நீண்ட நாள் வாழ் நிறைய வழிகள் உள்ளன. நம் வாழ்வை நாமே கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது முக்கியம்!
என்ன செய்தால் நீண்ட நாள் வாழலாம். சிலவற்றைத் தொகுத்துத் தந்துள்ளேன்!
1.நடுத்தர வயதுடைய நீங்கள் வாரம் 5 மணிநேரம் ஓடுகிறீர்களா? அப்படியானால் வயதானாலும் உங்களுக்கு உடல் வலிவுடன் இளமையும் சிந்தனைத் திறனும் இருக்கும். இதயக் கோளாறுகள், புற்றுநோய், நரம்பு வியாதிகள் வருவதும் குறைகிறது.
2.நார்ச்சத்துள்ள பழங்களை அதிகம் உண்ணுகிறீர்களா? உங்கள் கெட்ட கொழுப்பு குறையும், உடல் எடையையும் குறைக்கலாம். உடலில் இன்சுலின் சுரப்பும் நன்றாக இருக்கும்.
3.உங்களை நீங்கள் இளமையாக நினைத்துக் கொள்கிறீர்களா? உங்கள் எண்ணமே உங்களுக்கு சவால்களை எதிர்த்து வெற்றிகொள்ளும் மனதைக் கொடுக்கும். உடலும் நீங்கள் சொல்வதைக் கேட்கும்!
4.நவீன தொழில் நுட்பத்தில் ஆர்வமுடன் இருக்கிறீர்களா? பிளாக்கர், ட்விட்டர், ஃபேஸ்புக்,ஸ்கைப் ஆகியவற்றில் ஆர்வமுடன் பங்கு கொள்ளுங்கள். குடும்பத்தினர், நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள். புதிய செய்திகளைத் த்ரிந்துகொள்வதில் ஆர்வத்துடன் இருங்கள். இது உங்கள் மூளையைப் புத்துணர்ச்சியுடன் இருக்கச்செய்யும்.
5.உங்கள் உணவில் கவனம் செலுத்துகிறீர்களா? 1400-2000 கலோரிக்குள் தினமும் சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உங்கள் இதயம் உங்களைவிட 15 வயது இளையவர்களைப்போல் வலுவுடன் இயங்கும்.
6.மீன்களையும், கொட்டைகளையும் சாப்பிடுங்கள்! இவற்றில் ஒமேகா3 கொழுப்பு என்ற நல்ல கொழுப்பு இருப்பதால் இவை உடலுக்கு நல்லது! இவை ரத்த நாளங்கள் பழுதாவதைத் தடுக்கின்றன!
7.முழுதானிய உணவை உண்ணுங்கள்! இவற்றில் விட்டமின் ஈ, நார்ச்சத்து அதிகம்! முழு கோதுமை ரொட்டி, பஸ்தா, போன்றவை புற்றுநோயைக்கூடத்தடுக்கும்!!
8.100-200 முறை சிரித்தால் அது பத்து நிமிடம் ஜாகிங் செய்ததற்கு சமம் !! உண்மைங்க! அது உடலில் உள்ள ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களைக்குறைத்து உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்!
9.ஒரு நாளில் எட்டு மணி நேரத்துக்கு மேல் தூங்க வேண்டாம்! அதே போல் நான்கு மணி நேரத்துக்குக் குறைவாகவும் தூங்கக்கூடாது! இந்த வகைத் தூக்கம் உள்ளவர்களில் இறப்பு அதிகம்!
10.நீண்ட மண வாழ்க்கை ஆயுளைக் கூட்டும். ஆண் பெண் இரு பாலருக்குக் இது பொருந்தும்.
11.தாய்தந்தையருடன் நெருக்கமாக இருக்கும் பிள்ளைகளுக்கு கொடிய நோய்கள் - இரத்த அழுத்தம், இதயக்கோளாறுகள் வருவது குறைவாம்!
12.உங்களுக்குப் பிடித்தமான விளையாட்டு ஏதாவது விளையாடுங்கள்! செஸ், சீட்டு, கேரம் என்று பிடித்த விளையாட்டை விளையாடுபவர்கள் உடல் நலமுடன் இருக்கிறார்களாம்!
13.பச்சைத் தேயிலைட்ட்டீ, கருப்பு டீ ஆகியவற்றில் இதயநோய் தடுக்கும். ஆகையால் தினம் ஒருமுறை சாப்பிடுங்கள்! குறிப்பாக மாரடைப்பு வந்தவர்கள் இதனை அருந்தினால் 28% அதிகம் உயிர் வாழ்கிறார்கள்!
14.ஆபீஸ் வேலையை வீட்டுக்குக் கொண்டு செல்லாதீர்கள். ஆபீஸ் வேலையை டென்சனை அங்கேயே விட்டுவிடுங்கள்! அதிக டென்ஷன் உங்களை சீக்கிரம் முதுமையடையச்செய்யும்!!
15.நாய், பூனை, மீன் என்று ஏதாவது வளருங்கள்! வளர்ப்புப் பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு இரத்த அழுத்தம் குறைகிறதாம்!
நிறைய நாம் படித்தவைதான். மீண்டும் மீண்டும் படித்துத் தெரிந்து கொள்வதால் அவற்றை நாம் பயன்படுத்தி நீண்ட நாள் வாழலாமே!!
35 comments:
நல்ல விஷயங்களா சொல்லித் தர்றீங்க. நன்றி தேவா சார்
பயனுள்ள தொகுப்புகள் சார்.
ஆபீஸ் வேலையை வீட்டுக்குக் கொண்டு செல்லாதீர்கள். ஆபீஸ் வேலையை டென்சனை அங்கேயே விட்டுவிடுங்கள்! அதிக டென்ஷன் உங்களை சீக்கிரம் முதுமையடையச்செய்யும்!!
ஆஃபீஸ்ல வேலையே இல்லாமல் இருக்குறவங்களுக்கு இன்னும் ரொம்ப நல்லது. என்ன டாக்டர்?
அருமையான பகிர்தலுக்கு நன்றி
நல்ல அருமையான் விஷயங்கள் தேடித்தந்திருக்கிறீர்கள் சார் நன்றி
நல்ல பயனுள்ள விஷயங்களா சொல்லித் தர்றீங்க. நன்றி தேவா சார்
How to reduce tension...Plse give some tips sir....
S.A. நவாஸுதீன் said...
நல்ல விஷயங்களா சொல்லித் தர்றீங்க. நன்றி தேவா சார்
09 September 2009 01:20??/
நவாஸ் நன்றி!!
இளவட்டம் said...
பயனுள்ள தொகுப்புகள் சார்.
09 September 2009 01:21//
இளவட்டம் நன்றி!
புதுகைத் தென்றல் said...
அருமையான பகிர்தலுக்கு நன்றி
09 September 2009 01:26///
நன்றி
நன்றி தேவன் மாயம் சார்... மிகவும் பயனுள்ள செய்திகள்...
மிகவும் பயனுள்ள தகவல்கள் அன்பரே...
இந்த பதினைந்து தகவல்களும் முக்கியமானவையே...
அரியத் தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி....
http://priyamudanvasanth.blogspot.com/2009/09/blog-post_09.html
வாங்க சார்
பல விசயங்கள் கடைபிடித்து வருவதுதான் மீதியையும் முயற்சி செய்திடுவோம்.
நல்ல பதிவு டாக்டர் மிக்க நன்றி.
avasiyam ithai pin thodarugiren..he hehe namma office ellam blog thaan so kuraichikiren..engaluku nenga oru guru mathri dr sir..ama palliyil aasiriyargaluku peragu nar panbugal payilvikkum nallasiriyara nenga enaku thenpadugirergal,,,,,,,,,,,,
nandringa.......
S.A. நவாஸுதீன் said...
ஆபீஸ் வேலையை வீட்டுக்குக் கொண்டு செல்லாதீர்கள். ஆபீஸ் வேலையை டென்சனை அங்கேயே விட்டுவிடுங்கள்! அதிக டென்ஷன் உங்களை சீக்கிரம் முதுமையடையச்செய்யும்!!
ஆஃபீஸ்ல வேலையே இல்லாமல் இருக்குறவங்களுக்கு இன்னும் ரொம்ப நல்லது. என்ன டாக்டர்?
ama ithai ivar ivarukaga thaan kettu kolgirar kandippa sollathenga..
/பல விசயங்கள் கடைபிடித்து வருவதுதான் மீதியையும் முயற்சி செய்திடுவோம்//
என்னால் அப்படி சொல்லிக்க முடியவில்லை.இனி முயற்சி செய்கிறேன்..நன்றி தேவா
.நடுத்தர வயதுடைய நீங்கள் வாரம் 5 மணிநேரம் ஓடுகிறீர்களா? அப்படியானால் வயதானாலும் உங்களுக்கு உடல் வலிவுடன் இளமையும் சிந்தனைத் திறனும் இருக்கும். //
நன்றி தேவா சார்.. பயனுள்ள தகவல்..
நல்ல விசயங்கள் சொல்லியிருக்கீங்க தேவா சார்.அனைத்தையும் கடைப்பிடிக்க முயற்சிக்கிறேன்.
நார்ச்சத்துள்ள பழங்கள் எவை என்று கூற முடியுமா
டாக்டர்?
பயனுள்ள குறிப்புகள்..
குறிப்பாக...
உங்களை நீங்கள் இளமையாக நினைத்துக் கொள்கிறீர்களா? உங்கள் எண்ணமே உங்களுக்கு சவால்களை எதிர்த்து வெற்றிகொள்ளும் மனதைக் கொடுக்கும். உடலும் நீங்கள் சொல்வதைக் கேட்கும்!
உண்மைதான்!!!!!!
இன்னோரு ஐடியா!
வருசத்துக்கு ரெண்டு காலண்டர் வாங்கி கிழியுங்க!
குப்பையெல்லாம் வெளியே போடாம அடுத்த காலண்டர் வாங்கும் போது பாருங்க நீண்ட நாள் வாழ்ந்தா மாதிரி தெரியும்!
வாழ்ந்துருவோம்!
// நீண்ட நாள் வாழ! -15 வழிகள்!! //
இந்த தலைப்ப பாத்தனையும்.... கவுண்டமணி ஜோக்குதான் ஞாபகத்துக்கு வருது...!!
நோயாளி : வைத்தியரே.. என்ன பண்ணுவீங்களோ தெரியாது... நா நூறு வயுசு வரைக்கும் வாழனும் .
கவுண்ட மணி : அப்புடியா... ?? தண்ணி .. கிண்ணி.... அடிப்பியா...
நோயாளி : இல்லீங்க ...
கவுண்ட மணி : பாக்கு .. கீக்கு ....
நோயாளி : இல்ல....
கவுண்ட மணி : பொம்பள .. கிம்பள....
நோயாளி : அட.... வாடையே கெடையாதுங்க...
கவுண்ட மணி : அப்பரம் நீயெல்லாம் என்ன மசுத்துக்குடா... நூறு வயுசு வரைக்கும் வாழோணும்.... !! அவனவன் ..... 20 , 30 வயுசுலயே ஆண்டு அனுபவிச்சிட்டு போய் சேந்தரானுங்க ... !!
நோயாளி : ...!!$$**!!......
குறுகிய காலம் நல்லபடியா அடுத்தவர் ஃபாலோ பண்ணும் அளவிற்கு வாழ்த்தால் போதும் என்னா டாக்டர் சார் நான் சொல்லுவது சரிதானே
உப்யோகமான பதிவு
நிறைய நல்ல விஷயங்கள்.நான் இவற்றில் சில பழக்கங்களை பழகியிருகிறேன்.உண்மையில் பயனாகவே இருக்கிறது.நன்றி டாக்டர்.
நல்ல தகவல்களை தந்த டாக்டருக்கு நன்றி
நீண்ட நாள் நோயின்றி வாழ ஒரே வழிபோதும் ! டாக்டர் .தேவன்மாயம் பதிவுகளை விடாமல் படித்து , அதன் படி நடந்து கொண்டால் போதும்.
தகவல் உடல் காக்க, படம் "குண்டலனி" மனம் அடக்க...அருமை.
இரண்டும் சேர்ந்தால் நிச்சியம் முடியும்.
அருமையான தகவல்களை அள்ளித்தரும் தங்களுக்கு அனைவரின் சார்பிலும் நன்றிகள் ...
கோபப் படாம ,சிரிச்சுகிட்டு சந்தோஷமா இருக்க சொல்லறீங்க, உண்மைதான். நல்ல பகிர்வு. நன்றி.
பின்னிடீங்க!! பின்னிடீங்க!!
நல்ல விஷயங்கள்
நன்றி
ஆகா ஆகா கடைப்பிடிக்கணும் - கடைப்பிடிக்க்லாம் - கடைப்பிடிச்சிடுவோம்
ஆமா ஒருத்தரு நார்சத்துள்ள பழங்கள் கேட்டிருக்காரெ - பதில் சொல்றது தானே - சுகர உள்ளவங்களும் இதைச் சாப்பிடலாமா
ஓட்டுப் போட்டுட்டேன்
தேவன் மாயம் எல்லா வழிகளும் ரொம்ப நல்ல சொல்லி இருக்கீங்க .
நல்ல தொகுத்து வழங்கி இருக்கீங்க
Post a Comment