ஆங்கிலோசிங் ஸ்பாண்டிலைடிஸ்(Ankylosing spondylitis)
இது எலும்பைத்தாக்கும் ஒரு வியாதி.இதன் பெயரை ஆங்கிலத்தில் படிப்பதே நல்லது.ஏனெனில் எங்காவது பார்க்கும்,படிக்கும்போது ஞாபகம் வரும்.
இது எதனால் வருகிறது என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை!பரம்பரையாக சில இனத்தில் இது காணப்படுகிறது.
இந்த நோய் தாக்கியவர்களில் பெரும்பாலோரிடம் H L A B 27 என்ற ஆண்டிஜன் காணப்படுகிறது.
இந்த வியாதி வந்தவர்களின் எலும்புகளை இணைக்கும் சவ்வுகள் விரைவில் முற்றி சவ்வுகளும் எலும்புபோல ஆகிவிடுகின்றன.
எலும்புகளை இணைக்கும் சவ்வுகள் ஏன் விரைவில் எலும்பு போல மாறி தன் இழுவைத்தன்மையை இழக்கின்றன என்று இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை.
அதாவது இரண்டு எலும்புகளை சவ்வு இணைக்கிறது! இந்த சவ்வானது எலாஸ்டிக் போல விரிந்து சுருங்கும் தன்மையுள்ளது! நாம் வளையும்போது விரிந்து கொடுக்கும். எலும்புகள் விலகாமல் பிடித்துக்க்கொள்ளவும் செய்யும்!
இந்த சவ்வுகள் விரைவில் முற்றிவிடுவதுதான் இந்த நோயின் காரணம்!
இது ஒரு தொடர்நது தொல்லை செய்யும் வியாதி. இது நமது முதுகு நடு எலும்பை பாதிக்கும்.
30-40வயதில் இது ஆரம்பிக்கும்.ஆண்களில்தான் இது அதிகம்.
இது பரவிய முதுகு வலியுடன் ஆரம்பிக்கும்.பிற மூட்டுகளிலும் வலி இருக்கும்.
சோதித்துப்பார்த்தால் முதுகெலும்பின் அசைவு பெருமளவு குறைவாக இருக்கும். நெஞ்சின் விரிவு குறைந்து(<5செ.மீ),அதாவது 5 செ.மீக்கு குறைவாக இருக்கும்.
நோயின் முற்றிய நிலையில் கழுத்து முதல் கீழ்முதுகுவரை இறுகி அசைவற்று போய்விடும்.உடல் முன்னுக்குத்தள்ளி காணப்படும்!
விசுவின் படம் ஒன்றில் கிஷ்மு கையைபின்னால் கட்டி முன்புறம் குனிந்து நடப்பாரே! அதே போல்தான் இந்த வியாதியில் இருக்கும்! இது ஒருவகையில் முதுகெலும்பின் அசைவிக்குறைக்கிறது.அதேபோல் நெஞ்செலும்பின் அசைவையும் குறைக்கிறது.
மேலே உள்ள படம் பார்த்தால் நான் சொன்னது ஓரளவு புரியும்!
மாத்திரைகள் இந்த வியாதியை ஓரளவே கட்டுப்படுத்தும்!!
இடுப்பு எலும்பு இணைந்து விட்டால் இடுப்பு எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை செய்யவேண்டி வரலாம்.
முதுகெலும்பு ஒன்றோடொன்று இணைந்து மூங்கில் போல ஆகிவிடும்!(BAMBOO SPINE).
வளையும் தன்மை இழந்துவிடுவதால் முதுகெலும்பு கழுத்துப் பகுதியில் மூட்டு விலகுதல், தண்டுவடம் அழுத்தப்படுதல்,முதுகெலும்பு உடைதல் ஆகியவை ஏற்படும். அந்த சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை செய்யவேண்டிவரும்!!
இது முடக்குவாதம் போல் உடலின் அனைத்து மூட்டுக்களையும் பாதித்து விடுவதையும் அறுவை சிகிச்சை மூலம் ஓரளவு குறைக்கலாம்!!
இந்த நவீன காலத்திலும் இன்னும் காரணம் கண்டு பிடிக்கப்படாத, தடுக்கும் முறைகள், குணப்படுத்தும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத கொடிய நோய்களில் இதுவும் ஒன்று!!
இந்த இடுகை உண்மையில் பயனுள்ளதாக இருந்ததா?
தமிலிஷ், தமிழ்மணத்தில் வாக்களிங்க!
9 comments:
:)
அருமையான தகவல்
உபயோகமான பதிவு..,உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
அருமை தேவா. இந்த வியாதி வராமல் இருக்க ஆண்டவனை வேண்டிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என நினைக்கின்றேன்.
excellent!////
நன்றி டெல்பின்!
அருமையான தகவல்?///
விஷ்ணு வணக்கம்!!
உபயோகமான பதிவு..,உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.////
வருக இளமாயா!!
அருமை தேவா. இந்த வியாதி வராமல் இருக்க ஆண்டவனை வேண்டிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என நினைக்கின்றேன்.////
உண்மைதான்!
நல்ல பதிவு தேவா...
பகிர்ந்தமைக்கு நன்றிகள்...
Thanks doctor!
Post a Comment