இரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு தமிழக முதலமைச்சர் கருணாநிதிவாழ்த்து தெரிவித்துள்ளார்.
தள்ளாடிய வயதிலும் தமிழைத் தள்ளாத,அயராத எழுத்தாளர்-கருணாநிதி!!!
அவரின் தமிழைக்கொஞ்சம் பருகுவோமா?
, இசை என்றாலே தமிழில் புகழ் என்று தான் பொருள். அந்தப் பொருளுக்குஏற்ப பூத்து, மலர்ந்து, புகழ் பெருக்கி இன்றுசிகரத்துக்கே சென்று, சிரித்த முகத்தோடுநம்முடைய வாழ்த்துக்களைப் பெறுகிற,சென்னையில் பிறந்த செல்வன் ஏ.ஆர்.ரகுமான்.இவருக்குக் கிடைத்துள்ள ஆஸ்கார் விருதுகள்கண்டு முத்தமிழே முறுவலிக்கிறது.
சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த இந்தச்செல்வம் இன்று ஆஸ்கார் விருதுகளைப்பெற்றதின் மூலம் தரணி வாழ் கலைஞர்கள்உள்ளத்தில் எல்லாம் இடம் பெற்றுவிட்டார்.குறிப்பாகவும் சிறப்பாகவும் உரிமையோடு சொல்லவேண்டுமானால் இது நம் வீட்டுப் பிள்ளைக்குக்கிடைத்த மிகப்பெரிய கீர்த்தி, சிறப்பு, பெருமை.ரகுமான் புகழ் மகுடத்தில் இந்த ஆஸ்கார்பதிந்துள்ள மாணிக்க, மரகதக் கற்களாக இந்தவிருதுகளை நான் கருதுகிறேன்.
தமிழ்நாடும், தமிழ்நாடு அரசும், அதற்குத்தலைமைப் பொறுப்பேற்றிருக்கிற நானும்,தமிழ்நாட்டின் ஆறு கோடி மக்களும், ஏன்இந்தியத் திருநாட்டின் நூறு கோடி மக்களும்,உலகத் கலைஞர்களும் மலர் தூவி, வரவேற்று,மகிழ்ச்சியைத் தெரிவித்து, மாசற்ற மனதோடுசேயாகப் பாவித்து, தாயாக நின்று வாழ்த்துகின்ற போது, அந்த வாழ்த்துக்களில் என் வாழ்த்துக்களும் இணைகிறது. வாழ்க ரகுமான்! ஆஸ்கார் விருதுகள் பெற்ற அருமைத் தம்பி இன்னும் ஆயிரம் ஆயிரம் விருதுகள் பெற வாழ்த்துகிறேன் என்று கருணாநிதிகூறியுள்ளார்.
7 comments:
ஆஹா படிக்கும்போதே புல்லரிக்குது, தமிழ் வார்த்தைகள் புகுந்து விளையாடுகிறது
//ஏ.ஆர்.ரகுமான்.இவருக்குக் கிடைத்துள்ள ஆஸ்கார் விருதுகள்கண்டு முத்தமிழே முறுவலிக்கிறது./
முத்தமிழே கூடி நின்னு கைக்கொட்டி சிரிக்கிறது இவரது உன்னத நிலையை எண்ணி
//தமிழ்நாட்டின் ஆறு கோடி மக்களும், ஏன்இந்தியத் திருநாட்டின் நூறு கோடி மக்களும்,உலகத் கலைஞர்களும் மலர் தூவி, வரவேற்று,மகிழ்ச்சியைத் தெரிவித்து, மாசற்ற மனதோடுசேயாகப் பாவித்து, தாயாக நின்று வாழ்த்துகின்ற போது, அந்த வாழ்த்துக்களில் என் வாழ்த்துக்களும் இணைகிறது. வாழ்க ரகுமான்! //
என் வாழ்த்துக்களும்தான்....
பல்லாண்டு வாழ்க
மற்றும் விருது பெற்ற அனைவருக்கும்
//சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த இந்தச்செல்வம் ///
இன்று உலகம் போற்றும் பெறும்சமுதாயமாய் உயர்ந்த இடத்தில்
இதற்கு மேல் வாழ்த்த வயதில்லை, வார்த்தைகளும் இல்லை
சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த இந்தச்செல்வம் இன்று////
என்ன கொடுமை சரவணா
தள்ளாடிய வயதிலும் தமிழைத் தள்ளாத,அயராத எழுத்தாளர்-கருணாநிதி!!!(சொன்னவர் தேவா)
தள்ளாத வயதிலும் தாத்தாவின் தமிழ் துள்ளுகிறது இளமையுடன்.
தினம் தினம் தள்ளாடித் தமிழினம் குண்டுகள் நடுவில் தவிப்பது ஏனோ தமிழ்த்தாத்தாவின் கண்களுக்கு எட்டாமல்.....
கவின் கூறியது...
சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த இந்தச்செல்வம் இன்று////
என்ன கொடுமை சரவணா
February 23, 2009 6:11 AM
இதென்ன கொடுமை கவின் சாமிகளா ?
Post a Comment