ஒரு திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில், கவிஞர் வைரமுத்து பேசியதாவது:
ஆஸ்கார் விருது பெற்ற தமிழன் ஏ.ஆர்.ரஹ்மானை பாராட்டி, உலகமே எழுந்து நின்று கை தட்டுகிறது.
இந்திய திரையுலகுக்கு தலைமை தாங்கும் தகுதி, இன்று தமிழ் திரையுலகுக்கு வந்திருக்கிறது.
இதன் மூலம் உலக திரையுலகுக்கு தலைமை தாங்கும் தகுதி, இந்திய திரையுலகுக்கு வந்திருக்கிறது.
.தமிழன் எடுக்கிற படத்துக்கு ஏன் ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை என்று இப்போது சிலர் கேட்கிறார்கள்.
தமிழர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் ஆஸ்கரை வெல்லும் தகுதி இருக்கிறது
இங்குள்ள கலைஞர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், உலக கலைஞர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல
மலேசியத் தமிழர்கள் நடத்திய விழா ஒன்றில் நானும், ஏ.ஆர்.ரஹ்மானும் பங்கேற்றோம். அங்கு தமிழ்த்தாய் வாழ்த்து என்ற பெயரில், வேறு ஒரு பாடலை பாடினார்கள்.
இங்கு அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நீராரும் கடலுடுத்த... என்ற பாடலை அவர்கள் பாடவில்லை.
நீராரும் கடலுடுத்த... பாடலில், இந்திய எல்லைகள் குறிக்கப்பட்டுள்ளன. அதை உலக தமிழன் எப்படி பாடுவான்?
ஆதலால் இந்த சிக்கலைத் தீர்க்க உலக தமிழர்களுக்காக, புதிய தமிழ் தாய் வாழ்த்து பாடலை எழுதப் போகிறேன். அந்த பாடலுக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் சம்மதித்திருக்கிறார்.
.
13 comments:
ஓஹ்!
நல்ல முயற்சி தான்
ஓஹ்!
நல்ல முயற்சி தான்///
பார்ப்போம்
நாமும் காத்திருப்போம் ...
நல்ல முயற்சி நாமும் காத்திருப்போம் ...
அவரின் முயற்சி்க்கு கரம் சேர்ப்போம். தகவல் களஞ்சியம் தேவா அவர்களுக்கு நன்றி!
பத்மஸ்ரீ கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் உலகத்தமிழுக்காய் ஒரு தமிழ்ப் பாடல் எழுதுவாரென்றால் அது வரவேற்கத்தக்கதே.
எப்படியேனும் தமிழின் தரம், தன்மானம் குறையாமல் இருக்க வேண்டும்.
நல்ல முயற்சி
செய்திக்கலஞ்சியம் தேவா
நல்ல முயற்சி நாமும் காத்திருப்போம் ...//
பிரபு ஆமாம்
புது முயற்சி, தழனுக்கென்று ஒரு வாழ்த்துப்பாடல்
அதுவும் ஆஸ்கர் நாயகனில் இசையில்
காத்திருப்போம்
எனக்கென்னவோ ஏற்கனவே வைரமுத்து ரஹ்மான் கூட்டனியில் வந்த இரு பாடல்கள் இதற்கு பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது
1. கண்ணத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் - வெள்ளைப்பூக்கள்
2. திருடா திருடா படத்தில் வரும் - புத்தம் புது பூமி வேண்டும்
--
3. இந்திரா படத்தில் வரும் - அச்சம் அச்சம் இல்லை பாடலில் சில வரிகளை எடுத்து விட்டால் அது கூட தமிழின பாடலே
நல்ல முயற்சி நாமும் காத்திருப்போம் .....
ithu onnu thaan kuRaiccchal
//அபுஅஃப்ஸர் சொன்னது…
புது முயற்சி, தழனுக்கென்று ஒரு வாழ்த்துப்பாடல்
அதுவும் ஆஸ்கர் நாயகனில் இசையில்
காத்திருப்போம்//
வழிமொழிகிறேன்
Post a Comment