Friday, 30 January 2009

கலாச்சார சீரழிவும் வன்முறையும்!!!

அண்மையில் கர்நாடக மாநிலத்தில் உணவு விடுதி ஒன்றில் இரவு நடன நிகழ்ச்சியில் ஓட்டலுக்குள் புகுந்த ஒரு அமைப்பினர், கலாசாரத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறி, நடனம் ஆடிய இளம் பெண்களையும், பார்வையாளர்களையும் கண்மூடித்தனமாக தாக்கினர்.ஓட்டலுக்கு வெளியில் தப்பிச் செல்ல முயன்ற பெண்களை ஓட ஓட விரட்டி தாக்குதல் நடத்தினர்.

இது கலாச்சார சீர்கேடு என்றால் இதனை இவர்கள் அனுகிய முறை சரிதானா?
இந்த இளைஞர்களுக்கு பிறர்மீது வண்முறையை பிரயோகிக்க என்ன உரிமை உள்ளது?

இதுபோல எங்கு கலாசார சீர்கேடு என்று இவர்கள் கருதும் நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் அங்கு இவர்கள் அங்கு தோன்றி கலாசாரத்தை பாதுகாப்பார்களா?

இப்படி இவர்கள் செய்துதான் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டுமா?அல்லது இப்படி செய்வதால் கலாசாரம் காப்பாற்றப்படுமா?
என்று பல கேள்விகள் எழுகின்றன!!!!

முறைகேடான ஒழுக்கக் குறைவான செயல்கள் விடுதிகளில் நடக்க இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது யார்?

அதற்குப்பொறுப்பான அந்தப்பகுதி அதிகாரிகள் மீது அல்லவா நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

தமிழகத்தில் சில வித நடன நிகழ்ச்சிகள்,குதிரைப் பந்தயம் ஆகியவை தடை செய்யப்பட்டு உள்ளது.

கர்நாடகத்தில் அனுமதி அளிக்கப்பட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கண்காணிக்க வேண்டியது காவலர் கடமை..அங்கு முறைகேடுகள் நடந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவர்கள் பணியும் கடமையும்!!

இங்கு காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தது?அல்லது பலமுறை காவல் துறைக்கு தெரிவித்தும்,போராட்டங்கள் நடத்தியும் அதிகாரிகளோ, விடுதி நிர்வாகமோ கண்டு கொள்ளாத்தால்தான் இந்த இளைஞர்கள் இத்தகைய நடவடிக்கையில் ஈடு பட்டார்களா?

அதிகாரிகள் கையூட்டு பெற்று கண்டும் காணாமல் விட்டால் ,அவர்களை தண்டிக்காமல் ....பேருக்கு பணிமாற்றம் என்று நாடகங்கள்தான் அரங்கேறுகின்றன.

இதில் சில கவனிக்க வேண்டியவை என்னவென்றால் இப்படி நடன நிகழ்ச்சிகள் கர்நாடகத்தில் நிறைய இடத்தில் நடைபெறுகின்றன..

இவர்கள் இப்படி செய்வதால் கலாசாரம் காப்பாற்றப்படும் என்றால் சாதாரணமாக குடித்துவிட்டு அநாகரீக செயல்களில் தினமும் ஈடுபடும் ஆண்கள் மீது என்ன நடவடிக்கை இவர்கள் எடுத்தார்கள்!!

அல்லது இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் விபச்சார விடுதிகளை என்ன செய்தார்கள்!!

இவர்கள் ஏதோ ஒரு குறிப்பிட்ட விடுதியை மட்டும் தாக்க வேறு காரணங்கள் ஏதும் இருந்தனவா?
இப்படி நம்மிடம் பல கேள்விகள் தோன்றுகின்றன..

ஒன்று நிச்சயம் !!
இப்படி உணர்ச்சி வசத்தில் இளைஞர்களுக்கு மதவாத கருத்துகளை போதித்து அவர்களை வண்முறையில் ஈடுபடுத்துவது மிகத்தவறு..

இதனால் நாட்டில் சாதாரண கலவரம் ,கல்வீச்சு முதல் குண்டு வீச்சு வரையான பெரிய கொடுமைகள் நடக்கின்றன..

இதில் ஈடுபட்டு சிறை செல்லும் இளைஞர்களின் எதிர்காலம் என்ன?
எங்கு கலவரம்,குண்டு வெடிப்பு என்றாலும் அவர்களைத்தான் முதலில் கைது செய்வார்கள்!! விசாரணையில் பலிகடா ஆக்கப்படுவார்கள்..

எது எப்படியோ ...... பெண்கள் மீதோ ஆண்கள் மீதோ வன்முறையை பிரயோகிப்பது தவறு.!

பெண்கள்தான் கலாச்சார சீரழிவுக்கு காரணம் என்பதும் தவறு..

27 comments:

ராஜ நடராஜன் said...

வந்துவிட்டோமில்ல!

தேவன் மாயம் said...

வாங்க ராஜ நடராஜன்!
எப்படி
இருக்கீங்க?

தேவா....

ராஜ நடராஜன் said...

//இப்படி உணர்ச்சி வசத்தில் இளைஞர்களுக்கு மதவாத கருத்துகளை போதித்து அவர்களை வண்முறையில் ஈடுபடுத்துவது மிகத்தவறு..//

இந்திய தலிபான்கள்.இந்தக் காரணம் கொண்டே பி.ஜே.பி தேசிய நீரோட்டத்தில் கலந்து விட்டாலும் அதன் கிளை அமைப்புகள் இந்தியப் பாரம்பரியம் காக்கிறோம் என்று சொல்லிக் கொண்டாலும் இவர்களை நினைத்தால் இந்தியாவின் எதிர்காலம் பயமாயிருக்கிறது.

இந்தியம் என்பது அனைத்தையும் உள்வாங்கிக் கொள்ளும் ஒரு தேசம் என்பது புரிந்து கொள்ளவேண்டும்.

ராஜ நடராஜன் said...

//வாங்க ராஜ நடராஜன்!
எப்படி
இருக்கீங்க?

தேவா....//

தேவா!ஈழம் குறித்த கவலையும்,முத்துக் குமாரன் இழப்பும் தவிர்த்து இன்றைய தினம் துக்கநிலையிலிருந்து தூக்க நேரத்துக்கு வந்துவிட்டது:(

தேவன் மாயம் said...

இந்திய தலிபான்கள்.இந்தக் காரணம் கொண்டே பி.ஜே.பி தேசிய நீரோட்டத்தில் கலந்து விட்டாலும் அதன் கிளை அமைப்புகள் இந்தியப் பாரம்பரியம் காக்கிறோம் என்று சொல்லிக் கொண்டாலும் இவர்களை நினைத்தால் இந்தியாவின் எதிர்காலம் பயமாயிருக்கிறது.

இந்தியம் என்பது அனைத்தையும் உள்வாங்கிக் கொள்ளும் ஒரு தேசம் என்பது புரிந்து கொள்ளவேண்டும்.///

பிரமாதமான கண்ணோட்டத்துடன்
எழுதியுள்ளீர்கள்!!
அடிக்கடி
வந்து கருத்துரை
வழங்குங்கள்!!!

தேவன் மாயம் said...

தேவா!ஈழம் குறித்த கவலையும்,முத்துக் குமாரன் இழப்பும் தவிர்த்து இன்றைய தினம் துக்கநிலையிலிருந்து தூக்க நேரத்துக்கு வந்துவிட்டது//

என்ன செய்வது!!தூங்க ஆரம்பியுங்கள்.
நான் சாப்பிட செல்கிறேன்..
நல்லிரவாகுக...

ஆதவா said...

என்ன நினைத்தேனோ அதை அப்படியே சொல்லிவிட்டீர்கள்..

என்னைப் பொறுத்தவரையில், நடன விடுதிகள், பாலியல் ஆகியவற்றைப் பொறுத்தமட்டில் பெண்களுக்கென்று தனி உரிமை இருக்கிறது..

அவ்வுரிமையைப் பறிக்க எவருக்கும் உரிமை இல்லை...

நல்ல பதிவு ஜி..

அ.மு.செய்யது said...

இங்கு நடக்கும் அலப்பறையில் மறைந்து அனைவரும் மறந்து போன ஒரு விஷயத்தைப் பற்றி ஒரு அலசு அலசியிருக்கிறீர்கள்.

அ.மு.செய்யது said...

//ஒன்று நிச்சயம் !!
இப்படி உணர்ச்சி வசத்தில் இளைஞர்களுக்கு மதவாத கருத்துகளை போதித்து அவர்களை வண்முறையில் ஈடுபடுத்துவது மிகத்தவறு..
//

சரியாகச் சொன்னீர்கள்.

இராகவன் நைஜிரியா said...

மிக அருமையான கேள்விகள்... ஆனால் விடைத்தான் தெரியவில்லை...

காலம் சரியான பதில் சொல்லும் என்று நினைக்கின்றேன்

தேவன் மாயம் said...

என்ன நினைத்தேனோ அதை அப்படியே சொல்லிவிட்டீர்கள்..

என்னைப் பொறுத்தவரையில், நடன விடுதிகள், பாலியல் ஆகியவற்றைப் பொறுத்தமட்டில் பெண்களுக்கென்று தனி உரிமை இருக்கிறது..

அவ்வுரிமையைப் பறிக்க எவருக்கும் உரிமை இல்லை...

நல்ல பதிவு ஜி..///

உண்மைதான்!!
எழுத வேண்டும் என்று எண்ணிக்கொண்டே இருந்தேன்...

தேவன் மாயம் said...

இங்கு நடக்கும் அலப்பறையில் மறைந்து அனைவரும் மறந்து போன ஒரு விஷயத்தைப் பற்றி ஒரு அலசு அலசியிருக்கிறீர்கள்.///

ஆமாம்! இது பற்றி பதிவுகள் இல்லை எனலாம்...

தேவன் மாயம் said...

//ஒன்று நிச்சயம் !!
இப்படி உணர்ச்சி வசத்தில் இளைஞர்களுக்கு மதவாத கருத்துகளை போதித்து அவர்களை வண்முறையில் ஈடுபடுத்துவது மிகத்தவறு..
//

சரியாகச் சொன்னீர்கள்.//
ஆமாம் அவர்களுக்கு என்ன எதிர்காலம் உள்ளது?

தேவன் மாயம் said...

மிக அருமையான கேள்விகள்... ஆனால் விடைத்தான் தெரியவில்லை...

காலம் சரியான பதில் சொல்லும் என்று நினைக்கின்றேன்///

காலை வணக்கம்!!
இந்தக்கேள்விகள் தோன்றுவது இயல்புதானே!!!

சி தயாளன் said...

இவர்கள் மனச்சிக்கல் கொண்டவர்கள்..நல்ல மருத்துவர்களிடம் இவர்களை அனுப்பவேண்டும்...

மேவி... said...

ஆமாங்க..... ரொம்ப அந்நியாயம்....

நட்புடன் ஜமால் said...

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

RAMYA said...

பிரிவுகள் நிஜம்தான் தேவா
ஆனால் இந்த அநியாய பிரிவுகள்
தாங்கவொண்ணா துயரை கொடுத்து விடுகின்றன
துயரை துடைக்க எடுத்துரைதல்கள் போதாதா ??

நம் போன்ற இளைஞர் சமுதாயம்
அதைத்தான் செய்ய வேண்டுமே அன்றி
உயிர் தியாகம் தேவை இல்லையே

முத்து குமரன் மறைவிற்கு
கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன்
சகோதரனின் குடும்பத்தினருக்கும்
எனது ஆழ்ந்த இறங்கல்கள்

தேவன் மாயம் said...

இவர்கள் மனச்சிக்கல் கொண்டவர்கள்..நல்ல மருத்துவர்களிடம் இவர்களை அனுப்பவேண்டும்..///

சரிதான்! மன மாற்ற சிகிச்சை தேவைதான்....

தேவன் மாயம் said...

ஆமாங்க..... ரொம்ப அந்நியாயம்..//

வாங்க மேவீ...

தேவன் மாயம் said...

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.//

ஆம் ஜமால்!!
உண்மைதான்...

தேவன் மாயம் said...

பிரிவுகள் நிஜம்தான் தேவா
ஆனால் இந்த அநியாய பிரிவுகள்
தாங்கவொண்ணா துயரை கொடுத்து விடுகின்றன
துயரை துடைக்க எடுத்துரைதல்கள் போதாதா ??

நம் போன்ற இளைஞர் சமுதாயம்
அதைத்தான் செய்ய வேண்டுமே அன்றி
உயிர் தியாகம் தேவை இல்லையே

முத்து குமரன் மறைவிற்கு
கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன்
சகோதரனின் குடும்பத்தினருக்கும்
எனது ஆழ்ந்த இறங்கல்கள்///

பெரிய பின்னுரைக்கு நன்றி ரம்யா!!
உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்...

Sinthu said...

உங்கள் கருத்து வரவேற்கப்படக் கூடியது....
நல்ல பதிவும் கூட.

priyamudanprabu said...

முளைச்சலவை செய்யப்பட்டவர்கள்
திருத்தவே முடியாது

அமுதா said...

என்ன நினைத்தேனோ அதை
அப்படியே சொல்லிவிட்டீர்கள்..

//சாதாரணமாக குடித்துவிட்டு அநாகரீக செயல்களில் தினமும் ஈடுபடும் ஆண்கள் மீது என்ன நடவடிக்கை இவர்கள் எடுத்தார்கள்!!

எனக்கு இப்படி தான் தோன்றியது.

//எது எப்படியோ ...... பெண்கள் மீதோ ஆண்கள் மீதோ வன்முறையை பிரயோகிப்பது தவறு.!
பெண்கள்தான் கலாச்சார சீரழிவுக்கு காரணம் என்பதும் தவறு..

உங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன். நல்ல பதிவு.

Anonymous said...

//பெண்கள்தான் கலாச்சார சீரழிவுக்கு காரணம் என்பதும் தவறு..//
supperrrrrrrrr.........

Suresh Kumar said...

இதில் ஈடுபட்டு சிறை செல்லும் இளைஞர்களின் எதிர்காலம் என்ன?
எங்கு கலவரம்,குண்டு வெடிப்பு என்றாலும் அவர்களைத்தான் முதலில் கைது செய்வார்கள்!! விசாரணையில் பலிகடா ஆக்கப்படுவார்கள்..////////////


சில வீணா போன மதவாதிகளின் தூண்டுதலால் தான் இப்படி பட்ட சம்பவங்கள் நடைபெறுகிறது . இதனால் இவர்களின் போதைக்கு அடிமையான இளைஞர்களே இப்படி சீரழிந்து வன்முறையில் இறங்குகிறார்கள் அவர்களின் எதிர்காலமும் கேள்வி குறியாகிறது . நல்ல பதிவு

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory