Sunday, 25 January 2009
இந்திய குடியரசு தினம்
இன்று
இந்திய குடியரசு தினம்!!
இந்தியர்களாகிய நாம் இன்று அறுபதாவது குடியரசு தினத்தை கொண்டாடுகிறோம்!.
இந்தியக்கொடியில் மலர்களைப்பொதித்து வைத்து உயரமான கம்பத்தின் உச்சியில் அதனை கட்டி பின் விழாவின் போது கொடிக்கயிற்றை இழுத்து பல வண்ணப்பூக்கள் பொழிய பட்டொளி வீசி இந்திய மூவர்ணக்கொடியை பறக்கவிட்டு அனைவரும் பரவசப்படும் நாள்!!.
உலக நாடுகள் ஒரே ஒரு முறை சுதந்திரம் பெற்ற நாளை மட்டும் கொண்டாடும் போது இந்தியர்களாகிய நாம் இருமுறை கொடியேற்றி இறக்கிக்கொண்டு உள்ளோம்.
இன்று நம் நாட்டின் ஆயுத பலத்தை காட்டும் விதத்தில் படை அணிவகுப்பு, இந்தியத்தலைநகரில் நடைபெறும். ஒவ்வொரு மாநிலம் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடை பெறும்..
மாநிலங்களில் மாவட்ட சாதனை விளக்க அலங்கார ஊர்திகள்
மற்றும் சிறந்த சேவை புரிந்தோர்க்கான விருதுகள்,பாரட்டுகள்,பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் என இந்தியா விழாக்கோலம் காணும் நாள் இது.
பள்ளிக் குழந்தைகளுக்கோ மூவர்ணகொடியை சட்டையில் அணிந்து,கொடியேற்ற பள்ளி சென்று,இனிப்பு மிட்டாய்கள் தின்ற பின் விடுமுறை சந்தோஷத்தையும் அனுபவிக்கும் நாள்..
ஏன் சுதந்திர தினம், குடியரசு தினம் என்று இரண்டு கொண்டாட வேண்டும்?
முதல் குடியரசுதினம் எப்போது அறிவிக்கப்பட்டது தெரியுமா?
ஆயிரத்துத்தொள்ளாயிரத்து முப்பதாம் ஆண்டே, காந்திஜி
”பூரண சுயாட்சியமே நமது நாட்டின் உடனடி இலட்சியம் “ என்று அதற்கு முன் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் எடுத்த தீர்மானத்தின்படி,
சனவரி இருபத்து ஆறாம் தேதி ஆயிரத்துத்தொள்ளாயிரத்து முப்பதாம் ஆண்டு முதல் சுதந்திர தினமாக அறிவித்து மக்கள் அமைதியான முறையில் கொண்டாட உத்தரவிட்டார்.
அந்த நாளே சுதந்திரம் பெற்ற பின் குடியரசு தினமாக அனுசரிக்கப்படுகிறது..
இந்த குடியரசுதினத்தில் அனைவரும் வாழ்வில் வளமும் நலமும் பெற வாழ்த்துகிறேன்!!!!
தேவா...
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
ஆஹா அருமையான படம்
மீண்டும்
தே.தே (தேசப்பற்று தேவா)
தங்களுக்கும் வாழ்த்துக்கள்
குடியரசு தின வாழ்த்துகள்..:-)
குடியரசு தின வாழ்த்துக்கள்...
நல்ல பதிவு தேவா...
அன்று உருவாக்கப் பட்ட அரசியல் சாசன சட்டத்தில் எத்தனை ஓட்டைகள் இன்னும் இருக்கின்றனவே என்று எண்ணும் போது தான் மனம் கனக்கிறது.
உஙகளுக்கும் 60 வது குடியரசுதின வாழ்த்துக்கள் தேவா
குடியரசு தினம் பற்றி நல்லதொரு தகவல்..
வாழ்த்துக்கள்
சுதந்திரம் கிடைத்தும் கூட்டுப் பறவைகளாக நாங்கள்.................. வலி கிடைக்காமல் தவிப்பவர்கள் பலர்......... இதைப் பற்றிக் கதைக்கவே தகுதி அற்றவள் நான்...
குடியரசு தின வாழ்த்துக்கள் தேவா..
குடியரசு தின வாழ்த்துகள்:)
அறுபதாவது சுதந்திர தினம் இந்தியாவிற்கு இன்று. அன்னியரிடமிருந்து விடுதலை பெற்று அறுபதாண்டுகள்.
ஈழத்தில் இன்றும் 300பொதுமக்களுக்கு மேல் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். ஆயிரத்துக்கு மேற்பட்டோர் படுகாயம். மருத்துவமின்றி இந்நிமிடம் வரை செத்துக் கொண்டிருக்கிறார்கள் நம் மக்கள்.
இந்திய மத்திய அரசின் ஆசீர்வாதத்துடன் எங்கள் மண்ணில் பழி தீர்க்கப்படுகிறது.
துயர் தோய்ந்தபடி நாங்கள்.
சாந்தி
குடியரசு தின வாழ்த்துக்கள்!
Post a Comment