Saturday, 4 July 2009

ஜீன்களே மவுனமாகுங்கள்!!

மனிதனுக்கு ஏற்படும் பல பரம்பரை நோய்களுக்கு முக்கிய காரணம் என்னவென்று நமக்குத்தெரியும்.

”எல்லாம் கடவுள் எழுதிய படிதான் நடக்கும்.. இந்த வியாதி வரணும்னு அன்றைக்கே ஆண்டவன் எழுதிவைத்துவிட்டான் என்ன செய்வது?” என்று நாம் அலுத்துக்கொள்கிறோம்.

ஆம் உண்மையில் எழுதிவைக்கப்பட்டதுதான். எங்கே தலையிலா? ... இருக்கலாம்.. அங்கிங்கென்னாதபடி எங்கும் எல்லா செல்களிலும் இருக்கும் ஜீன்களில்தான் எழுதி வைக்கப்பட்டுள்ளது.File:Gene.png

செல்களின் மையத்தில் இருப்பது கரு(Nucleus). அந்தக்கருவில்தான் நம் உடல் வளர்ச்சி,நோய் முதல் எல்லாக் கட்டளைகளும் எழுதப்பட்டுள்ளன!!

இந்தக் கட்டளைகளை அடிக்கடி பிரதி எடுத்து ஆர்.என்.ஏ மூலம் செல் அனுப்பும்.

பரம்பரை நோய்களுக்கான ஜீன்களை அறிவியல் அறிஞர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள். அந்த குறிப்பிட்ட வியாதி இந்த நேரத்தில் வரவேண்டும் என்ற செய்தியை கொண்டுசெல்லும் ஆர்.என்.ஏ யை இன்னொரு ஆர்.என்.ஏ மூலம் தடுத்து விடலாம். தடுத்து விட்டால் நோய் வராது.

இந்த எதிர் ஆர்.என்.ஏ ஐ செய்து மனித உடலுக்குள் செலுத்திவிடலாம் என்பது விஞ்ஞானிகளின் கனவு.

இந்தக்கனவு மெய்ப்பட்டால்

1.பார்க்கின்சன் என்னும் நடுக்கு வாதம்

2.புற்றுநோய்

3.உடல் பருமன்

4.வைரஸ் நோய்கள்

5.கல்லீரல் நோய்கள்

6.சர்க்கரை நோய் பார்வை இழப்பு

மற்றும் ஏனைய நரம்பு மண்டல நோய்களைத் தடுத்து விடலாம்..

ஜீன்களை மவுனப் படுத்த முடியுமா? பார்ப்போம்!!

இந்தக்கட்டுரை ஒரு சின்ன முன்னோட்டம்! இதை வைத்தே இதுபோல் எழுதுவதை தொடருவேன்..

தமிழ்த்துளி தேவா.

26 comments:

சொல்லரசன் said...

//இந்தக்கட்டுரை ஒரு சின்ன முன்னோட்டம்! இதை வைத்தே இதுபோல் எழுதுவதை தொடருவேன்..//

வரவேற்கிறோம் வாழ்த்துகள், இதை படிக்க பதினாறு
வழிகள் அப்படின்னு பதிவு போடமாட்டீங்களே!!!!!!!

நட்புடன் ஜமால் said...

டெம்ப்ளேட் நல்லாயிருக்கு


சீக்கிரம் நிறைய இத போல எழுதுங்க ...

இரண்டிலும் ஓட்டு போட்டாச்சு ...

அ.மு.செய்யது said...

மருத்துவம் குறித்த பதிவுகள் தேவாவுக்கு அல்வா சாப்டுவது மாதிரி.

பயனுள்ள பதிவு தேவா !!

தொடரட்டும் உங்கள் சேவை.

தேவன் மாயம் said...

Blogger சொல்லரசன் said...

//இந்தக்கட்டுரை ஒரு சின்ன முன்னோட்டம்! இதை வைத்தே இதுபோல் எழுதுவதை தொடருவேன்..//

வரவேற்கிறோம் வாழ்த்துகள், இதை படிக்க பதினாறு
வழிகள் அப்படின்னு பதிவு போடமாட்டீங்களே!!!!!!!///

சொல்ஸ்!! வாங்க! வழிகள் வேறு உள்ளதா என்று பார்க்கிறேன்!

04 July 2009 06:28
Delete
Blogger நட்புடன் ஜமால் said...

டெம்ப்ளேட் நல்லாயிருக்கு


சீக்கிரம் நிறைய இத போல எழுதுங்க ...

இரண்டிலும் ஓட்டு போட்டாச்சு ...

04 July 2009 06:34
Delete
Blogger அ.மு.செய்யது said...

மருத்துவம் குறித்த பதிவுகள் தேவாவுக்கு அல்வா சாப்டுவது மாதிரி.

பயனுள்ள பதிவு தேவா !!

தொடரட்டும் உங்கள் சேவை.

04 July 2009 06:36
Delete

Anonymous said...

மருத்துவர் தோட்டத்தில் நல்மலர்களும் நல்ல பலன்களும்....

தேவன் மாயம் said...

தமிழரசி said...

மருத்துவர் தோட்டத்தில் நல்மலர்களும் நல்ல பலன்களும்....
//
நான் எடுத்த போட்டோ அது!!

வெற்றி-[க்]-கதிரவன் said...

//இந்தக்கட்டுரை ஒரு சின்ன முன்னோட்டம்! இதை வைத்தே இதுபோல் எழுதுவதை தொடருவேன்..

//

தொடருங்கள் தொடருங்கள்..... வாழ்த்துக்கள் தேவா....

Anbu said...

டெம்ப்ளேட் நல்லாயிருக்கு


சீக்கிரம் நிறைய இத போல எழுதுங்க .

தேவன் மாயம் said...

பித்தன் said...

//இந்தக்கட்டுரை ஒரு சின்ன முன்னோட்டம்! இதை வைத்தே இதுபோல் எழுதுவதை தொடருவேன்..

//

தொடருங்கள் தொடருங்கள்..... வாழ்த்துக்கள் தேவா....
04 July 2009 07:56
Anbu said...

டெம்ப்ளேட் நல்லாயிருக்கு


சீக்கிரம் நிறைய இத போல எழுதுங்க//

பித்தன் அன்பு நன்றி!!

அப்துல்மாலிக் said...

நிச்சயம் தொடனும் தேவாசார்

மனித உடலின் ஜீன் முக்கியபங்கு வகிக்கிறது என்பது தெரிந்தது, அது எப்படி செயல்படுகிறது என்பது தாங்களை போன்ற மருத்துவர்களால் தான் முடியும், தாங்கள் இந்த தொடர் நிச்சயம் பயனுள்ளதாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை...

ப்ரியமுடன் வசந்த் said...

அப்பிடியே

டிவின்ஸ் எப்பிடி பொறக்குறாங்கன்னு

சொல்லுங்க தேவாசார்......

யூர்கன் க்ருகியர் said...

//இந்தக்கனவு மெய்ப்பட்டால்//

மெய்ப்படணும் என்பதே என் அவா


இந்த மாதிரியான அறிவியல் செய்திகள் விரும்பி படிப்பேன் .
தொடர்ந்தால் மகிழ்வேன்

sakthi said...

அந்த குறிப்பிட்ட வியாதி இந்த நேரத்தில் வரவேண்டும் என்ற செய்தியை கொண்டுசெல்லும் ஆர்.என்.ஏ யை இன்னொரு ஆர்.என்.ஏ மூலம் தடுத்து விடலாம்


நல்ல விஷயம்

sakthi said...

இந்தக்கட்டுரை ஒரு சின்ன முன்னோட்டம்! இதை வைத்தே இதுபோல் எழுதுவதை தொடருவேன்..

தொடருங்கள்

வாழ்த்துக்கள்

ஆ.சுதா said...

பயனுள்ள தகவல்.
இது போல தெடருங்கள்.

ஆ.ஞானசேகரன் said...

தேவன் சார் தோட்டம் மாற்றியாச்சி

ஆ.ஞானசேகரன் said...

//இந்தக்கட்டுரை ஒரு சின்ன முன்னோட்டம்! இதை வைத்தே இதுபோல் எழுதுவதை தொடருவேன்..//

எழுதலாம் என்றே தோன்றுகின்றது தேவன் சார்...

இளமாயா said...

very gud news.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

பயனுள்ள பதிவாக இருக்கும்.தொடருங்கள்.

S.A. நவாஸுதீன் said...

அரிதான, அவசியமான தகவல்களை பகிர்ந்து கொள்வதில் சந்தோசமே. தொடர்ந்து எழுதுங்கள்.

ராஜ நடராஜன் said...

முன்னோட்டம் நல்லாவே இருக்குது.தொடருங்கள்! தெரிந்து கொள்ள ஆவல்.

ராஜ நடராஜன் said...

இடைவேளை போய் டீ குடிச்சுட்டு வர்றதுக்குள்ள கடைக்கு புதுசா சாயம் பூசி ரோஜாவெல்லாம் தூவி விட்டுட்டீங்க போல இருக்குது!நல்லாவே இருக்குது.

முனைவர் இரா.குணசீலன் said...

தொடர்ந்து இது போன்ற கட்டுரைகள் எழுதுங்கள் மருத்துவரே.
இது போல ஸ்டெம் செல் பற்றி ஒரு இடுகையைத் தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.....

Unknown said...

... அருமையான பதிவு...!! நல்ல... நல்ல... விளக்கங்கள்.... தெளிவுரைகள்....!!!


ஆனா நா சைன்ஸ்'ல கொஞ்சம் வீக்கு...!!!!

கோவி.கண்ணன் said...

சிறப்பான தொடக்கம்.

தொடருங்கள்.

மணிநரேன் said...

ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

தொடருங்கள்.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory