நேற்று அகஸ்மாத்தாக டி.வி.யின் முன் அமர்ந்து ம்தியம் சாப்பிட ஆரம்பித்தேன்.
கிரிக்கெட் மாட்ச் நேரடி ஒளிபரப்பு.நம்மதான் கிரிக்கெட்னா ஆணிஅடிச்சு உக்காந்திடுவோமே!
சோத்தையும் முடிச்சு ஒரு பாயையும் 4 தலகாணியும் போட்டு (கீழே படுத்துக்கிட்டே டி.வி. பாக்கிறதுதானே வசதி).....
,வாங்கிவந்த பலாச்சுளையில் 6 சுளையை தட்டில் வைத்து,.........
உக்கார்ந்து இருக்கோமா படுத்து இருக்கோமான்னு தெரியாத ஒரு நிலையில் தலகாணி மேல் சாய்ந்து மாட்ச் பார்க்க ஆரம்பிச்சேன்!!
கொஞ்ச நேரத்தில் ஆனந்தமான பரவச நிலை! அண்ணன் சேவாக் ஒரு பக்கம்,யுவராஜ் ஒரு பக்கம்! ஒரே வாண+வான வேடிக்கைதான்!!!
ஊடே ஊடே மாட்ச் நடக்கிற ஊரைக்காட்டுகிறான்,அது என்னங்க ஒரே கிளப்களும்,பளபளப்பான கட்டிடமும்,வெளிநாட்டு பயணிகளும்!!-உடனே அங்கே போகணும்போல...இருந்ததுங்க...
இதுல ஏதாவது சோகமா தெரிஞ்சதா உங்களுக்கு? இல்லைதானே!!
இதுதாங்க இப்ப என்னுடைய, நம்முடைய உண்மை நிலை!
செத்த வீட்டுல ரெண்டுநாள்,ஒருவாரம் அழுதுவிட்டு அப்புறம் எப்பவும் போல சோறாக்கி சாப்பிட்டு வேலைக்குபோகும் சராசரி மனிதர்தானே நான்..நாம் எல்லாம்.
இதை பகிரங்கமாக சொல்ல வெட்கப்பட்டாலும் உண்மை இதுதானே!!
மேலே நான் எழுதியதுபற்றி என் அன்பு சகோதரர்கள் யாரும் வருத்தப்படவேண்டாம்.
இனி விஷயத்துக்கு வருவோம்!
ஒன்றும் நடக்காததுபோல் இந்திய அணி இலங்கை செல்வதும் இந்தியாவும்,இலங்கையும் விளையாடுவதும்,ஒரு நிமிடம் நினைவுக்கு வந்தவுடன் தொலைக்காட்ச்சிபெட்டியை அணைத்து விட்டு அமர்ந்தேன்.
ஒரு பாகிஸ்தான் இந்தியாவுக்கு கிரிக்கெட் விளையாட வரமாட்டேன் என்று கூறுகிறான்.
ஆனால் இனப்படுகொலை நடக்கும் இலங்கைக்கு நாம் போய் சந்தோஷமாக விளையாடி வெற்றிகளை அனுபவிக்கிறோம்.
இதே இலங்கை நாட்டின் ஒரு பக்கம் பயங்கர இன அழிப்புப் போர்!
இன்னொருபுறம் அப்படியா?சண்டையா? எங்கே நடக்குது என்று கேட்கும் அளவுக்கு கேளிக்கையும்,விளையாட்டும்.
நினைக்கும்போது மனம் கசந்துபோய் இனம் புரியாத கவலை மனதில் ஏற்பட்டது..
தமிழர்கள் இந்தியாவிலும் சிறுபான்மையினர்தானோ?
இங்கும் நம் குரல் செல்லாதோ?
ஊடகங்கள் வழி பார்க்கும் எவரும் இலங்கையில்
ஒரு இனம் ஒடுக்கப்படுகிறது,
குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள்!
பெண்கள் மானபங்கப்படுத்தப்படுகிறார்கள்.
தமிழ் மக்கள் அழிக்கப்படுகிறார்கள் என்று நம்ப் முடியுமா?
ஒருநாட்டின் அரசே பயங்கரவாதத்திலும்,இனஒழிப்பிலும் ஈடுபடும் போதும்,
அதற்கு ஆதரவாக ஊடகங்களும்,உலகநாடுகளும் செயல்படும்போதும்
நாம் நமது சகோதரர்களை காப்பாற்ற முடியாமல் கூக்குரல் இடமட்டுமே முடிந்த இழிநிலையில் இருப்பதும் கேவலமானதுதான்.
இன்னிலை தொடர்ந்தால் தமிழர் வரலாறு உலக வரலற்றின் கருப்புப்பக்கங்களில் இரத்த்கறை கொண்டு எழுதப்படும்.
இலங்கை தன் கலாச்சாரம்,பண்பாடு,வளம் எல்லாவற்றையும் இழந்து கொடுங்கோல் ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்டு,உணவின்றி இறக்கும் ஆப்பிரிக்க நாடுகளின் நிலைமையையே அடையும்.
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து சொல்லடா! என்று எட்டுத்திசையெங்கும் முழங்கிய
மகாகவி பாரதியும் கண்ணீருடன் இதைப்பார்த்துக்கொண்டுதான் இருப்பானோ?
39 comments:
// ஒன்றும் நடக்காததுபோல் இந்திய அணி இந்தியா செல்வதும் இந்தியாவும்,இலங்கையும் விளையாடுவதும்,//
இந்திய அணி இலங்கை செலவதும் என்று மாற்றுங்கள்
இராகவன் சார்!
நன்றி.
மாற்றி விட்டேன்!!!
//ஒரு பாகிஸ்தான் இந்தியாவுக்கு கிரிக்கெட் விளையாட வரமாட்டேன் என்று கூறுகிறான்.
ஆனால் இனப்படுகொலை நடக்கும் இலங்கைக்கு நாம் போய் சந்தோஷமாக விளையாடி வெற்றிகளை அனுபவிக்கிறோம்//
இதையே தான் என்னோட பதிவுலே "தமிழர்கள் ஒரு கேடயமா? என்று கேட்டிருப்பேன்
ஞாபக மறதி நமக்கெல்லாம் கொஞ்சம் அதிகம் தாங்க...
//இதே இலங்கை நாட்டின் ஒரு பக்கம் பயங்கர இன அழிப்புப் போர்!
இன்னொருபுறம் அப்படியா?சண்டையா? எங்கே நடக்குது என்று கேட்கும் அளவுக்கு கேளிக்கையும்,விளையாட்டும்.
நினைக்கும்போது மனம் கசந்துபோய் இனம் புரியாத கவலை மனதில் ஏற்பட்டது..
//
நேற்று இதே மனநிலை எனக்கு வந்ததுங்க, போர் நடக்கும் ஒரு சுவடே தெரியாமல்...
சிங்களர் ஆடிப்பாடி மகிழும்போது, அவர்கள் தமிழர்களை அழித்துக்கொண்டிருக்கிறோம் என்ற மமதையில் ஆடுகிறார்கள் என்ற எண்ணமும் என்னுள் எழுந்தது..
//இன்னிலை தொடர்ந்தால் தமிழர் வரலாறு உலக வரலற்றின் கருப்புப்பக்கங்களில் இரத்த்கறை கொண்டு எழுதப்படும்.//
உண்மை..உண்மை..
//இதே இலங்கை நாட்டின் ஒரு பக்கம் பயங்கர இன அழிப்புப் போர்!
இன்னொருபுறம் அப்படியா?சண்டையா? எங்கே நடக்குது என்று கேட்கும் அளவுக்கு கேளிக்கையும்,விளையாட்டும்.
நினைக்கும்போது மனம் கசந்துபோய் இனம் புரியாத கவலை மனதில் ஏற்பட்டது..
//
நேற்று இதே மனநிலை எனக்கு வந்ததுங்க, போர் நடக்கும் ஒரு சுவடே தெரியாமல்...
சிங்களர் ஆடிப்பாடி மகிழும்போது, அவர்கள் தமிழர்களை அழித்துக்கொண்டிருக்கிறோம் என்ற மமதையில் ஆடுகிறார்கள் என்ற எண்ணமும் என்னுள் எழுந்தது..
//
நேற்று அகஸ்மாத்தாக டி.வி.யின் முன் அமர்ந்து ம்தியம் சாப்பிட ஆரம்பித்தேன்.
கிரிக்கெட் மாட்ச் நேரடி ஒளிபரப்பு.நம்மதான் கிரிக்கெட்னா ஆணிஅடிச்சு உக்காந்திடுவோமே!
//
ஒ கிரிக்கெட் பாக்க ஆணி அடிக்கனுமா, அப்படி பாத்தா எல்லாருமே ஆணியோடத்தான் அலைவாங்க போல. இஃஇ இஃஇ இஃஇ
/ஒரு பாகிஸ்தான் இந்தியாவுக்கு கிரிக்கெட் விளையாட வரமாட்டேன் என்று கூறுகிறான்.
ஆனால் இனப்படுகொலை நடக்கும் இலங்கைக்கு நாம் போய் சந்தோஷமாக விளையாடி வெற்றிகளை அனுபவிக்கிறோம்//
இதையே தான் என்னோட பதிவுலே "தமிழர்கள் ஒரு கேடயமா? என்று கேட்டிருப்பேன்///
நண்பரே! நாம் எல்லோரும் ஒரே மாதிரிதான் சிந்திக்கிறோம்..
//
சோத்தையும் முடிச்சு ஒரு பாயையும் 4 தலகாணியும் போட்டு (கீழே படுத்துக்கிட்டே டி.வி. பாக்கிறதுதானே வசதி).....
//
இதெல்லாம் விதி இல்லை தேவா.
வைட்டமின் K கொஞ்சம் அதிகம்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஞாபக மறதி நமக்கெல்லாம் கொஞ்சம் அதிகம் தாங்க...///
அதுனாலதான் நம்ம கொஞ்சம் சந்தோசமா இருக்கோம்னு நினைக்கிறேன்.
//
வாங்கிவந்த பலாச்சுளையில் 6 சுளையை தட்டில் வைத்து,.........
உக்கார்ந்து இருக்கோமா படுத்து இருக்கோமான்னு தெரியாத ஒரு நிலையில் தலகாணி மேல் சாய்ந்து மாட்ச் பார்க்க ஆரம்பிச்சேன்!!
//
ரொம்ப சாப்பிடாதீங்க பலாச்சுளை சூடு
அப்புறம் வயிறு வலிக்கும், அதுவும்
ஆறாஆஆஆஆஆஆஆஆஆஆ
//
கொஞ்ச நேரத்தில் ஆனந்தமான பரவச நிலை! அண்ணன் சேவாக் ஒரு பக்கம்,யுவராஜ் ஒரு பக்கம்! ஒரே வாண+வான வேடிக்கைதான்!!!
ஊடே ஊடே மாட்ச் நடக்கிற ஊரைக்காட்டுகிறான்,அது என்னங்க ஒரே கிளப்களும்,பளபளப்பான கட்டிடமும்,வெளிநாட்டு பயணிகளும்!!-உடனே அங்கே போகணும்போல...இருந்ததுங்க...
//
அஹா ரொம்பத்தான் ஆசைபடறீங்க
இது கொஞ்சம் ஓவரா தெரியலை ??
//
இதுல ஏதாவது சோகமா தெரிஞ்சதா உங்களுக்கு? இல்லைதானே!!
//
சேச்சே அப்படி எல்லாம் ஒன்னும் தெரியலையே உங்களுக்கு மனப்பிராந்தி ...............
/இதே இலங்கை நாட்டின் ஒரு பக்கம் பயங்கர இன அழிப்புப் போர்!
இன்னொருபுறம் அப்படியா?சண்டையா? எங்கே நடக்குது என்று கேட்கும் அளவுக்கு கேளிக்கையும்,விளையாட்டும்.
நினைக்கும்போது மனம் கசந்துபோய் இனம் புரியாத கவலை மனதில் ஏற்பட்டது..
//
நேற்று இதே மனநிலை எனக்கு வந்ததுங்க, போர் நடக்கும் ஒரு சுவடே தெரியாமல்...
சிங்களர் ஆடிப்பாடி மகிழும்போது, அவர்கள் தமிழர்களை அழித்துக்கொண்டிருக்கிறோம் என்ற மமதையில் ஆடுகிறார்கள் என்ற எண்ணமும் என்னுள் எழுந்தது..///
என்ன நான் சிந்தித்ததையே அனைவரும்........
சரிதான்..
//
இதுதாங்க இப்ப என்னுடைய, நம்முடைய உண்மை நிலை!
//
அஹா அஹா ஆனந்த சயனம்
இதுக்கெல்லாம் ரொம்ப கொடுத்து
வைக்கணும் ...............
//
செத்த வீட்டுல ரெண்டுநாள்,ஒருவாரம் அழுதுவிட்டு அப்புறம் எப்பவும் போல சோறாக்கி சாப்பிட்டு வேலைக்குபோகும் சராசரி மனிதர்தானே நான்..நாம் எல்லாம்.
//
யோசிக்க கஷ்டமா இருந்தாலும்
வேறே என்ன பண்ணறது உயிர் வாழணுமே
அதன் சரியாச் சொன்னீங்க தேவா
/இன்னிலை தொடர்ந்தால் தமிழர் வரலாறு உலக வரலற்றின் கருப்புப்பக்கங்களில் இரத்த்கறை கொண்டு எழுதப்படும்.//
உண்மை..உண்மை..///
உண்மையை வரலாறு மறுக்காது...
//
இதை பகிரங்கமாக சொல்ல வெட்கப்பட்டாலும் உண்மை இதுதானே!!
மேலே நான் எழுதியதுபற்றி என் அன்பு சகோதரர்கள் யாரும் வருத்தப்படவேண்டாம்.
//
உண்மைத்தானே சொல்லி இருக்கீங்க
இதுக்கு எல்லாம் ஏன் வறுத்துப் படனும் ??
//
இனி விஷயத்துக்கு வருவோம்!
//
வந்துட்டோம் இல்லே, மறுபடியும் எப்படி வரது ??
//இதே இலங்கை நாட்டின் ஒரு பக்கம் பயங்கர இன அழிப்புப் போர்!
இன்னொருபுறம் அப்படியா?சண்டையா? எங்கே நடக்குது என்று கேட்கும் அளவுக்கு கேளிக்கையும்,விளையாட்டும்.
நினைக்கும்போது மனம் கசந்துபோய் இனம் புரியாத கவலை மனதில் ஏற்பட்டது..
//
நேற்று இதே மனநிலை எனக்கு வந்ததுங்க, போர் நடக்கும் ஒரு சுவடே தெரியாமல்...
சிங்களர் ஆடிப்பாடி மகிழும்போது, அவர்கள் தமிழர்களை அழித்துக்கொண்டிருக்கிறோம் என்ற மமதையில் ஆடுகிறார்கள் என்ற எண்ணமும் என்னுள் எழுந்தது..
//
என்னோட கருத்தும் இதேதான் தேவா
//
thevanmayam கூறியது...
/ஒரு பாகிஸ்தான் இந்தியாவுக்கு கிரிக்கெட் விளையாட வரமாட்டேன் என்று கூறுகிறான்.
ஆனால் இனப்படுகொலை நடக்கும் இலங்கைக்கு நாம் போய் சந்தோஷமாக விளையாடி வெற்றிகளை அனுபவிக்கிறோம்//
இதையே தான் என்னோட பதிவுலே "தமிழர்கள் ஒரு கேடயமா? என்று கேட்டிருப்பேன்///
நண்பரே! நாம் எல்லோரும் ஒரே மாதிரிதான் சிந்திக்கிறோம்..
//
சரியாச் சொன்னீங்க தேவா !!!
// thevanmayam கூறியது...
ஞாபக மறதி நமக்கெல்லாம் கொஞ்சம் அதிகம் தாங்க...///
அதுனாலதான் நம்ம கொஞ்சம் சந்தோசமா இருக்கோம்னு நினைக்கிறேன்.
//
சந்தோஷமா இருந்தாதான் உடம்புக்கு ரொம்ப நல்லது
ஆணி இதோ இப்போ போய் அப்புறமா வாரேன் !!!
நேற்று அகஸ்மாத்தாக டி.வி.யின் முன் அமர்ந்து ம்தியம் சாப்பிட ஆரம்பித்தேன்.
கிரிக்கெட் மாட்ச் நேரடி ஒளிபரப்பு.நம்மதான் கிரிக்கெட்னா ஆணிஅடிச்சு உக்காந்திடுவோமே!
//
ஒ கிரிக்கெட் பாக்க ஆணி அடிக்கனுமா, அப்படி பாத்தா எல்லாருமே ஆணியோடத்தான் அலைவாங்க போல. இஃஇ இஃஇ இஃஇ///
ஆணி ஆணி ஆணி..
சோத்தையும் முடிச்சு ஒரு பாயையும் 4 தலகாணியும் போட்டு (கீழே படுத்துக்கிட்டே டி.வி. பாக்கிறதுதானே வசதி).....
//
இதெல்லாம் விதி இல்லை தேவா.
வைட்டமின் K கொஞ்சம் அதிகம்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
பிறவியிலேயே அதிகம்!!
6 கம்மி!
சாதாரண்மா 10-15 உள்ளதள்ளுவேன்!
இது கம்மி..
கொஞ்ச நேரத்தில் ஆனந்தமான பரவச நிலை! அண்ணன் சேவாக் ஒரு பக்கம்,யுவராஜ் ஒரு பக்கம்! ஒரே வாண+வான வேடிக்கைதான்!!!
ஊடே ஊடே மாட்ச் நடக்கிற ஊரைக்காட்டுகிறான்,அது என்னங்க ஒரே கிளப்களும்,பளபளப்பான கட்டிடமும்,வெளிநாட்டு பயணிகளும்!!-உடனே அங்கே போகணும்போல...இருந்ததுங்க...
//
அஹா ரொம்பத்தான் ஆசைபடறீங்க
இது கொஞ்சம் ஓவரா தெரியலை ??///
கொழும்பு ரொம்ப ஓவரா இருக்கு..
இதுல ஏதாவது சோகமா தெரிஞ்சதா உங்களுக்கு? இல்லைதானே!!
//
சேச்சே அப்படி எல்லாம் ஒன்னும் தெரியலையே உங்களுக்கு மனப்பிராந்தி//
அப்படியா?
ஏமாந்துட்டேனே..
செத்த வீட்டுல ரெண்டுநாள்,ஒருவாரம் அழுதுவிட்டு அப்புறம் எப்பவும் போல சோறாக்கி சாப்பிட்டு வேலைக்குபோகும் சராசரி மனிதர்தானே நான்..நாம் எல்லாம்.
//
யோசிக்க கஷ்டமா இருந்தாலும்
வேறே என்ன பண்ணறது உயிர் வாழணுமே
அதன் சரியாச் சொன்னீங்க தேவா///
இது சரியான பின்னூட்டம்..
இதை பகிரங்கமாக சொல்ல வெட்கப்பட்டாலும் உண்மை இதுதானே!!
மேலே நான் எழுதியதுபற்றி என் அன்பு சகோதரர்கள் யாரும் வருத்தப்படவேண்டாம்.
//
உண்மைத்தானே சொல்லி இருக்கீங்க
இதுக்கு எல்லாம் ஏன் வறுத்துப் படனும் ??//
சிலபேர்
நாங்க
அப்படி
இல்லைம்பாங்க..
//இதே இலங்கை நாட்டின் ஒரு பக்கம் பயங்கர இன அழிப்புப் போர்!
இன்னொருபுறம் அப்படியா?சண்டையா? எங்கே நடக்குது என்று கேட்கும் அளவுக்கு கேளிக்கையும்,விளையாட்டும்.
நினைக்கும்போது மனம் கசந்துபோய் இனம் புரியாத கவலை மனதில் ஏற்பட்டது..
//
நேற்று இதே மனநிலை எனக்கு வந்ததுங்க, போர் நடக்கும் ஒரு சுவடே தெரியாமல்...
சிங்களர் ஆடிப்பாடி மகிழும்போது, அவர்கள் தமிழர்களை அழித்துக்கொண்டிருக்கிறோம் என்ற மமதையில் ஆடுகிறார்கள் என்ற எண்ணமும் என்னுள் எழுந்தது..
//
என்னோட கருத்தும் இதேதான் தேவா//
சரிதாங்க...
ஆணி இதோ இப்போ போய் அப்புறமா வாரேன் !!!
வலைச்சரம்
தேவா,சென்ற வாரம் ஒரு செய்தியில் இந்திய கிரிக்கெட் அணிக்கு சிங்களவர்கள் கல்லால் எறிந்தார்கள் என்றும் வாசித்தேன்.
உண்மை தான்..ஆனால் இந்தியா போகாவிட்டால், பாகிஸ்தான் இலங்கை போயிடும் என்ற பயம் இருந்திருக்கலாம்...:-)
:-(
gr8......................
கயவன் கருணானிதி, வப்பாட்டி ஜெயலலிதா, அரசியல் வேசி ராமதாஸ், கோமாளி கோபால்சாமி இவனுங்க அத்தன பேரும் பொறம்போக்கு நாய்ங்கதான். எந்தப் பொறுக்கிகளையும் நம்பவே கூடாது. இவங்களுக்கு தோலுரிக்கிற அதே நேரத்துல சோமாறிகளையும், கொட்டைதாங்கிகளையும் களையெடுக்க வேண்டும்.
ஈழம் நோக்கிப் பயணம் இன்றே ராமேஸ்வரத்திலிருந்து தொடங்க வேண்டும்.
-----------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'09)
உண்மை, முற்றிலும் உண்மை...
நிலைமை மாற வேண்டும்...
//தமிழர்கள் இந்தியாவிலும் சிறுபான்மையினர்தானோ?
இங்கும் நம் குரல் செல்லாதோ?//
உரக்க சொல்லுங்க, தமிழின தலைவர் போர்வையில் வாழ்பவர்கள் காதில் விழட்டும்.
ஆனாலும், செவிடன் காதில் ஊதிய கதைதான்!
Post a Comment