிகின்றது. எழுதுவோம் தொடர்ந்து எழுதுங்கள் அவர்கள் காதுகளில் கேட்கும் வரை.///
நன்றி பழைமை பேசியாரே!
தேவா........
வலிகளோடு வடிக்கப்பட்ட வார்த்தைகள்
விரைவில் வர வேண்டும் விடிவு
பிரார்த்தனையுடன் ...
வலிகளோடு வடிக்கப்பட்ட வார்த்தைகள்
விரைவில் வர வேண்டும் விடிவு
பிரார்த்தனையுடன் ...///
நன்றி ஜமால்!!!
விடியல் வரும்.
தேவா....
"விடியல்" வரத்தான் வேண்டும்...வருமா? நீண்ட காத்திருப்பு அவர்களுடையது,பார்க்கலாம் நல்லதே நடக்கட்டும்.
மிக நல்ல கவிதை...
விரைவில் இந்த நிலை மாற வேண்டும்.
"சுவாசிக்க மூச்சுகள்
முடியும்முன்!!
துடிக்க இதயங்கள்
மறக்கும் முன்!!! "
நல்ல உருக்கமான வரிகள்
வார்த்தைகளில் வழி, கண்களில் கண்ணீர், இதயத்தில் வெறுமை, எதிர்காலம் கேள்விக் குறி, பிரார்த்தனையே கதி, இப்போதும் நம்பிக்கை என்னும் ஓர் சின்ன நுர்லில் தொங்கிக் கொன்டு எங்கள் வாழ்க்கை........
விடியல்" வரத்தான் வேண்டும்...வருமா? நீண்ட காத்திருப்பு அவர்களுடையது,பார்க்கலாம் நல்லதே நடக்கட்டும்.///
நடப்பவை நல்லதாக இருக்கட்டும்
தேவா...
மிக நல்ல கவிதை...
விரைவில் இந்த நிலை மாற வேண்டும்.///
வேத்தியன் அய்யா வருக!
தேவா,..
சுவாசிக்க மூச்சுகள்
முடியும்முன்!!
துடிக்க இதயங்கள்
மறக்கும் முன்!!! "
நல்ல உருக்கமான வரிகள்
வார்த்தைகளில் வழி, கண்களில் கண்ணீர், இதயத்தில் வெறுமை, எதிர்காலம் கேள்விக் குறி, பிரார்த்தனையே கதி, இப்போதும் நம்பிக்கை என்னும் ஓர் சின்ன நுர்லில் தொங்கிக் கொன்டு எங்கள் வாழ்க்கை........///
நீ சொல்லிய பதிலே
உணர்ச்சி மயமான
கவிதையாய்
உள்ளது துஷா!!
தேவா.....
இயற்கையை மட்டுமே நேசிக்கும் இவர்கள், மனிதர்களை நேசிப்பதில்லை அது தான் அவர்களுக்கு அலும்குரல்களை விட அலைக்குரல் தன் அதிகம் கேட்கும்...
///இப்போதும் நம்பிக்கை என்னும் ஓர் சின்ன நூலில் தொங்கிக் கொன்டு எங்கள் வாழ்க்கை........///
உண்மைநிலை இதுதான்
உணர்விர்க்கு நன்றி தேவா
இயற்கையை மட்டுமே நேசிக்கும் இவர்கள், மனிதர்களை நேசிப்பதில்லை அது தான் அவர்களுக்கு அலும்குரல்களை விட அலைக்குரல் தன் அதிகம் கேட்கும்...///
ஆம் சரியாக சொன்னாய்.
இன்னும் நிறய எழுது
///இப்போதும் நம்பிக்கை என்னும் ஓர் சின்ன நூலில் தொங்கிக் கொன்டு எங்கள் வாழ்க்கை........///
உண்மைநிலை இதுதான்
உணர்விர்க்கு நன்றி தேவா///
நன்றி தங்கராசா!
எதை எழுவது என்ற குழப்பத்திலிருக்கிறேன் அண்ணா..............
எதை எழுவது என்ற குழப்பத்திலிருக்கிறேன் அண்ணா..............///
சிந்தனை செய் மனமே.....
ஆறாத்துயர் ஆகிவிடுமோ எங்கள் துயர் என்கிற நிலையில் தமிழகத்து தாய் கரம் நீண்டுகிறாள் கண்ணீர் துடைக்க, ஆறுதல் அளிக்கிறது.
எங்கள் தேசம் விடியும் தூரம் தொலைவிலில்லை.
நன்றி.
ஆறாத்துயர் ஆகிவிடுமோ எங்கள் துயர் என்கிற நிலையில் தமிழகத்து தாய் கரம் நீண்டுகிறாள் கண்ணீர் துடைக்க, ஆறுதல் அளிக்கிறது.
எங்கள் தேசம் விடியும் தூரம் தொலைவிலில்லை.
நன்றி.///
வருத்தம் வேண்டாம்!!
விடியல் வரும்!!
கண்ணீரைத்துடையுங்கள்
காலம் வரும்!!!
நட்புடன் தேவா.........
Vidiyal vendum.
எங்களுக்காகப் போராடுகிறீர்கள்.கவனிக்கிறார்களா யாராவது!நன்றி சொல்லிவிட்டுக் காத்திருக்கிறோம்.
Vidiyal vendum.//
காலை
வணக்கம்!!
தேவா..
எங்களுக்காகப் போராடுகிறீர்கள்.கவனிக்கிறார்களா யாராவது!நன்றி சொல்லிவிட்டுக் காத்திருக்கிறோம்.///
இலங்கை
மக்களுக்காக
ஏன் குரல்
கொடுக்க வேண்டும்
என்ற
எண்ணம்-இங்கு சிலருக்கு!!
தேவா..
உயிர்ப்பால் ஊட்டாவிடினும் பறவாயில்லை. ஆயுதக்குவியலை இலங்கை அரசுக்கு வழங்காமல் இந்தியா விடட்டுமே. தமிழர் வாழ்ந்திடுவர்.
தினம் தினம் வரும் செய்திகள் இதயத்தில் இடியிறக்கிப் போகிறது.
இழப்பதற்கு எம்மிடம் இனி எதுவுமேயில்ல.
ஈழத்தார் துயர் அறிந்து இட்ட கவிக்கு நன்றிகள் தேவா.
சாந்தி
உயிர்ப்பால் ஊட்டாவிடினும் பறவாயில்லை. ஆயுதக்குவியலை இலங்கை அரசுக்கு வழங்காமல் இந்தியா விடட்டுமே. தமிழர் வாழ்ந்திடுவர்.
தினம் தினம் வரும் செய்திகள் இதயத்தில் இடியிறக்கிப் போகிறது.
இழப்பதற்கு எம்மிடம் இனி எதுவுமேயில்ல.
ஈழத்தார் துயர் அறிந்து இட்ட கவிக்கு நன்றிகள் தேவா.
சாந்தி//
துயரம் தீரும் காலம் வரும்!!!
துயரம் தீரும் காலம் வரும்!!!
+++++++++++++++++++++++++++++
இன்னும் நம்பிக்கையிருக்கிறது.
நன்றி.
சாந்தி
Post a Comment