Thursday, 15 October 2009

ஈழத்தமிழர் பலமும், பலவீனமும்!

மணற்கேணி அரசியல் சமூகம் பிரிவுக்கு காரைக்குடி வலைஞர்கள்-லிலிருந்து அனுப்பிய கட்டுரை!!!

 

ஈழத்தமிழர் பலமும், பலவீனமும்!

நாம் எப்படி வாழ்வது? நம் வரலாறு எது?

நம்மை வாழ வைப்பது எது? நம்மை வீழ்த்தியது எது?

நம்மை வதைப்பது எது? நாம் எதற்காக போராட வேண்டும்?
ஈழத்தமிழரின் உரிமைப் போர் முற்றுப்பெற்று விட்டதா? அதன் பலம் எது?
பலவீனம் எது? தீர்விற்கான வழிகள் என்ன?

எம் நெஞ்சினில் உருவான
கேள்விகளுக்கு மனப்போராட்டத்தில் கிடைத்த பதில்கள் குறித்து எழுதுகிறேன்.

"போரிட வேண்டுமென்றால் தன்னிடத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் அன்பு செய்ய பிறரிடத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்". மார்க்ஸிய மேதை கார்ல் மார்ஸின் கருத்து. தனக்கு பலம் உள்ளது, எதிரியை வெல்ல முடியும் என்று நினைத்தால் நமக்கு துணையாக வரும் சக்திகளின் பலம், சூழல் ,காலம் இடம் நேரம் அறிந்து போராட இயலும். இந்த அடிப்படையில் ஈழ உரிமைப் போராட்டத்தின்
பலத்தை முதலில் ஆய்வோம்.

ஈழத்தின் வெகு அருகில் பெரும்பான்மை தமிழர்கள் வாழும் தமிழகம் உள்ளது. தமிழர்களும் புலம் பெயர்ந்த தமிழர்களும் உலகம் முழுவதும் பரவலாக
வாழ்கிறார்கள். இது உரிமைப் போராட்டத்தை உலக அளவில் எடுத்து செல்ல வழிகோலும். விடுதலைப்புலிகள் புதிதாக அமைத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசு வலுவாக செயல்படுவதற்கு உதவும்.

உலகத் தமிழர்களின் பொருள் உதவி அறிவு
அரசியல் சார் உதவிகளும் தமிழீழ அரசுக்கு எளிதில் கிடைக்கும்.போராளிகளை பயங்கரவாதிகளாக சிங்கள அரசு உலக சமூகத்திற்கு சித்திரித்து வந்துள்ளது. தமிழீழப் போரில் தற்காலிக தோல்வியை பின்னடைவை விடுதலைப் போராட்டம் சந்தித்துள்ளது. அதன்பின் சிங்கள காட்டாண்டி அரசின் அரசு
பயங்கரவாத முகத்திரை அதன் செயல்பாடுகளால் கிழிந்து கோரமுகம் வெளிப்படையாக
தெரிய ஆரம்பித்து விட்டது.

உலகின் மனித உரிமை ஆர்வலர்கள் மக்கள்
விடுதலையை ஆதரிக்கும் சக்திகளும் அரசுகளும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு பேராதரவு  தரும் அரசியல் சூழல் உருவாகி உள்ளது. இதை
நேர்மையான சரியான திசை வழியில் பயன்படுத்திக் கொண்டு உரிமைப் போராட்டத்திற்கு வலு சேர்க்க வேண்டும்.

துயரத்தில் தான் உண்மையான நண்பனைக் காண முடியும்.  ஈழப்போரில் பின்னடைவை
சந்தித்த பிறகு நமக்கு உண்மையான துணைவரும் சக்திகளையும் துரோகம் செய்யும்
சக்திகளையும் விரோதிகளையும் எளிதாக இனம் காணலாம்.

தெற்காசிய நாடுகளின் அனைத்து விதமான உளவுத்துறை இராணுவ உதவிகளால் வெற்றியடைந்த அகங்காரத்தில்
ஈழத்தமிழர்களுக்கு மனிதநேய உதவிகளை சிங்கள பேரினவாத அரசு மறுத்து வருவது
உலக சமுதாயத்தின் வெறுப்பிற்கு சிங்கள அரசு ஆளாகியுள்ளது.

இதை நமது பிரசார உக்திகளால் சரியாகப் பயன்படுத்தி கொண்டு உலக நாடுகளின் தார்மீக
ஆதரவைப் பெறலாம். உலகளாவிய விடுதலை இயக்கங்களின் ஆதரவை பெறுவதற்கும்
கூட்டு உழைப்பிற்கும் வலு சேர்க்கலாம்.
இயற்கையான ஈழ மண்ணின் காடுகள் அரசியல் போராட்டத்தினூடே ஆயுதப் போராட்டம்
தொடர்வதற்கும் வழிகோலும் என்பதும் வலிமையாகும்.

இந்தியா, சீனா, பாகிஸ்தான் முதலான தெற்காசிய நாடுகளில் நடக்கும் விடுதலைப் போராட்டங்களும் ஆப்கானிஸ்தானில் நடக்கும் விடுதலைப்
போராட்டங்களும் நம் ஆய்விற்கு உட்படுத்தி நம் வெற்றிக்கு உதவும்வழிவகைகளைக் காண்பது வலிமை சேர்ப்பதாக அமையும்.

ஒரு சங்கிலியின் பலம் என்பது அதன் வலிவு குறைந்த வளையத்தைப் பொறுத்தே
அமைகிறது. பலத்தைக் குறித்த நம்பிக்கையினூடே பலவீனத்தைக் குறித்த எச்சரிக்கையும் மிகவும் முதன்மையானதாக உள்ளது. ஈழப் போராட்டத்தின்
பின்னடைவு தோல்வியல்ல என்ற உறுதியோடு பலவீனங்களை சரி செய்து கொள்ள அலசி
ஆய்வு செய்வோம்.

உலகமயமாக்கல் என்பது பல நாடுகளின் பொருட்கட்டமைப்பை சீர்கேடடையச்
செய்துள்ளது. பெரு வணிக பேரரசுகளும் இதில் விதிவிலக்கல்ல தேசீய இனங்களின்
விடுதலைப் பெருவணிக பேரரசுகட்கு இடையூராக இன்று தெரிவதால் அனைத்து கொலைக் களங்களையும் கொடுத்து மக்கள் உரிமை மீட்புப் போர்களையும் தேசிய இன விடுதலைப் போர்களையும் நசுக்குமாறு கட்டளை பிறப்பிக்கும் என்பதை சரிவர கணக்கிடாதது பெரிய பலவீனமாகிவிட்டது.

தெற்காசிய நாடுகளை ஒரே வணிக மண்டலமாக்க மேற்கூறிய பின்னனியில் இந்தியா
சீனா போன்ற நாடுகள் சிங்கள பேரினவாத அரசுக்கு அனைத்து உளவுத்துறை மற்றும்இராணுவ உதவிகளை செய்தது, செய்து வருகிறது. தெற்காசியா முழுமையையும் ஆதிக்கம் செய்ய இலங்கையின் புவியியல் அமைப்பு உதவும் என்பதும் உலக
நாடுகளின் உதவி கிடைக்க பெரும் வாய்ப்பாக அமைந்து விட்டது.

தளத்தின் பலம் தான் வெற்றியை முடிவு செய்யும். போராளிகளின் தலைவர்கள் இந்தியா உதவும் என்று நினைத்ததால் இந்திய உளவுத்துறையினரோடு தொடர்பு
கொண்டிருந்தார்கள். இது இன போராட்டத்திற்கு எதிரான துரோக குழுக்களையும்
சிங்கள அரசிற்கான ஒட்டுக்குழுக்களை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்தது.

புதிதாக அமைந்த நாடுகடந்த தமிழீழ அரசின் தலைவர் பத்மநாபன் இந்தியா உதவும்
நம்பிக்கையோடு பேசுவது கவலை கொள்ள வைப்பதாகும்.

மாறாக மலையகத் தமிழர்களையும் கருணாவின் ஒட்டுக்குழுக்களாலும் சிங்கள
அரசாலும் அச்சுறுத்தப்பட்டு ஈழமக்களின் பிரச்சனைக்கு போராடாமல் வாய்மூடி
மவுனியாய் உள்ள கிழக்கு மக்களையும் அரசியில் ரீதியாக இணைக்காமல் உள்ளது
மிகப்பெரும் பலவீனமாகும். ஈழப் போராட்டத்தின் ஆதரவு சக்திகள் (NDF) புதிய
ஜனநாயக முன்னணி போன்ற அமைப்புகளை பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.

இந்திய அரசை நம்பாதே!
இந்திய மக்களை நம்பு!

இலால் பகதூர் சாஸ்திரி அவர்களின் மலையகத் தமிழரின் குடியுரிமை ஒப்பந்தம்,
அன்னை இந்திராவின் கச்சதீவு ஒப்பந்தம், இராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தம் என்று பல ஒப்பந்தங்கள் இந்திய - இலங்கை அரசுகளால் போடப்பட்டது. அனைத்தும் தமிழருக்கும் ஈழதமிழருக்கும் எதிராகத் தான் இருந்தது இருந்து வருகிறது.

இந்திரா-ஜெயவர்த்தனா, இந்திரா-அதுலத்முதலி, இராஜீவ் - ஜெயவர்த்தனா, சோனியா - இராசபக்சே, மன்மோகனசிங் - இராசபக்சே, பசில்-ராசபக்சே,கோத்தபயா- இராசபக்சே சந்திப்பு காட்சிகளை ஊடகங்களில் பார்த்தாலே தமிழர்
எதிர்ப்பின் வலிமையை ஊகிக்கலாம்.

யாழ்கோட்டையில் சுற்றிவளைக்கப்பட்ட சிங்கள வீரர்களைக் காப்பாற்ற வாஜ்பாய் அரசு புலிகளுக்கு மிரட்டல் விடுத்ததும் ஆய்விற்குரியது. சிங்களப் பேரினவாத போர்ப்படைக்கும் தமிழீழ நாட்டின் போராளிகளுக்கும் நடந்த போரில் சிங்களஅரசு பெற்ற உதவிகளையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

எளிய இந்திய மக்களின் விடுதலைக்கு போராடும் பொதுஉடமைக் குழுக்கள் இனக்குழுக்களை ஆய்வுக்குட்படுத்தி நேர்மையானவர்களை அடையாளம் கண்டு கூட்டு முயற்சியில் இறங்குவது இந்திய அரசிற்கு அழுத்தத்தைத் தரும்.

மாறாக, தமிழ்நாட்டு தலைவர்களால் இந்திய அரசுக்கு எந்த அழுத்தத்தையும் தர இயலாது என்பது தெளிவான ஒன்றாகும்.

!

இந்திய மக்களை நம்பு!!

என்பதே போராட்டத்தின்வலிமைக்கு உதவுவதாக அமையும்.எளிய மக்களின் உள்ளம் உயர செயல்பட வேண்டும்

காவியங்கள் ஊடகங்கள் அரசியல் பிழைப்பு வாதிகளின் செயல்பாடுகள் அனைத்தும்
காலம் காலமாக எளிய மக்கள் தங்களை ஒத்தவர்களின் பிரச்சனைகள் பற்றி
சிந்திக்காத வண்ணம் வாழ செய்துள்ளன.

அரிச்சந்திரன் மனைவி சந்திரமதி படும் துயரம் கண்டு அரசன் மனைவி துயரப்படுகிறாளே என்று துயரப்படுவார்கள். பதினான்கு வருடம் காட்டு
வாழ்க்கை வாழும் இராம இலக்குவன் மற்றும் சீதையை நினைத்து மனம் கலங்குவார்கள். இந்திரா அம்மையாரின் படுகொலைக்காகவும் இராஜீவ்
படுகொலைக்காகவும் கலங்குவார்கள், கொதிப்பார்கள்.

ஆனால் ஆயிரக்கணக்கான சீக்கியர் படுகொலைக்கும், இலட்சக்கணக்கில் கொலையுண்ட ஈழத்தமிழர்களின் படுகொலைக்கும்,மதக் கலவரத்தில் மாண்ட இஸ்லாமிய எளிய மக்களுக்காகவும்கொதிக்க மாட்டார்கள்.மாறாக சுப்ரமணியசாமி மீது எறிந்த முட்டை, தக்காளிக்கு பரிசாக வழக்கறிஞர்
சமூகமே காவல்துறையின் அடக்குமுறைக்கு ஆளானது.

அடித்த காவலர்களும் அடிபட்டவழக்கறிஞர்களும் எளிய மக்கள். தமிழீழ நாட்டின் தேசீய தலைவர் பிரபாகரன்படுகொலை செய்யப்பட்டார் என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்ட உடனே
தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அதனை எதிர்த்து கலகங்கள் நடந்தன.அவர் உயிருடன் உள்ளார் என்று ஈழ ஆதரவு தமிழ் தலைவர்கள் உறுதி கூறியதும் தமிழ் மக்கள் அமைதி காத்தார்கள். இனி ஈழ பிரச்சனைக்கு அவர் போராடுவார்
என்று தன் சொந்த வேலைகளைப் பார்க்க சென்றுவிட்டார்கள்.

எளிய மக்கள் தமது தலைவனிடத்தில் பிழை இராது என்று நம்புகிறார்கள் அதுவும்மக்கள் போராட்டத்தில் பெரிய தடைக்கல்லாக உள்ளது. பெரும்பான்மை மக்களின்தலைவர்கள் கலைஞரும், ஜெயலலிதா அவர்களும் இந்த அடிப்படையில் மக்களின்
கோபத்திற்கு ஆளாகவில்லை.

அதிகாரமில்லாத முதல்வர் பதவியில் இருந்தாலும், அந்த வரம்பிற்குள் தரவேண்டிய அழுதத்தையும் தராமல் துரோகம் செய்த கலைஞர் அவர்களை,
தொல்திருமாவளவன் போன்ற எளிய மக்களின் தலைவரும் நம்பி ஏமாந்தது இந்த அடிப்படையில் தான். வைகோ, இராமதாஸ், நெடுமாறன் போன்றார்கள் ஜெயலலிதா அம்மையாரை நம்பி ஏமாந்ததும் இந்த அடிப்படையில்தான்.

அரசியல் அதிகாரத்தில் இருந்து கலைஞர் துரோகமிழைத்தார். அதிகாரத்தில் இல்லை என்றாலும் வலிவுடைய எதிர்கட்சி தலைவர் எந்த போராட்டத்தையூம் நடத்தாமல் துரோகமிழைக்கிறார்.

காவிய நாயகி சீதையின் சிறைவாழ்விற்கு நோகாமல், ஈழப்பெண்கள் கற்பழிக்கபடுவதும் கொலை செய்யப்படுவதும் கண்டு துயரப்பட்டுக் கொதிக்கும்
மனநிலையை எளிய மக்கள் பெற ஈழ ஆர்வலர்கள் முயற்சிக்க வேண்டும்.

இராமனின் வன வாழ்க்கைக்கு வருந்தாமல் ஈழதமிழர்கள் தடுப்பு வதை முகாம்களிலும் சிறைகளிலும் காடுகளிலும் படும் சொல்லொணாத் துயருக்காகவருந்திப் போராடும் எண்ணத்தைப் பெற வழிவகைகளை ஆய்வு செய்ய வேண்டும்.

தமிழக தலைவர்கள் ஒற்றுமை, ஒற்றுமை என்று அறிவுரை கூறி ஒதுங்குகிறார்கள்.

ஒற்றுமைதனிலும் உயிர் பெரிது,

ஒற்றுமைதனிலும் உரிமை பெரிது

என்பதை மறைக்கிறார்கள், மறுக்கிறார்கள் என்பதை எளிய மக்களுக்குத் தெளிவாக்க வேண்டும். எளிய மக்களின் விழிப்பே ஏற்றமிகு உரிமைப் போருக்கு வழி.

1.தமிழ் ஈழ துரோகக் குழக்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவது. இந்திய உளவுத்துறைக்கும் (RAW) சிங்கள ஆட்சியாளர்களுக்கும் அவர்களுக்கும் உள்ள இணைப்பை மனித உரிமை ஆர்வலர்களாக உள்ள சிங்கள ஐனநாயகசக்திகளோடும் நவசேனா மாதிரி ஈழப்போரட்டத்தை அங்கீகரிக்கும் அமைப்புகளோடும் இணைத்து உடைத்தெறிவது.

2.தனிநபர் துதி என்பது ஒரு கவர்ச்சி அரசியல். தனிநபர் பங்கு என்பது போராட்டத்திற்கு வலு சேர்க்கலாம். ஆனால் அதுவே வலிமையாகி விடாது என்பதைப் புரிந்து கொண்டு சிறியஅமைப்புகளானாலும் ஒத்த கருத்துடையவர்களை போராட்டத்தில் இணைத்து வழி நடத்துவது.

3.தமிழகத்து உரிமை போராட்டங்கள் வலுவடைய வழி காணுவதும் ஈழபோராட்டத்திற்கு தீர்வாக அமையும்.
தமிழக மீனவர் நலன்களை தமிழகத் தலைவர்கள் முதன்மைபடுத்துவது. இராஜீவ்காந்தியை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட பிரபாகரனை, பொட்டு அம்மனை கைது செய்ய இந்தியா உரிமை கோருவதை போல இதுவரை சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்ட
படுகாயப்படுத்தப்பட்ட மீனவர்களின் காவல்துறை வழக்குகளை ஆய்வு செய்ய வேண்டும்.

வழக்கறிஞர் குழுமம் நீதிமன்றங்களை அணுகி சிங்கள ஆட்சியாளர்களைக் கைது செய்யும் ஆணையைப் பெற வேண்டும். மக்கள் போராட்டங்களை தமிழக
மீனவர்களுக்காக தமிழக அளவில் முன்னெடுப்பது இந்திய அரசுக்கு பெரும் அழுதத்தத்தைத் தரும்.

4.ஈழப் போராட்டத்தில் தமிழக மீனவர்களை ஈடுபடுத்துவதும் தமிழக மீனவர்களுக்கு போர் பயிற்சி ஆயுதங்கள் தர அரசை வற்புறுத்த வேண்டும். இது
கடல் பகுதியில் சிங்கள அரசின் மேலாதிக்கத்தைத் தடுத்து நிறுத்தும்.

5.நாடு கடந்த தமிழீழ அரசு திரு.தொல்திருமாவளவன், வை.கோ., மருத்துவர் இராமதாசு, தமிழர் தலைவர் ஐயா பழநெடுமாறன், அவர்களை அணுகி இந்திய அளவிலான அரசியல் கட்சி தலைவர்களின் ஆதரவைப் பெற்றுதர நிர்பந்திக்க வேண்டும்.
தமிழீழத்தை விட்டு இந்திய இராணுவம் வெளியேற நெருக்கடிகள் கொடுக்க வேண்டும்.

ஒற்றுமையை விட உயிர் பெரிது!
ஒற்றுமையை விட மானம் பெரிது!
ஒற்றுமையை விட உரிமை பெரிது!

இந்திய ஒற்றுமை என்ற பெயரால் இலங்கை ஒற்றுமை என்ற பெயரால் மக்களை
விலங்குகளினும் கேடாக நடத்துவது நேர்மையல்ல! முறையல்ல! என்று முழங்கி
ஈழஉரிமைப் போர் தொடர்க!
உலகத் தமிழர்கள் உரிமைப் போர் தொடர்க!
முற்றும்

27 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

முக்கியமான விஷயங்களை அலசி ஆராய்ந்து எழுதி இருக்கிறீர்கள்.. நல்லதொரு கட்டுரை.. இந்தத் தீபாவளியில் இருந்தாவது அம்மக்களின் வாழ்வில் மீண்டும் நிம்மதி பிறக்கட்டும்..

தேவன் மாயம் said...

கார்த்திகைப் பாண்டியன் said...
முக்கியமான விஷயங்களை அலசி ஆராய்ந்து எழுதி இருக்கிறீர்கள்.. நல்லதொரு கட்டுரை.. இந்தத் தீபாவளியில் இருந்தாவது அம்மக்களின் வாழ்வில் மீண்டும் நிம்மதி பிறக்கட்டும்..

15 October 2009 02:20///

நன்றி!! கார்த்தி!!

அகல்விளக்கு said...

க. தங்கமணி பிரபு அவர்களின் கவிதை ஞாபகத்திற்கு வருகிறது.

--இயற்கை விதி--

எரிந்துப்போய் சாம்பலாவதும்
எழுந்து வந்து சரித்திரமாவதும்
இரண்டுமே புதிதில்லை!
அவன் தமிழன் என்கிற
ஃபீனிக்ஸ் பறவை!!

தேவன் மாயம் said...

அகல் விளக்கு said...
க. தங்கமணி பிரபு அவர்களின் கவிதை ஞாபகத்திற்கு வருகிறது.

--இயற்கை விதி--

எரிந்துப்போய் சாம்பலாவதும்
எழுந்து வந்து சரித்திரமாவதும்
இரண்டுமே புதிதில்லை!
அவன் தமிழன் என்கிற
ஃபீனிக்ஸ் பறவை!!

15 October 2009 02:44///

இந்தக் கவிதை நான் படித்ததில்லை! நிஜம்!

S.A. நவாஸுதீன் said...

பல கோணத்திலும் அலசி, பல விஷயங்களோடு ஒப்பிட்டு ஒரு தெளிவான கட்டுரை கொடுத்திருக்கின்றீர்கள். பாராட்டுக்கள் தேவா சார்

தேவன் மாயம் said...

S.A. நவாஸுதீன் said...
பல கோணத்திலும் அலசி, பல விஷயங்களோடு ஒப்பிட்டு ஒரு தெளிவான கட்டுரை கொடுத்திருக்கின்றீர்கள். பாராட்டுக்கள் தேவா சார்

15 October 200///

மிக்க நன்றி நவாஸ்!

அப்பாவி முரு said...

கட்டுரையின் எழுத்து, பொருளின் ஆழத்தால் உயர்ந்து நிற்கிறது...

வாழ்த்துகள் மருத்துவர் அய்யா...

மணர்கேணியில் வெற்றிபெற வாழ்த்துகள்.

சிங்கக்குட்டி said...

நல்லதொரு கட்டுரை வாழ்த்துக்கள் தேவா.

நாகா said...

என்னைப் பொறுத்தவரை உங்கள் இடுகைகளிலேயே சிறந்தது இதுதான்.

உங்கள் மேலுள்ள மதிப்பு மேலும் உயர்கிறது.

அப்துல்மாலிக் said...

இன்னுமொரு ஈழத்திற்காக குரல்கொடுக்கும் தமிழன்

இன்னுமொரு ஈழத்திற்க்கா உரிமைகோரி போராட துடிக்கும் தமிழன்

உங்கள் கனவே அனைத்து தமிழனின் கனவும்... நனவாகும் காலம் கைக்கெட்டும் தொலைவில்

கலகலப்ரியா said...

//தமிழீழ அரசின் தலைவர் பத்மநாபன்//

எப்போ இருந்து இவர் தலைவர் ஆனார்.. ?

//இந்திய ஒற்றுமை என்ற பெயரால் இலங்கை ஒற்றுமை என்ற பெயரால் மக்களை
விலங்குகளினும் கேடாக நடத்துவது நேர்மையல்ல! முறையல்ல! என்று முழங்கி
ஈழஉரிமைப் போர் தொடர்க!
உலகத் தமிழர்கள் உரிமைப் போர் தொடர்க! //

:)

(மொத்தத்தில் நன்று.. நல்லது நடக்கும் என்று நம்புவோம்... காட்டுமிராண்டித் தனத்திற்கு ஒரு முடிவு வராமலா போய்டும்..)

தேவன் மாயம் said...

அப்பாவி முரு said...
கட்டுரையின் எழுத்து, பொருளின் ஆழத்தால் உயர்ந்து நிற்கிறது...

வாழ்த்துகள் மருத்துவர் அய்யா...

மணர்கேணியில் வெற்றிபெற வாழ்த்துகள்.

15 October 2009 03:35?///

உங்கள் வாழ்த்துக்கு நன்றி நண்பா!!

தேவன் மாயம் said...

சிங்கக்குட்டி said...
நல்லதொரு கட்டுரை வாழ்த்துக்கள் தேவா.///

மிக்க நன்றி!!
==============================

15 October 2009 04:15


நாகா said...
என்னைப் பொறுத்தவரை உங்கள் இடுகைகளிலேயே சிறந்தது இதுதான்.

உங்கள் மேலுள்ள மதிப்பு மேலும் உயர்கிறது.
//

உங்கள் வாழ்த்து மிகவும் உற்சாகமூட்டுகிறது!!
15 October 2009 04:43

தேவன் மாயம் said...

அபுஅஃப்ஸர் said...
இன்னுமொரு ஈழத்திற்காக குரல்கொடுக்கும் தமிழன்

இன்னுமொரு ஈழத்திற்க்கா உரிமைகோரி போராட துடிக்கும் தமிழன்

உங்கள் கனவே அனைத்து தமிழனின் கனவும்... நனவாகும் காலம் கைக்கெட்டும் தொலைவில்

15 October 2009 05:15///

அபு!!
பல்லாயிரம் ஈழ மக்களின் அடிப்படைத் தேவைகளாவது நிறைவேற வேண்டும்!!

தேவன் மாயம் said...

கலகலப்ரியா said...
//தமிழீழ அரசின் தலைவர் பத்மநாபன்//

எப்போ இருந்து இவர் தலைவர் ஆனார்.. ?

//இந்திய ஒற்றுமை என்ற பெயரால் இலங்கை ஒற்றுமை என்ற பெயரால் மக்களை
விலங்குகளினும் கேடாக நடத்துவது நேர்மையல்ல! முறையல்ல! என்று முழங்கி
ஈழஉரிமைப் போர் தொடர்க!
உலகத் தமிழர்கள் உரிமைப் போர் தொடர்க! //

:)

(மொத்தத்தில் நன்று.. நல்லது நடக்கும் என்று நம்புவோம்... காட்டுமிராண்டித் தனத்திற்கு ஒரு முடிவு வராமலா போய்டும்..)

15 October 2009 05:24//

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி!!

தீப்பெட்டி said...

விரிவான அலசல் கட்டுரை..

விடியட்டும் அவர்கள் இரவு..

நன்றிகள்..

Jerry Eshananda said...

உங்களை போல துடிக்கும் இதயங்கள் இருப்பதால் தான் "இன விடுதலை என்னும் வற்றாத பெருநெருப்பு" இன்னும் கனன்று கொண்டே இருக்கிறது.டாக்டர் தேவா உங்களது "உயிர் துடிப்புள்ள "ஒவ்வொரு வார்த்தையையும் வணங்குகிறேன்

தேவன் மாயம் said...

தீப்பெட்டி said...
விரிவான அலசல் கட்டுரை..

விடியட்டும் அவர்கள் இரவு..

நன்றிகள்..

15 October 2009 06:25///

வருகைக்கு நன்றிங்க!

தேவன் மாயம் said...

ஜெரி ஈசானந்தா. said...
உங்களை போல துடிக்கும் இதயங்கள் இருப்பதால் தான் "இன விடுதலை என்னும் வற்றாத பெருநெருப்பு" இன்னும் கனன்று கொண்டே இருக்கிறது.டாக்டர் தேவா உங்களது "உயிர் துடிப்புள்ள "ஒவ்வொரு வார்த்தையையும் வணங்குகிறேன்

15 October 2009 06:47///

இன விடுதலை என்பது இரத்தத்தில் ஓடும் அக்னி நதி! உங்கள் கருத்துக்கு நன்றி ஈசா!

நர்சிம் said...

ஆழ்ந்த கட்டுரை.நீண்ட நேரம் சிந்தைக்குள் ஊடுகிறது உங்களின் இந்தக் கட்டுரையும் கருத்துக்களும்.

இந்தக் கட்டுரைக்கு மிக்க நன்றி

அத்திரி said...

அருமையான பதிவு டாக்டர்

வால்பையன் said...

//இந்திய அரசை நம்பாதே!
இந்திய மக்களை நம்பு! /

மிகச்சரியா சொன்னிங்க!

vanathy said...

கருத்துகளுக்கும் இடுகைக்கும் நன்றி..மருத்துவர் என்ற ரீதியில் ஒரு பெரிய இழப்புக்குப் பின்பு மனிதர்கள் எப்படி உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள் என்று உங்களுக்கு புரியும் அதுமாதிரி ஒரு grief reaction தான் ஈழத்தமிழர்கள் கடந்த ஐந்து மாதங்களாக அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். பலர் ஒரு குழப்பமான மனநிலையில் இருக்கிறார்கள் ,ஆனாலும் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிவடைந்துகொண்டு வருகிறார்கள் என்று நம்புகிறேன்
நீங்கள் சொன்னமாதிரி மக்களின் ஆதரவு எமக்குத் தேவை அரசியல் வாதிகளையும் அரசுகளையும் நம்புவதைவிட மக்கள் ஆதரவுதான் முக்கியம் ,
அரசியல் முதிர்ச்சி ,அரசியல் விழிப்புணர்ச்சி ,தெளிவான பாதை, அறிவுபூர்வமாக அணுகுமுறை ,சரியான தலைமைகளின் வழிகாட்டுதல் இவைதான் ஈழ மக்களுக்கு தேவை

--வானதி

ஹேமா said...

தேவா,இந்திய அரசியல்தான் எங்களைக் கைவிட்டதே தவிர தமிழ்நாட்டுத் தமிழ்மக்கள் அல்ல.என்றும் நன்றியோடு கடமைப்பட்டிருக்கிறோம்.

மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

நல்ல செய்திகள் - ஆராய்ச்சி - இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

நல்ல அலசல் வாழ்த்துகள் சார்...

Menaga Sathia said...

நல்ல அலசல்!!

தீபாவளி வாழ்த்துக்கள்!!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory