Wednesday, 10 December 2008

ஒரு உயிரும் நானும்!

ரத்தமும் நண்பனும் பதிவைப்படித்தவர்களில்
சில நண்பர்கள் இறப்பை இவ்வளவு எளிமை
யாக எடுத்துக்கொள்கிறீர்களா என்று மிகவும்
வருத்தப்பட்டிருந்தார்கள்!!!

   அவர்களுக்கு நன்றி!!

 ஒரு நோயாளி என் நண்பனின் அக்கா!
கணவனுடன் கருத்து வேறுபாடு காரணமாக‌
உட்கார்ந்து இருக்கும் போது மண்ணெண்ணையை
இரன்டு கால்களிலும் இடுப்புவரை ஊற்றி
தீ வைத்துக்கொண்டார்கள்!

   நாந்தான் அந்த பெண்ணை தினமும்
பார்ப்பேன்!
  
   தொடை இரண்டிலும் உள்ள தோலை
தினமும் சலம் பிடிக்காமல் வேட்டி வெட்டி
சுத்தப்படுத்துவேன்.

   21 வது நாள் என்று நினைக்கிறேன்!!
விடுதியில் இருந்த எனக்கு போன் வந்தது!

   உடனே சென்று பார்த்தேன்! அப்பெண் 
மூச்சுவிட சிரமப்பட்டுக்கொன்டு இருந்தார்கள்
அருகில் நண்பர்!
   உடனே ட்ரிப்(குளுக்கோஸ்)பைப் பார்த்தால்
மெதுவாக இருந்த்து!

    இரத்தநாளங்கள் சரியாக தெரியவில்லை!
உடனே கையில் தோலை அறுத்து இரத்த நாளத்தில்
ட்ரிப் ஆரம்பித்தேன்!

    உயிர் காக்கும் மருந்துகள் அதிக அளவில்
தேவைப்பட்டதால் வார்டு வார்டாகச்சென்று
சேகரித்துவந்து அவருக்கு செலுத்திக்கொண்டே
இருந்தேன்.
    
    சுய நினைவு போவதும் வருவதுமாக 
இருந்தது!

    கிட்டத்தட்ட ஒன்றறை நாள் அப்பெண்ணின்
அருகில் இருந்து சிகிச்சை அளித்தேன்.

   அப்பெண் இறந்து விட்டாள்! நான் அந்த‌
ஒன்றரை நாளும் எதுவும் சாப்பிடவில்லை!
நம்புங்கள் காபி கூட அருந்தவில்லை,நானும்
என் நண்பனும்!

   அப்பெண் இறந்தவுடந்தான் அந்த வார்டை
விட்டே வெளியே வந்தேன்.
   அதன் பிறகுதான் பாடியை மார்ச்சுவரி அனுப்பிவிட்டு
வந்து ஒரு மாம்பழ சாறு அருந்தினேன்.

   ஏன் இதைசொல்கிறேன் என்றால் உயிர் விலை
மதிக்கமுடியாதது! நான் அதனை அறிவேன்!!!!
 

17 comments:

தேவன் மாயம் said...

கார்க்கி!
வருகைக்கு நன்றி!!
தேவா.

நட்புடன் ஜமால் said...

\\ அப்பெண் இறந்து விட்டாள்! நான் அந்த‌
ஒன்றரை நாளும் எதுவும் சாப்பிடவில்லை!
நம்புங்கள் காபி கூட அருந்தவில்லை,நானும்
என் நண்பனும்!\\

மருத்தவர் ஆயினும் மனிதரே!.

வருத்தமாக தான் உள்ளது இதை படித்த எனக்கு.

KarthigaVasudevan said...

a doctar should be a doctar...we understood sir

Unknown said...

தேவா!
ஆஸ்பத்திரி
மேட்டரா
எழுதுறீங்க!!
எங்களப்ப்த்தி
எழுதீராதீக.

தேவன் மாயம் said...

\\ அப்பெண் இறந்து விட்டாள்! நான் அந்த‌
ஒன்றரை நாளும் எதுவும் சாப்பிடவில்லை!
நம்புங்கள் காபி கூட அருந்தவில்லை,நானும்
என் நண்பனும்!\\

மருத்தவர் ஆயினும் மனிதரே!.

வருத்தமாக தான் உள்ளது இதை படித்த எனக்கு.



நன்றி அதிரை
அவர்களே!
உங்களுக்குப்புரிந்தால்
சரி!!!!

தேவன் மாயம் said...

a doctar should be a doctar...we understood sir!!

Thanks for coming here!
Dont call me Sir please!

Deva.

தேவன் மாயம் said...

Thanks kaali!!

dont worry ! i will
not write about U
Deva.

Anonymous said...

Hi!

Fine

continue!

ராஜ நடராஜன் said...

மனதைத் தொடும் தலைப்பும் பதிவும்.

தேவன் மாயம் said...

ஒரே வரில‌
நச்சுன்னு சொல்லிட்டிங்க!
நன்றி!!!

அமர பாரதி said...

//ஏன் இதைசொல்கிறேன் என்றால் உயிர் விலை
மதிக்கமுடியாதது! நான் அதனை அறிவேன்// நல்லது தேவன் மாயம். உங்களுடைய தொழில் ஈடுபாட்டையோ அல்லது மனிதாபிமானத்தையோ பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. அந்த பதிவில் ஒரு சக உயிரை "கோல் தான் மச்சி" மரணத்தை மலினப்படுத்தியதை மட்டுமே சொன்னேன். மருத்துவர்களின் அன்பான பேசினாலே பாதி நோய் சரியாகி விடும்.

மற்றபடி "மருத்துவர் நோயாளியை உடலாக மட்டுமே பார்க்க வேண்டும்" போன்ற வசனங்களை நானும் அறிவேன்.

தேவன் மாயம் said...

நன்றி அமரபாரதி!
ஒரு மருத்துவனாக என்னைப்பார்க்காமல் ஒரு நண்பனாக பாவித்து" இடிக்கும் கேளிர்"
ஆக கண்டனங்களையும்,விமர்சனங்களையும் தெரிவிக்கவும்!!
காலை வணக்கம்!!!!!
தேவா.

குடுகுடுப்பை said...

என்ன சொல்றதுன்னு தெரியல

தேவன் மாயம் said...

நன்றி !
உங்களுக்கு!!!
ஏதாவது சொல்லி
இருக்கலாமே!!!!
தேவா.

தேவன் மாயம் said...

Thanks Hakkim!
for coming to my Blog!!!!
Deva.

சந்தனமுல்லை said...

:( மனதைக் கனக்க செய்தது..தங்களின் பதிவு!

coolzkarthi said...

மனம் மிக்க கனத்து விட்டது நண்பரே......இந்த மாதிரியான சூழலில் உலவும் போது மனம் மரத்து விடாது ,மனிதம் வளருங்கள்

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory