Thursday 29 October 2009

இன்றைய பெண்களின் பிரச்சினைகள்!-பாகம்-3.

அன்பின் நண்பர்களே!! பெண்களின் பிரச்சினைகள் என்று நாம் சொல்லும் வேளையில் ஆண்களும் அதில் பங்குள்ளவர்கள் பாதிக்கப்படுகிறவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே! அதே போல் இதில் பல பிரச்சினைகள் வேலைக்குப் போகும்,போகாத, சுயதொழில் செய்யும் பெண்கள் என்று அனைத்துத் தரப்பினருக்கும் பொதுவாகவே இருப்பதையும் நாம் பார்க்கிறோம். ஆகையால் உறவுகளுக்குள் உள்ள பிரச்சினைகளைப் பார்க்கும்போது அவை குடும்பத்திற்குப் பொதுவானவையாகவும் அமைகின்றன!

மிகவும் எளிய பிரச்சினை என்று எண்ணும் விசயங்கள் கூட நம்மை மிகவும் பாதித்துவிடுகின்றன.முதலில் சரியான தூக்கம், எந்த வேளை உணவையும் தவிர்க்காமல் சரியான நேரத்தில் உண்பது, கொஞ்சம் உடற்பயிற்சி ஆகியவை உங்கள் தினசரிக் கொள்கையாக மாற்றிக் கொள்ளுங்கள்.

காலையில் உணவு சரியாக உண்ணாதவர்கள் அதன் பின் அன்றைய தினசரி வேலைகளைச் சரியாகச் செய்யமுடியாது. காரணம் உடலில் தேவையான அளவு சக்தி இருக்காது. உடலில் குளுக்கோஸ் (சக்தி) குறையும் போது, எரிச்சல், கோபம், வேலையைச் சரியாகச் செய்ய முடியாமை ஆகியவை ஏற்படுகின்றன! நீங்கள் நினைத்துப்பாருங்கள் காலையிலேயே வேலைகளைச் சரியாகச் செய்ய தெம்பும் சக்தியும் இல்லை என்றால் எப்படி நாம் அந்த நாள் முழுக்க உற்சாகத்துடன் இருக்கமுடியும். சிறிய விசயமாக இருந்தாலும் இதனை நாம் சரிசெய்து கொண்டால் அல்சர், சக்திக்குறைவு, சோர்வு ஆகியவற்றிலிருந்து தப்பிக்கலாம். உற்சாகத்துடன் அலுவலகத்தில் வீட்டில் வேலை செய்தால் மகிழ்ச்சிதானே!

முப்பது வயது பெண்களில் பாதிப்பேருக்கு கர்ப்பம் தரித்தலில் பிரச்சினை இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  வேலையின் காரணமாக புதுமணத் தம்பதிகள்கூட இப்பொழுது குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம் என்று கூறுவதைப் பார்க்கிறோம். பின்பு அவர்களே குழந்தை தரிக்கவில்லை என்று சிகிச்சைக்கு வருகிறார்கள்.இத்தகைய பிரச்சினைகளுக்கு  மிகவும் பொறுப்பான இரவு பகல் உழைக்கவேண்டிய கடினமான வேலையில் இருக்கும் பெண்களே ஆளாகிறார்கள். வேலைக்கும் வாழ்க்கக்கும் இடையில் ஒரு உறுதியான முடிவு எடுக்கத்தெரியாமல் தடுமாறுவதே இதன் முக்கிய காரணம்.

மண வாழ்க்கை என்ற ஒன்றை ஆரம்பித்து விட்டால் வேலைக்குச் செல்லும் பெண்கள் சில விசயங்களைத் தீவிரமாக ஆராய வேண்டும். கல்யாணத்துக்கு முன் இருந்ததுபோல் 24 மணி நேரமும் அலுவலக வேலையில் ஈடுபட முடியாது. அடுத்து நம் வாழ்வில் செய்ய வேண்டியது என்ன? அதற்கு நாம் எவ்வளவு நேரத்தை நாட்களை, மணிகளை ஒதுக்க வேண்டியிருக்கும் என்று திட்டமிட வேண்டும்.

கடினமாக இரவு பகல் உழைக்கும் பெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும் பிரச்சினைகள், நாம் முன்பே பார்த்த பி.சி,ஓ.டி ஆகியவை மிக அதிகமாக ஏற்படுகிறது.

இவர்கள் தங்கள் வாழ்க்கை முறையைக் கட்டாயம் மாற்றிக் கொள்ளவேண்டும். உடல் எடை குறைத்தல், சர்க்கரை அளவைக் குறைத்தல், மன அழுத்தம், மனச்சோர்வுதரும் கடினமான வேலைகளைத் தற்காலிகமாவது குறைத்துக் கொள்ளுதல் ஆகியவையே மிக மிக அவசியமானவை.

ஒரு பெண் தன் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது போல் வேறு யாராலும் முடியாது. இதைப் பெண்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.  அதுவும் பெண் குழந்தைகள் என்றால் மிக அதிகமாக அம்மாவின் வழிகாட்டுதல், அரவணைப்பு மிக மிக அவசியமாக உள்ளது.

சாதாரண ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். 40 வயதுப் பெண் ஒருவரின் வாழ்வைப்பார்ப்போம்.  அவர்  ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் முத்திரை பதிப்பவர். புதிய புதிய ப்ராஜெக்ட்களை வெற்றிகரமாக முடித்து உள்ளவர். தற்போதும் அந்தவேலையில் தொடர்ந்து இருப்பவர். இரவிலும் கம்பியூட்டரில் அமர்ந்து வேலை செய்வார். அவரின் பெண் குழந்தைகள் வளந்த்து வரும் நேரம். இதற்கிடையில் இன்னொரு பெரிய ப்ராஜெக்டில் பார்ட்னராக அழைப்பு வருகிறது. வீட்டிலும் பெண் குழந்தைகளைக் கவனிக்க வேண்டும். தற்போது உள்ள வேலையே சிரமமானதுதான். ஆனால் தற்போது குழந்தைகளை அவர் இல்லாத போது கணவரும் கவனித்துக் கொள்கிறார்.

அவர் நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்? பின்னூட்டத்தில் சொல்லுங்கள். அவர் என்ன செய்தார் என்பதையும் அடுத்த பதிவில் பார்ப்போம்.

---------------------------------------------------------------------  

சில செய்ய முடிந்தசெயல் முறைகளைப் பார்ப்போம்.

1.உங்கள் அன்றாட செயல்களை அட்டவணைப் படுத்துங்கள்.

2.காலையில் நல்ல உணவு, மதியம் அளவான உணவு, இரவில் குறைந்த உணவு உண்பது சிறந்தது.

3.மல்டிவிட்டமின், கால்சியம் மாத்திரைகள் மருத்துவரைக் கேட்டு சேர்த்துக் கொள்ளுங்கள்.

4.பொழுதுபோக்குகளுக்குக் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்.

5.குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் நேரம் ஒதுக்கவும்.

6.உங்கள் வாழ்க்கைத்துணை, மற்றும் நெருங்கிய நண்பர்களிடம் உங்கள் மனப் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

-----------------------------------------------------------------------

20 comments:

துளசி கோபால் said...

9 வருசத்துக்குப் பிறகு வீட்டில் குழந்தை. அபோது இருந்த நாட்டில் ஸ்பவுஸ் வேலை செய்ய ஒர்க் பர்மிட் இல்லை. நல்லதாப் போச்சுன்னு குழந்தை வளர்ப்பை முழுநேர வேலையாச் செஞ்சேன்.

குழந்தைக்கு நாலரை வயசானதும் நியூஸி வந்துட்டோம். வேலைக்குப் போனால்....இங்கே பேபி சிட்டர்களிடம்தான் விட்டுட்டுப் போகணும்.

குழந்தையா காசான்னு யோசிச்சதில் குழந்தைன்னு முடிவாச்சு.

கிடைக்கும் வருமானத்தில் வாழப் பழகிக்கிட்டேன்.

பெண்குழந்தையோ ஆண் குழந்தையோ ....குழந்தை வளர்ப்பு என்றதே முழுநேரத் தொழில்தான்.

தேவன் மாயம் said...

29 October 2009 08:32///

இவ்வளவு தெளிவுடன் இருக்கும் உங்களுக்கு என் வணக்கங்கள்!!!இன்னும் இத்தொடரில் எழுதவுள்ளேன். தொடர்ந்து உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!!

pudugaithendral said...

நான் மாண்டிசோரி ஆசிரியை பயிற்சி, ஆசிரியையாக வேலைபார்த்த அனுபவங்கள் எல்லாவற்றையும் ஏறகட்டி வைத்திருப்பது பிள்ளை வளர்ப்பிற்காகத்தான்.

எனது ஆசிரியை பயிற்சி அனுபவங்களை வைத்து என் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து பிள்ளை வளர்ப்பை சரியாக முறையாக செய்திருப்பதாக நான் நினைப்பது மட்டுமல்லாமல் , அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறேன்.

பேரண்ட்ஸ் கிளப்பில் இதைப்பற்றி ஒரு பதிவே போட்டிருக்கிறோம்.

http://parentsclub08.blogspot.com/2008/01/blog-post_25.html

பீர் | Peer said...

சகோதரி துளசிக்கு ஒரு ராயல் சல்யூட்.

ஒரு தாயைவிட சிறப்பாக குழந்தைகளை வளர்க்க யாராலும் முடியாது.

டாக்டர், கால்சியம் விட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமா? வேறு ஏதும் இயற்கை உணவில் இதை சமன் செய்ய முடியாதா?

யாசவி said...

சீக்கிரம் மேட்டருக்கு வாங்க டாக்டர்

cheena (சீனா) said...

அன்பின் தேவன் மயம்

நல்ல இடுகை ‍ பெண்கள் படிக்க வேன்டிய இடுகை ‍ தொடர் முடிந்த வுடன் ஆண்களுக்கும் இடுகைகள் இடும் எண்ணம் இருக்கிறதா ‍ நல்வாழ்த்துகள் நண்பா

துளசி கோபால் said...

//பெண்கள் படிக்க வேன்டிய இடுகை //

என்னங்க சீனா,
சரியாப் போச்சு...........

பிரச்சனைக்குக் காரணமே ஆண்கள்ன்னு இன்னும் புரிஞ்சுக்கலையா? :-))))

தேவன் மாயம் said...

புதுகைத் தென்றல் said...
நான் மாண்டிசோரி ஆசிரியை பயிற்சி, ஆசிரியையாக வேலைபார்த்த அனுபவங்கள் எல்லாவற்றையும் ஏறகட்டி வைத்திருப்பது பிள்ளை வளர்ப்பிற்காகத்தான்.

எனது ஆசிரியை பயிற்சி அனுபவங்களை வைத்து என் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து பிள்ளை வளர்ப்பை சரியாக முறையாக செய்திருப்பதாக நான் நினைப்பது மட்டுமல்லாமல் , அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறேன்.

பேரண்ட்ஸ் கிளப்பில் இதைப்பற்றி ஒரு பதிவே போட்டிருக்கிறோம்.

http://parentsclub08.blogspot.com/2008/01/blog-post_25.html

29 October 2009 08:45///
ஆகா அருமை! இரண்டு ஆசிரியர்களின் கருத்தும் மிக அருமை. உங்களுக்கு என் வாழ்த்துக்கள்!!

தேவன் மாயம் said...

பீர் | Peer said...
சகோதரி துளசிக்கு ஒரு ராயல் சல்யூட்.

ஒரு தாயைவிட சிறப்பாக குழந்தைகளை வளர்க்க யாராலும் முடியாது.

டாக்டர், கால்சியம் விட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமா? வேறு ஏதும் இயற்கை உணவில் இதை சமன் செய்ய முடியாதா?

29 October 2009 15:53/
சரிவிகித உணவில் எல்லாம் இருக்கும். 35 வயதுக்கு மேல் கால் இடுப்பு வலியுள்ளோருக்கு விட்டமின் அவசியம்.

தேவன் மாயம் said...

யாசவி said...
சீக்கிரம் மேட்டருக்கு வாங்க டாக்டர்

29 October //

எந்த மேட்டர்? ஓ! இன்னும் இருக்கு!

தேவன் மாயம் said...

cheena (சீனா) said...
அன்பின் தேவன் மயம்

நல்ல இடுகை ‍ பெண்கள் படிக்க வேன்டிய இடுகை ‍ தொடர் முடிந்த வுடன் ஆண்களுக்கும் இடுகைகள் இடும் எண்ணம் இருக்கிறதா ‍ நல்வாழ்த்துகள் நண்பா

29 October 2009 19:11//

கீழே நம் ஆசிரியை அவர்களின் கருத்தைப் பாருங்கள். ஹி ஹி ஹி..

seethag said...

முதலில் "இந்தக்கால பெண்களின்" என்ற தலைப்பு தவறு என்பது என் எண்ணம்.

பஎண்களுக்கு எந்தக்காலத்தஇலும் கஷ்டம் குறைந்ததில்லை. இந்தக்காலத்து பெண்களுக்கு (ஒரு சிலருக்கு) உள்ள சுதந்திரத்த்இனால் அவர்களுடய மனகுமுறலையாயினும் வெஎளியிட முடிகிறதே?

victim என்ற ஒரு நிலையை வித்து வெளியே பெண்கள் வரும்போது நிறைய வ்யாதிகள் போகும்

ஆ.ஞானசேகரன் said...

பகிர்வு அழகு..

தேவன் மாயம் said...

seetha said...
முதலில் "இந்தக்கால பெண்களின்" என்ற தலைப்பு தவறு என்பது என் எண்ணம்.

பஎண்களுக்கு எந்தக்காலத்தஇலும் கஷ்டம் குறைந்ததில்லை. இந்தக்காலத்து பெண்களுக்கு (ஒரு சிலருக்கு) உள்ள சுதந்திரத்த்இனால் அவர்களுடய மனகுமுறலையாயினும் வெஎளியிட முடிகிறதே?

victim என்ற ஒரு நிலையை வித்து வெளியே பெண்கள் வரும்போது நிறைய வ்யாதிகள் போகும்

29 October 2009 22:52//

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! அன்றாட வேலை அப்போதிருந்து இப்போதுவரை உள்ளதுதான். புதிதாகப் பெண்கள் வெளிவேலைகளையும் சேர்த்துச் செய்யும்போது ஏற்படும் பிரச்சினைகளைத்தான் இதில் குறிப்பிட உள்ளேன்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

அவசியமான பதிவு.

அன்புடன் நான் said...

தற்போது உள்ள வேலையே சிரமமானதுதான்//

ஆகையால் புது வேலை வேண்டாம் குழந்தைக்கு முக்கியதுவம் கொடுப்போமென்று முடிவெடுப்போம்...இல்லையேல் என் வேலையை விட்டுவிட்டு ஒருதாயாக குழந்தையை கவனிக்க வேண்டியதுதான்

Ashok D said...

அடிச்சு கலக்கறீங்க, ரொம்ப usefullana பதிவுயென்றால் மிகையில்லை.

அப்புறம் காலைல வெயிட்டா சாப்பிட முடியல.. பகல்ல மீல்ஸ் சாப்பறதுதான் நம்ம பழக்கமாகிடுச்சு! :(

S.A. நவாஸுதீன் said...

பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் அவசியமான பதிவு தேவா சார். தொடர்ந்து எழுதுங்கள்.

கோமதி அரசு said...

இன்றைய பெண்களின் பிரச்சினைகள்!-பாகம் மூன்றும் படித்தேன்.

//சில செய்ய முடிந்த செயல் முறைகள்6ம்//
சிறந்தவகைகள் தான் கடைபிடிக்க
எளிதானது தான்.

பெண்கள் ஆண்களை விட மனவலிமை உடையவர்கள்.குடும்பம்,அலுவலகம்
என்ற இரட்டை மாட்டு வண்டியை
தன் மனபலத்தால் தான் இழுத்து செல்கிறாள்.

வீட்டில் அன்பும்,ஆதரவும்,புரிந்து கொள்ளுதலும் இருந்தால் இன்னும்
உழைப்பாள்.

உங்கள் பதிவுகள் எல்லோருக்கும்
பயன் உள்ளதாய் உள்ளது, வாழ்த்துக்கள்.

Unknown said...

இன்றைக்குப்பல படித்த பெண்களிடம் கூட இதற்கான சரியான விழிப்புணர்வு இல்லை. இப்பத்வு காலத்துககேற்ப அவசியமான அலசல். பெரும்பாலான பெண்களின் பிரதான பிரச்சனையே மனம் விட்டுப்பேசமையே.தொடர்ந்து எழுதுங்கள்.

அன்போடு நிஷா

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory