Friday, 22 October 2010
தூக்கம்!
அன்று எனக்கு 24 மணி நேரப்பணி. அதாவது காலையில் 7.00 மணிக்கு ஆரம்பித்தால் அடுத்த நாள் காலை 7.00 மணிவரை உள்ள நோயாளிகளை நாம்தான் பார்க்க வேண்டும். பகல் வேலைகள் முடிந்து இரவு மருத்துவமனைக்கு உள்ளேயே இருக்கும் ஓய்வறைக்குச் சென்றேன்.
பிரசவ வார்டு அருகில் குழந்தை எப்போது பிறக்கும் என்று எதிர்பார்ப்புடனும், பிறந்த குழந்தையின் உறவினர்கள் என்றும் பலர் ஆங்காங்கே வெறும் தரையில் துணியை விரித்தும், துணியை விரிக்காமல் கைலி, வேட்டியையே போர்த்திக் கொண்டும் தூங்க ஆரம்பித்திருந்தனர். கொசுக்களை விரட்ட அவர்களின் அருகில் கொசுவர்த்திச் சுருள்களும் ஆங்காங்கே புகைந்து கொண்டிருந்தன.
இதைப் பார்த்த எனக்கும் பாவமாகவும் இருந்தது. இந்தக் கொசுக்கடியில் குளிரில் வெறுந்தரையில் எப்படி நிம்மதியாகத் தூங்குகிறார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. குழந்தை பிறந்த சந்தோசத்தில் பலரும் சிரித்துப் பேசிக்கொண்டும் இருந்தனர். பணம், வசதி இல்லாத சூழ் நிலையிலும் இவர்கள் எப்படி மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டே அறை நோக்கிச் சென்றேன்.
ஏனோ சில நாள் முன்பு என்னுடன் படித்த மருத்துவ நண்பர்” மனம் விட்டுச் சிரித்தே ரொம்ப நாள் ஆகிறது என்று வருத்தத்துடன் பேசியது நினைவுக்கு வந்தது.
அறைக்குள் சென்று தொலைக்காட்சியை உயிர்ப்பித்தேன். ஏசி ஓடிக் கொண்டிருந்தது. அவ்வளவு பெரிய அறையில் நான் மட்டும். வெளியில் தரையில் படுத்திருந்தோர் நினைவு வந்தது.
கொஞ்ச நேரத்தில் ஒரு விசம் குடித்த பெண்ணைத் தூக்கிக் கொண்டு பத்துப் பேர் வந்தனர். மருத்துவமனை ஊழியர் வந்து சொன்னார். சென்று பார்த்து சிகிச்சையை ஆரம்பித்தேன். அறைக்குத் திரும்பலாம் என்று எண்ணிய போது பாம்பு கடித்த இளைஞன் ஒருவனை ஆட்டோவிலிருந்து இறக்கினர். அவனது இரத்தத்தை சோதித்துப் பார்த்து மருந்துகளைத் தொடர்ந்து ஏற்றிக் கொண்டிருந்தோம். வைரஸ் காய்ட்ச்சல் நேரமாதலால் நடு நடுவே காய்ச்சல் வந்தோர் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர்.
இவர்களுக்கு சிகிச்சை செய்து கொண்டிருக்கும் போது போலீஸ் வண்டி ஒன்று வந்து நின்றது. டாஸ்மாக்கில் தண்ணியடித்து விட்டு வண்டியோட்டியதாக நான்கு ஆட்களை வண்டியிலிருந்து இறக்கினார்கள். நான்கு பேருடனும் மல்லுக்கட்டி குடிபோதைச் சான்றிதழ் எழுதிக் கொடுத்தேன். நால்வரையும் அள்ளிப் போட்டுக் கொண்டு வண்டி கிளம்பியது.
சரியென்று அறைக்குள் வந்து படுக்கையில் படுத்தேன். உடல் அசதி கண்ணைப் பொத்தியது. அறைக்குள் வந்து 10 நிமிடம் தான் ஆகியிருந்தது. கதவைத் தட்டும் சத்தம். கேட்டது. எழுந்து கதவைத் திறந்தேன்.அட்டெண்டர் “ அய்யா! ஆக்சிடென்ட் கேஸ்! சீரியசாக மூன்று பேரை ஆம்புலன்சில் கொண்டு வந்திருக்கிறார்கள். சீக்கிரம் வாங்கையா! என்றான்”. பரபரப்புடன் கதவைத் திறந்து வந்தேன். மணியைப் பார்த்தேன். அட! இரண்டு மணி!
அவசர் சிகிச்சைப்பிரிவை நோக்கி அவசரமாக நடந்தேன்!
வழியில் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
37 comments:
நெஞ்சை நெகிழு வைக்கும் அனுபவங்கள் தேவா சார். மருத்துவ துறைக்கே பெருமை சேர்க்கும் தங்களைப் போன்ற நல்ல மருத்துவர்களால்தான் உலகம் இன்னுமும் அதீத வளர்ச்சி அடைந்து கொண்டு போகிறது. பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் ஐயா தங்கள் பணி மேலும் சிறந்திட...!!!
பிரவீன்! நான் ஒரு சாதாரண மருத்துவன்! உங்கள் அன்புக்கு நன்றி!! !
தூக்கம் இழந்தாலும் செய்யும் மருத்துவப் பணியை ஆத்ம திருப்தியுடன் செய்யும் உங்களுக்கு வாழ்த்துக்கள் தேவா சார்.
ரியலி கிரேட் அண்ணே.........
டச்சிங்.. தேவா.. நாயகனில் "ராசாயா நீ" என்று வேலுநாயக்கர் டாக்டரிடம் சொல்லும் சீன ஞாபகம் வந்தது. உங்கள் உழைப்புக்கு வந்தனம். நன்றி. ;-) ;-)
u r sooo kind!
அற்புதம்! தேவைகளை அர்பணித்து செய்கிற உங்களுக்கு என் வணக்கங்கள்! உங்கள் பணி வாழ்க! Thatawhy it is a noble profession
பிரமாதம் டாக்டர் சார்..
தங்களை போன்றோரின் சேவை கண்டிப்பாக தொடர வேண்டும்.
வாழ்த்துக்கள்.
உங்களைப் போன்ற மருத்துவர்களால் தான் நாட்டில் மழை பெய்கிறது... எந்த ஒரு தருணத்திலும், எந்த ஒரு காரணத்திற்காகவும் இந்நிலையில் இருந்து மாறிவிடாதீர்கள்...
உங்களின் சிறந்த இடுக்கை இது தேவா
எனக்குள் தோன்றும் உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள் தெரியவில்லை
உங்களுக்கான எனது பிரார்த்தனை
உங்களை போன்றோரின் ஜீவன் நீடிக்க வேண்டும் ஜீவனோடு ...
சே.குமார் said...
தூக்கம் இழந்தாலும் செய்யும் மருத்துவப் பணியை ஆத்ம திருப்தியுடன் செய்யும் உங்களுக்கு வாழ்த்துக்கள் தேவா சார்.//
நண்பா! நன்றி!
ஜீவன்பென்னி said...
ரியலி கிரேட் அண்ணே.....//
நன்றிங்க பென்னி!
RVS said...
டச்சிங்.. தேவா.. நாயகனில் "ராசாயா நீ" என்று வேலுநாயக்கர் டாக்டரிடம் சொல்லும் சீன ஞாபகம் வந்தது. உங்கள் உழைப்புக்கு வந்தனம். நன்றி. ;-) ;-)//
மிக்க நன்றிங்க !
யூர்கன் க்ருகியர் said...
u r sooo kind!//
க்ரூகியர் வருக!
எஸ்.கே said...
அற்புதம்! தேவைகளை அர்பணித்து செய்கிற உங்களுக்கு என் வணக்கங்கள்! உங்கள் பணி வாழ்க! Thatawhy it is a noble profession//
நன்றி நன்றி!
அன்பரசன் said...
பிரமாதம் டாக்டர் சார்..
தங்களை போன்றோரின் சேவை கண்டிப்பாக தொடர வேண்டும்.
வாழ்த்துக்கள்.///
உங்கள் வார்த்தைக்கிணங்க வாழ முயல்கிறேன்!
philosophy prabhakaran said...
உங்களைப் போன்ற மருத்துவர்களால் தான் நாட்டில் மழை பெய்கிறது... எந்த ஒரு தருணத்திலும், எந்த ஒரு காரணத்திற்காகவும் இந்நிலையில் இருந்து மாறிவிடாதீர்கள்...//
நிச்சயம் மனம் சொல்படி நடக்கிறேன்!
நட்புடன் ஜமால் said...
உங்களின் சிறந்த இடுக்கை இது தேவா
எனக்குள் தோன்றும் உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள் தெரியவில்லை
உங்களுக்கான எனது பிரார்த்தனை
உங்களை போன்றோரின் ஜீவன் நீடிக்க வேண்டும் ஜீவனோடு ..//
நெகிழ வைக்கிறீர்கள் ஜமால்!
கடின வேலை பலுவிற்க்கிடையில் பதிவிட்டதற்க்கு பாராட்டுக்கள்...
படிக்கும்போதே மனதிற்கு கஷ்டமாய் இருக்கிறது, உயிர் காக்கும் பணி ஆச்சே. தங்களின்
அர்ப்பணிப்புக்கு வாழ்த்துக்கள் டாக்டர்.
வழிப்போக்கன் - யோகேஷ் said...
கடின வேலை பலுவிற்க்கிடையில் பதிவிட்டதற்க்கு பாராட்டுக்கள்...//
யோகேஷ்! மிக்க நன்றி!
சைவகொத்துப்பரோட்டா said...
படிக்கும்போதே மனதிற்கு கஷ்டமாய் இருக்கிறது, உயிர் காக்கும் பணி ஆச்சே. தங்களின்
அர்ப்பணிப்புக்கு வாழ்த்துக்கள் டாக்டர்.//
நன்றி நண்பா!
அன்பின் தேவகுமார்
அருமையான - மக்த்துவமான மருத்துவப் பணியில் சேவை செய்து மனம் மகிழும் நல்ல சிந்தனை வாழ்க ! தொடர்ந்து பணியாற்ற - மேன்மேலும் சிறப்புகள் பெற - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
இப்படி ஒரு உழைப்புக்குப் பிறகு ஓயும் நேரம், நெஞ்சு நிறைய இறைவனுக்கு நன்றி சொல்ல வாய்க்கிறதே. பெரிய வரமில்லையா சார்:). தினமும் எத்தனை ஜீவன்களின் மூலம் இறைவன் உங்களை வாழ்த்துகிறான். சந்தோஷமாக இருக்கிறது.
cheena (சீனா) said...
அன்பின் தேவகுமார்
அருமையான - மக்த்துவமான மருத்துவப் பணியில் சேவை செய்து மனம் மகிழும் நல்ல சிந்தனை வாழ்க ! தொடர்ந்து பணியாற்ற - மேன்மேலும் சிறப்புகள் பெற - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//
வாழ்த்துக்கு நன்றி!
வானம்பாடிகள் said...
இப்படி ஒரு உழைப்புக்குப் பிறகு ஓயும் நேரம், நெஞ்சு நிறைய இறைவனுக்கு நன்றி சொல்ல வாய்க்கிறதே. பெரிய வரமில்லையா சார்:). தினமும் எத்தனை ஜீவன்களின் மூலம் இறைவன் உங்களை வாழ்த்துகிறான். சந்தோஷமாக இருக்கிறது.//
நான் ஒரு சாதாரண ம ருத் து வன்! உங்கள் புகழ்ச்சிக்கு நான் தகுதியானவனா என்று என்னையே கேட்டுக்கொள்கிறேன்!
பிரமாதம் டாக்டர்
மிக்க மகிழ்ச்சி.
ஆக்சிடெண்ட் ஆனவர்கள் நலம்தானே?
T.V.ராதாகிருஷ்ணன் said...
பிரமாதம் டாக்டர்//
நன்றிஙக!
ஹுஸைனம்மா said...
மிக்க மகிழ்ச்சி.
ஆக்சிடெண்ட் ஆனவர்கள் நலம்தானே?///
அனைவரும் நலம்!!
u r really great
நல்ல சேவை . தொடருங்கள்.
அந்த நிமிசத்துக்கு நீங்கதான் கடவுள்.
மனசு நெகிழ்வா இருக்கு.
மருத்துவ பணியே மகத்தான பணி.
அதில் அர்பணிப்பு உணர்வுடன் சேவை செய்யும் உங்கள் சேவை பாராட்டுக்கு உரியது.
நீங்களும் நேரம் கிடைக்கும் போது ஒய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்!
What I think to say, all commented above.A great Royal salute for yours kindness, genuine and sincerity.
பாராட்டுக்கள்!
அறிவை புகட்டுவது ஆசிரியப்பணி! உயிரை மீட்பது மருத்துவர் பணி! வாழ்த்துக்கள்!
டாக்டர் ,நான் கடந்த பத்து ஆண்டுகளாக சர்க்கரை நோய்க்கு மருந்து எடுத்து வருகிறேன்{டைப் 2}. வயது ஐம்பது.எடை தொண்ணூறு கிலோ. சர்க்கரை கட்டுபாட்டில் இருந்தாலும் எடையை குறைக்காவிட்டால் இன்சுலின் போட வேண்டி வரும் என்று எனது டாக்டர் சொல்கிறார். பகலெல்லாம் ஓரளவு கட்டுப்பாடாக இருந்து விடுகிறேன்.ஆனால் இரவு தூக்கத்தில் இருந்து விழிப்பு வந்து விடுகிறது .அந்த நேரத்தில் எதாவது சாப்பிட்டால் தான் மறுபடி தூக்கம் வருகிறது.எனக்கு சரியான உணவு அட்டவணை ஒன்றை கொடுங்கள் .நான் சுரங்க எந்திர பணியாளன். நான் எடுக்கும் மருந்துகள் விவரம்!
Tab.glucored forte500 mg 3 times
Tab.repace H morning
Tab.forts B morning
Tab.dyslip night
Tab.stamlo 5mg night
Post a Comment