கார்கள் மனித வாழ்க்கைக்கு மிக அவசியமான பொருளாகி வருகின்றன. நாம் படிக்கும் காலத்தில் இருந்ததைவிட தற்போது அதிக வாகனங்கள் தெருவில் செல்வதைக் காண்கிறோம்!
மாசுக்குறைவான, விலை அதிகமில்லாத, சொகுசுக்காராக இல்லாமல் சிறந்த திறனுடைய நடுத்தர கார்கள் சில கீழே தரப்பட்டுள்ளன.
1.CHEVROLET MALIBU --நடுத்தரக்கார்களில் முதலிடம் பெறுகிறது!
சிறந்த தோற்றம், பாதுகாப்பு, ஒட்டும் திறன் ஆகிய அடிப்படையில் வாங்கக்கூடிய விலையில் மற்ற கார்களை முந்தி முதலிடத்தில் உள்ளது. காரின் உட்புறம் இன்சுலேட் செய்யப்பட்டு உள்ளதால் கார் ஓடும் சத்தம் பயணிகளுக்கு தொந்தரவாக இருக்காது.கண்ணாடிகளும் தடிமனாக அமைக்கப்பட்டு உள்ளன. எலக்ட்ரானிக் கண்ட்ரோல் தடுமாறாமல் ஓட வகை செய்கிறது.
2.FORD FUSION --ஃபோர்ட் ஃப்யூஷன்
நல்ல பெரிய பயணிகள் பகுதி, எளிய ஓட்டும் வசதி,ஃபோர்ட் சின்க் மல்டிமீடியா, சிறந்த பாதுகாப்பு ஆகியவை இதனை சிறந்த கார் வரிசையில் சேர்க்கின்றன.2006 அதிக மாற்றமில்லாமல் வெளிவரும் கார் இது. இதன் எலெக்ட்ரானிக் கண்ட்ரோல் பட்டன்கள் ஒழுங்கான வரிசையில் இல்லாததால் புரிந்துகொண்டு செயல்படுத்துவதில் கொஞ்சம் சிரமம் காணப்படுகிறது.
3.HONDA ACCORD-- அதிகம் விற்ற கார் இது. பெரிய இருக்கைப்பகுதி, அருமையான பாதுகாப்பு வசதிகள் இதில் உள்ளன. மேலும் கார் கதவுகளை 4 மாடல்களில் தேர்ந்தெடுக்கலாம். உடல் பகுதியும் 2 வகைகள் உள்ளன! இதன் அனைத்து அம்சங்களும் பிற கார்களுக்கு சற்றும் குறைவில்லாமல் தரமாக அமைக்கப்பட்டு உள்ளன. ஆயினும் டொயட்டோவின் காம்ரி இதனை விட சிறந்த உள்பகுதி அமைப்பைக்கொண்டு உள்ளது.
4.MAZDA MAZDA 6 -- மஸ்டா கார் நல்ல வடிவமைப்புடன் சிறந்த தோற்றம் கொண்டது!
நல்ல ஓடும் திறன், மற்ற போட்டி கார்களை விட கனமாகவும் உள்ளது. இதனால் கொஞ்சம் எரிபொருள் சிக்கனக் குறைவு காணப்படுகிறது.அதிக அளவு உட்புறம், நல்ல தோற்றம் கொண்டது.இதற்கு நேரெதிர் போட்டியாளராக நிஸ்ஸான் அல்டிமா,ஃபோர்ட் ஃப்யூஷன் ஆகிய கார்கள் உள்ளன.
5.TOYOTA CAMRY
எரிபொருள் சிக்கனம், சிறந்த ஓடும் திறன், சவுகரியமான பயணம் ஆகியவை இதனை முன்னிறுத்துகின்றன. நடுத்தர கார்களில் இது சிறந்த வடிவமைப்பையும் கொண்டுள்ளது.ஆயினும் மஸ்டா 6 இதனை பல சிறப்பு அம்சங்களில் முந்துகிறது. ஹோண்டா அக்கார்டும் இதைவிட சிறப்பாக உள்ளது.ஆயினும் டொயோட்டோவின் நம்பகம்,விலைக்கு ஏற்ற தரம் ஆகியவையே இதனை சிறந்த கார் வர்சைக்குக் கொண்டு வருகின்றன.
6.MERCURY MILAN இதுவும் சிறந்த பாதுகாப்பு வசதி, ஒட்டும் எளிமை, பரந்த உள்பகுதி ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறது.
இஞ்சின் திறன் மட்டும் ஒரு குறையாக உள்ளது இந்தக்காரில்.ஃபோர்ட் ஃப்யூஷனுடன் கடும் போட்டியை சந்திதாலும் இது அதைவிட சொகுசான கார் என்பதே இதன் சிறப்பு.
7.SATURN AURA நடுத்தர கார்கள் வரிசையில் இதுவும் வருகிறது. எரிபொருள் சிக்கனமானது. இலகுவான ஒட்டும் திறன், 4 சிலிண்டர் எஞ்சின், விலை குறைவு ஆகியவை இதனை வாங்குவதற்கு தூண்டும் அம்சங்கள். இதனை ஜெனரல் மோட்டார் நிறுவனம் விரைவில் நிறுத்திவிட உள்ளது!
8.SABARU LEGACY
நான்கு சக்கர ட்ரைவிங் கொண்ட கார் இது. உடனடி பிக் அப், நல்ல பயண உள்ளமைப்பு கொண்டது. பாதுகாப்பு வசதிகளில் நடுத்தரக்கார்களில் இதுவே சிறந்த்து. ஆனால் ஃபோர்ட் ஃப்யூஷன், மெர்குரி மிலன் ஆகியவை இதனைப் போட்டியில் பிந்தள்ளுகின்றன!
9.VOLKSWAGEN PASSAT
பாதுகாப்புக்கு வோல்க்ஸ் வாகனை சொல்லவா வேண்டும். சிறந்த திறன் மிக்க கார் இது! விலைதான் மற்ற எல்லா கார்களைவிட அதிகம். உயர்ந்த தரமான இருக்கைகள், பெரிய அமரும் இடம், அதிக வேகத்திலும் நிலயாக ஓடும் திறன் பாதுகாப்பு மற்றும் வோல்க்ஸ்வாகனின் நற்பெயர் ஆகியவையே இந்தக்காரின் சிறப்பு அம்சம்.
எரிபொருள் சிக்கன்மின்மை இதில் பெருங்குறை.
10.NISSAN ALTIMA
மிகவும் எழினான தோற்றத்துடன் காணப்படுகிறது இந்தக்கார். இதன் வெளிப்புறத்தோற்றம் சொகுசுக்கார் தோற்றத்தைத் தருகிறது. சிறந்த எஞ்சின் மற்றும் நல்ல எரிபொருள் சிக்கனமான கார்.
இந்த நடுத்தரக் கார்களில் விலை குறைவானதும் இதுதான். மாஸ்டா கார் இதைவிட சிறப்பான பின் இருக்கை வசதிகொண்டது.ஆயினும் எரிபொருள் சிக்கனத்தை யோசிப்பவருக்கு சிறந்த கார்.
என்ன ஓரளவு கார்களைப் பார்த்தோம். உங்கள் கருத்துக்களை எழுதவும்.
மறக்காமல் தமிலிஷில் கீழேயுள்ள
ஒட்டுப்பட்டையிலும்,தமிழ்மணத்தில்
மேலேயுள்ள ஓட்டுப் பட்டையிலும்
ஒட்டுப்போட்டு விட்டுப் போங்க மக்களே!!
13 comments:
பதிவு கலக்கல்.
என்னோட ஃபேவரைட் எப்போதுமே ஹோண்டா அக்கார்ட் தாங்க...
அத தலைப்பா வெச்சி ஒரு பதிவு ரெடி பண்ணிட்ருக்கேன்.
பதிவு கலக்கல்.
என்னோட ஃபேவரைட் எப்போதுமே ஹோண்டா அக்கார்ட் தாங்க...
அத தலைப்பா வெச்சி ஒரு பதிவு ரெடி பண்ணிட்ருக்கேன்///
ரெடி பண்ணுங்க.
ஒன்னு எக்ஸ்ட்ரா இருந்தா அனுப்பிவைங்க.
தேவா, அருமையான பதிவு. இவை எல்லாமும் இந்தியாவில் கிடைக்கின்றனவா?
சீக்கிரமே SMALL CARS பத்தி ஒரு பதிவு போடுங்க தேவா :)
இல்லை என்று நினைக்கிறேன்!
சீக்கிரமே SMALL CARS பத்தி ஒரு பதிவு போடுங்க தேவா :)///
விரைவில் போடுவோம்.
கார் வாங்க வேண்டும் என்று முடிவெடுத்த நேரத்தில் நல்ல பதிவு..
பயனடைந்தேன்.
கார் வாங்க வேண்டும் என்று முடிவெடுத்த நேரத்தில் நல்ல பதிவு..
பயனடைந்தேன்.///
எது உங்கள் சாய்ஸ்?
தேவா சார் கார் வாங்கப்போறாரு!
நமக்கு எப்பவுமே நம்ம ஊரு வண்டிதான். அதான்ணே...டி.வி.எஸ் 50!
நமக்கு எப்பவுமே நம்ம ஊரு வண்டிதான். அதான்ணே...டி.வி.எஸ் 50!////
T.V.S 50 ஈடு இணை இல்லைங்கோ!!
நல்ல பதிவுங்க... அப்படின்னா நீங்க கார் வாங்கப் போறீங்க... எந்த காருங்க சார்??
நமக்கு எப்பவுமே பிடித்தது நடராஜா சர்வீஸ் தான்!!!
ஓட்டு போட்டாச்சு!! நான் எப்ப வந்தாலும் மறக்காம போட்டுடுவேன்!!!
Post a Comment