மௌனங்கள்!!
கண்ணே!
உன் உதடுகளின்
மௌனத்தில்
என் உள்ளமே
ஊனமாகிவிடுகிறது!
உன் மௌன ஊசிகள்
என் இதயத்தைக் குத்தும்போது
வழிகிறது என் உயிர்!!
உன் பேச்சைக்கேட்க
என் கண்களும்
ஏங்குகின்றன,
உப்புக்கரிக்கிறது
என் உதடுகளில்!
உன் பேச்சை
சுவாசித்த என் நெஞ்சம்
காற்றை
சுவாசிக்க மறுக்கிறது!!
உன் மௌனங்கள்
தாக்கும் ஒவ்வொரு முறையும்
நான் இறக்கிறேன்
உயிருடனேயே!
இரவு சாப்பிட்டீங்களா?
பதிவு போட தூக்கம் வராம
இருக்க கொஞ்சம் தேநீர்
குடிங்க!!!
தேவா...
25 comments:
தேவா,கவிதைக் காதல் அழகு.அதைவிடப் படங்கள் அழகு.
//
தேவா,கவிதைக் காதல் அழகு.அதைவிடப் படங்கள் அழகு//
நன்றி ஹேமா! வருகைக்கு!
உங்கள் கருத்தும் அழகு!!!!
ஆஹா..... காரைக்குடியில் இருந்து இன்னொரு கண்ணதாசன் கிளம்பிட்டாருய்ய்யா....
ஆமா டாக்டர் ஐயா.... வீட்டில் நீங்க தான் டீ போடுவிங்களா?????
டாக்டர் அம்மா கொடுத்து வைத்தவர் போங்க! :)
என்ன இது எல்லா கவிதையும் ஒரே பீலிங்க... சோகமா இருக்கு..
சொந்த அனுபவமா...
கல்லூரி கால நினைவுகளா?
//ஆஹா..... காரைக்குடியில் இருந்து இன்னொரு கண்ணதாசன் கிளம்பிட்டாருய்ய்யா..//
இது தூசி தட்டி எழுப்பப்பட்ட பழைய
கண்ணதாசன்!!!!
தேவா...
//ஆமா டாக்டர் ஐயா.... வீட்டில் நீங்க தான் டீ போடுவிங்களா?????
டாக்டர் அம்மா கொடுத்து வைத்தவர் போங்க! :)//
பால் மட்டுந்தான் நான் காய்ச்சுவேன்!!
டீ அவங்கதான் போடுவாங்க!
நம்ம வீட்டு டீயைக்குடிச்சீங்கன்னா
அடுத்து நம்ம வீட்டுப் பக்கம் எட்டிக்கூட பார்க்கமாட்டீங்க சாய்!!!
தேவா...
//என்ன இது எல்லா கவிதையும் ஒரே பீலிங்க... சோகமா இருக்கு..
சொந்த அனுபவமா...
கல்லூரி கால நினைவுகளா?//
வீட்டில மாட்டிவிடப்பார்க்கிறீங்களே மக்களே!!!நானாக
மூளையைக் கசக்கி எழுதியது!!!
தேவா.
மிகவும் ரசித்தேன் தேவா சார் .....
//என்ன இது எல்லா கவிதையும் ஒரே பீலிங்க... சோகமா இருக்கு..
சொந்த அனுபவமா...
கல்லூரி கால நினைவுகளா?//repeat....
//மிகவும் ரசித்தேன் தேவா சார் .....//
நன்றி நண்பரே!
வந்ததற்கும் தேநீர்
அருந்தியதர்க்கும்!!!
/////என்ன இது எல்லா கவிதையும் ஒரே பீலிங்க... சோகமா இருக்கு..
சொந்த அனுபவமா...
கல்லூரி கால நினைவுகளா?//repeat....///
கவிதை எழுதவே பயமா இருக்கு!
நீங்களே இப்படிக்கேக்கறீங்க!
வீட்டுலே கேட்டா என்ன சொல்றது??
//நம்ம வீட்டு டீயைக்குடிச்சீங்கன்னா
அடுத்து நம்ம வீட்டுப் பக்கம் எட்டிக்கூட பார்க்கமாட்டீங்க //
டாக்டர் அம்மா கவனிக்கவும்..
கவிதை மற்றும் படங்கள் இரண்டும் அருமை...
இருந்தாலும் டாக்டர் அய்யா.. உங்கள் துறை சார்ந்த தகவல் அடங்கிய ஒரு பதிவாக இத்தனை எதிர்பார்கிறேன்...
அப்போ தான் உங்கள நல்ல்லாஆஅ கவனிக்க முடியும் :))))
கவிதையும் அழகு படமும் அழகு.
///நம்ம வீட்டு டீயைக்குடிச்சீங்கன்னா
அடுத்து நம்ம வீட்டுப் பக்கம் எட்டிக்கூட பார்க்கமாட்டீங்க //
டாக்டர் அம்மா கவனிக்கவும்..//
அவங்களுக்குத் தெரியும்!!!!
தேவா...
நன்றி திரு.சிம்பா !!!
//கவிதையும் அழகு படமும் அழகு.//
மிக்க நன்றி !
நண்பர் கலை!
தேவா.
வாங்க..வாங்க..
//உன் பேச்சை
சுவாசித்த என் நெஞ்சம்
காற்றை
சுவாசிக்க மறுக்கிறது!!//
:-))))
ஆஹா அருமை கவிதை.
\\உன் மௌன ஊசிகள்
என் இதயத்தைக் குத்தும்போது
வழிகிறது என் உயிர்!!
\
மருத்தவருக்கு உபதொழிலா ...
அல்லது மருத்துவம் உப-தொழிலா ...
அல்லது உப-யோகத்துக்கான தொழிலா
நல்ல யோகம் தான் போங்க ...
போயிடாதீங்க....
கவிதை அதற்கேற்ற படங்களும் அருமை
\\உன் பேச்சைக்கேட்க
என் கண்களும்
ஏங்குகின்றன,
உப்புக்கரிக்கிறது
என் உதடுகளில்!\\
கடலோரக்கவிதைகளோ
ஜமால்!!! வெளியே கிளம்பிக்கிட்டு இருக்கேன். வந்து பேசுரேன்!!!
தேவா.
கவிதை என்றால் இதுதான் றம்ப நல்லா இருக்கு
அன்பின் தேவா
அருமை நண்பன் கலை அரசனின் "கவிதையும் அழகு படமும் அழகு" என்ற மறுமொழியை வழிமொழிகிறேன்.
மௌனம் மௌனமாக ஆளையே கொல்லும் தன்மை படைத்தது. காதலனின் உள்ளம் ஊனமாவதும், உயிர் வழிவதும்,உதடுகள் உப்புக்கரைசலில் நனைவதும், காற்றை சுவாசிக்க மறுப்பதும், உயிருடன் இறப்பதும் காதலியின் மௌனத்தினால் என்னும் கருத்து அழகாகக் கூறப்பட்டிருக்கிறது.
நன்று நன்று நல்வாழ்த்துகள்
Post a Comment