Monday, 28 September 2009

என் நினைவுகளிலிருந்து!-காதல்!

காதல், அழகு, கடவுள் மற்றும் பணம்!!!

இந்த நான்கு தலைப்புகளில் எழுதச் சொல்லி மூவரிடமிருந்து அழைப்பு!

காதல்- காதலுக்கு யார் விளக்கம் சொல்ல முடியும்? காதல் ஒவ்வொருவராலும் உணரப்படும் ஒரு உணர்வு.

இளம் வயதில் ஐந்தாம் வகுப்பில்  படித்த, இப்போது பெயர்தெரியாத  பெண்ணைப் பிடித்தது காதலா? முகம் மறந்துபோன கலங்கலான இன்னும் மறக்காத அந்த நினைவுகள் இன்னும் மன ஆழத்தில் உள்ளனவே! ஆயினும் அங்கு உடல் கவர்ச்சி ஏதுமில்லை. ஆயினும் அந்த நினைவுகள் மறக்கவில்லை.

வாழ்வின் ஒரு தருணத்தில், ஏதாவதொரு தருணத்தில் வரும் அழகிய காதல் போல் எதுவுமில்லை என்று சொல்லலாம்!

தாஸ்தாவ்ஸ்கியின் ”வெண்ணிற இரவுகள்” போல் காதல் ஒரு மாயவலை! ஆழமறிந்தார்ப் போல் இருந்தாலும் அறியமுடியாத வளைவுகளைக் கொண்ட அற்புதத் தீ அது!  அந்தத் தீயின் சுவையை அறிந்தவர்களாலும் சொல்லமுடியாத அற்புத வேதனை அது.

”காதலா? அப்படியென்றால் என்ன?“ என்று கேட்கும் சில நண்பர்களை நான் கண்டிருக்கிறேன். அவர்கள் என் நெருக்கமான நண்பகளும் கூட! அவர்களுக்கும் காதல் கவிதைகளை அப்போது எழுத்த் தொடங்கியிருந்த எனக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது ஆச்சரியம் என்பதைவிட சூழ்நிலையின் கட்டாயம்தான் என்றும் கூறலாம். இன்றும் கூட என் தலைமை மருத்துவ அதிகாரியின் பிரிவுபச்சாரத்தில் நான் ஒரு கவிதை வாசித்தபோது ஆச்சரியக் கரவொலி எழுப்பியோர் அதிகம்.

”உன் இன்னொரு முகத்தை இதுவரை காட்டவில்லையே தேவா!”  என்று சிரித்தார் என் நண்பர்.

காதல் கவிஞர்கள் எப்போதும் என் நண்பர்களாக அமையவில்லை! எல்லோருக்கும் இதுபோல்தானோ?

கல்யாணத்தில் முடிந்தால்தான் காதல் வெற்றிபெற்றதாகக் கூறும் முட்டாள்கள் இங்கு நிறையப் பேர்.

காதல் யார் அழைத்து வந்தது? ஒரு காற்றுப் போல் அனுமதியின்றி  நுழைந்து ஆக்கிரமித்த காதலை எப்படிச் சொல்வது?

இத்தனை வரிகளுக்குள் இந்த இடுகையை முடிக்கமுடியாமல் காதல் மட்டுமே இவ்வளவு வரிகள் என்னை இழுத்து வந்து விட்டதே!

பிரபஞ்சத்தின் அறியமுடியாத மாயம் காதல்! என்னைத் தீண்டிய அந்தக் காதல் எல்லோரையும் தீண்டும்! ஒவ்வொருவரின் உள்ளத்திலும் அதன் சுவடுகள் இருக்கத்தான் செய்யும்.

தொடர்ந்து எழுதுவேன்!!

36 comments:

Ashok D said...

//காதல் ஒரு மாயவலை! ஆழமறிந்தார்ப் போல் இருந்தாலும் அறியமுடியாத வளைவுகளைக் கொண்ட அற்புதத் தீ அது! அந்தத் தீயின் சுவையை அறிந்தவர்களாலும் சொல்லமுடியாத அற்புத வேதனை அது. //

த: உண்மைதான்

நீங்க கலக்குங்க

தேவன் மாயம் said...

D.R.Ashok said...
//காதல் ஒரு மாயவலை! ஆழமறிந்தார்ப் போல் இருந்தாலும் அறியமுடியாத வளைவுகளைக் கொண்ட அற்புதத் தீ அது! அந்தத் தீயின் சுவையை அறிந்தவர்களாலும் சொல்லமுடியாத அற்புத வேதனை அது. //

த: உண்மைதான்

நீங்க கலக்குங்க

28 September 2009 09:16//

எல்லோரும் கலக்கிய காதலை நானும் கலக்குகிறேன்......

ப்ரியமுடன் வசந்த் said...

//வாழ்வின் ஒரு தருணத்தில், ஏதாவதொரு தருணத்தில் வரும் அழகிய காதல் போல் எதுவுமில்லை என்று சொல்லலாம்!//

அது ஒரு வசந்தகாலம்.....

தருமி said...

காதலா .. அப்டின்னா என்னங்க ??

(மேலே எழுதியதை தட்டச்சும்போது யாரோ (தங்ஸ்?) பின்னால நின்ன மாதிரி இருந்ததுங்க ... !

விரும்பி said...

காதல் என்பது மாயவலை
அறிந்தமுடிந்தவர்களினாலும் சொல்ல முடியாத அற்புத(சுக)வேதனை

நல்லவரிகள்

காதல்

நீண்ட பிரபஞ்சத்தை சுத்தவைக்கும், கட்டிப்போட்டிருக்கும் மந்திரம்

உங்கள் வரிகளில் மேலும் எதிர்பாக்கிறேன்
கலக்குங்க

நிலாமதி said...

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலக்கும் உறவு...அது நிறைவேறுவதும் நிறைவேறாததும் அவரவர் முயற்சியை பொறுத்தது

தேவன் மாயம் said...

பிரியமுடன்...வசந்த் said...
//வாழ்வின் ஒரு தருணத்தில், ஏதாவதொரு தருணத்தில் வரும் அழகிய காதல் போல் எதுவுமில்லை என்று சொல்லலாம்!//

அது ஒரு வசந்தகாலம்.....

28 September 2009 09:49///

வசந்தின் காலம்!

தேவன் மாயம் said...

தருமி said...
காதலா .. அப்டின்னா என்னங்க ??

(மேலே எழுதியதை தட்டச்சும்போது யாரோ (தங்ஸ்?) பின்னால நின்ன மாதிரி இருந்ததுங்க ... !

28 September 2009 09:57///

அனானியா வந்து கலக்குங்க!

தேவன் மாயம் said...

விரும்பி said...
காதல் என்பது மாயவலை
அறிந்தமுடிந்தவர்களினாலும் சொல்ல முடியாத அற்புத(சுக)வேதனை

நல்லவரிகள்

காதல்

நீண்ட பிரபஞ்சத்தை சுத்தவைக்கும், கட்டிப்போட்டிருக்கும் மந்திரம்

உங்கள் வரிகளில் மேலும் எதிர்பாக்கிறேன்
கலக்குங்க

28 September 2009 10:09///

மிக்க நன்றி! தொடருகிறேன்!

தேவன் மாயம் said...

நிலாமதி said...
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலக்கும் உறவு...அது நிறைவேறுவதும் நிறைவேறாததும் அவரவர் முயற்சியை பொறுத்தது

28 September 2009 15:55//

உண்மைதான்!

Unknown said...

// இந்த நான்கு தலைப்புகளில் எழுதச் சொல்லி மூவரிடமிருந்து அழைப்பு! //

யாருங்க தல.... பிரம்மா... விஷ்ணு... சிவன்... கிட்ட இருந்தா.....???

// இளம் வயதில் ஐந்தாம் வகுப்பில் படித்த, இப்போது பெயர்தெரியாத பெண்ணைப் பிடித்தது காதலா? //

இல்ல... இதுக்கு பேரு பிஞ்சுலையே பழுத்தது....!!

// ஆயினும் அந்த நினைவுகள் மறக்கவில்லை. //

உங்க மெமரி ரொம்ப ஸ்ட்ராங்குதான்...!!

// இன்றும் கூட என் தலைமை மருத்துவ அதிகாரியின் பிரிவுபச்சாரத்தில் நான் ஒரு கவிதை வாசித்தபோது ஆச்சரியக் கரவொலி எழுப்பியோர் அதிகம். //

வாழ்த்துக்கள் தல....

// கல்யாணத்தில் முடிந்தால்தான் காதல் வெற்றிபெற்றதாகக் கூறும் முட்டாள்கள் இங்கு நிறையப் பேர். //

சரி ... சரி.... அடுத்தத சொல்லுங்க.....!!!

// காதல் யார் அழைத்து வந்தது? //

எங்கள் தானே தலைவி.....

தங்கத் தாமரை...

நடிப்புத் திலகம்....

நாடித் துடிப்பு.....

தலைவி ஷகிலா தான்.....

//ஒரு காற்றுப் போல் அனுமதியின்றி நுழைந்து ஆக்கிரமித்த காதலை எப்படிச் சொல்வது? //

ஒரு ஐஸ்க்ரீம் வாங்கி குடுத்துதான்........

// இத்தனை வரிகளுக்குள் இந்த இடுகையை முடிக்கமுடியாமல் காதல் மட்டுமே இவ்வளவு வரிகள் என்னை இழுத்து வந்து விட்டதே! //

நீங்க ஜவ்வு மாதிரி இழுத்து மொக்க போட்டுபுட்டு... காதல மேல பழிய போடுறீங்களா....?? இதெல்லாம் நெம்ப டூ மச்.....

// பிரபஞ்சத்தின் அறியமுடியாத மாயம் காதல்! என்னைத் தீண்டிய அந்தக் காதல் எல்லோரையும் தீண்டும்! ஒவ்வொருவரின் உள்ளத்திலும் அதன் சுவடுகள் இருக்கத்தான் செய்யும். ///

ஆஆவ்வ்வ்வ்வ்வ்.........

// தொடர்ந்து எழுதுவேன்!! ///

அய்யய்யோ........

தருமி said...

//அனானியா வந்து கலக்குங்க! //

இதுவரை அப்படியெல்லாம் செய்யவில்லை. நமக்கு எதற்கு அதெல்லாம் ..!

ஹரிணி அம்மா said...

இளம் வயதில் ஐந்தாம் வகுப்பில் படித்த, இப்போது பெயர்தெரியாத பெண்ணைப் பிடித்தது காதலா?

இப்படி கேட்கறதில் இருந்தே தெரியுது
உங்களுக்கு காதல்னா என்ன்வென்று
தெரியலைன்னு
சரிதானே/

ஹரிணி அம்மா said...

/முகம் மறந்துபோன கலங்கலான இன்னும் மறக்காத அந்த நினைவுகள் இன்னும் மன ஆழத்தில் உள்ளனவே! ஆயினும் அங்கு உடல் கவர்ச்சி ஏதுமில்லை. ஆயினும் அந்த

நினைவுகள் மறக்கவில்லை

இதுக்கு பேரு ஞாபகசக்திங்க

ஹரிணி அம்மா said...

வாழ்வின் ஒரு தருணத்தில், ஏதாவதொரு தருணத்தில் வரும் அழகிய காதல் போல் எதுவுமில்லை என்று சொல்லலாம்//
யோசித்து சொல்லுங்க ஒரு தருண்மா அல்ல்து பலதருண்மா????

ஹரிணி அம்மா said...

தாஸ்தாவ்ஸ்கியின் ”வெண்ணிற இரவுகள்” போல் காதல் ஒரு மாயவலை! ஆழமறிந்தார்ப் போல் இருந்தாலும் அறியமுடியாத வளைவுகளைக் கொண்ட அற்புதத் தீ அது! அந்தத் தீயின் சுவையை அறிந்தவர்களாலும் சொல்லமுடியாத அற்புத வேதனை அது//
காமத்தீ தானே சொல்வாங்க
காத்லையுமா சொல்றாஙக????????????????????

ஹரிணி அம்மா said...

காதலா? அப்படியென்றால் என்ன?“ என்று கேட்கும் சில நண்பர்களை நான் கண்டிருக்கிறேன்//

ஆமாங்க /
காத்ல்னா என்ன்?எப்படி வ்ரும்?யார் மீதுவரும்?எதனால் வ்ரும்?எவ்வளவுநாள் இருக்கும்?.................>.... ஒருபதிவா போட்டிடுங்க

S.A. நவாஸுதீன் said...

பிரபஞ்சத்தின் அறியமுடியாத மாயம் காதல்! என்னைத் தீண்டிய அந்தக் காதல் எல்லோரையும் தீண்டும்! ஒவ்வொருவரின் உள்ளத்திலும் அதன் சுவடுகள் இருக்கத்தான் செய்யும்.
***********************************
அழகா சொல்லி இருக்கீங்க தேவா சார்

ஹரிணி அம்மா said...

காதல் கவிஞர்கள் எப்போதும் என் நண்பர்களாக அமையவில்லை! எல்லோருக்கும் இதுபோல்தானோ?

அதாவது காதலை மட்டுமே எழுதுகிற்
கிறுக்கங்களை சொல்றீங்க
கிறுக்கஙளுடன் ந்ட்பு வைத்துகொள்ள்
நிறைய பேர் விரும்புவ்தில்லை

ஹரிணி அம்மா said...

பிரபஞ்சத்தின் அறியமுடியாத மாயம் காதல்! என்னைத் தீண்டிய அந்தக் காதல் எல்லோரையும் தீண்டும்! ஒவ்வொருவரின் உள்ளத்திலும் அதன் சுவடுகள் இருக்கத்தான் செய்யும்.//

ஆண்கள் பெண்கள் இரண்டுபாலாருக்கும்
பொதுவாகத்தானே சொல்றிங்க.
அப்போ எல்லரும் அல்ல்து பெரும்பாலோர் யாரையொ காதலித்துவிட்டு யாரையொ கல்யாண்ம் செய்துகொண்டு வடுவோடு வாழறாங்கன்னு சொல்ரீங்க
எதுக்கு அப்படி வாழணும்
பொதுக்கூட்டம் போட்டு பேசி வடுவை பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கவேண்டவேண்டிய்துதனே?

SUFFIX said...

//கல்யாணத்தில் முடிந்தால்தான் காதல் வெற்றிபெற்றதாகக் கூறும் முட்டாள்கள் இங்கு நிறையப் பேர்.//

சரி சரி விடுங்க டாக்டர், அவங்க கொடுத்து வச்சது அவ்ளோதான் போல..ஹீ..ஹீ!!

SUFFIX said...

//”உன் இன்னொரு முகத்தை இதுவரை காட்டவில்லையே தேவா!” என்று சிரித்தார் என் நண்பர்//

உண்மை தான் டாக்டர்!! நானும் ஆச்சர்யப்பட்டதுண்டு, ஒரு மருத்துவருக்குள் இத்தனை இலக்கிய திறமைகளா!!

தேவன் மாயம் said...

// தொடர்ந்து எழுதுவேன்!! ///

அய்யய்யோ........

28 September 2009 19:09///
இந்த பயம் இருக்கட்டும் மேடி

தேவன் மாயம் said...

ஹரிணி அம்மா said...
இளம் வயதில் ஐந்தாம் வகுப்பில் படித்த, இப்போது பெயர்தெரியாத பெண்ணைப் பிடித்தது காதலா?

இப்படி கேட்கறதில் இருந்தே தெரியுது
உங்களுக்கு காதல்னா என்ன்வென்று
தெரியலைன்னு
சரிதானே/

28 September 2009 22:27//

காதல் யாருக்குத்தான் புரிந்தது?

தேவன் மாயம் said...

ஹரிணி அம்மா said...
வாழ்வின் ஒரு தருணத்தில், ஏதாவதொரு தருணத்தில் வரும் அழகிய காதல் போல் எதுவுமில்லை என்று சொல்லலாம்//
யோசித்து சொல்லுங்க ஒரு தருண்மா அல்ல்து பலதருண்மா????

28 September 2009 22:36//

கேள்வியே ஒருடைப்பா இருக்கே!!

தேவன் மாயம் said...

ஹரிணி அம்மா said...
தாஸ்தாவ்ஸ்கியின் ”வெண்ணிற இரவுகள்” போல் காதல் ஒரு மாயவலை! ஆழமறிந்தார்ப் போல் இருந்தாலும் அறியமுடியாத வளைவுகளைக் கொண்ட அற்புதத் தீ அது! அந்தத் தீயின் சுவையை அறிந்தவர்களாலும் சொல்லமுடியாத அற்புத வேதனை அது//
காமத்தீ தானே சொல்வாங்க
காத்லையுமா சொல்றாஙக????????????????????

28 September 2009 22:42///

நாம் காமத்துக்கே போகலியே!

தேவன் மாயம் said...

ஹரிணி அம்மா said...
காதலா? அப்படியென்றால் என்ன?“ என்று கேட்கும் சில நண்பர்களை நான் கண்டிருக்கிறேன்//

ஆமாங்க /
காத்ல்னா என்ன்?எப்படி வ்ரும்?யார் மீதுவரும்?எதனால் வ்ரும்?எவ்வளவுநாள் இருக்கும்?.................>.... ஒருபதிவா போட்டிடுங்க

28 September 2009 22:49//

இதுக்கெல்லாம் பாடமா எடுக்க முடியும்?

தேவன் மாயம் said...

S.A. நவாஸுதீன் said...
பிரபஞ்சத்தின் அறியமுடியாத மாயம் காதல்! என்னைத் தீண்டிய அந்தக் காதல் எல்லோரையும் தீண்டும்! ஒவ்வொருவரின் உள்ளத்திலும் அதன் சுவடுகள் இருக்கத்தான் செய்யும்.
***********************************
அழகா சொல்லி இருக்கீங்க தேவா சார்

28 September 2009 22:53//

புரிந்தவருக்கு நன்றி!

தேவன் மாயம் said...

ஹரிணி அம்மா said...
காதல் கவிஞர்கள் எப்போதும் என் நண்பர்களாக அமையவில்லை! எல்லோருக்கும் இதுபோல்தானோ?

அதாவது காதலை மட்டுமே எழுதுகிற்
கிறுக்கங்களை சொல்றீங்க
கிறுக்கஙளுடன் ந்ட்பு வைத்துகொள்ள்
நிறைய பேர் விரும்புவ்தில்லை

28 September 2009 22:56///

புத்திசாலிகளைவிட காதல் கிறுக்கர்கள் மேல்!

தேவன் மாயம் said...

ஹரிணி அம்மா said...
பிரபஞ்சத்தின் அறியமுடியாத மாயம் காதல்! என்னைத் தீண்டிய அந்தக் காதல் எல்லோரையும் தீண்டும்! ஒவ்வொருவரின் உள்ளத்திலும் அதன் சுவடுகள் இருக்கத்தான் செய்யும்.//

ஆண்கள் பெண்கள் இரண்டுபாலாருக்கும்
பொதுவாகத்தானே சொல்றிங்க.
அப்போ எல்லரும் அல்ல்து பெரும்பாலோர் யாரையொ காதலித்துவிட்டு யாரையொ கல்யாண்ம் செய்துகொண்டு வடுவோடு வாழறாங்கன்னு சொல்ரீங்க
எதுக்கு அப்படி வாழணும்
பொதுக்கூட்டம் போட்டு பேசி வடுவை பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கவேண்டவேண்டிய்துதனே?

28 September 2009 23:21///

காதலித்தவர்களைக் கல்யாணம் செய்து கொள்வது அடுத்த சாப்டர்ங்க!

தேவன் மாயம் said...

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...
//கல்யாணத்தில் முடிந்தால்தான் காதல் வெற்றிபெற்றதாகக் கூறும் முட்டாள்கள் இங்கு நிறையப் பேர்.//

சரி சரி விடுங்க டாக்டர், அவங்க கொடுத்து வச்சது அவ்ளோதான் போல..ஹீ..ஹீ!!

28 September 2009 23:40//

ஹ ஹ!!

S.A. நவாஸுதீன் said...

//கல்யாணத்தில் முடிந்தால்தான் காதல் வெற்றிபெற்றதாகக் கூறும் முட்டாள்கள் இங்கு நிறையப் பேர்.//
*****************************
எல்லா காதலும் வெற்றிபெருவதில்லை. சில நேரங்களில் கல்யாணத்திலும் முடிந்துவிடுமென்பது தெரியாதவர்கள் இவர்கள்

சாந்தி நேசக்கரம் said...

கலீல் ஜிப்ரான் காதலுக்கு தந்த இலக்கியம் போல தேவாவின் இலக்கியம் வருவது மகிழ்ச்சி.

சாந்தி

அப்துல்மாலிக் said...

ஒரு சின்ன ஆட்டோகிராஃப் மீண்டும்

மங்களூர் சிவா said...

//காதல் ஒரு மாயவலை! ஆழமறிந்தார்ப் போல் இருந்தாலும் அறியமுடியாத வளைவுகளைக் கொண்ட அற்புதத் தீ அது! அந்தத் தீயின் சுவையை அறிந்தவர்களாலும் சொல்லமுடியாத அற்புத வேதனை அது. //

well said

ஊர்சுற்றி said...

நீங்கள் கூறிய பல விசயங்கள் உண்மை.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory