பரோலில் விடுதலை செய்யப்பட்ட பிரேமானந்தா புதுக்கோட்டையில் உள்ள தனது ஆசிரமத்திற்கு நேற்று வந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே பாத்திமா நகரில் ஆசிரமம், மற்றும் பள்ளிகளை நடத்தி வந்தார் பிரேமானந்தா.
(நம்ம மக்களுக்கு மறதி அதிகம்! ஞாபகப்படுத்தனும் இல்ல!!).
கற்பழிப்பு மற்றும் கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், தன்னை முன்கூட்டி விடுதலைசெய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்பிரேமானந்தா மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து விட்டதாகவும், அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி கைதிகள் விடுதலை செய்யப்பட்டது போல் தன்னையும் முன் கூட்டி விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
(நல்லா இருக்கே!!)
இந்த மனு நீதிபதிகள் பிரபாஸ்ரீதேவன், சசிதரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்குவந்தது. அப்போது, பிரேமானந்தாவை முன் கூட்டி விடுதலை செய்ய முடியாது என்று கூறி மனுவை நிராகரித்தனர்.
மேலும் பிரேமானந்தா சீடர்கள் மனுவும் நிராகரிக்கப்பட்டது.
(நல்ல வேளைடா சாமி)
இந் நிலையில் இவரது ஆசிரமத்தில் 23ம் தேதி சிவராத்திரி பூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள இவர் பரோலில் விடுதலை செய்யப்பட்டு தனது ஆசிரமத்துக்கு வந்தார்.
இவருக்கு 6 நாட்கள் மட்டுமே (ஆறு நாளா? பத்தாதா?) பரோலில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மீண்டும் 27ம் தேதி இவர் கடலூர் சிறையில் அடைக்கபடுகிறார்.
இதேல்லாம் மேட்டர் இல்ல!
வந்த பிரேம்ஸ் வெளிநாட்டு,உள்நாட்டு பக்தைகள் முன்னிலையில் பூஜை செய்து லிங்கத்தை வாயில் இருந்து வரவழைத்தார்!!! பக்தர்கள் ஆச்சரியம் அடைந்தனர்!!(ஆறு நாள் பரோலில் என்னென்ன பண்ணுவானோ தெரியலயே)!!
பிரேமானந்தா மீது இவ்வளவு புகார்கள் நிரூபிக்கப்பட்டுவிட்ட நிலையிலும் இவரைத் தேடி வரும் வெளிநாட்டு பக்தைகளின் எணணிக்கை மட்டும் குறையே இல்லை. ஏராளமான பக்தைகள் இவரது ஆசிரமத்துக்கு வந்தவண்ணம் இருக்காங்களாம்!
என்னடா உலகம் இது?
.
16 comments:
என்ன கொடுமை இது?
விளங்க வாய்ப்பே இல்லை போல இருக்கே
\\என்னடா உலகம் இது? \\
:(
என்ன கொடுமை இது?
விளங்க வாய்ப்பே இல்லை போல இருக்கே//
நல்லாச் சொன்னீக..
\\என்னடா உலகம் இது? \\
:(/கொடுமைய பாத்தீகளா?
//வந்த பிரேம்ஸ் வெளிநாட்டு,உள்நாட்டு பக்தைகள் முன்னிலையில் பூஜை செய்து லிங்கத்தை வாயில் இருந்து வரவழைத்தார்!!! //
கிளம்பிட்டாரா ??
ஆனாலும் நீங்க சொல்ற மாதிரி ஏன் அவ்ளோ வெளிநாட்டு பக்தைகள் அங்க வந்து குவிகிறார்கள் என்ற உண்மை மட்டும் புரியவே மாட்டேங்குது.
//வந்த பிரேம்ஸ் வெளிநாட்டு,உள்நாட்டு பக்தைகள் முன்னிலையில் பூஜை செய்து லிங்கத்தை வாயில் இருந்து வரவழைத்தார்!!! //
கிளம்பிட்டாரா ??//
வெளியே வந்து என்னென்ன பண்ணப்போறாறோ?
ஆனாலும் நீங்க சொல்ற மாதிரி ஏன் அவ்ளோ வெளிநாட்டு பக்தைகள் அங்க வந்து குவிகிறார்கள் என்ற உண்மை மட்டும் புரியவே மாட்டேங்குது.//
புரியவே புரியல
செய்தி தொகுப்பும், இடையில் உங்க கமெண்டும்... நல்லாத்தான் இருக்கு. நீங்க போனீங்களா ஆசிரமத்துக்கு?
என்ன ஜமால் நம்ம கடைப்பக்கமே காணோம்?
இந்த பக்தர்களிடம்(அப்படினு சொல்லிகிறது) அப்படி என்னதானிருக்கோ தெரியலே, நாம திருந்துனாவுலே வெளிநாட்டுக்காரன் சும்ம இருக்க போறான்.
சாயுங்காலம் வந்து படிக்குறேன்...ஒரே நாள்ல பல பதிவுகள்?! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........
சாயுங்காலம் வந்து படிக்குறேன்...ஒரே நாள்ல பல பதிவுகள்?! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..///
வாங்க! சும்மாதான்!!
செய்தி தொகுப்பும், இடையில் உங்க கமெண்டும்... நல்லாத்தான் இருக்கு. நீங்க போனீங்களா ஆசிரமத்துக்கு?///
அய்யா!
இப்பிடியெல்லாம் கேக்கலாமா?
எனக்குக் கூட சாமியாராக ஆசை..ஆனால்..ஏன் மனைவி அனுமதி தர மாட்டார்..
எவ்வளவுதான் கொலை செய்தாலும், கொள்ளையடித்தாலும், அதே அரசியல்வாதிகள் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வருவதில்லையா? அது மாதிரி தான், இதுவும்.
ஏமாறும் கூட்டம் இருக்கும் வரையில், ஏமாற்றுபவன் இருக்கத்தானே செய்வான்?
Post a Comment