Friday 23 October 2009

மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்!

 

நம்ம ஊருக்கு மரபணு கத்திரிக்காய் வரப்போகுதுங்க! அமெரிக்காவோட மான்சாண்டோ கம்பெனியோட தயாரிப்பு இது!  உலகம் முழுக்க மரபணுக்கத்திரிக்காயை எதிர்க்கிறார்கள்! ஐரோப்பியர்கள் இந்தக் கத்திரிக்காய் வேண்டாம் என்கிறார்கள்! ஆனாலும் இந்தியாவில் ஒரு கம்பெனியின் கூட்டணியுடன் இந்தக் கத்திரிவிதைகளை இந்தியாவில் பரப்பத் தயாராகி விட்டார்கள்! 

மரபணு கத்திரிக்காய் என்றால் என்ன?   ஏன் அதை எதிர்க்கிறார்கள்?

நம்ம ஊர் கத்திரிக்காயில் பூச்சி விழுதாமே! அது அமெரிக்காக்காரனுக்கு கஷ்டமாப் போச்சாம்! இவன் குடுக்கப்போற காயில் பூச்சி விழாதாம்!

அதுக்காக பாசில்லஸ் துரிஞ்ஜெனிசிஸ்னு ஒரு பாக்ட்டீரியாவை இந்த கத்திரிச்செடியில் புகுத்தி விடுறாங்க!  என்னென்ன பூச்சிமருந்து வேணுமோ அதை நாம அடிக்க வேணாம். இந்த செடிக்குள்ள விட்ட பாக்டீரியாவே பூச்சி மருந்து ரெடி பண்ணிக்கும்.

இதுனால நமக்கு பூச்சிமருந்து செலவு இல்லையாம். நம்ம உழவருங்கமேல் அமெரிக்காவுக்கு  என்ன பாசம் பாத்தீங்களா?

ஏன்னா இது அமெரிக்க மான்சாண்டா என்கிற முட்டாள் கம்பெனியின் தயாரிப்பு! இதை வித்தாகணும் பாருங்க! 

புஷ்னு ஒரு ஆசாமி இருந்தான் பாருங்க.. அவன் காலத்திலேயே இதை ஏற்பாடு பண்ணியாச்சு. ஒபாமா என்ன பண்ணுவான்? அவன் சும்மா கையை சூப்பிக்கிட்டு பாத்துக்கிட்டு இருக்க வேண்டியதுதான்!

சரி! ஐரோப்பாவில் இதுக்கு என்ன சொல்றாங்க?

1. Wal-Mart Germany

2.Kellogg

3.Coop Switzerland

4.Marks and Spencer, UK

இந்த மெகா கடைகள் முதல் ஐரோப்பாவில் எல்லா இடங்களிலும் இந்த மரபணு மாற்றிய காய்களுக்கு பெரிய எதிர்ப்புங்க! அதனால் ஐரோப்பாவில் இதை விக்க முடியாம இந்தியாவோட கழுத்தைப் புடிக்கிறானுங்க!

சரி ஏன் நம்ம இது வேண்டாம் என்கிறோம்?

1.இந்தக் கத்திரிக்காய் சாப்பிட்டால்  மருந்துகளுக்குக் கட்டுப்படாத புது பாக்டீரியாக்கள் உருவாகும். ( உள்ள நோயே தாங்க முடியல! இது வேறயா!!)

2.கத்திரிக்காய் உள்ளே இருக்கும் பாக்டீரியா சும்மா இருக்குமா? சில  நச்சுப்பொருளை அப்பப்ப கக்கும். அது ரொம்ப டேஞ்சராம்.

3.இதனால் மனிதனுக்கு அலர்ஜி எதுவும் வருமான்னு இன்னும் டெஸ்ட் பண்ணலையாம்.( அதான் இளிச்சவாயனுங்க மேல பண்ணப் போறாங்களே!!!..இளிச்ச வாயனுங்க யாருன்னு கேக்கிறீங்களா?  அட நம்மதாங்க!!)

4.இந்தக் காயை தொடர்ந்து வருசக்கணக்கா சாப்பிட்டா ஏதாவது பிரச்சினை வருமான்னு கேட்டா பதில் யாருக்கும் தெரியாது!!

5.குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டாம். ஏன்னா இன்னும் சோதிக்கவில்லை!

6.இந்தச் செடிக்கழிவுகள் பட்டாம்பூச்சி, மின்மினிப்பூச்சியையும் சேத்துக் கொல்லுமாம்!!( இப்பவே மின்மினிப் பூச்சிகளைக் காணோம்!!).

7. 4000 வருசமா நம்ம விவசாயி இதைப் பயிரிட்டுப் பிழைப்பு நடத்துகிறார்கள். இந்தக் கத்திரி விதைகள் மிகக் குறைந்த சலுகை விலையில் கொடுக்கப்படும். ஆனால் விதையை சேமிக்கவோ மறுபடி உபயோகிக்க முடியாது. வேற வழியில்லாம நம்ம அந்த விதைக் கம்பெனிக்கு அடிமையாக வேண்டியதுதான்.( புதிய பொருளாதார காலனித்துவ அடிமைகள்!!).

8.நம்முடைய சொந்த கத்திரிச் செடிகளும் இந்தச்செடியின் மகரந்தத்தால் நாளடைவில் கெட்டுப்போகுமாம்.

9.நாளடைவில் கத்திரி விலை யானை விலையாகி நீங்களும் நானும் கத்திரிக்காய் வாங்க முடியாம போகும்.

மரபையும், மாண்பையும் கெடுக்கும் இந்தக் கத்திரிக்காய் நமக்குத் தேவையா?  இப்பொழுதே எதிப்புகள் ஆரம்பித்துள்ளன.

இதில் நம்மூர் பயோடெக் ஆசாமிங்க இது நல்லதுன்னு அறிக்கைவேறு வெளியிடுகிறார்கள்!!

நம்ம ஊர் அப்பாவி உழவர்களுக்கு அடி மேல் அடி! எவ்வளவோ அடி தாங்கி விட்டோம்.. இதையும் எதையும் தாங்குவோம்ங்கிறீங்க!!!

என் எதிர்ப்பைப் பதிவு செய்து விட்டேன். நாடே ஒன்று திரண்டால் இந்தியாவுக்குள் இது வருவதைத் தடுக்கலாம்!

சரி.. வாங்க! உள்நாட்டுக் கத்திரிக்காய் வகைகளை ஒருகை பார்ப்போம்.

888888888888888888888888888888888888888888888888888888888

இதையும் படிக்கலாம்: ஜெரி ஈசானந்தாவின் புதிய இடுகை: முல்லைப்பெரியார் -கொடுங்கனவின் கானல் நீர்

888888888888888888888888888888888888888888888888888888888

40 comments:

Senthil said...

:((

பூவுலகின் நண்பர்கள் said...

ஐயா வாங்கய்யா. இந்த பிரசினைக்காக வலையுலகத்திலே நாங்க (பூவுலகின் நண்பர்கள்) தனியா கத்திகிட்டு இருக்கிறோம்ன்னு நினைச்சோம். துணைக்கு வந்தீங்க.

ரொம்ப டாங்ஸுங்க.

தேவன் மாயம் said...

பூவுலகின் நண்பர்கள் said...
ஐயா வாங்கய்யா. இந்த பிரசினைக்காக வலையுலகத்திலே நாங்க (பூவுலகின் நண்பர்கள்) தனியா கத்திகிட்டு இருக்கிறோம்ன்னு நினைச்சோம். துணைக்கு வந்தீங்க.

ரொம்ப டாங்ஸுங்க.

23 October 2009 01:31//

என்னங்க! நாடே உலகமே! கத்துது!!தமிழ் வலையுலகம் சும்மா இருக்குது!!

Sundararajan P said...

பூவுலகின் நண்பர்கள் பதிவுல ஒரு பெயரில்லா நண்பர் கருத்து சொல்லியிருக்கார். படிச்சுப் பாருங்க

முனைவர் இரா.குணசீலன் said...

இயற்கைக்கு நிகர் வேறு எதுவுமில்லை...

என்பது அறிந்தும் நாகரிகம் என்ற பெயரில் மனிதன் தன்னை மாற்றிக் கொண்டு தன்னைத் தானெ ஏமாற்றிக் கொள்கின்றான்.

தேவன் மாயம் said...

சுந்தரராஜன்... said...
பூவுலகின் நண்பர்கள் பதிவுல ஒரு பெயரில்லா நண்பர் கருத்து சொல்லியிருக்கார். படிச்சுப் பாருங்க

23 October 2009 01:41//

படிக்கிறேன்!!நல்ல விசயத்தைப் பெயரோடே சொல்லலாமே!!

Jerry Eshananda said...

பதிவு அதிர்ச்சியை தருகிறது." இப்போதே புறக்கணிப்போம். மரபணு கத்திரிக்காயை."

தேவன் மாயம் said...

முனைவர்.இரா.குணசீலன் said...
இயற்கைக்கு நிகர் வேறு எதுவுமில்லை...

என்பது அறிந்தும் நாகரிகம் என்ற பெயரில் மனிதன் தன்னை மாற்றிக் கொண்டு தன்னைத் தானெ ஏமாற்றிக் கொள்கின்றான்.

23 October 2009 01:43
///

மேலை முட்டாள்தனங்களை அப்படியே ஏற்பது தவறு!!

தேவன் மாயம் said...

ஜெரி ஈசானந்தா. said...
பதிவு அதிர்ச்சியை தருகிறது." இப்போதே புறக்கணிப்போம். மரபணு கத்திரிக்காயை."

23 October 2009 01:///

உண்மைதான்!!

க.பாலாசி said...

//.இந்தக் கத்திரிக்காய் சாப்பிட்டால் மருந்துகளுக்குக் கட்டுப்படாத புது பாக்டீரியாக்கள் உருவாகும். ( உள்ள நோயே தாங்க முடியல! இது வேறயா!!)//

என்ன கொடுமை பாருங்க....இந்தியான்னா இளிச்சவாயங்கன்னே நெனைப்பானுங்க போலருக்கு....

கண்டிப்பா எதிர்க்கவேண்டிய செயல்...

Jerry Eshananda said...

என் வளர்ச்சியும், மகிழ்ச்சியும் உங்களால் சாத்தியம் ஆயிற்று தேவன்மாயம்.

ப.கந்தசாமி said...

மரபணு மாற்றம் என்கிற யுத்தி விவசாய ஆராய்ச்சியில் காலங்காலமாக கடைப்பிடித்து வரும் நடைமுறை. அயல்நாட்டான் கொள்ளையடிக்கிறான் என்றால் அதை ஆட்சேபியுங்கள். அதை விட்டு விட்டு பிடி கத்தரிக்காய் விஷம் என்றெல்லாம் ஏன் வீண் பழி போடுகிறீர்கள். மரபணு மாற்றம் இல்லையென்றால் இந்தியர்கள் அனைவரும் சோத்துக்கு லாட்டரி அடிக்க வேண்டியதுதான்.

ஒரு ஓய்வு பெற்ற விவசய விஞ்ஞானி.

வரதராஜலு .பூ said...

//மரபையும், மாண்பையும் கெடுக்கும் இந்தக் கத்திரிக்காய் நமக்குத் தேவையா? இப்பொழுதே எதிப்புகள் ஆரம்பித்துள்ளன. //

அதை பற்றி இங்குள்ள ஆட்சியாளர்களுக்கோ அறிவுஜீவிகளுக்கோ என்ன கவலை? அமெரிக்க முதலாளி என்ன சொன்னாலும் கேட்டுகொண்டு அந்த முதலாளி அளிக்கும் எலும்புத்துண்டை கவ்வும் நாய்கள்தானே நம் தானைத் தலைவர்கள்.

மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திய பருத்திக்குப்பிறகு கத்தரியா? கொடுமைடா சாமி

தேவன் மாயம் said...

Dr.P.Kandaswamy said...
மரபணு மாற்றம் என்கிற யுத்தி விவசாய ஆராய்ச்சியில் காலங்காலமாக கடைப்பிடித்து வரும் நடைமுறை. அயல்நாட்டான் கொள்ளையடிக்கிறான் என்றால் அதை ஆட்சேபியுங்கள். அதை விட்டு விட்டு பிடி கத்தரிக்காய் விஷம் என்றெல்லாம் ஏன் வீண் பழி போடுகிறீர்கள். மரபணு மாற்றம் இல்லையென்றால் இந்தியர்கள் அனைவரும் சோத்துக்கு லாட்டரி அடிக்க வேண்டியதுதான்.

ஒரு ஓய்வு பெற்ற விவசய விஞ்ஞானி.

23 October 2009 02:08///

ஐயா!! நீங்க விஞ்ஞானிதான்!! விஞ்ஞானி Smith, also executive director of US-based Institute of Responsible Technology, ... Prof. Smith'மாதிரி ஆராய்ச்சி செய்தீர்களா?http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=Are+Bt+brinjals+safe+for+humans?&artid=ltN/7zsHV1U=&SectionID=mvKkT3vj5ZA=&MainSectionID=fyV9T2jIa4A=&SectionName=nUFeEOBkuKw=&SEO இந்தத் தளத்தில் போய் அவர் சொல்வதைப் படியுங்கள்!
2.http://www.zeenews.com/news571412.htmlKerala Bio-diversity Board opposes Bt brinjal
இந்த தளங்களுக்குப் போய்ப் படியுங்கள்!!

அகல்விளக்கு said...

ஆரம்பிச்சுட்டாங்களா......

ரொம்ப நாளாவே கம்முனு இருந்தப்பவே டவுட்டா இருந்துச்சு.

அமெரிக்காவை என்ன பண்ணலாம்???

இராகவன் நைஜிரியா said...

ஐயோ... கொடுமையடா சாமி..

இவங்களுக்கு ஈவு இரக்கம் என்று ஒன்றுமே கிடையாதா?

மணிஜி said...

Informative and useful..thanks deva

Sundararajan P said...

//Dr.P.Kandaswamy said...
மரபணு மாற்றம் என்கிற யுத்தி விவசாய ஆராய்ச்சியில் காலங்காலமாக கடைப்பிடித்து வரும் நடைமுறை. அயல்நாட்டான் கொள்ளையடிக்கிறான் என்றால் அதை ஆட்சேபியுங்கள். அதை விட்டு விட்டு பிடி கத்தரிக்காய் விஷம் என்றெல்லாம் ஏன் வீண் பழி போடுகிறீர்கள். மரபணு மாற்றம் இல்லையென்றால் இந்தியர்கள் அனைவரும் சோத்துக்கு லாட்டரி அடிக்க வேண்டியதுதான்.

ஒரு ஓய்வு பெற்ற விவசய விஞ்ஞானி்//

//அயல்நாட்டான் கொள்ளையடிக்கிறான் என்றால் அதை ஆட்சேபியுங்கள்.//

நீங்கள் அதை செய்யமாட்டீர்களா? அது சரி அந்த காசில் கிடைத்த பெல்லோஷிப்பில் படித்துவிட்டு, அவனுக்கு எதிராக பேசமுடியுமா? செஞ்சோற்று கடன் கழியுங்கள் விஞ்ஞானியே!

//அதை விட்டு விட்டு பிடி கத்தரிக்காய் விஷம் என்றெல்லாம் ஏன் வீண் பழி போடுகிறீர்கள்.//

பி.டி. என்பது தண்டுதுளைப்பான் புழுவை கொல்லும் விஷம்தானே விஞ்ஞானியே? அது விஷம் இல்லையென்றால் அதை எதற்காக பயன்படுத்தவேண்டும் சொல்லுங்கள்?

//மரபணு மாற்றம் இல்லையென்றால் இந்தியர்கள் அனைவரும் சோத்துக்கு லாட்டரி அடிக்க வேண்டியதுதான்.//

ஹாஹா நல்ல ஜோக் விஞ்ஞானி அவர்களே.

பூச்சிக்கொல்லியை தாவரத்தில் செலுத்தும் மரபணு மாற்று
தொழில்நுட்பத்திற்கும் மக்கள் சோத்துக்கு லாட்டரி அடிப்பதற்கும் என்ன தொடர்பு விஞ்ஞானியாரே?
உங்களைப் போன்ற விஞ்ஞானிகள், பன்னாட்டு நிறுவனங்களின் எடுபிடியாகி சொந்த நாட்டு மக்களுக்கே துரோகம் செய்வதால்தான் மக்கள் சோத்துக்கு லாட்டரி அடிக்கும் நிலை ஏற்படுகிறது.

கடைசியாக ஒரு கேள்வி: மரபணு மாற்று உணவுப்பொருட்களின் சோதனைக்கு உங்கள் குடும்பத்தினரை பரிசோதனை எலிகளாக பயன்படுத்த சம்மதிப்பீர்களா?

உங்களை எல்லாம் நம்பமுடியாது. ஏனென்றால் பன்னாட்டு நிறுவனங்களின் தூண்டுதலால் உங்கள் மரபணுவே மாற்றப்பட்டிருக்கலாம். எனவே வேளாண் விஞ்ஞானிகள் அனைவரும் அவர்களது குடும்பத்தினரை இந்த சோதனைக்கு பயன்படுத்தி எங்கள் சந்தேகங்களை தீர்த்து வைக்க கோருகிறோம்.

அப்துல்மாலிக் said...

என்னுடைய எதிர்ப்பையும் பதிவு செய்கிறேன்

இதுமாதிரி வரும்னு தெரிந்துதான் சிறு வயது முதலே கத்தரிக்காய் என்றால் காத தூரம் ஓடிடுவேன்

அதிர்ச்சி தகவல் தேவா சார்

வால்பையன் said...

இப்பவாவது புத்தி வந்ததே மக்களுக்கு!

ஏற்கனவே மரபணு நெல் கொடுத்துட்டான், அதை தான் தின்னுகிட்டு இருக்கோம்!, அதிகப்படியான மலட்டு தன்மைக்கு அது தான் காரணம்!

மரபணு விதையில், விதை நெல் எடுக்க முடியாது!

அன்புடன் அருணா said...

அடப் போங்க...நான் எழுதணும்னு நினைப்பதெல்லாம் யாராவது எழுதிடறீங்க!!...நல்ல பதிவு!

சொல்லரசன் said...

இதே நிறுவனத்தின் மரபனு பருத்திவிதையை வாங்கிபயிரிட்ட மகாராஷ்டிரா
விவசாயிகள் இரண்டே ஆண்டுகளில் விளைச்சல் குறைந்து தற்கொலை செய்ததை மக்களும்,அரசும் நினைவுகொள்ளவேண்டியது அவசியம்.

நல்லதொரு விழிப்புனர்வு பதிவு

அரசூரான் said...

நன்றாக கருத்தை பதிய வைத்திருக்கிறீர்கள் நண்பரே.

நான் இதை சிறு கவிதையாக் 19-ம் தேதி பதிவிட்டுள்ளேன்

http://arasooraan.blogspot.com/2009/10/blog-post_19.html

ஆ.ஞானசேகரன் said...

//இதில் நம்மூர் பயோடெக் ஆசாமிங்க இது நல்லதுன்னு அறிக்கைவேறு வெளியிடுகிறார்கள்!! //

எதை எப்படி நம்பறதுன்னு புரியல டாக்டர்.... ஆமா உண்மையில் நல்லதா? கெட்டதா?

Anonymous said...

'பி.டி. என்பது தண்டுதுளைப்பான் புழுவை கொல்லும் விஷம்தானே விஞ்ஞானியே? அது விஷம் இல்லையென்றால் அதை எதற்காக பயன்படுத்தவேண்டும் சொல்லுங்கள்'

Bt is used in organic agriculture.
It kills worms but it does not induce toxicity in the brinjal or cotton.
மரபணு மாற்று உணவுப்பொருட்களின் சோதனைக்கு உங்கள் குடும்பத்தினரை பரிசோதனை எலிகளாக பயன்படுத்த சம்மதிப்பீர்களா.
GM food is in use in many countries including USA. If it is not safe consumers wont use it.
Bt cotton is being planted by lakhs of farmers in many countries including India. So far there has been no health hazard from that.
So dont create scare without knowing the facts.

மாதேவி said...

"இதனால் மனிதனுக்கு அலர்ஜி எதுவும் வருமான்னு இன்னும் டெஸ்ட் பண்ணலையாம்.( அதான் இளிச்சவாயனுங்க மேல பண்ணப் போறாங்களே!!!."

:((((

சிங்கக்குட்டி said...

இது தேவை இல்லாத மலட்டு தன்மையை அதிகரிக்கும் ஒரு அழிவுக்கு வலி வகுக்கும் முயற்சி.

நல்ல பதிவு, மக்கள் நிச்சியம் இதை உணர வேண்டும்.

தேவன் மாயம் said...

Anonymous said...
'பி.டி. என்பது தண்டுதுளைப்பான் புழுவை கொல்லும் விஷம்தானே விஞ்ஞானியே? அது விஷம் இல்லையென்றால் அதை எதற்காக பயன்படுத்தவேண்டும் சொல்லுங்கள்'

Bt is used in organic agriculture.
It kills worms but it does not induce toxicity in the brinjal or cotton.
மரபணு மாற்று உணவுப்பொருட்களின் சோதனைக்கு உங்கள் குடும்பத்தினரை பரிசோதனை எலிகளாக பயன்படுத்த சம்மதிப்பீர்களா.
GM food is in use in many countries including USA. If it is not safe consumers wont use it.
Bt cotton is being planted by lakhs of farmers in many countries including India. So far there has been no health hazard from that.
So dont create scare without knowing the facts.

23 October 2009 19:53 ///
Dear friend!!

Read this:
More and more doctors are already prescribing GM-free diets. Dr. Amy Dean, a Michigan internal medicine specialist, and board member of AAEM says, “I strongly recommend patients eat strictly non-genetically modified foods.” Ohio allergist Dr. John Boyles says “I used to test for soy allergies all the time, but now that soy is genetically engineered, it is so dangerous that I tell people never to eat it.”

Anonymous said...

Please tell me whether WHO or Institute of Medicine (USA) or any organization like AMA or IMA has categorically announced that GM food is unsafe or is not good for health.For every doctor you cite anti-GM I can cite many who are pro-GM.Fools running blogs like Poovualgu do not give any such evidence.

பூவுலகின் நண்பர்கள் said...

WE ‘POOVULAGU’ PEOPLE MAY BE FOOLS. BUT WE ARE NOT COWARDS. WE DISCLOSE OUR IDENTITY AND ESTABLISH OUR STAND.

AND WE ARE WORKING FOR THE POOR PEOPLE. AND WE HAVE MANY BITTER EXPERINCES LIKE “BHOPAL GAS DISASTER”.

SOME “INTELLIGENT” PEOPLE SITTING IN THE WESTERN COUNTRIES, FOR THE MULTI NATIONAL CORPORATIONS OR PRO-MNC UNIVERSITIES MAY BE MORE INTELLIGENT. BUT THESE INTELLIGENT PEOPLE WON’T WRITE ANYTHING FOR THE PEOPLE.

AND POOVULAGIN NANBARGAL IS VERY MUCH PROUD TO BE FOOLS WHEN COMPARING THERE SO CALLED “INTELLIGENTS”

அன்புடன் நான் said...

இப்பவே உள்நாட்டு நிறுவனம்தான் நம்மை ஆளுது (அம்பானி நிறுவனம் போல நிறைய)
இனி அயல் நாட்டு நிறுவனமும் நம்மை ஆளும்....

நம்ம நாட்டு அரசியல் வாதிகளுக்கு இதெல்லாம் தெரியாதா?

நம்ம மண்ணையும் மக்களையும் வீரியமற்றதாக்க முற்படும் அல்லது ஒத்துழைக்கும் அரசியல் வாதிகள்... இதற்கு வேறு ஏதாவது "தொழில்" செய்து பிழைக்களாம்!!!

S.A. நவாஸுதீன் said...

இயற்கையோடு மோதினால் இந்த விளைவுகள் தவிர்க்க முடியாததுதான். நல்ல இடுகை தேவா சார்

cheena (சீனா) said...

அன்பின் தேவா

சிந்தனை நன்று - எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று தான் - ஆபத்தாக இருப்பின்- ஆனாலும் ஒன்றுமே புரியாமல் கருத்துச் சொல்ல விரும்பவில்லை. அனைத்தையும் ஆராய்ந்து விட்டு கருத்துச் சொல்லுவோம்

SUFFIX said...

அடப்பாவிகளா கத்தரிக்காயையும் இவிங்க விட்டு வக்கலையா? இத தடுக்க நாம ஏதாவது உருப்படியா செஞ்சே ஆகணுமே டாக்டர்!!

ISR Selvakumar said...

நான் மரபணு கத்தரிக்காயை எதிர்க்கின்றேன். இந்த விஷயத்தில் என்னுடைய ஆதரவு என்றும் உங்களைப் போன்றோருக்கு உண்டு

அஹோரி said...

கத்தரி காயே அலர்ஜி. இந்த லட்சணத்துல 'அலர்ஜி கத்தரிக்காய்' வேறயா ?

ஷாகுல் said...

அமெரிக்கா மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு காவடி தூக்கும் மத்திய அரசு இருக்கும் வரை இது தொடரும். நம் எதிர்பெல்ல்லாம் துப்பாக்கி முனையில் அடக்கப்ப்டும். வாழ்க இந்தியா! வளர்க சுவிஸ் வங்கி அக்கெளண்ட்!!

முரளிகண்ணன் said...

நல்ல விழிப்புணர்வூட்டும் பதிவு. நன்றி

இளங்கோ said...

அமெரிக்கா என்றாலே எதிர்ப்பதெற்கென்றே சிலர் இருக்கிறார்கள்.ஆனால் அவங்க பிள்ளைகளை மட்டும் அமெரிக்கா செல்ல கனவு காண்பார்கள்.சீனாக்காரன் இந்தியாவுக்கு எதிரா என்ன செய்தாலும் வாயே திறப்பதில்லை.மாற்றம் ஒன்றுதான் மாறுதல் இல்லதது.

Anonymous said...

உங்களால் மரபணு கத்திரிக்காய் ஆபத்தானது என்று காட்டும் ஆய்வுகளை முன்வைக்க முடியாத போது எதை வேண்டுமானாலும்
எழுதுவீர்களா?.பி.டி பருத்தியை பய்ன்படுத்தும் விவசாயிகள் முட்டாள்களா?.இல்லை அவர்கள் எல்லோரும் தற்கொலை செய்துகொண்டார்களா?.

பூவுலகின் நண்பர்கள் என்று பெயர் வைத்துக் கொண்டு எதை வேண்டுமானாலும் நீங்கள் கூறலாம்.
அதை தக்க சான்றுடன் கூற வேண்டும்.விவசாயிகள் பயிரிட்டு பார்க்கட்டும்.லாபம் வந்தால் அவர்கள்
பிடி கத்திரியை தொடர்ந்து பயிரிடுவார்கள்.நட்டம் என்றால்
கும்பிடு போடுவார்கள்.நீங்களோ நானோ விவசாயி இல்லை.அப்புறம் நாம் யார் இதை முடிவு செய்ய.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory