Monday 2 March 2009

தண்ணீர் அபாயம்!!

 

 

 

நம் அனைவருக்கும் தண்ணீரின் அருமை தெரியும்.    ஒருகாலத்தில் தண்ணீர் விலைக்கு விற்கப்படுகிறது என்று டி.வி.யில் செய்தி வந்தால் அதைப்பற்றி ஒரே பேச்சாக இருக்கும்!!!  

தற்போது நிலைமயே வேறு!! தண்ணீர் விலக்கு அனைவரும் வாங்கும் நிலை!!!

ஆயினும் நம்மிடையே தண்ணீரைப் பற்றி நம்மிடையே என்ன விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது?

ஏதாவது விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறதா என்றால் வாயளவில்தான் உள்ளது. ”பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்”  என்கிற நிலையில்தான் உள்ளது!

தண்ணீர் எத்தனையோ கிராமப்புற மக்களுக்கு கிடைக்காத நிலை இருக்கிறது!!தண்ணீர் சேமிப்பு முறைகளைக்கையாளவில்லையென்றால் எதிர்காலத்தில் நம் பிள்ளைகள்தான் பாதிக்கப்படுவர்!

 

ஆகையால் குழந்தைகளுக்கு தண்ணீர் சேமிப்பைப்பற்றி அவசியம் அனைத்துப்பள்ளிகளிலும், வீட்டில் பெற்றோர்களும் சொல்லித்தரவேண்டும்!!

சில தண்ணீர் சேமிப்பு பற்றிய தகவல்கள்:

ஒரு நாளைக்கு ஷவரில் குளிக்காமல் வாளியில் தண்ணீர் பிடித்து ஒரு குடும்பம் குளித்தால் கிட்டதட்ட அறுபது லிட்டர் தண்ணீர் மிச்சப்படுத்தலாம்.

அதே போல் பல் தேய்க்கும் பொழுது அல்லது ஷேவ் செய்து கொள்ளும் பொழுது குழாயைத் திறந்து விடாமல் ஒரு டம்ப்ளரில் தண்ணீரைப் பிடித்து வைத்துக் கொண்டு உபயோகப் படுத்தினால் நாற்பது லிட்டர் வீணாகும் இடத்தில் அரை லிட்டர் தண்ணீர் தான் தேவைப்படும்.

கார் கழுவ மற்றும் வீட்டைச் சுற்றி சுத்தம் செய்ய குழாயிலிருந்து நேராக தண்ணீர் ஹோசைப் பயன்படுத்தாமல் பக்கெட்டில் பிடித்து வைத்துக் கொண்டு செய்தால் பல லிட்டர்கள் மிச்சப் படுத்தலாம்.

பாத்திரங்களைச் சுத்தம் செய்யும் பொழுது குழாயைத் திறந்து விடாமல் சிங்க்கில் தண்ணீரைப் பிடித்து வைத்துக் கொண்டால் ஒவ்வோரு முறையும் பல லிட்டர்கள் மிச்சப்படுத்தாலாம்.

வாஷிங் மிஷினில் லோட் பாதியாக இருந்தால் அது முழுவதுமாக நிறையும் வரை காத்திருங்கள். அதைத் தவிர பல சமயங்களில் தண்ணீரை மறுமுறை பயன்படுத்தலாம்.

காய்கறி சுத்தம் செய்த தண்ணீர் மற்றும் அரிசி அலசிய தண்ணீரைச் செடிகளுக்கு விடலாம். பாத்திரங்கள் கழுவிய தண்ணீரை பாத்ரூம் சுத்தம் செய்யப் பயன்படுத்தலாம். 

சுயநலம்,அலட்ச்சியப்போக்கு ஆகியவை இங்கு அதிகம்!!!

1.சாலையோரங்களில் பொதுகுடிநீர் குழாய் நிரம்பி ஓடிக்கொண்டு இருக்கும்!!!

2.தண்ணீர் 4 மணிநேரம்தான் வருகிறது என்றால் அதில் அடைக்கும் குழாய் பிடுங்கப்பட்டு இருக்கும்!தண்ணீர் தானே வந்து தானே நிற்கும்!!!

3.குடிதண்ணீரை சேமித்து குளிப்பது, தோட்டத்தில் பாய்ச்சுவது,கார் கழுவுவது!!

4.தண்ணீர் அதிகமாக வந்தால் ஹோஸ் மாட்டி கிணற்றுக்குள் தண்ணீர் வரும் வரை சேமிப்பது?(உண்மை!!)

இதையெல்லாம் நாம் மாற்றிக்கொள்ளவேண்டும்!!

நாடுகளின் எல்லைதாண்டிய நதிநீர், ஏரிநீர் பங்கீடு

பலவேறு நாடுகளின் எல்லைப்பகுதி தண்ணீரை எவ்வாறு பயனுள்ளதாக பங்கிட்டு சிறப்பாக உபயோகப்படுத்துவது என்ற விழிப்புணர்வு தற்போது மிக அவசியமாக உள்ளது!

இதனை கருத்தில் கொண்டு ஐக்கிய நாடுகள் சபை 1993 முதல் மார்ச் மாதம் 22 ஆம் தேதியை உலக தண்ணீர் தினமாக கொண்டாடுகிறது!

உலகின் 263 ஏரிகள்,மற்றும் நாடுகடந்து ஓடும் ஆறுகள் 145 நாடுகளை இணைக்கின்றன! இது உலகின் மொத்த நில்ப்பரப்பில் பாதியாகும். அனைத்தும் குடிநீர்தான்! இதில் அடித்துக்கொள்ளாமல் சமாதான்மாக பங்கிட்டுக்கொண்டாலே நாம் எதிர்கால தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க முடியும்!

கடந்த 60 ஆண்டுகளில் 200 க்கும் அதிகமான,, உலகநாடுகளின் நாடுகடந்து பாயும் நதிநீர்ப்பங்கீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன!!!( ஆச்சரியம்)

நம்மால் காவிரி,கோதாவரி பிரச்சினையையே தீர்க்கமுடியலையே!

32 comments:

ஆதவா said...

இந்த சிக்கன நடவடிக்க படிக்கவேண்டூமானால் ஒத்துவரலாம் (எனக்குங்க)

நதிகள் குறித்த தகவல்கள் குறிப்பெடுக்கவேண்டியவை!!!

தேவன் மாயம் said...

இந்த சிக்கன நடவடிக்க படிக்கவேண்டூமானால் ஒத்துவரலாம் (எனக்குங்க)

நதிகள் குறித்த தகவல்கள் குறிப்பெடுக்கவேண்டியவை!!!///

நான் இதை கடைப்பிடிக்கிறேன் ஆதவா!!
முயலுங்கள்!!

பழமைபேசி said...

ந‌ல்ல‌ த‌க‌வ‌ல்... இதை ஒட்டியே, ந‌ம‌து இன்றைய‌ ப‌திவும்!! ந‌ன்றி!

பழமைபேசி said...

ஒரு ஊர்ல ஒரு வணிகன் கடை வெச்சு இருந்தானாம். அவங்கிட்ட ஒருத்தன் வேலைக்கு சேரவே, முதல் நாள் கற்பூரம் எப்படி நிறை அறியறதுன்னு (எடைப் போடுறது) இப்படிச் சொல்லிக் கொடுத்தானாம். தராசுன்னு எதுவுமே இல்லையாமுங்க.... வணிகன் சொல்லிக் குடுத்த விதம்:

அஞ்சேழ் க‌ழ‌ஞ்சினெடை யாழாக்குக் க‌ற்பூர‌ம்
கொஞ்சுகிளி மொழியே கூறுங்கால் ‍ விஞ்சாது
ந‌ன்றான‌ த‌ண்ணீர்க்கு நாழிப‌ல‌ம் ப‌ன்னிர‌ண்டாம்
என்றாயு மேழிர‌ண்டா மென்.

இந்த‌ சூத்திர‌த்தை வெச்சே, அவ‌ன் வாழ்நாள் பூராவும் க‌ற்பூர‌ யாவார‌ம் செய்துட்டு இருந்தானாம். இஃகிஃகி! இதுக்குப் பொருள்? அமெரிக்க‌ தொழில‌திப‌ரை ம‌ண‌ந்த‌ ந‌டிகையின் கதை?? நாளைக்கி வ‌ர்ற‌ ப‌ள்ளைய‌ம் பாருங்க‌....

நட்புடன் ஜமால் said...

\சுயநலம்,அலட்ச்சியப்போக்கு ஆகியவை இங்கு அதிகம்!!!\\

இதுவே மிக முக்கியமான காரணம்.

தேவன் மாயம் said...

ந‌ல்ல‌ த‌க‌வ‌ல்... இதை ஒட்டியே, ந‌ம‌து இன்றைய‌ ப‌திவும்!! ந‌ன்றி!//
அய்யா!
ஆஸ்பத்திரி போறேன்
12மணிக்கி வந்து படிக்கிறேன்

தேவன் மாயம் said...

சுயநலம்,அலட்ச்சியப்போக்கு ஆகியவை இங்கு அதிகம்!!!\\

இதுவே மிக முக்கியமான காரணம்.///

ஜமலு ஆமாம்!
எப்ப திருந்தப்போறோம்!

Rajeswari said...

//சில தண்ணீர் சேமிப்பு பற்றிய தகவல்கள்: ஒரு நாளைக்கு ஷவரில் குளிக்காமல் வாளியில் தண்ணீர் பிடித்து ஒரு குடும்பம் குளித்தால் கிட்டதட்ட அறுபது லிட்டர் தண்ணீர் மிச்சப்படுத்தலாம். அதே போல் பல் தேய்க்கும் பொழுது அல்லது ஷேவ் செய்து கொள்ளும் பொழுது குழாயைத் திறந்து விடாமல் ஒரு டம்ப்ளரில் தண்ணீரைப் பிடித்து வைத்துக் கொண்டு உபயோகப் படுத்தினால் நாற்பது லிட்டர் வீணாகும் இடத்தில் அரை லிட்டர் தண்ணீர் தான் தேவைப்படும்.....................//


பயனுள்ள பதிவு.இதை வாசிக்கும் அனைவரும் பின்பற்ற வேண்டும் (ஏற்கனவே அப்படிதான் என்றால்,அவர்களுக்கு ஒரு சல்யுட் )என்று அனைவரையும் கேட்டுகொள்கிறேன்

Arasi Raj said...

Nice picture....ithu ennoda "Go green mommy" post maathiriye irukku

..kalai vanakkam...[ good night :o)]

அ.மு.செய்யது said...

//ஒரு நாளைக்கு ஷவரில் குளிக்காமல் வாளியில் தண்ணீர் பிடித்து ஒரு குடும்பம் குளித்தால் கிட்டதட்ட அறுபது லிட்டர் தண்ணீர் மிச்சப்படுத்தலாம். //

அரிய தகவல்...

பயனுள்ள பதிவு தேவா !!!

அ.மு.செய்யது said...

பாலசந்தரின் தண்ணீர் தண்ணீர் படம் பார்த்ததுண்டா ?

வேத்தியன் said...

பயனுள்ள நல்ல பதிவு...
கட்டாயமா இதுபத்தியெல்லாம் யோசிச்சு வேகமா இதுக்கு ஒரு முடிவு எடுக்கணும்...
அங்க பழமைபேசியார் ஒரு பயனுள்ள பதிவு போட்டிருக்கார்...

http://maniyinpakkam.blogspot.com/2009/03/blog-post_51.html

அப்துல்மாலிக் said...

நதி நீர் திட்டம் நிறைவேறினாலே போதும், நமக்கு நிச்சயம் தண்ணீர் பிரச்சினை வராது

அப்துல்மாலிக் said...

//ஒரு நாளைக்கு ஷவரில் குளிக்காமல் வாளியில் தண்ணீர் பிடித்து ஒரு குடும்பம் குளித்தால் கிட்டதட்ட அறுபது லிட்டர் தண்ணீர் மிச்சப்படுத்தலாம்.//

ஒரு வாளி தண்ணீரே கிடைக்கலேனா, குளிக்காமல் இருக்கலாம்லே, அப்புறம் நாம 60 லிட்டர் தண்ணீரை மிச்சபடுத்தலாம்

அப்துல்மாலிக் said...

//ஐக்கிய நாடுகள் சபை 1993 முதல் மார்ச் மாதம் 22 ஆம் தேதியை உலக தண்ணீர் தினமாக கொண்டாடுகிறது!/

அன்னிக்கு மட்டும் சொல்லிட்டு அடுத்த நாள் அது பற்றி மறந்துடுவானுங‌

குடந்தை அன்புமணி said...

அனைவரும் செயல்படுத்த வேண்டிய, பயனுள்ள தகவல்.

நட்புடன் ஜமால் said...

\\நம்மால் காவிரி,கோதாவரி பிரச்சினையையே தீர்க்கமுடியலையே!\\

இது டாப்பு.

தேவன் மாயம் said...

பயனுள்ள பதிவு.இதை வாசிக்கும் அனைவரும் பின்பற்ற வேண்டும் (ஏற்கனவே அப்படிதான் என்றால்,அவர்களுக்கு ஒரு சல்யுட் )என்று அனைவரையும் கேட்டுகொள்கிறேன்///

வாங்க! எல்லோரும் கடைப்பிடிக்கலாம்தான்!!

தேவன் மாயம் said...

Nice picture....ithu ennoda "Go green mommy" post maathiriye irukku

..kalai vanakkam...[ good night :o)]//

பழைய பதிவா?

தேவன் மாயம் said...

/ஒரு நாளைக்கு ஷவரில் குளிக்காமல் வாளியில் தண்ணீர் பிடித்து ஒரு குடும்பம் குளித்தால் கிட்டதட்ட அறுபது லிட்டர் தண்ணீர் மிச்சப்படுத்தலாம். //

அரிய தகவல்...

பயனுள்ள பதிவு தேவா !!!///

சின்னச்சின்ன தகவல்கள்!!!

தேவன் மாயம் said...

/ஐக்கிய நாடுகள் சபை 1993 முதல் மார்ச் மாதம் 22 ஆம் தேதியை உலக தண்ணீர் தினமாக கொண்டாடுகிறது!/

அன்னிக்கு மட்டும் சொல்லிட்டு அடுத்த நாள் அது பற்றி மறந்துடுவானுங‌//

புள்ளைங்ககிட்ட சொன்னா போதும்!!

தேவன் மாயம் said...

அனைவரும் செயல்படுத்த வேண்டிய, பயனுள்ள தகவல்.///

சுலபம்தான்!

தேவன் மாயம் said...

\\நம்மால் காவிரி,கோதாவரி பிரச்சினையையே தீர்க்கமுடியலையே!\\

இது டாப்பு.//

என்ன செய்வது?

சி தயாளன் said...

பயனுள்ள தகவல்கள்..நன்றி தேவா :-)

குமரை நிலாவன் said...

பயனுள்ள பதிவு
தண்ணீர் சிக்கனம்
எல்லோரும் கடைபிடித்தால்
நல்லது.
நதி நீர் இணைப்பு ஒரு திட்டம் இருந்திச்சு
அதை என்னன்னு கேட்டு சொல்லுங்க

Vidhya Chandrasekaran said...

பயனுள்ள பதிவு. தண்ணீர் சிக்கனம் தேவை இக்கனம்:)

*இயற்கை ராஜி* said...

பயனுள்ள பதிவு..

naan elutha ninaithiruntha karu...mm..Deva..munthikiteenga:-))

தேவன் மாயம் said...

பயனுள்ள தகவல்கள்..நன்றி தேவா :-)///

நன்றி டொன்லீ!!!

தேவன் மாயம் said...

பயனுள்ள பதிவு
தண்ணீர் சிக்கனம்
எல்லோரும் கடைபிடித்தால்
நல்லது.
நதி நீர் இணைப்பு ஒரு திட்டம் இருந்திச்சு
அதை என்னன்னு கேட்டு சொல்லுங்க///

திட்டமெல்லாம் லேது இப்ப!!

தேவன் மாயம் said...

பயனுள்ள பதிவு. தண்ணீர் சிக்கனம் தேவை இக்கனம்:)//

கருத்துக்கு நன்றி!!!

தேவன் மாயம் said...

பயனுள்ள பதிவு..

naan elutha ninaithiruntha karu...mm..Deva..munthikiteenga:-))///

அப்படியா?
சொல்லக்கூடதா?

Anonymous said...

ஆமாம் அண்ணா நான் fresh water பற்றி ஓர் presentation செய்தேன் "தண்ணீர் அபாயம்!!" இதை மக்களுக்கு தெரியப்படுத்தலாம் அறிவுரை வழங்கலாம் ஆனல் உண்மை என்ன என்று அவர்கள்தான் உணர்ந்து கொள்ள வேண்டும்

In the future, people have to suffer for the fresh water if they don’t realize it as a sustainable resource.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory