Friday 13 March 2009

முருகா காப்பாத்து!!

 

மயில் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது அவற்றின் தோகையும், அழகும்தான்!!

அதுக்கடுத்து அது ஏதோ நமக்கே சொந்தம் என்ற எண்ணமும் கூடவே நமக்கு வருகிறது!!

கொஞ்சம் நாளா மயில்கள் சாவு!! மயில் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டது! அப்படீன்னு செய்திகள் பார்க்கிறோம்!!

ஆமா! மயில் நம் தேசிய பறவை என்பது போக அழியும் நிலையில் உள்ள பறவையும் கூட!!!

இப்பக்கூட ஜெயங்கொண்டம் அருகில் 4 மயில் செத்துப்போனதாக படிக்கிறோம்!!

எல்லாப் பகுதிகளிலும் மயில்கள் உணவுக்காக வேட்டையாடப்படுது என்பதுதான் கொடுமையான விசயம்..

இதை யார் கண்கானிப்பது?

காடுகளில் வாழ்ந்த மயில்கள் காடுகள் அழிந்து வருவதால் ஊர்பக்கம் வருகிறது!! காட்டிலென்றால் வனத்துறை பார்த்துக்கொள்வார்கள்!

ஊர்கள் நகரங்களில் பாதுகாப்பு இல்லாத நிலையில் மயில்களின் நிலை அதோகதிதான்!!

ரோடில் எல்லோரையும் கடித்து ஏகப்பட்ட ஆட்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கும் தெருநாய்களை கொஞ்ச நாள்களா பிடிக்கவோ, அடிக்கவோ கூடாதுன்னு புளூ கிராஸ் கொடி பிடிக்கிறார்கள்.

நீதிமன்றமும் அதை சரி என்று சொல்கிறது. வெறிநாய் மருந்துக்கு ஆகும் செலவும்,நாய்கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் கூடியதுதான் மிச்சம்!!

ஆனால் மயில் பற்றி விழிப்புணர்வு இன்னும் வரவில்லையே!!

என் நோயாளி ஒருவனிடம் புறா வேண்டும் வளர்க்க என்று கேட்டேன்.. அவன் சார் மயில் குஞ்சு இருக்கு வளர்க்கிறீர்களா என்றான்.. டேய்! மயிலைப் பிடிக்கக்கூடாதுடா என்றேன்!!

அவனுக்குத்தெரியவில்லை! ”புடிக்கலாம் சார்! யாரும் ஒன்னும் சொல்லமாட்டாங்க!” என்றான்!

சட்டப்படி குற்றம் தெரியுமா என்றேன்!!” அட போங்க சார் புதுசா கதை சொல்றீங்க” நாங்க எவ்வளவு நாளா புடிக்குறோம்!!அதெல்லாம் புடிக்கலாம். “ என்றான்..

”மயில் கறி சாப்பிடலாம், தோகையை வித்துடலாம் ”என்றான்!

ஏண்டா!” தோகை மயில் செத்தவுடனேதானே எடுப்பீங்க” என்றேன்!

சார்” நீங்க வேற!! மயில் எப்ப சாவது? நாங்க வெயிட் பண்ண முடியாது! நான் விட்டா இன்னொருத்தன் பிடிச்சிடுவானே. என்ன பண்றது” என்றான்..

ஆமாம் பழமொழி கூட “மயிலே மயிலேன்னா இறகு போடாதுன்னு”ல்ல சொல்றோம்! அர்த்தம் இப்பத்தான் புரியுது எனக்கு! (இந்த அர்த்தம் உங்களுக்கு முன்பே தெரியுமா நண்பர்களே?). அதாவது மயிலே மயிலேன்னா இறகு போடாது!! அதை அடித்துத்தான் நாம் பிடுங்க வேண்டும்.. நேரடி அர்த்தம் ரொம்ப கொடுமையா இருக்கே!

அட ஆமா! மயில் தோகை விசிறியெல்லாம் விக்கிறான்களே? தோகை என்ன அரசாங்கத்திடம் வாங்குகிறார்களா  என்ன!!

இதை ஒரு வியாபாரமா செய்து வருகிறார்களே!

மயில் தோகை மயிலிடம் இருந்தால்தான் அழகு!

நம்ம தனியா கிருஷ்ணன் தலையிலும், விசிறியிலும் இல்ல வச்சு அழகு பார்க்கிறோம்..காலையில் கடைகளுக்கு சாம்பிராணி போடுகிறவணும் கையில் துடைப்பம் மாதிரி மயில் தோகையை வச்சு இருக்கானே! நமக்கு சிந்தனையே வரலையே!!

எனக்கே வருத்தமாக இருந்தது!!

”டேய்!! மயிலைப் பிடிக்காதே! உன்னையப் பிடிப்பானுங்க, அப்புறம் பெரிய தப்புடா இது” என்றேன்.

வெளியே பாட்டுடன் மலைக்குப்போய்க் கொண்டு இருந்தார்கள்!! சார் இப்படி வாங்க என்றான் அந்த மயில் பிடிக்கும் பேசண்ட்!!

போய் பார்த்தேன்!!பக்தர்கள் காவடி தூக்கிக்கொண்டு போய்க்கொண்டுஇருந்தார்கள்!!!

”பார்த்தீங்களா!! காவடில எவ்வளவு தோகை சொருகியிருக்கிறார்கள்! புடிக்கிறதுன்னா அவங்களையில்ல பிடிக்கணும்” என்றான்..

அட ஆமாம்!!! பக்தி வெள்ளத்தில் முருகனின் வாகனத்தையே காலி பண்ணி அந்தத்தோகையை சொருகி முருகனுக்கே காவடியா?

அவனைப்பார்த்தேன்! என்னால் அவனுக்கு பதில் சொல்ல முடியவில்லை!!

மயில்களை யார் காப்பது? நாமா? அரசாங்கமா?

இல்ல முருகன்தான் காப்பாத்தனுமா?

26 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

மனிஷா கொய்ராலாவுக்கு மேட்டர் தெரியுமா?

(நாங்க படிக்கும்போது அவங்கதான் ப்ளூகிராஸ்-இந்தியன்)

தேவன் மாயம் said...

மனிஷா கொய்ராலாவுக்கு மேட்டர் தெரியுமா?

(நாங்க படிக்கும்போது அவங்கதான் ப்ளூகிராஸ்-இந்தியன்)///

நீங்கதான் கேட்டு சொல்லனும்!!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நாங்க படிக்கும் காலத்தில் கல்லூரி மற்றும் விடுதி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மயில்கள் வளர்த்துவந்தோம். இப்ப நிலமை தெரியல. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ப்ளு கிராஸ்ல வவ்வாலுக்கு சப்போர்ட் அதிகமோ...

அதை யாரும் புடிக்கறதே இல்லை

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

படிக்கவே வருத்தமாக இருக்கிறது. பாடசாலைகளில் சிறுவயதிலேயே சொல்லிப் புரியவைக்கலாம்.
நான் 2004 ல் ஈழம் சென்றபோது வவுனியா- மன்னார்- திருகோணமலைப் பாதையில் பயணிக்கும் போது;
இராணுவத்தினருடன் மயில்களையும் கணக்கின்றிக் கண்டேன்.எனக்கோ ஆச்சரியம்...இந்த இராணுவம் இந்த மயில்களை
எப்படி விட்டு வைத்தது.
அப்போ ஒரு பெரியவர் சொன்னார். இப்பறவை வணக்கத்துக்குரியது எனும் பயம் இராணுவத்துக்கு இருப்பதால்; அதைத் தீண்டுவதில்லை.
எனக்கு உண்மை போல் தான் இருந்தது.
ஏன் இப்பயம் நமக்கு இல்லாமல் போனது!!!!

வேத்தியன் said...

நல்ல எச்சரிக்கைப் பதிவு...
கவலப்பாடாதீங்க...
முருகன் காப்பாத்திடுவார்...
அது சரி, இப்ப என்ன வளக்கிறீங்க???
:-)

நட்புடன் ஜமால் said...

\\அது ஏதோ நமக்கே சொந்தம் என்ற எண்ணமும் கூடவே நமக்கு வருகிறது!!\\

உணர்வு பூர்வமா இருக்கு ...

ஆதவா said...

நல்ல கட்டுரைங்க.. மயிலக்கூட கொன்னு சாப்பிடறாங்களா... பாவமே!

ஹேமா said...

உண்மை தேவா,வெளிநாடுக்காரங்க பொதுவா எங்க இந்து சமயத்தையே மிருக வதை என்றுதான் சொல்கிறார்கள்.நினைத்துப் பார்த்தால் உண்மையும் கூட.

இராகவன் நைஜிரியா said...

விராலிமலைப் பகுதிகளில் சுமார் 15 வருடம் முன்பு பல மயில்களை காண இயலும். இப்போது எப்போதாவது அரிதாகத்தான் காண முடிகின்றது.

இன்னும் சில வருடங்களில், அழிந்த இனங்களில் மயிலும் ஒன்றாகிவிடும்.

நம் குழைந்தைகள் மயிலைப் பற்றி கேட்டால்... 16 வயதினிலே படம் பார்க்கச் சொல்லலாம்.

Arasi Raj said...

முருகன் எங்க போயி காப்பாத்துறது...அவரே கொஞ்சம் குட இறக்கம் இல்லாம மயில் மேல தானே ஏறி உக்கந்துருக்கார்

எனக்கு அந்த மயில் குட்டி வாங்கி குடுக்குறீங்களா .....நிலா நல்லா விளையாடுவா ..please

priyamudanprabu said...

////
பார்த்தீங்களா!! காவடில எவ்வளவு தோகை சொருகியிருக்கிறார்கள்! புடிக்கிறதுன்னா அவங்களையில்ல பிடிக்கணும்” என்றான்..

அட ஆமாம்!!! பக்தி வெள்ளத்தில் முருகனின் வாகனத்தையே காலி பண்ணி அந்தத்தோகையை சொருகி முருகனுக்கே காவடியா?

////


ha ha ha
ஹ ஹ ஹாஆஆ

geevanathy said...

நல்லதொரு பதிவு

இப்படியே போனால்

மயில் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது அவற்றின் தோகையும், அழகும்தான்!!

என்று எழுதமட்டுந்தான் முடியும்.....

உண்மைத்தமிழன் said...

இதெல்லாம் மனுஷன் போடுற ஆட்டம்.. மத்த ஆடு, மாடு, கோழி, நாய், காக்கா, புறான்னு எல்லா அயிட்டத்தையும் வெட்டுறவன் மயிலுன்னு வந்தா மட்டும் விட்டுறாவானா..?

முருகன் மேல பழி போடாம நாமளே அக்கறையா இருக்கோணும்.. மயில்ன்றது ஒரு அழிந்து வரக்கூடிய உயிரினம்.. அது நம்ம நாட்டோட செல்வம்.. நம்ம எதிர்கால சந்ததியினருக்கு அது ரொம்ப அவசியம்னு நம்ம சொல்லித் தரணும்.. ஏதோ முருகனின் வாகனம்னு இருக்கிறதாலதான் இந்த மட்டுக்கும் அதுக உசிரோட இருந்ததுகன்னு நான் நினைக்கிறேன்..

நல்ல பதிவு..

சி தயாளன் said...

அநியாயம்..தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகள் முன்வரவேண்டும்...

Rajeswari said...

சீரியஸா கவனிக்க வேண்டிய மேட்டர நகைச்சுவையா சொல்லி கலக்கிட்டீங்க. இந்த பதிவ யாரவது ப்ளூ கிராசை சேர்ந்தவர்கள் கவனித்தால் நன்றாக இருக்கும் .( தேவன் சார் நம்ம கடை பக்கமே ஆளை காணோம் ..)

வால்பையன் said...

மயில்கள் உயிர் வாழ அடர்த்தியான மர தொகுப்புகள் வேண்டும்.

தோப்பு மாதிரி, எல்லா மரங்களையும் வெட்டிபுட்டி மயில் சாகுதேன்னா சாகாமயையா இருக்கும்.

குடந்தை அன்புமணி said...

மயிலைக்கூட விட்டு வைக்கவில்லையா? அடப்பாவிங்களா? போறப்போக்கப்பார்த்தா சீனாக்காரனை மிஞ்சிடுவானுங்க போலிருக்கு...ம்! எப்படித்தான் மனசு வருதோ... நம்ம தேசியப்பறவைக்கு இப்படி ஒரு கொடுமை நேர்வதை மேனகா காந்திக்கு தெரியப்படுத்துங்க...

அப்துல்மாலிக் said...

வருகின்ற காலங்களில் மயிலின் கூட்டம் குறைந்துவருவதாக கேள்வி
தேசிய விளையாட்சில் ஹாக்கிலிருந்து கிரிக்கெட்க்கும் மாறப்போறோமோ அதே மாதிரி தேசிய பறவை மயிலிருந்து காக்கைக்கு மாத்திடலாம், ஏனென்றால காக்கை நிறைஅய் இருக்கும் குறவர்களை எளிமையா கட்டுப்படுத்திடலாம் ஹி ஹி ஹி

அப்துல்மாலிக் said...

//!!பக்தர்கள் காவடி தூக்கிக்கொண்டு போய்க்கொண்டுஇருந்தார்கள்!!! ”பார்த்தீங்களா!! காவடில எவ்வளவு தோகை சொருகியிருக்கிறார்கள்! புடிக்கிறதுன்னா அவங்களையில்ல பிடிக்கணும்” //

அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது??????????

அப்துல்மாலிக் said...

//மயிலைப் பிடிக்கக்கூடாதுடா என்றேன்!! அவனுக்குத்தெரியவில்லை! ”புடிக்கலாம் சார்! யாரும் ஒன்னும் சொல்லமாட்டாங்க!” //

சட்டம் கடுமையாக்கப்படவில்லை என்றே சொல்வேன்....

மயிலை வித்த காசில் அதிக பெர்ஸன்டேஜ் வன காவல்துறைக்கு போகுதோ என்னாவோ

அப்துல்மாலிக் said...

சமூகத்தை விழிக்கவைகும் பதிவு உங்களுடையது தேவா

RJ Dyena said...

oh my god.... animal cuelty India'viluma...??? :((((

RJ Dyena said...

I would like to link ur blog article to our Facebook Group(animal friendly n stop cruelty)

சாந்தி நேசக்கரம் said...

இயற்கையோடு இணைந்த பறவைகள் மிருகங்கள் அழிவைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
மயில் இறகை சிறுபராயத்தி்ல் புத்தகங்களுடன் வைத்து அழகு பார்த்தோம். இதைவிட வேறெதையும் மயில்பற்றி அறியவில்லை.

தேவா நன்றிகள் தங்களுக்கு.

சாந்தி

ராஜ நடராஜன் said...

மயில் இறகுக்குத்தான்னு நினச்சிருந்தேன்.அடிச்சும் சாப்புடறாங்களா?முருகா காப்பாத்து!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory