Saturday 14 March 2009

உலகின் மிகப்பணக்கார நகரங்கள்!!!

உங்களால் உலகின் பணக்கார நகரங்கள் எவை என்று சொல்ல முடியுமா?  நாம் நினைப்பதற்கும் உண்மையில் பட்டியலில் உள்ளவைக்கும் எவ்வளவு வித்தியாசம் என்று பாருங்கள்!   உலகின் மிக காஸ்ட்லியான நகரங்கள் என்று ஒவ்வொரு வருடமும் வெளியிடுகிறார்கள்..

அதைப்பார்த்தால் நமக்கு ஆச்சரியமாக இருக்கும். நாம் நினைத்தது போல் இருக்கிறதா என்று பார்ப்போம்!

1.முதலிடத்தில் இருப்பது மாஸ்கோ! மிகச் செலவாகும் காஸ்ட்லி நகரம் மாஸ்கோ !ஒரு காலத்தில் கம்யூனிஸ நகரமான இது தற்போது பணக்கார நகரம்! 100 க்கு மார்க், நியூயார்க்கை வைத்து அளந்தால் மாஸ்கோ இண்டெக்ஸ் 142.4!!

மூன்றாவது முறையாக தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது இந்த முன்னாள் கம்யூனிச நகரம்.

அதன் அழகான சர்ச் படத்தைப்பாருங்கள்!!! என்ன அழகு!

2.டோக்கியோ! 2ம் இடத்தில் உள்ளது! ஆசியாவில் முதல் இடம் வகிக்கிறது டோக்கியோ..  இதன் மதிப்பெண் 127.

 இரவில் டோக்கியோ! போன வருடத்தைவிட இரண்டு நிலை முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய, அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியும் இதற்கு ஒரு காரணம்!

3.லண்டன் லண்டன் ஐரோப்பாவின் 2 வது பணக்கார நகரமாகும்!! முதல் இரண்டு பணக்கார நகரங்களும் ஐரோப்பாவிலேயே உள்ளன..

லண்டன் சிடி ஹாலின் எழில்மிகு தோற்றம்!!                                     

பெரும்பான்மையானவர்கள் வசிக்க ஆசைப்படும் இடங்களில் ஒன்று லண்டன்!!!  மிக அழகிய நகரம்.

4.ஆஸ்லோ

பலமுறை தீக்கு இரையாக்கப்பட்ட நகரம் நார்வேயின் தலைநகரான ஆஸ்லோ.

இலங்கைக்கும் புலிகளுக்கும் இடையில் அமைதிப்பேச்சுவார்த்தை நார்வே தலையீட்டில் பல வருடங்கள் நடந்தது நினைவில் இருக்கும்..

ஆஸ்லோ உலக அமைதியின் சின்னமாக ஐரோப்பாவின் மணிமகுடமாக விளங்குகிறது..

5.சியோல்

சியோல் தென்கொரியாவின் தலைநகரம்!! தொழில் புரட்சியில் உயர்ந்த நாடு..உலகின் மக்கள்தொகை அதிகமுள்ள நகரங்களில் இதுவும் ஒன்று. தென் கொரிய டி.வி. எலக்ட்ரானிக்ஸ்தான் நாம் அதிகம் உபயோகிப்பது.

6.ஹாங்காங்!

ஹாங்காங் நீண்ட காலம் பிரிட்டனின் குத்தகையில் இருந்த்து.. தற்போது சீனாவுடன் இணந்துள்ளது. ஹாங்காங் சிங்கப்பூர் போல பரபரப்பான வர்த்தக நகரம்..நம்ம ஊர் ”குருவி” ஒருத்தர்”சார் சோனி எல்.சி.டி.டி.வி வேணுமா? ஹாங்காங்க் ரெகுலரா போய் வருகிறோம் என்றார்.

7.கோபன்ஹேகன்

கோபென்ஹேகன் டென்மார்க் தலைநகரம்!! அழகு கொழிக்கும் நகரங்களில் ஒன்று இது!  ஒரு முறை போய் வரலாமா?

8.ஜெனிவா

ஜெனீவா நான் சொல்லவேண்டியதில்லை!! சுவிஸ் நாட்டின் இரண்டாவது பெரிய நகரம். ஐக்கிய நாடுகள்,செஞ்சிலுவை சங்க தலைமையகங்கள் உள்ள நகரம்!! ”சுவிஸ் ஹேமா”தான் நிறைய சொல்லனும்!

9.ஸுரிச்

10.மிலன்

22.நியூயார்க்

48.மும்பை

52.துபாய்

55.லாஸ் ஏஞ்செல்ஸ்

75.மியாமி

107.வாஷிங்டன் டி.சி.

மேலேயுல்ல பட்டியலில் அமெரிக்க நகரங்களையும் மும்பையயும் பாருங்கள்!!

உண்மையில் பொருளாதார வீழ்ச்சி அமெரிக்க நகரங்களை பாதித்து விட்டதுபோல் தெரிகிறது!!

நம்ம எண்ணியதற்கும் பட்டியலுக்கும் வித்தியாசம் உள்ளது அல்லவா?

36 comments:

குடந்தை அன்புமணி said...

அய்யாதான் முதல் ஆளு!

தேவன் மாயம் said...

ஆமா
வாங்க அன்பு!

குடந்தை அன்புமணி said...

படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. அதிலும் அந்த... கடைசி படம் புல்வெளியில் கடிகாரம்... மிக நேர்த்தி!(வேற படத்தை எதுவும் சொல்வேன்னு எதிர்பார்தீங்களா...)

குடந்தை அன்புமணி said...

'தகவல் களஞ்சியம்' தேவா அவர்களுக்கு பெரிய ஓ!

தேவன் மாயம் said...

படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. அதிலும் அந்த... கடைசி படம் புல்வெளியில் கடிகாரம்... மிக நேர்த்தி!(வேற படத்தை எதுவும் சொல்வேன்னு எதிர்பார்தீங்களா...)//

வேற?? எதிர்பார்க்கவில்லை!!

சி தயாளன் said...

எங்கே எம் சிங்கப்பூர்...?

வேத்தியன் said...

கலக்கிப்புட்டீக பாஸு...

வேத்தியன் said...

அது சரி,
சியோலுக்கு ஏன் அப்பிடி ஒரு படம்???
ஒரே கிளுகிளுப்பு போங்க...
:-)

வேத்தியன் said...

டென்மார்க் தலைநகரம் கோபன்ஹேகன் பிடிச்சிருக்கு...

வேத்தியன் said...

ஜெனீவாவும் அருமை...

தேவன் மாயம் said...

எங்கே எம் சிங்கப்பூர்...?//

13 வது இடம்!

தேவன் மாயம் said...

அது சரி,
சியோலுக்கு ஏன் அப்பிடி ஒரு படம்???
ஒரே கிளுகிளுப்பு போங்க...
:-)///

வேறு போட்டோ சரியில்லை!!

அப்துல்மாலிக் said...

நல்ல பதிவு மருத்துவரே

தேவன் மாயம் said...

நல்ல பதிவு மருத்துவரே///

நன்றி அப்ஸர்!

Udhayakumar said...

//லண்டன் ஐரோப்பாவின் 2 வது பணக்கார நகரமாகும்!! முதல் இரண்டு பணக்கார நகரங்களும் ஐரோப்பாவிலேயே உள்ளன..
//
பாஸ், குழப்பாதீங்க. என்ன சொல்ல வர்றீங்க?

priyamudanprabu said...

///
சியோல்



சியோல் தென்கொரியாவின் தலைநகரம்!! தொழில் புரட்சியில் உயர்ந்த நாடு..உலகின் மக்கள்தொகை அதிகமுள்ள நகரங்களில் இதுவும் ஒன்று. தென் கொரிய டி.வி. எலக்ட்ரானிக்ஸ்தான் நாம் அதிகம் உபயோகிப்பது.
////

எனக்கு சியோல் தான் பிடிச்சிருக்கு(போட்டோ சூப்பர்)
ஹ ஹ ஹ

priyamudanprabu said...

////
’டொன்’ லீ கூறியது...
எங்கே எம் சிங்கப்பூர்...?
///


எங்கே? எங்கே??

( கேட்க ஆள் இல்லைனு நினைசீங்களா??? )

Arasi Raj said...

சரி தான்.....நியு யார்க் பணக்கார நகரம் என்று நீங்கள் நினைத்து இருந்தால் மாற்றிக் கொள்ளுங்க.
நிறைய சம்பளம் கிடைக்குதோ இல்லியோ, விலை வாசி ரொம்ப அதிகம்...அப்புறம் எப்டி சேமிச்சு பணக்காரன் ஆகுறது

நல்ல பதிவு

இராகவன் நைஜிரியா said...

வெறுப்பேற்றுவது எப்படி..

ஹலோ பணக்கார நகரங்கள்.. ம்.. இங்க நம்ம ஊர்ல படிக்கிற பசங்களுக்கு மின்சாரத்த காணும்.. அங்க என்னடான்ன அழகுக்கு விளக்கேத்தி வச்சுருக்காங்க....

எங்கிருந்தாலும் வாழ்க...

தேவன் மாயம் said...

//லண்டன் ஐரோப்பாவின் 2 வது பணக்கார நகரமாகும்!! முதல் இரண்டு பணக்கார நகரங்களும் ஐரோப்பாவிலேயே உள்ளன..
//
பாஸ், குழப்பாதீங்க. என்ன சொல்ல வர்றீங்க?///

உலகின் டாப் 1.மாஸ்கோ2.லண்டன் இரண்டும் ஐரோப்பாவில் உள்ளன்!!

தேவன் மாயம் said...

///
சியோல்



சியோல் தென்கொரியாவின் தலைநகரம்!! தொழில் புரட்சியில் உயர்ந்த நாடு..உலகின் மக்கள்தொகை அதிகமுள்ள நகரங்களில் இதுவும் ஒன்று. தென் கொரிய டி.வி. எலக்ட்ரானிக்ஸ்தான் நாம் அதிகம் உபயோகிப்பது.
////

எனக்கு சியோல் தான் பிடிச்சிருக்கு(போட்டோ சூப்பர்)
ஹ ஹ ஹ///

சியோல் நம்ம ஆசியா இல்லியா!!

தேவன் மாயம் said...

////
’டொன்’ லீ கூறியது...
எங்கே எம் சிங்கப்பூர்...?
///


எங்கே? எங்கே??

( கேட்க ஆள் இல்லைனு நினைசீங்களா??? )///

மாப்ள!!! பிரச்சினை வேணாம்!!!
பேசித்தீர்த்துக்குவோம்! சிங்கை 13..ஓகேவா?

தேவன் மாயம் said...

சரி தான்.....நியு யார்க் பணக்கார நகரம் என்று நீங்கள் நினைத்து இருந்தால் மாற்றிக் கொள்ளுங்க.
நிறைய சம்பளம் கிடைக்குதோ இல்லியோ, விலை வாசி ரொம்ப அதிகம்...அப்புறம் எப்டி சேமிச்சு பணக்காரன் ஆகுறது
///

பணக்காரணா வாழ்ந்தால் போதும்!

தேவன் மாயம் said...

வெறுப்பேற்றுவது எப்படி..

ஹலோ பணக்கார நகரங்கள்.. ம்.. இங்க நம்ம ஊர்ல படிக்கிற பசங்களுக்கு மின்சாரத்த காணும்.. அங்க என்னடான்ன அழகுக்கு விளக்கேத்தி வச்சுருக்காங்க....

எங்கிருந்தாலும் வாழ்க...///

ஆஹா! நைஜீரியாவை விட்டுவிட்டேனே!

சிங்கை நாதன்/SingaiNathan said...

Pls see this link

http://www.straitstimes.com/Breaking%2BNews/Asia/Story/STIStory_348274.html

Singapore ranked 10th. Many of the rankings u said are not the same as per the report here.

Regards
Singai Nathan

சி தயாளன் said...

அதானே..நம்ம சிங்கை நாதன் அண்ணா எடுத்துவிட்டிருக்காரு பாருங்கோ

தேவா உடனடியாக பகீரங்க மன்னிப்பு கேட்க வேணும். இல்லாவிட்டால் ஜமால் தலமையில் நாம் உங்களுக்கு எதிரா கண்டன தீர்மானம் நிறைவேற்றுவோம்...:-)

வால்பையன் said...

அருமையான தகவல்கள்
படங்களுடன் வெளியிட்டது மேலும் சிறப்பு!

SASee said...

WOW Suuuuuuuuuuuuuper தேவா

உண்மையிலேயே அலசல் புலி அள்ளி வீசியிருக்கு.............
(புலி தெரிஞ்சோ தெரியாமலோ நமக்கு புடிச்ச பேராச்சே..)

இதில் சென்னையிலுள்ள நகரங்களிள்
ஏதேனுமொன்று எப்போது சேரும்...! ???



(நான் இலங்கை.! இது வேற விசயம்)

தேவன் மாயம் said...

Pls see this link

http://www.straitstimes.com/Breaking%2BNews/Asia/Story/STIStory_348274.html

Singapore ranked 10th. Many of the rankings u said are not the same as per the report here.

Regards
Singai Nathan///
நன்றி நண்பரே!!

தேவன் மாயம் said...

அதானே..நம்ம சிங்கை நாதன் அண்ணா எடுத்துவிட்டிருக்காரு பாருங்கோ

தேவா உடனடியாக பகீரங்க மன்னிப்பு கேட்க வேணும். இல்லாவிட்டால் ஜமால் தலமையில் நாம் உங்களுக்கு எதிரா கண்டன தீர்மானம் நிறைவேற்றுவோம்...:-)///

அடுத்த பதிவு சிங்கப்பூர் பற்றிதான்!!

தேவன் மாயம் said...

அருமையான தகவல்கள்
படங்களுடன் வெளியிட்டது மேலும் சிறப்பு!///

மிக்க நன்றி நண்பரே!

தேவன் மாயம் said...

WOW Suuuuuuuuuuuuuper தேவா

உண்மையிலேயே அலசல் புலி அள்ளி வீசியிருக்கு.............
(புலி தெரிஞ்சோ தெரியாமலோ நமக்கு புடிச்ச பேராச்சே..)

இதில் சென்னையிலுள்ள நகரங்களிள்
ஏதேனுமொன்று எப்போது சேரும்...! ???


(நான் இலங்கை.! இது வேற விசயம்)///

நம்ம ஊரு சிக்கனமாகவே இருக்கட்டும்!

Rajeswari said...

படங்கள் அருமை .சிங்கப்பூர் பதிவை எதிர்பார்கிறேன் ..

ராஜ நடராஜன் said...

நாளைக்கு வாரேன்!

Udhayakumar said...

பணக்கார நகரத்திற்கும் அதிக செலவு வைக்கும் நகரத்துக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

கீழேயுள்ள லின்க் "expensive" பற்றித்தான் பேசுகிறது.

http://www.citymayors.com/features/cost_survey.html

david santos said...

Fantastic posting, my friend, fantastic.
Nice photos and pretty colours.
Have a nice week.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory