ஒரு சாயங்காலம்!!!!!
நண்பருடைய அப்பா, மகனைப்பார்த்துவிட்டு வர வெளிநாடு சென்றிருந்தவர், இந்தியா திரும்பி விட்டார் என்று கேள்விப்பட்டு பார்க்கச்சென்றிருந்தேன். நண்பர் உயர் படிப்பு படித்தவர். 15 வருடங்களாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்!கடந்த முறை வந்திருந்தபோது குழந்தைகளை ஊட்டி பள்ளியில் சேர்க்க விரும்பினார். என்ன காரணமோ சேர்க்கவில்லை. இதுபோல் ஒவ்வொரு முறை வரும்போதும் ஊட்டி பள்ளியில் சேர்க்கப்பார்ப்பார். சேர்க்காமல் போய் விடுவார்.அவருடைய பையன்கள் இருவர். இருவரும் இந்த இழு பறியில் உயர்நிலைப்ப்ள்ளி லெவலுக்குப்ப்போய் விட்டார்கள்!
மேலும் அவரும் இந்தியா வந்து விடவேண்டும் என்று ஒவ்வொரு முறையும் வேலை விசாரிப்பார். சம்பளம் குறைவு என்று போய் விடுவார்.
சரி அவர் அப்பாவைப்பார்த்துவிட்டு வருவோம் என்று போனேன்!.
வீடு நல்ல பெரிய வீடு!!
என்ன அப்பச்சி! எப்படி இருக்கீங்க? வெளிநாடு போகும் போது பார்த்தது! கண்ணன்( கண்ணன் என் நண்பருடைய தம்பி!!!) எங்கே? என்றவாறு உள்ளே நுழைந்தேன்!!
வரவேற்று பேசிக்கொண்டு இருந்தார்!! வெளிநாட்டில் குளிர் அதிகம்,
கோட்டு இல்லாம இருக்க முடியல என்று அவர் அங்கு இருந்தபொது உபயோகித்த கோட்டையெல்லாம் கொண்டு வந்து காண்பித்தார்.
அப்படியே பேசிக்கிட்டு இருக்கும்போது கேட்டேன். எப்ப அவர்கள் இந்தியா வருகிறார்கள்? என்று!!
அதுவரை நல்லா பேசிக்கிட்டு இருந்தவர் சட்டுன்னு டல் ஆயிட்டார். அதையேன் தம்பி கேக்கிறே, பேரன்க ரெண்டு பேரும் இதப்பத்தி பேச்ச எடுத்தாலே எந்திருச்சுப் போயிடுறானுங்க! முகம் குடுத்துப்பேச மாட்டேன்கிறானுங்க!!
அதவிடவும் ஒருநாள் மாடியில் ஒரே சத்தம்!! நான் மேல ஏறிப்போய்
பார்த்தால் அவன் கூடப்படிக்குற பையன்களும் பொண்ணுங்களும் பாட்டைப் போட்டுக்கொண்டு ஒரே ஆட்டம்!!!
ஆடிக்கிட்டு இருந்தவனுங்க என்னையப்பாத்ததும் ஆடிக்கிட்டு இருந்தத விட்டுட்டு என் கிட்ட வந்தானுங்க. வந்து பயங்கரமா திட்டிப்புட்டானுங்க. உன்னைய யாரு பெர்மிஷன் இல்லாம மேல வரச்சொன்னது? உனக்கு டீஸன்ஸியே இல்லயேன்னு சொல்லி” நீ இதையெல்லாம் கேக்கக்கூடாது, கீழே போ”ன்னு கீழே அனுப்பிட்டனுங்க!
அப்புறம் ஊர் போகும்போது கேட்டேன்” எப்பப்பா நீங்க ஊருக்கு வரப்போறீங்கன்னு? அதுக்கு அவனுங்க “ அங்கே என்ன இருக்கு? வீ டோண்ட் லைக் இண்டியா!! நீ அப்பா,அம்மாவைக்கம்பல் பண்ணாதே! வீ டோண்ட் லைக் கமிங் தேர்”ன்னுட்டானுங்க!
ஏப்பா ”நீங்க பொறந்த ஊரைப்பாக்க வருவது இல்லையா?ன்னு கேட்டேன். அதுக்கு நாங்க இந்தியன் இல்லை! தாத்தா! வீ ஆர் அமெரிக்கன் !”னு ஒரே போடா போட்டுட்டானுங்க!!!!”
” அப்புறம் நான் என்னத்தை சொல்லுறது! ஏதோ வந்தா வரட்டும்பா!
மகன் இருக்கிறவரை அப்பப்ப வருவாங்க,மகனுக்குப்பிறகு பேரன்கள்ளாம் வர மாட்டாங்கப்பா”என்று மிகுந்த வருத்தத்துடன் முடித்துக்கொண்டார்!!!
மனசுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது!
நம்ம பதிவாளர்கள் நிறைய பேர் வெளிநாடுகளில் இருக்கிறார்கள்
அவர்கள் இதைப்பற்றி என்ன சொல்கிறார்கள்!!!
36 comments:
தலைப்பும் மாறிடிச்சி
புகைப்படமும்
???
வாங்க ஜமால்! இது முன்னாடியே நான் சேமித்து வைத்தது! இப்ப வெளியிடும் போது பழைய தேதியே வந்தது! அதனால் எடிட் பண்ணி வெளியிட்டேன்!!!
தேவா.
அதுக்கு நான் பின்னோட்டம் இட்டிருந்தேனே ...
உண்மை தான்..ஆரம்பத்திலிருந்து வெளிநாடுகளில் அந்த காலாச்சாரத்தில் வளரும் நம்ம குழந்தைகளுக்கு நம்ம ஊரின் அருமை தெரிய வாய்ப்பில்லை தான்.
சாரி ஜமால்!!!
நான் தேதியை மாற்றி வெளியிடும்போது உங்கள் பின்னூட்டமும் அழிந்து விட்டது.
தேவா.
வருத்தம் தான்! போனவங்க யாரும் திரும்ப வர விரும்புவதில்லை..போல!!
//வருத்தம் தான்! போனவங்க யாரும் திரும்ப வர விரும்புவதில்லை..போல!//
எல்லோருமே அப்படித்தானா என்ன?
அதைத்தெரிந்து கொள்ளத்தான் இந்தப்பதிவையே போட்டேன்!!!
சரி பார்ப்போம்!!!
தேவா.
///உண்மை தான்..ஆரம்பத்திலிருந்து வெளிநாடுகளில் அந்த காலாச்சாரத்தில் வளரும் நம்ம குழந்தைகளுக்கு நம்ம ஊரின் அருமை தெரிய வாய்ப்பில்லை தான்.///
அவர்கள் பெற்றோர் யாராவது தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!
நன்றி ப்ரியா!!!
தேவா..
இங்கே நடக்கும் கூத்துகளை தினமும் பேப்பரில் படித்திருப்பார்கள், அதற்கு அமெரிக்காவே தேவலை என்று தோன்றியிருக்கும்.
தேவா. என் அனுபவத்தில் உங்கள் நண்பரின் தந்தை சொன்னது சரி தான். (இந்த ஆட்டம் பாட்டம் இல்லாத இந்திய இளைஞர்கள் இருக்கிறார்கள் - அதைப் பற்றி சொல்லவில்லை). அமெரிக்கா வந்த பின் திரும்பிப் போவது என்பது குழந்தைகள் பள்ளி முடிக்கும் முன்பே இருக்க வேண்டும். இல்லையெனில் இயலாது என்றே தோன்றுகிறது.
இங்கே பிறந்தவர்கள் 'தாங்கள் அமெரிக்கர்' என்ற எண்ணம் கொள்வது அவர்கள் நண்பர்களுக்கிடையே அவர்கள் தனிமைப்படுத்தப்படாமல் இருப்பதற்குத் தேவையாக இருக்கிறது. அவர்களையும் குற்றம் சொல்ல இயலாது. 'என் பெற்றோர்கள் இந்தியர்கள். நான் இந்தியர்களுக்குப் பிறந்த அமெரிக்கன்' என்றே இங்கு பிறந்த ஒவ்வொரு குழந்தையும் சொல்லும். அவர்கள் இந்திய வம்சாவளியினர் என்று வேண்டுமானால் சொல்லலாமே ஒழிய இந்தியர்கள் என்று சொல்வது பொருந்தாது. அப்படி அவர்கள் சொல்லவேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறு.
பேரப்பிள்ளைகளின் தொடர்பு பிள்ளைகளின் காலத்திற்குப் பின்னர் போய்விடும் என்று உங்கள் நண்பரின் தந்தை சொன்னாறே அது முழுக்க முழுக்க உண்மை - எண்ணிப் பார்க்க மனத்தை பிசைந்தாலும். இரு தலைமுறை வரை தொடர்பு இருக்கலாம்; அதற்குப் பின்னர் எதிர்பார்க்க முடியாது. அதுவும் குழந்தைகள் இந்தியரை/இந்திய வம்சாவளியில் பிறக்காதவரை மணந்து கொண்டால் இந்த தொடர்பறுத்தல் விரைவாக நடக்கும். இந்தியர்களுக்கு மட்டுமே நடப்பதில்லை இது. இங்கே இருப்பவர்கள் எல்லோருக்கும் அப்படியே. இன்றைக்கு அமெரிக்கர்களாக அறியப்படுபவர்களின் தாத்தாகளும் பாட்டிகளும் ஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள் தானே. ஆனால் இவர்களுக்கு இப்போது ஐரோப்பியத் தொடர்பு இல்லை.
இந்த எண்ணங்களின் தொடர்ச்சியாக இன்னொன்றும் தோன்றுகிறது. நம்மூரில் கூட மூன்றாவது தலைமுறையில் தாயாதிகளைப் / பங்காளிகளைத் தெரிந்து வைத்திருக்கும், தொடர்புடன் இருக்கும் வழக்கம் குறைந்து கொண்டே வருகிறதே. இந்தியாவிற்குள்ளேயே சொந்த ஊரிலிருந்து வேறு ஊருக்குச் சென்று தங்கிவிடும் குடும்பங்களில் இது இன்னும் விரைவில் நடக்கின்றதே. அமெரிக்காவில் நடப்பது இதற்கு அடுத்த நிலை என்று தோன்றுகிறது.
// அப்புறம் ஊர் போகும்போது கேட்டேன்” எப்பப்பா நீங்க ஊருக்கு வரப்போறீங்கன்னு? அதுக்கு அவனுங்க “ அங்கே என்ன இருக்கு? வீ டோண்ட் லைக் இண்டியா!! நீ அப்பா,அம்மாவைக்கம்பல் பண்ணாதே! வீ டோண்ட் லைக் கமிங் தேர்”ன்னுட்டானுங்க!
ஏப்பா ”நீங்க பொறந்த ஊரைப்பாக்க வருவது இல்லையா?ன்னு கேட்டேன். அதுக்கு நாங்க இந்தியன் இல்லை! தாத்தா! வீ ஆர் அமெரிக்கன் !”னு ஒரே போடா போட்டுட்டானுங்க!!!!”//
அனைத்து இந்திய அமெரிக்க குழந்தைகளும் இந்த நிலையில் வளர்க்கப் படுவதில்லை என நான் நினைக்கிறேன்.பெரும்பாலோனோர் தங்களது வேர்கள் எங்கே என்பதனை நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள் என்பது எனது அபிப்ராயம்.
///இங்கே நடக்கும் கூத்துகளை தினமும் பேப்பரில் படித்திருப்பார்கள், அதற்கு அமெரிக்காவே தேவலை என்று தோன்றியிருக்கும்///
உண்மைதான்!!
இந்தியாவைப்பார்த்து பயப்படும் வெளிநாட்டு இந்தியர்களும் உண்டு!!!
தேவா..
///தேவா. என் அனுபவத்தில் உங்கள் நண்பரின் தந்தை சொன்னது சரி தான். (இந்த ஆட்டம் பாட்டம் இல்லாத இந்திய இளைஞர்கள் இருக்கிறார்கள் - அதைப் பற்றி சொல்லவில்லை). அமெரிக்கா வந்த பின் திரும்பிப் போவது என்பது குழந்தைகள் பள்ளி முடிக்கும் முன்பே இருக்க வேண்டும். இல்லையெனில் இயலாது என்றே தோன்றுகிறது.
இங்கே பிறந்தவர்கள் 'தாங்கள் அமெரிக்கர்' என்ற எண்ணம் கொள்வது அவர்கள் நண்பர்களுக்கிடையே அவர்கள் தனிமைப்படுத்தப்படாமல் இருப்பதற்குத் தேவையாக இருக்கிறது. அவர்களையும் குற்றம் சொல்ல இயலாது. 'என் பெற்றோர்கள் இந்தியர்கள். நான் இந்தியர்களுக்குப் பிறந்த அமெரிக்கன்' என்றே இங்கு பிறந்த ஒவ்வொரு குழந்தையும் சொல்லும். அவர்கள் இந்திய வம்சாவளியினர் என்று வேண்டுமானால் சொல்லலாமே ஒழிய இந்தியர்கள் என்று சொல்வது பொருந்தாது. அப்படி அவர்கள் சொல்லவேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறு.
பேரப்பிள்ளைகளின் தொடர்பு பிள்ளைகளின் காலத்திற்குப் பின்னர் போய்விடும் என்று உங்கள் நண்பரின் தந்தை சொன்னாறே அது முழுக்க முழுக்க உண்மை - எண்ணிப் பார்க்க மனத்தை பிசைந்தாலும். இரு தலைமுறை வரை தொடர்பு இருக்கலாம்; அதற்குப் பின்னர் எதிர்பார்க்க முடியாது. அதுவும் குழந்தைகள் இந்தியரை/இந்திய வம்சாவளியில் பிறக்காதவரை மணந்து கொண்டால் இந்த தொடர்பறுத்தல் விரைவாக நடக்கும். இந்தியர்களுக்கு மட்டுமே நடப்பதில்லை இது. இங்கே இருப்பவர்கள் எல்லோருக்கும் அப்படியே. இன்றைக்கு அமெரிக்கர்களாக அறியப்படுபவர்களின் தாத்தாகளும் பாட்டிகளும் ஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள் தானே. ஆனால் இவர்களுக்கு இப்போது ஐரோப்பியத் தொடர்பு இல்லை.
இந்த எண்ணங்களின் தொடர்ச்சியாக இன்னொன்றும் தோன்றுகிறது. நம்மூரில் கூட மூன்றாவது தலைமுறையில் தாயாதிகளைப் / பங்காளிகளைத் தெரிந்து வைத்திருக்கும், தொடர்புடன் இருக்கும் வழக்கம் குறைந்து கொண்டே வருகிறதே. இந்தியாவிற்குள்ளேயே சொந்த ஊரிலிருந்து வேறு ஊருக்குச் சென்று தங்கிவிடும் குடும்பங்களில் இது இன்னும் விரைவில் நடக்கின்றதே. அமெரிக்காவில் நடப்பது இதற்கு அடுத்த நிலை என்று தோன்றுகிறது.///
December 24, 2008 3:01 AM
மிகுந்த பொறுப்புடன் பதில் தந்திருக்கிறீர்கள்! உங்கள் பதிலே சிறந்த பதிவுபோல் உள்ளது!!இது மிகுந்த ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயம்!
நன்றி..
தேவா...
// அப்புறம் ஊர் போகும்போது கேட்டேன்” எப்பப்பா நீங்க ஊருக்கு வரப்போறீங்கன்னு? அதுக்கு அவனுங்க “ அங்கே என்ன இருக்கு? வீ டோண்ட் லைக் இண்டியா!! நீ அப்பா,அம்மாவைக்கம்பல் பண்ணாதே! வீ டோண்ட் லைக் கமிங் தேர்”ன்னுட்டானுங்க!
ஏப்பா ”நீங்க பொறந்த ஊரைப்பாக்க வருவது இல்லையா?ன்னு கேட்டேன். அதுக்கு நாங்க இந்தியன் இல்லை! தாத்தா! வீ ஆர் அமெரிக்கன் !”னு ஒரே போடா போட்டுட்டானுங்க!!!!”//
அனைத்து இந்திய அமெரிக்க குழந்தைகளும் இந்த நிலையில் வளர்க்கப் படுவதில்லை என நான் நினைக்கிறேன்.பெரும்பாலோனோர் தங்களது வேர்கள் எங்கே என்பதனை நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள் என்பது எனது அபிப்ராயம்.///
நீங்கள் சொல்வதுபோல் இருந்தால் அது ரொம்ப நல்லதுதான்!
நன்றி!!!
தேவா...
வணக்கமுங்கோ! இப்பெல்லாமே, உலகமயமாக்கல்தானுங்கோவ்... அதுலயும், நம்மூரு அறமாலும் மோசமுங்க... கெட்ட்தை எடுத்து பொழங்க்கத்துல உடுறதுக்கு போட்டியல்ல போடுறமுங்க?! அப்பனாத்தா, ஊர்ல! பசங்க பட்டணத்துல!! இஃகிஃகி!!!
///வணக்கமுங்கோ! இப்பெல்லாமே, உலகமயமாக்கல்தானுங்கோவ்... அதுலயும், நம்மூரு அறமாலும் மோசமுங்க... கெட்ட்தை எடுத்து பொழங்க்கத்துல உடுறதுக்கு போட்டியல்ல போடுறமுங்க?! அப்பனாத்தா, ஊர்ல! பசங்க பட்டணத்துல!! இஃகிஃகி!!!///
வந்ததற்கு நன்றி!!!
நீங்கள் சொல்வது சரிதான்!!!
வெளிநாட்டில் இருந்தாலும் உங்கள் தாய் மண் பாசம் உங்க ப்ளாக் ல தெரியுது!!எல்லோரும் உங்கள் போல இருக்கிறார்களா? போன்ற சில நுணுக்கமான விஷயங்களை தெரிந்து கொள்ள முயற்சியே இப்பதிவு!!!
நன்றி!!!
தேவா...
ஐயா,
உங்கள் முயற்சி சரியானதும் ஆக்கப்பூர்வமானதுமே. இங்கே, குழந்தைகள் தமிழ் கற்பதில் சிரத்தையாக இருக்கிறார்கள். நாங்கள் சொல்லும் கதைகளும், பண்பாடு பற்றிய செய்திகளையும் கேட்டு மிகவும் ஆர்வமாக ஊருக்கு வருகிறார்கள். அங்கே, அவர்கள் காண்பது ஏமாற்றமே! தமிழ் வாழ்கிறது, தமிழ்ப் பண்பாடு பேணப்படுகிறது புலம் பெயர்ந்த மண்ணிலே. இதுதான் இன்றைய நிலை. அதே நேரத்தில், நீங்கள் குறிப்பிடும்படியான குழந்தைகளும் இருக்கவே செய்கிறார்கள். அதற்குப் பெற்றோரே காரணம். தாங்கள், இந்தப் பதிவினைப் பாருங்கள்! ஒரு நிகழ்வு பற்றிய விபரம் குறிப்பிடப்பட்டு உள்ளது.
///ஐயா,
உங்கள் முயற்சி சரியானதும் ஆக்கப்பூர்வமானதுமே. இங்கே, குழந்தைகள் தமிழ் கற்பதில் சிரத்தையாக இருக்கிறார்கள். நாங்கள் சொல்லும் கதைகளும், பண்பாடு பற்றிய செய்திகளையும் கேட்டு மிகவும் ஆர்வமாக ஊருக்கு வருகிறார்கள். அங்கே, அவர்கள் காண்பது ஏமாற்றமே! தமிழ் வாழ்கிறது, தமிழ்ப் பண்பாடு பேணப்படுகிறது புலம் பெயர்ந்த மண்ணிலே. இதுதான் இன்றைய நிலை. அதே நேரத்தில், நீங்கள் குறிப்பிடும்படியான குழந்தைகளும் இருக்கவே செய்கிறார்கள். அதற்குப் பெற்றோரே காரணம். தாங்கள், இந்தப் பதிவினைப் பாருங்கள்! ஒரு நிகழ்வு பற்றிய விபரம் குறிப்பிடப்பட்டு உள்ளது.///
உங்கள் பதிலுக்கு நன்றி!!
உங்கள் சுட்டியை படித்துவிட்டு உங்களுக்கு பதில் எழுதுகிறேன்!!!
தேவா>>>

உங்கள் பதிவைப்படித்தேன்!
உங்கள் தெளிவான கருத்துக்கள்,மிகச்சரியானவையே!
அதனாலேயே என் பதிவுகளில் என் கருத்துக்களை நான் இடுவது இல்லை!
ஏனெனில் யாரையாவது குறை கூறும் வகையிலோ,பழிக்கும் விதமாகவோ நான் எழுத விரும்புவதில்லை!!!
தெளிவான உங்கள் மனசுக்கும்,கருத்துக்கும் நன்றி!!!
தேவா....

//அதனாலேயே என் பதிவுகளில் என் கருத்துக்களை நான் இடுவது இல்லை!
//
காரைக்குடி அண்ணே,
அப்பிடியெல்லாம் செய்யாதீங்க...உங்க கருத்துகளைச் சொல்லுங்க...அப்பத்தான, நாங்களும் படிச்சுத் திருந்தலாம். இஃகிஃகி! கல்லல் பக்கம் கொஞ்ச நாள் வந்து இருக்கேன். இன்னும், அந்த கல்லல் காட்டுல மான் எல்லாம் இருக்குதுங்ளா?
தேவன் மாயம்,
இது ஒரு மிகப் பெரிய சப்ஜெக்ட். ஒரு சில பிரச்சினைகளை சரியாக தொட்டுள்ளீர்கள். அமெரிக்க வாழ்க்கை நல்ல வாழ்க்கை என்பது உண்மைதான். முக்கியமாக சமூக பாதுகாப்பு, சுத்தம், லஞ்ச ஊழல் இல்லாமை, ஒரு பக்க சார்பில்லாமல் நியாயத்தைப் பார்க்கும் சட்ட அமைப்பு என்பதெல்லாம் நல்லவை. இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் எழுதினால் பெரிய விவாதம் மற்றும் எதிர்ப்பும் வரும்.
ஆனாலும் இந்தியா திரும்பி வாழவே ஆவல். அதை தடுக்கும் காரணிகள் பெரிய விஷயம் இல்லைதான். குழந்தைகள் என்பது ஒரு பெரிய பிரச்சினை இல்லை. அதை விட வேறு காரணிகள் இருக்கின்றன.
வரும் பின்னூட்டங்களைப் படித்து விட்டு தேவையான அளவு நானும் எழுதுகிறேன்.
குமரன் (Kumaran) சொன்னது…
தேவா. என் அனுபவத்தில் உங்கள் நண்பரின் தந்தை சொன்னது சரி தான். (இந்த ஆட்டம் பாட்டம் இல்லாத இந்திய இளைஞர்கள் இருக்கிறார்கள் - அதைப் பற்றி சொல்லவில்லை). அமெரிக்கா வந்த பின் திரும்பிப் போவது என்பது குழந்தைகள் பள்ளி முடிக்கும் முன்பே இருக்க வேண்டும். இல்லையெனில் இயலாது என்றே தோன்றுகிறது.
இங்கே பிறந்தவர்கள் 'தாங்கள் அமெரிக்கர்' என்ற எண்ணம் கொள்வது அவர்கள் நண்பர்களுக்கிடையே அவர்கள் தனிமைப்படுத்தப்படாமல் இருப்பதற்குத் தேவையாக இருக்கிறது. அவர்களையும் குற்றம் சொல்ல இயலாது. 'என் பெற்றோர்கள் இந்தியர்கள். நான் இந்தியர்களுக்குப் பிறந்த அமெரிக்கன்' என்றே இங்கு பிறந்த ஒவ்வொரு குழந்தையும் சொல்லும். அவர்கள் இந்திய வம்சாவளியினர் என்று வேண்டுமானால் சொல்லலாமே ஒழிய இந்தியர்கள் என்று சொல்வது பொருந்தாது. அப்படி அவர்கள் சொல்லவேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறு.
பேரப்பிள்ளைகளின் தொடர்பு பிள்ளைகளின் காலத்திற்குப் பின்னர் போய்விடும் என்று உங்கள் நண்பரின் தந்தை சொன்னாறே அது முழுக்க முழுக்க உண்மை - எண்ணிப் பார்க்க மனத்தை பிசைந்தாலும். இரு தலைமுறை வரை தொடர்பு இருக்கலாம்; அதற்குப் பின்னர் எதிர்பார்க்க முடியாது. அதுவும் குழந்தைகள் இந்தியரை/இந்திய வம்சாவளியில் பிறக்காதவரை மணந்து கொண்டால் இந்த தொடர்பறுத்தல் விரைவாக நடக்கும். இந்தியர்களுக்கு மட்டுமே நடப்பதில்லை இது. இங்கே இருப்பவர்கள் எல்லோருக்கும் அப்படியே. இன்றைக்கு அமெரிக்கர்களாக அறியப்படுபவர்களின் தாத்தாகளும் பாட்டிகளும் ஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள் தானே. ஆனால் இவர்களுக்கு இப்போது ஐரோப்பியத் தொடர்பு இல்லை.
இந்த எண்ணங்களின் தொடர்ச்சியாக இன்னொன்றும் தோன்றுகிறது. நம்மூரில் கூட மூன்றாவது தலைமுறையில் தாயாதிகளைப் / பங்காளிகளைத் தெரிந்து வைத்திருக்கும், தொடர்புடன் இருக்கும் வழக்கம் குறைந்து கொண்டே வருகிறதே. இந்தியாவிற்குள்ளேயே சொந்த ஊரிலிருந்து வேறு ஊருக்குச் சென்று தங்கிவிடும் குடும்பங்களில் இது இன்னும் விரைவில் நடக்கின்றதே. அமெரிக்காவில் நடப்பது இதற்கு அடுத்த நிலை என்று தோன்றுகிறது.
//
இதுவே என் கருத்தும், நான் விரைவில் ஊர் திரும்புகிறேன்(?!)பாக்கலாம்
தேவா,நான் கண்ட அனுபவத்தில் பெற்றவர்கள் எம் நாட்டை.எம் கலாசாரம் பண்பாட்டைச் சொல்லி வளர்ப்பதிலும் வருங்காலச் சந்ததியினர் தாய் நாட்டுப் பாசத்தோடு வளர்கிறார்கள்.அவர்கள் இங்கே பிறந்து வளர்வதால்,காலநிலை,
பொருளாதாரமும் வித்தியாசப்படுகிறது தாய் நாட்டில்.
அதனால் விடுமுறைக்கு மாத்திரம் போய்வர நல்ல இடம் என்றும் கணக்குப் போடுகிறார்கள்.
//அதனாலேயே என் பதிவுகளில் என் கருத்துக்களை நான் இடுவது இல்லை!
//
காரைக்குடி அண்ணே,
அப்பிடியெல்லாம் செய்யாதீங்க...உங்க கருத்துகளைச் சொல்லுங்க...அப்பத்தான, நாங்களும் படிச்சுத் திருந்தலாம். இஃகிஃகி! கல்லல் பக்கம் கொஞ்ச நாள் வந்து இருக்கேன். இன்னும், அந்த கல்லல் காட்டுல மான் எல்லாம் இருக்குதுங்ளா?/////
நல்லாச்சொன்னிங்க போங்க!!
இந்த விஷயத்தில நான் ஏதாவது ஆரம்பத்திலேயே அளந்தன்னா வெளிநாட்டில் இருக்கிறவஙளுக்கு கஷ்டமா இருக்கும்ல!! அதனாலதான் அதை அப்படியே நடந்த நிகழ்வா எழுதிபோட்டன்!!!
இதில நிறய விஷயம் இருக்கு!!
நீங்கள்ளாம் நிறைய எழுதுங்க!!!
எடுத்தவுடனே சூடான இடுகைக்கு போக வேண்டாமே!!!!
மிக்க அன்புடன் தேவா.
தேவன் மாயம்,
இது ஒரு மிகப் பெரிய சப்ஜெக்ட். ஒரு சில பிரச்சினைகளை சரியாக தொட்டுள்ளீர்கள். அமெரிக்க வாழ்க்கை நல்ல வாழ்க்கை என்பது உண்மைதான். முக்கியமாக சமூக பாதுகாப்பு, சுத்தம், லஞ்ச ஊழல் இல்லாமை, ஒரு பக்க சார்பில்லாமல் நியாயத்தைப் பார்க்கும் சட்ட அமைப்பு என்பதெல்லாம் நல்லவை. இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் எழுதினால் பெரிய விவாதம் மற்றும் எதிர்ப்பும் வரும்.
ஆனாலும் இந்தியா திரும்பி வாழவே ஆவல். அதை தடுக்கும் காரணிகள் பெரிய விஷயம் இல்லைதான். குழந்தைகள் என்பது ஒரு பெரிய பிரச்சினை இல்லை. அதை விட வேறு காரணிகள் இருக்கின்றன.
வரும் பின்னூட்டங்களைப் படித்து விட்டு தேவையான அளவு நானும் எழுதுகிறேன்///
நீங்கள் சொல்வது சரிதான்!
நானும் இது மிகுந்த ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது என்பதை அறிகிறேன்!!!
இன்னும் கருத்துக்கள் அனாவசியமாக யாரையும் தாக்குவதாகவோ மன வருத்தம் அளிப்பதாகவோ இருக்கக்கூடாது!!தேவா.
Kumaran) சொன்னது…
தேவா. என் அனுபவத்தில் உங்கள் நண்பரின் தந்தை சொன்னது சரி தான். (இந்த ஆட்டம் பாட்டம் இல்லாத இந்திய இளைஞர்கள் இருக்கிறார்கள் - அதைப் பற்றி சொல்லவில்லை). அமெரிக்கா வந்த பின் திரும்பிப் போவது என்பது குழந்தைகள் பள்ளி முடிக்கும் முன்பே இருக்க வேண்டும். இல்லையெனில் இயலாது என்றே தோன்றுகிறது.
இங்கே பிறந்தவர்கள் 'தாங்கள் அமெரிக்கர்' என்ற எண்ணம் கொள்வது அவர்கள் நண்பர்களுக்கிடையே அவர்கள் தனிமைப்படுத்தப்படாமல் இருப்பதற்குத் தேவையாக இருக்கிறது. அவர்களையும் குற்றம் சொல்ல இயலாது. 'என் பெற்றோர்கள் இந்தியர்கள். நான் இந்தியர்களுக்குப் பிறந்த அமெரிக்கன்' என்றே இங்கு பிறந்த ஒவ்வொரு குழந்தையும் சொல்லும். அவர்கள் இந்திய வம்சாவளியினர் என்று வேண்டுமானால் சொல்லலாமே ஒழிய இந்தியர்கள் என்று சொல்வது பொருந்தாது. அப்படி அவர்கள் சொல்லவேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறு.
பேரப்பிள்ளைகளின் தொடர்பு பிள்ளைகளின் காலத்திற்குப் பின்னர் போய்விடும் என்று உங்கள் நண்பரின் தந்தை சொன்னாறே அது முழுக்க முழுக்க உண்மை - எண்ணிப் பார்க்க மனத்தை பிசைந்தாலும். இரு தலைமுறை வரை தொடர்பு இருக்கலாம்; அதற்குப் பின்னர் எதிர்பார்க்க முடியாது. அதுவும் குழந்தைகள் இந்தியரை/இந்திய வம்சாவளியில் பிறக்காதவரை மணந்து கொண்டால் இந்த தொடர்பறுத்தல் விரைவாக நடக்கும். இந்தியர்களுக்கு மட்டுமே நடப்பதில்லை இது. இங்கே இருப்பவர்கள் எல்லோருக்கும் அப்படியே. இன்றைக்கு அமெரிக்கர்களாக அறியப்படுபவர்களின் தாத்தாகளும் பாட்டிகளும் ஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள் தானே. ஆனால் இவர்களுக்கு இப்போது ஐரோப்பியத் தொடர்பு இல்லை.
இந்த எண்ணங்களின் தொடர்ச்சியாக இன்னொன்றும் தோன்றுகிறது. நம்மூரில் கூட மூன்றாவது தலைமுறையில் தாயாதிகளைப் / பங்காளிகளைத் தெரிந்து வைத்திருக்கும், தொடர்புடன் இருக்கும் வழக்கம் குறைந்து கொண்டே வருகிறதே. இந்தியாவிற்குள்ளேயே சொந்த ஊரிலிருந்து வேறு ஊருக்குச் சென்று தங்கிவிடும் குடும்பங்களில் இது இன்னும் விரைவில் நடக்கின்றதே. அமெரிக்காவில் நடப்பது இதற்கு அடுத்த நிலை என்று தோன்றுகிறது.
//
இதுவே என் கருத்தும், நான் விரைவில் ஊர் திரும்புகிறேன்(?!)பாக்கலாம்/////
பெரும்பாலும் நீங்கள் சொல்வது சரிதான்! எனினும் இந்திய வருகைக்கு வாழ்த்துக்கள்!
இந்த இடூகை பாகம் 2 கூட போடலாம்!!
தேவா..
/// கல்லல் பக்கம் கொஞ்ச நாள் வந்து இருக்கேன். இன்னும், அந்த கல்லல் காட்டுல மான் எல்லாம் இருக்குதுங்ளா?///
மான் கொஞ்சம் இருப்பதாக காட்டிலாகா சொல்றாங்க!! இன்னமும் விறகுக்கு காட்டுக்குப்போறது இருக்கு!!
கல்லல் பக்கம் தான் என் சொந்த ஊர்!!
தேவா...
அப்படி எல்லாம் இல்லேங்க....ஒரு சிலர் தவிர, எல்லாருமே, குழந்தைகளுக்கு ஊர்ல இருக்கிற தாத்தா பாட்டி , மற்றும் பிற சொந்தங்கள் புரிஞ்சு வளரணும்னு தான் ஆசை........ஒரு சிலர் குழந்தைகளுக்கு புரிய வைக்க வழி தெரியமால் தவறு செய்வதுண்டு....
எப்பொழுது ஒரு புதிய இந்தியரை சந்திக்க நேர்ந்தாலும் கேட்டுக் கொள்ளும் முதல் கேள்வி......உங்களுக்கு இங்க இருக்க புடிச்சுருக்கா? பதில்: ஐயோ இல்லைங்க....என்ன வாழ்க்கை இது......
அடுத்த கேள்வி....:இங்கயே செட்டில் ஆகா போறேங்களா? பதில் : இல்லேங்க ௨0௧0-ல ஊருக்கு பெட்டி கட்டிருவோம்.......௫ வருத்தத்துல கிளம்பிடுவோம்.....

ரொம்ப நல்லதுங்க! உங்களுடய மனநிலையை தெளிவா தெரிவித்து இருக்கீங்க! சாதாரண இந்த மேட்டரில் என் கருத்து என்று எதையும் குறிப்பிடாமல் இருக்கும்போதே இந்த பதிவின் நிலைமை பார்த்தீர்களா?
தேவா...
//எடுத்தவுடனே சூடான இடுகைக்கு போக வேண்டாமே!!!!
//
அஃகஃகா! அண்ணே, சந்துல சிந்து பாஞ்சிட்டீங்க.... நீங்க சொல்லுறது நொம்பச் சரிதானுங்க... நான் திரட்டிக்கு வந்து நாலு மாசம் ஆவுதுங்க... நாட்டுப்புறம், பழங்கால வாழ்க்கைன்னு தெரிஞ்சதை எழுதிட்டு வர்றேன். ஆனாலும், சூடான இடுகை இட்டாத்தான, சனங்க எழுதுற பழசு பரைட்டைய கொஞ்சமாச்சும் படிக்க வர்றாங்க.... இஃகிஃகி! பாக்கலாம், இனி நாட்கள் எப்படிப் போகுதுன்னு. நன்றிங்கண்ணே!!
அவரவர்க்கு பிறந்த இடத்தின் ஒரு பற்று இருக்கும்..
ஏன் இந்த தாத்தாவை அமெரிக்கவில் போய் இருக்க சொல்லுங்களேன் ஒரு மாதத்துக்கு மேல் இருக்க முடியாது.. இது இயற்கையான விசயம், இந்தியர்களுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் பொருந்தும்.
///அவரவர்க்கு பிறந்த இடத்தின் ஒரு பற்று இருக்கும்..
ஏன் இந்த தாத்தாவை அமெரிக்கவில் போய் இருக்க சொல்லுங்களேன் ஒரு மாதத்துக்கு மேல் இருக்க முடியாது.. இது இயற்கையான விசயம், இந்தியர்களுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் பொருந்தும்.///
நல்ல கருத்து! நான் இதை யோசிக்கவில்லை!
தேவா. அந்த்க்குழந்தைகள் எங்கே பிறந்தார்கள் என்று கேட்கிறேன்.
தேவா...
குழந்தைகளாக இருக்கும் போது வாழ்க்கையில் எது தேவை என்று சொல்லிக் குடுத்து பெற்றோர் வளர்த்தால் ஊரைப் பற்றிய நாட்டம் இருக்கும்.
///குழந்தைகளாக இருக்கும் போது வாழ்க்கையில் எது தேவை என்று சொல்லிக் குடுத்து பெற்றோர் வளர்த்தால் ஊரைப் பற்றிய நாட்டம் இருக்கும்.///
நல்லா சொன்னிங்க!
தேவா....
Post a Comment