ஏ.ஆர். ரஹ்மான் அடக்கத்தில் இருந்து ரஹ்மான் எப்போதும் வழுவியதில்லை..
"உயர உயரப்பணிவு கொள்பவனுக்கு இறைவன் கொடுக்கும் பரிசு இது"..
ஏ.ஆர்.ரகுமான், இந்த விருதுகளை தனது தயாருக்கு
சமர்ப்பணம் செய்வதாக தெரிவித்துள்ளார்.
'ஸ்லம் டாக் மில்லியனர்' படத்திற்கு
இசையமைத்த ஏ.ஆர்.ரகுமான், சிறந்த
இசையமைப்பாளர் மற்றும் பாடலுக்கான
இசையமைப்பாளர் ஆகிய இரண்டு ஆஸ்கார்
விருதுகளை பெற்று, சாதனை படைத்துள்ளார்.
இன்று ஆஸ்கார் விருது கிடைத்துவிட்டது, நம்
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு!கனவு கண்டது
கிடைத்துவிட்டதுபேசாமல் சாதித்து விட்டார்.
A.R. Rahman wins two Oscars for "Slumdog"
.இந்தியாவில் இதுவரை யாருக்கும் கிடைக்காத
பெருமை ஆகும். இந்தப் படம் அண்மையில்
கோல்டன் குளோப் என்ற சர்வதேச விருதைப்
பெற்றது. இந்தப் படத்தில் இசையமைத்ததற்காக
ரகுமானுக்கு சிறந்த இசையமைப்பளார் விருதும்
கிடைத்தது. .
இரட்டை ஆஸ்கார் விருது பெறும் முதல் இந்தியர்
ஏ.ஆர்.ரகுமான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்லம் டாக் மில்லியனர்' படத்துக்கு சிறந்த
ஒலிக்கலவை பிரிவில் ஆஸ்கார் விருது
கிடைத்துள்ளது. ரெசூல் பூக்குட்டி என்ற இந்தியர் இந்த
விருதை பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தப் பிரிவில்
ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர் என்ற
பெருமையை அவர் பெற்றுள்ளார்
இந்திய சிறுமியை மையமாக வைத்து
தயாரிக்கப்பட்ட 'ஸ்மைல் பிங்கி' என்ற
குறும்படத்துக்கு சிறந்த டாகுமெண்டரி படத்துக்கான
விருது கிடைத்துள்ளது.
வாழ்த்துவோம் அந்த தமிழனை ! ! ! !
தமிழா ! ! வென்று விட்டாயடா ! ! ! ! ! !
.
9 comments:
உங்களுக்கு முதல் போணி செஞ்சுக்கிறேன்.இன்னைக்கு சமைக்கிற மாதிரி இல்லை.வீடு வீடா போய் பின்னூட்ட விருந்து சாப்பிட வேண்டியதுதான்.
பூக்குட்டி எனும் இந்தியர் ஒருவர் Sound Mixing பிரிவில் வாங்கியிருக்கிறார்.
ஸ்மைல் பிங்கி எனும் டாகுமெண்டரியும் வாங்கியிருக்கிறது..
ரஹ்மான் இரு விருதுகள்>!!!! (பெருமைய்யா பெருமை!!!! தமிழனய்யா!!!)
மொத்தம் 8 விருதுகள்!!! சும்மா அள்ளிட்டு வந்தோம்ல..
எல்லாப்புகழும் இறைவனுக்கே...!!!!!!!
சந்தோசம் தாங்க முடியவில்லை.
இந்தியாவுக்கே ஏ.ஆர். ரஹ்மானால் பெருமை. முக்கியமாக தமிழ்நாட்டுக்கு.
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்................ ரஹ்மான்...
தமிழன் என்று சொல்வதில் பெருமைப்பட்டுக் கொள்ளும்..........
ரெம்ப சந்தோசம்
எத்தனை ஆண்டுகளின் கனவு
அது ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களால்
இந்தியாவுக்குப் பெருமை ...
அதுவும் தமிழர் என்பதில்
ரெட்டிப்பு சந்தோசமய்யா...
Post a Comment