அன்பு நண்பர்களே! பன்றிக்காய்ச்சல் பயம் மறுபடியும் பரவியுள்ளது. பன்றிக்காய்ச்சலில் இருந்து சாதாரணக்காய்ச்சலை எவ்வாறு அடையாளம் காண்பது என்பது பற்றி சில கருத்துக்களை உங்களுடன் பகிர்கிறேன்.
நோய்க்குறிகள் | சாதாரண சளி | பன்றிக்காய்ச்சல் . |
காய்ச்சல் | காய்ச்சல் பெரும்பாலும் குறைவு. | 80% காய்ச்சல் இருக்கும். 100 டிகிரிக்குமேல் காய்ச்சல் 3-4 நாட்களுக்கு இருக்கும். . |
இருமல் | இருமலும் நல்ல சளியும் இருக்கும். | சளியில்லாத வறட்டு இருமல் இருக்கும். . |
உடல் வலி | உடல் வலி மிதமாக இருக்கும். | கடுமையான உடல் வலி பன்றிக்காய்ச்சலில் இருக்கும். . |
மூக்கடைப்பு | மூக்கடைப்பு இருக்கும். தன்னாலேயே ஒரு வாரத்தில் சரியாகிவிடும். . | பன்றிக்காய்ச்சலில் மூக்கடைப்பு அரிது. |
குளிர் நடுக்கம் | குளிர் நடுக்கம் பெரும்பாலும் இருக்காது. . | 60% பன்றிக்காய்ச்சலில் பாதிக்கப்பட்டோருக்கு குளிர் நடுக்கம் இருக்கும். |
உடல் சோர்வு | உடல் சோர்வு குறைவாக இருக்கும். . | உடல் சோர்வு அதிகமாக இருக்கும். |
தும்மல் | தும்மல் சாதாரணமாகக் காணப்படும். . | தும்மல் பன்றிக்காய்ச்சலில் காணப்படுவதில்லை. |
நோய்க்குறிகள் தோன்றும் காலம். | சாதாரண சளி மெதுவாக ஆரம்பிக்கும். சில நாட்களில் அதிகமாகும். | இதன் தாக்குதல் உடனே தெரியும்.3-6 மணி நேரத்தில் அதிக காய்ச்சல், உடல் வலி,பலகீனம் ஆகியவை ஏற்படும். . |
தலைவலி | சாதாரண சளியில் தலைவலி அதிகமாக இருக்காது. | பன்றிக்காய்ச்சலில் தலைவலி மிக அதிகமாக இருக்கும். 80% பேருக்கு தலைவலி இருக்கும். . |
நெஞ்சில் பாரம்,வலி | சாதாரண சளியில் நெஞ்சில் வலி, மூச்சுத்திணறல் இருக்காது. | பன்றிக்காய்ச்சலில் நெஞ்சு வலி, மூச்சுத்தினறல், நெஞ்சில் கட்டை போட்டது போன்ற உணர்வு ஆகியவை இருக்கும். |
பன்றிக் காய்ச்சலுக்கும் சாதாரண சளிக்கும் உள்ள வித்தியாசங்களை மேலே கொடுத்து இருக்கிறேன். இவை பொதுவானவைதான். இவற்றை 100% எடுத்துக்கொள்ள வேண்டாம். தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே தொகுத்துள்ளேன்!!
மேலும் பன்றிக்காய்ச்சல்பற்றி அறிய கீழுள்ள என் இடுகைகளைப் படிக்கவும்!
22 comments:
good post....thanks doctor
மிக மிக உபயோகமான
மிகவும் அவசியமான பதிவு.
பகிர்வுக்கு மிக்க நன்றிங்க டாக்டர் .
மிக்க நன்றி .
தொடரட்டும் உங்கள் சேவை .
வாழ்த்துக்கள் .
thanks for ur info
nice post useful info
நன்றி அத்திரி!
வழக்கறிஞரே! வாழ்த்துக்கு நன்றி!
சத்தியமா நன்றி ரமேஷ்!
குழந்தை மருத்துவருக்கு நன்றி!
நல்ல விபரங்கள்
நன்றி தேவா
பகிர்வுக்கு மிக்க நன்றி
தெளிவான தகவல்களுக்கு நன்றி டாக்டர்.
நல்ல பதிவு.எளிமையான வித்தியாசங்கள் மூலம் கண்டுகொள்ளும் படி சொல்லியுள்ளீர்கள்.
எளிதாக வித்தியாசங்களை தெரிந்து கொள்ளும் படி விளக்கி இருக்கீங்க. நன்றி.
பயனுள்ள பதிவு.
பயனுள்ள தகவலை புரியும்படி எழுதியதற்கு மிக்க நன்றி டாக்டர்.
good post....thanks doctor
ரொம்ப தெளிவா அருமையா வந்துருக்கு. இது போல தொடர்ந்து கொண்டு போங்க. எல்லோரும் இடுகையில் தங்களோட தொலைபேசி எண்களை போட்டுருப்பாங்க. ஆனால் நீங்க புரூனோ மாதிரி உங்க தனிப்பட்ட எண் கொடுக்கலாம். தொடர்பு கொள்ள வேண்டிய நேரத்தையும் எழுதி. காரணம் பலருக்கும் உங்கள் ஆலோசனை உதவியாய் இருக்கும்.
நன்றி டாக்டர்!
நன்றிங்க டாக்டர் ........
நல்லது.
மிகவும் பயனுள்ள தெளிவான பதிவு. நன்றி
பயனுள்ள நல்ல பதிவுங்க. நன்றி.
Post a Comment