இன்றைய சர்க்கரை நோயாளிகளிடம் உள்ள பல் சந்தேகங்களில் மிக முக்கியமான ஒன்று மருத்துவர் இன்சுலின் போடச் சொல்கிறார். போடலாமா வேண்டாமா? என்பதுதான்.
- நான்தான் சர்க்கரையையே சேர்த்துக்கொள்வதில்லையே!
- தொடர்ந்து நடைப்பயிற்சி செய்கிறேனே?
- உணவுக் கட்டுப்பாட்டை தீவிரமாகக் கடைப்பிடிக்கிறேனே,
- வேப்பிலைக் கொழுந்து, குறிஞ்சாக்கீரை, நாவல்பழக் கொட்டைப்பொடி, பாகற்காய் ஆகியவற்றைத் தினமும் சாப்பிடுகிறேனே!
இவ்வளவு செய்து நான் தெம்பாக இருக்கிறேன். மருத்துவர் இன்சுலின் போடச் சொன்னாலும் நான் இந்த வழிகளில் சர்க்கரையைக் குறைத்துக் கொள்கிறேன். முன்பு எழுதிக் கொடுத்த மாத்திரைகளையே தொடர்ந்து சாப்பிடப் போகிறேன் என்று கூறுவோர் உண்டு.
மெல் சொன்னபடி நிறையப் பேர் குழம்பி இருப்பார்கள். யாருக்கு இன்சுலின் அவசியம்? என்று பார்ப்போம்.
- முதல் வகைச் சர்க்கரை நோய் உள்ளவர்கள்- முதல் வகைச் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்குப் பிறவியிலேயே இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்கள் கணையத்தில் இல்லாது இருப்பதால் கணையம் இன்சுலினைச் சுரக்காது. ஆகையினால் இன்சுலினைத் தேவையான அளவு போட்டுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை
- இரண்டாம் வகைச் சர்க்கரை நோயாளிகளுக்கு மாத்திரையானது சர்க்கரையைக் குறைக்க முடியாத நிலை ஏற்படும்போது- இரண்டாம் வகை நீரிழிவு நோயில் பீட்டா செல்களின் இன்சுலின் சுரக்கும் சக்தி குறையும் மற்றும் பீட்டா செல்களின் எண்ணிக்கையும் குறைய ஆரம்பிக்கும்.
- அவசர நோய் சிகிச்சையின் போது இரத்த சர்க்கரை அளவானது அதிகம் இருந்தால் இன்சுலின் போட்டுக் குறைக்க வேண்டும்.
- சர்க்கரை நோயினால் உடலில் உள்ள பல உறுப்புகள் செயலிழக்க ஆரம்பிக்கும். சிறுநீரகங்க்கள் பாதிப்பு ஏற்பட்டால் இன்சுலின் போட வேண்டி வரும்.
- சர்க்கரை நோய் உள்ள பெண் கர்ப்பம் தரித்தால் இன்சுலின் மூலம் சர்க்கரையைக் குறைக்க வேண்டும்.
- இருதய அறுவை சிகிச்சையின்போது. அதன் பிறகும் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டுவர.
- கண்ணுக்கு லேசர் அறுவை செய்துகொண்ட சர்க்கரை நோயாளிகளுக்கு.
- பத்து வருடங்களுக்கு மேல் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பொதுவாக மாத்திரைகளால் சர்க்கரையை குறைக்க இயலாது என்பதால்!]
எனவே பிறவியிலேயே சர்க்கரை நோய் இல்லாதவர்கள் தகுந்த உட்ற்பயிற்சி உணவு முறை மூலம் சர்க்கரை நோயிலிருந்து காத்துக்கொள்வதே சிறந்தது.
9 comments:
8ஆவது பாய்ண்ட் தான் பயமுறுத்துது
என் தாய் 20 வருடங்களுக்கு மேலாக இருக்கின்றது
மாத்திரைகள் மட்டுமே சாப்பிடுன்கின்றார்
அது ஒரு பொதுவான பயிண்ட் ! கொஞசம் சர்க்கரை உளளோர் கருததில் கொள்ள வேண்டாம்!
சார் என் அம்மாவுக்கும் 10 வருடமாக சக்கரையும், இரத்தக் கொதிப்பும் இருக்கிறது. நடைப்பயிற்சி செய்வதே இல்லை, மாத்திரைதான் அதிகமாக எடுத்துக் கொள்கிறார்கள். மிக பயனுள்ள பதிவுங்க நன்றி.
மிகவும் மிகவும் பிரயோசனமான பதிவு டாக்டர்.நன்றி.
பயனுள்ள தகவல்கள்...
உடற்பயிற்சி எந்த அளவிற்கு நோயுள்ளவர்களை கட்டுப்படுத்தும்?
அதிகமான உடற்பயிற்சி செய்யலாமா?
பேட்மிட்டன், கால்பந்து போன்ற விளையாட்டுகள் பயன் அழிக்குமா? பாதகம் ஏதும் உண்டா?
சக்கரை நோய் உள்ளவர்களுக்கு எலும்பு உறுதி இழக்குமா?
சந்தேகங்கள்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
சக்கரை செய்தி...
நீரிழிவை முற்றிலும் குணப்படுத்தவே முடியாதா?
நல்ல தகவல்கள் ! வாழ்த்துகளும் நன்றியும்!!!
BTW , wer do u work sir? in service or pp , wich splity?
Post a Comment