Saturday, 11 July 2009

கே.எஃப்.சி, மெக்டொனால்ட் அபாயம்!!

துரித உணவுகள் என்பவை நவீன வாழ்க்கையில் தற்போது தவிர்க்க முடியாத ஒரு அம்சமாக மாறி வருகிறது!

இவற்றில் அதிக அளவு

1.கலோரி

2.கொழுப்பு

3.இனிப்பு

4.உப்பு சோடியம்

5.மாவுச்சத்து

6.புரதம்

காணப்படுவதே இவற்றை நாம் உண்ணக்கூடாது என்பதற்கான காரணங்கள்.

மெக்டொனால்டின்- டீலக்ஸ் பிரேக்ஃபாஸ்ட்:.

1220 கலோரி சத்து இதில் கொழுப்பு 550 கலோரி அடக்கம்!!

K F C -உருளைக்கிழங்கு மசித்த உணவு the mashed potato Bowl with Gravy- கலோரி சத்து 690 ,31 கிராம் கொழுப்புச்சத்து.

பிசா ஹட்-Stuffed Crust Meat over'spie- இதில் இரண்டு ஸ்லைசில் 1000 கலோரி சத்து,82கிராம் கொழுப்பு உள்ளது.

இத்தகைய உணவுகளால் என்ன ஏற்படுகிறது?

1.உடல் எடை அதிகரிப்பு

2.சர்க்கரை நோய்

3.மார்பகப்புற்று நோய்

4.இதய நோய்கள்

5.இடத்த அழுத்தம்

கடந்த 30 வருடங்களில்

1. எடை அதிகமான குழந்தைகள் 30% அதிகரித்துள்ளனர்.

2.60% அமெரிக்கர்கள்,13% குழந்தை,இளைஞர்கள் எடை அதிகம் ஆகியுள்ளனர்.

3.கடந்த வருடம் 115 பில்லியன் டாலர்கள் துரித உணவுக்காக அமெரிக்கர்கள் செலவிட்டுள்ளனர். இது அவர்கள் கார் வாங்க,கம்புயூட்டர் வாங்க,உயர்படிப்புக்கு செலவு செய்த தொகையைவிட அதிகம்!!

கற்றுக்கொள்ளும் திறன் குறைவு

புத்திசாலித்தனம்

1கிலோ கிரில் இறைச்சி =600 சிகரெட்டுகள்

1 கிரில் ட்ரம்ஸ்டிக்= 80 சிகரெட்டுகள்

இந்த துரித உணவுகள் மூளையைத் தூண்டி எண்டார்பின்,என்கெபலின் களின் சுரப்பை அதிகரிப்பதால் அந்த உணவுகளிம் மேல் அதிக விருப்பமும், அதை உண்ண அதிகத்தூண்டுதலும் ஏற்படுகிறதாம்.

இதற்கெல்லாம் யார் காரணம்?

1.பெற்றோர் இருவரும் வேலைக்குச்செல்வதால் சமைக்க இயலாமை.

என்ன செய்ய வேண்டும்?

1.உணவகங்கள் சமுதாய சிந்தனையுடன் தங்கள் உணவுகளைச் சமைக்க வேண்டும்.

2.கொழுப்பு குறைந்த மாமிசம்,

2.முழுதானிய கோதுமை ரொட்டி,

3.கொழுப்பு குறைந்த வறுவல்கள்,

4.இனிப்பு குறைவான பானங்கள்,

5.அதிக காய்கறிகள் கொண்ட உணவுகள்

ஆகியவற்றை துரித உணவகங்கள் செய்ய வேண்டும்..

நமது கடமை?

1.மக்களுக்கு எடுத்துச் சொல்லுதல்( உங்க வீட்டு மக்கள்,குட்டீஸ் அனைவருக்கும்தான்).

2.பள்ளிகளில் கல்லூரிகளில் துரித உணவுகளை தடை செய்தல்( வீட்டிலும்தான்!!)

3.என்னைப் போல ஞாயிறு காலையில்கூட அமர்ந்து மண்டைகாய இடுகை எழுதுதல்!!

தமிழ்த்துளி

தேவா.

35 comments:

Thamiz Priyan said...

அந்த சுவைக்கு அடிமையாகிட்டோமே..:(

அப்பாவி முரு said...

இப்ப தமிழ் வீட்டில் சமைக்கும் முறைகளும் ரொம்பவே மாறிடுச்சு.
வீட்டுச் சாப்பாடை மட்டும் சாப்பிட்டாலும், கொழுப்புதான்...

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)

மங்களூர் சிவா said...

நல்ல வேளை அந்த சுவை எல்லாம் இதுவரைக்கும் நாக்குக்கு காட்டாம வைச்சிருக்கேன்.

நல்ல பதிவு. படித்து சிலராவது திருந்தட்டும்.

@தமிழ்பிரியன் அண்ணே

எதுவுமே நம்ம கண்ட்ரோல்ல இருக்கணும் அதோட கண்ட்ரோலுக்கு நாம போயிடப்பிடாது!
:))

தேவன் மாயம் said...

Blogger தமிழ் பிரியன் said...

அந்த சுவைக்கு அடிமையாகிட்டோமே..:(//

அய்யய்யோ!! மாறிவாங்க!!

தேவன் மாயம் said...

இப்ப தமிழ் வீட்டில் சமைக்கும் முறைகளும் ரொம்பவே மாறிடுச்சு.
வீட்டுச் சாப்பாடை மட்டும் சாப்பிட்டாலும், கொழுப்புதான்..//

ஹோட்டலில் நாம் சொல்ல முடியாது!! வீட்டில் மாற்றலாமே!!

தேவன் மாயம் said...

Blogger பித்தன் said...

-:)//
ஓகே
_______________________________

S.A. நவாஸுதீன் said...

வாரம் ஒருமுறையாவது இது தேவைப்படுகிறது. மாற்ற முயற்சிக்கணும். நன்றி தேவா சார்

அத்திரி said...

எனக்கெல்லம் எப்பவும் பழைய கஞ்சிதான்................

ஆ.ஞானசேகரன் said...

//என்னைப் போல ஞாயிறு காலையில்கூட அமர்ந்து மண்டைகாய இடுகை எழுதுதல்!!//

நல்ல பகிர்வு வாழ்த்துகள் டாக்டர் தேவன் சார்

யூர்கன் க்ருகியர் said...

துரித உணவு மூலம் துரித பயணம் ... :(

Ashok D said...

அம்மா சமைக்கற உணவ சாப்பட்றதானால நீங்க சொல்லற Mcdonalds, KFC இதெல்லாம் மோந்துகூட பாத்ததில்லீங்கன்னா...

anyway உடல் நலத்திற்கான நல்ல பதிவுங்ன்னா...

வால்பையன் said...

//1கிலோ கிரில் இறைச்சி =600 சிகரெட்டுகள்
1 கிரில் ட்ரம்ஸ்டிக்= 80 சிகரெட்டுகள்//

சிகரெட்டே பெட்டர்ன்னு தோணுது!

மதிபாலா said...

அன்பு நண்பருக்கு ,

நீங்கள் சொன்ன கே.எப்.சி , மெக் டொனால்ட் , பிட்ஷா போன்றவை உடலுக்கு எவ்வளவு கெடுதியோ அதை விட கெடுதல் நமது உணவு முறை.

சத்துக்களை ஆவியாக்கி முழுக்க வேகவிடப்பட்ட காய்கறிகளாலும் , காலைன்னா பொங்கல் , மதியம் சாப்பாடு , நைட்டு தோசை / இட்லி என்று முழுக்க முழுக்க அரிசியால் நிறைக்கப்பட்ட நமது உணவு முறையும். உலகின் எந்த மூலையிலும் இவ்வளவு நிறைய அரிசியைச் சாப்பிடுவதில்லை.

அதே போல அவ்வப்போது ஒன்றிரண்டு சிக்கன் / மட்டன் பீஸ்களை சாப்பிடுவதை விட்டுவிட்டு சிக்கன் / மட்டன் எடுத்தால் இன்னும் பத்து நாளைக்கு தாங்கும் வண்ணம் வெளுத்து வாங்குவதும் கூட...!

அதையும் கொஞ்சம் நாம் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

மற்றபடி நல்ல தேவையான பதிவு!

Unknown said...

அத்த உடு அண்ணாத்த... பீர் மிக்ஸ் பன்னி அட்ச்சா... அல்லா சோக்கா பூடும் ...... !!!!

Suresh Kumar said...

நல்ல சுவையான உணவுகள் சாப்பிடலாம் என்றால் பயமுறுத்துறீங்க

sakthi said...

1.உணவகங்கள் சமுதாய சிந்தனையுடன் தங்கள் உணவுகளைச் சமைக்க வேண்டும். 2.கொழுப்பு குறைந்த மாமிசம், 2.முழுதானிய கோதுமை ரொட்டி, 3.கொழுப்பு குறைந்த வறுவல்கள், 4.இனிப்பு குறைவான பானங்கள், 5.அதிக காய்கறிகள் கொண்ட உணவுகள் ஆகியவற்றை துரித உணவகங்கள் செய்ய வேண்டும்.

நல்ல அறிவுரை தேவன் சார்

அப்துல்மாலிக் said...

இங்கே வந்து பாருங்க தேவா சார் 2 மணிநேரம் வரிசையிலே நின்னு (அது அதிகாலை 1 மணியானாலும்) வாங்கிட்டு போய் உண்பார்கள்

நிச்சயம் இதை மாற்ற முயற்சிக்கனும்

அழகான தொகுப்பு

அப்துல்மாலிக் said...

என்னால் தமிழ்மணத்தில் வாக்களிக்கயிலவில்லை உதவி செய்யவும்

தேவன் மாயம் said...

S.A. நவாஸுதீன் said.
_____________________..
வாரம் ஒருமுறையாவது இது தேவைப்படுகிறது. மாற்ற முயற்சிக்கணும். நன்றி தேவா சார்///

மாறுங்க மக்கா!
_____________________________

11 July 2009 22:34
அத்திரி said...
___________
எனக்கெல்லம் எப்பவும் பழைய கஞ்சிதான்................///

சூப்பர்!!

--------------------------------

11 July 2009 22:38
ஆ.ஞானசேகரன் said..
____________________
.
//என்னைப் போல ஞாயிறு காலையில்கூட அமர்ந்து மண்டைகாய இடுகை எழுதுதல்!!//

நல்ல பகிர்வு வாழ்த்துகள் டாக்டர் தேவன் சார்//

வாங்க!!

----------------------------------

11 July 2009 22:38
யூர்கன் க்ருகியர்..... said...
________________
துரித உணவு மூலம் துரித பயணம் ... :(///

எல்லாமே துரிதம்!!
------------------------------

11 July 2009 23:09
D.R.Ashok said..
_____________.
அம்மா சமைக்கற உணவ சாப்பட்றதானால நீங்க சொல்லற Mcdonalds, KFC இதெல்லாம் மோந்துகூட பாத்ததில்லீங்கன்னா...

anyway உடல் நலத்திற்கான நல்ல பதிவுங்ன்னா...///

வாங்க!! உங்கள் கருத்துக்கு நன்றி!!
------------------------------

11 July 2009 23:22
வால்பையன் said...
================

//1கிலோ கிரில் இறைச்சி =600 சிகரெட்டுகள்
1 கிரில் ட்ரம்ஸ்டிக்= 80 சிகரெட்டுகள்//

சிகரெட்டே பெட்டர்ன்னு தோணுது!///

உண்மைதான் அன்பரே!!
__________________________________

11 July 2009 23:27
மதிபாலா said...
==========

அன்பு நண்பருக்கு ,

நீங்கள் சொன்ன கே.எப்.சி , மெக் டொனால்ட் , பிட்ஷா போன்றவை உடலுக்கு எவ்வளவு கெடுதியோ அதை விட கெடுதல் நமது உணவு முறை.

சத்துக்களை ஆவியாக்கி முழுக்க வேகவிடப்பட்ட காய்கறிகளாலும் , காலைன்னா பொங்கல் , மதியம் சாப்பாடு , நைட்டு தோசை / இட்லி என்று முழுக்க முழுக்க அரிசியால் நிறைக்கப்பட்ட நமது உணவு முறையும். உலகின் எந்த மூலையிலும் இவ்வளவு நிறைய அரிசியைச் சாப்பிடுவதில்லை.

அதே போல அவ்வப்போது ஒன்றிரண்டு சிக்கன் / மட்டன் பீஸ்களை சாப்பிடுவதை விட்டுவிட்டு சிக்கன் / மட்டன் எடுத்தால் இன்னும் பத்து நாளைக்கு தாங்கும் வண்ணம் வெளுத்து வாங்குவதும் கூட...!

அதையும் கொஞ்சம் நாம் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

மற்றபடி நல்ல தேவையான பதிவு!///

மதிபாலா சொல்வது உண்மைதான்!!
நாம் சாப்பிடுவதையும் கவனிக்க வேண்டும்!!

--------------------------------

11 July 2009 23:31
லவ்டேல் மேடி said...
=============
அத்த உடு அண்ணாத்த... பீர் மிக்ஸ் பன்னி அட்ச்சா... அல்லா சோக்கா பூடும் ...... !!!!///

அது வேறயா!!

---------------------------------

12 July 2009 00:02
Suresh Kumar said.
==============
..
நல்ல சுவையான உணவுகள் சாப்பிடலாம் என்றால் பயமுறுத்துறீங்க//

அய்யா உள்ளதைச் சொல்றேனுங்க!!

-----------------------------

12 July 2009 00:43
sakthi said...
===========
1.உணவகங்கள் சமுதாய சிந்தனையுடன் தங்கள் உணவுகளைச் சமைக்க வேண்டும். 2.கொழுப்பு குறைந்த மாமிசம், 2.முழுதானிய கோதுமை ரொட்டி, 3.கொழுப்பு குறைந்த வறுவல்கள், 4.இனிப்பு குறைவான பானங்கள், 5.அதிக காய்கறிகள் கொண்ட உணவுகள் ஆகியவற்றை துரித உணவகங்கள் செய்ய வேண்டும்.

நல்ல அறிவுரை தேவன் சார்///

எங்கே கடைப்பிடித்தால் நல்லது!

-----------------------------
12 July 2009 00:55
அபுஅஃப்ஸர் said...///
===========
இங்கே வந்து பாருங்க தேவா சார் 2 மணிநேரம் வரிசையிலே நின்னு (அது அதிகாலை 1 மணியானாலும்) வாங்கிட்டு போய் உண்பார்கள்

நிச்சயம் இதை மாற்ற முயற்சிக்கனும்

அழகான தொகுப்பு///

ஆமாங்க! குழந்தைகளையாவது இதில் பழக்க வேண்டாம்.

----------------------------------

12 July 2009 00:57
==================================

Joe said...

நான் மாக் பக்கம் போக மாட்டேன், வெளிநாட்டில் இருக்கும் போது. KFC french fries-யையும் தவிர்த்து விட்டு, கோழி மட்டும் சாப்பிடுவேன்.

மதிபாலா சொல்ற மாதிரி, நம்ம இந்திய உணவுப் பழக்கவழக்கமும் மாற்றப் பட வேண்டிய ஒன்று.

என்னத்த சாப்பிட்டாலும், தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும், இந்தியாவில் பலரும் அதைச் செய்வதில்லை.

12 July 2009 01:21//

ஜோ சொல்வது மிகச்சரி!!

பீர் | Peer said...

நல்ல விருந்து டாக்டர்,

Anonymous said...

1.பெற்றோர் இருவரும் வேலைக்குச்செல்வதால் சமைக்க இயலாமை.

Wrong Statement....We have 7 tamil families in Doylestown, PA, USA. Both husband and wife are working and cooking (not everyday). Curries and Vegetables (porial) cooked every sunday. Rice, Idly and Chappathi made at home everyday.

Eat out is once a week but not heavy. Pizza will be only if we are in office party/Children school party. No fast foods and Chips.

முனைவர் இரா.குணசீலன் said...

பயனுள்ள இடுகை......

நட்புடன் ஜமால் said...

நமக்கு இதெல்லாம் பிடிக்காதுப்பா ...

ராஜ நடராஜன் said...

KFC நமக்கு வேண்டாம்.ஆனா KFC ஸ்டைல்ல மாற்று உணவு கண்டு பிடிக்கவேண்டியது அவசியம்.இன்னாமா தண்ணி செலவு ஆகுது(அந்த தண்ணியில்ல!சமைக்கிறதுக்கு,பிளேட்,கையக் கழுவறதுக்குன்னு.அப்புறம் பக்கத்து வூட்டுக்காரன் தண்ணி தரமாட்டேங்கிறான்னு போராட வேண்டியது.அதெல்லாம் எலக்சன் முடிஞ்சு பார்த்துக்கலாமுன்னு ஒரு அறிக்கை வுடறதுன்னு)

இதை எதுக்கு சொல்றேன்னா வளைகுடா உணவுப் பழக்கம் கரண்டு இல்லாத காலத்து மாதிரிதான் இப்பவும் இருக்குது.ஒரு காஞ்ச ரொட்டி,ஒரு வெங்காயம்,கொஞ்சம் இலை,அதுக்கு பக்கத்துல மசிஞ்ச ஒரு பருப்பு இல்லைன்னா ஒரு சுட்ட மீன்,ஆடு,கோழி ஏதாவது ஒண்ணு.காஞ்ச ரொட்டி கையில ஒட்டாது.அதுமேலே சொன்ன ஏதாவது ஒண்ண தொட வேண்டியது,முழுங்க வேண்டியது.கையத் தட்டி விட்டுகிட்டு போய்கிட்டே இருக்க வேண்டியது.குடிக்க ஒரு லார்ஜ் பெக் சைஸ் கிளாஸ்ல டீ!(மொடாக்குடியர்கள் (தண்ணிதான்) நமக்கு இது சரிப்பட்டு வருமா)

வர்ரேனுங்கோவ்!

ராஜ நடராஜன் said...

//என்னத்த சாப்பிட்டாலும், தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும், இந்தியாவில் பலரும் அதைச் செய்வதில்லை.//

அதச் சொல்லுங்க முதல்ல!

தேவன் மாயம் said...

12 July 2009 01:25
பீர் | Peer said..
==========.
நல்ல விருந்து டாக்டர்,///

விருந்துடன் கொஞ்சம் மருந்து!!

---------------------------------

12 July 2009 03:20
Anonymous said...
===========
1.பெற்றோர் இருவரும் வேலைக்குச்செல்வதால் சமைக்க இயலாமை.

Wrong Statement....We have 7 tamil families in Doylestown, PA, USA. Both husband and wife are working and cooking (not everyday). Curries and Vegetables (porial) cooked every sunday. Rice, Idly and Chappathi made at home everyday.

Eat out is once a week but not heavy. Pizza will be only if we are in office party/Children school party. No fast foods and Chips.///

பாராட்டுக்கள்!!
ஏழு குடும்பத்தினரும் வாழ்வாங்கு வாழ்க!!

---------------------------------

12 July 2009 04:29
முனைவர்.இரா.குணசீலன் said...
=========================
பயனுள்ள இடுகை......///

நன்றி முனைவர்!!

-----------------------------

12 July 2009 06:16
நட்புடன் ஜமால் said...
=============
நமக்கு இதெல்லாம் பிடிக்காதுப்பா ..///

என்ன வேணும் ஜமால்!! சொல்லுங்க!!

------------------------------.

12 July 2009 06:42
ராஜ நடராஜன் said...
==============
KFC நமக்கு வேண்டாம்.ஆனா KFC ஸ்டைல்ல மாற்று உணவு கண்டு பிடிக்கவேண்டியது அவசியம்.இன்னாமா தண்ணி செலவு ஆகுது(அந்த தண்ணியில்ல!சமைக்கிறதுக்கு,பிளேட்,கையக் கழுவறதுக்குன்னு.அப்புறம் பக்கத்து வூட்டுக்காரன் தண்ணி தரமாட்டேங்கிறான்னு போராட வேண்டியது.அதெல்லாம் எலக்சன் முடிஞ்சு பார்த்துக்கலாமுன்னு ஒரு அறிக்கை வுடறதுன்னு)

இதை எதுக்கு சொல்றேன்னா வளைகுடா உணவுப் பழக்கம் கரண்டு இல்லாத காலத்து மாதிரிதான் இப்பவும் இருக்குது.ஒரு காஞ்ச ரொட்டி,ஒரு வெங்காயம்,கொஞ்சம் இலை,அதுக்கு பக்கத்துல மசிஞ்ச ஒரு பருப்பு இல்லைன்னா ஒரு சுட்ட மீன்,ஆடு,கோழி ஏதாவது ஒண்ணு.காஞ்ச ரொட்டி கையில ஒட்டாது.அதுமேலே சொன்ன ஏதாவது ஒண்ண தொட வேண்டியது,முழுங்க வேண்டியது.கையத் தட்டி விட்டுகிட்டு போய்கிட்டே இருக்க வேண்டியது.குடிக்க ஒரு லார்ஜ் பெக் சைஸ் கிளாஸ்ல டீ!(மொடாக்குடியர்கள் (தண்ணிதான்) நமக்கு இது சரிப்பட்டு வருமா)

வர்ரேனுங்கோவ்!

12 July 2009 07:36
ராஜ நடராஜன் said...
//என்னத்த சாப்பிட்டாலும், தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும், இந்தியாவில் பலரும் அதைச் செய்வதில்லை.//

அதச் சொல்லுங்க முதல்ல!////

இந்தப் பதிவுக்கு உங்களை எதிர்பார்த்தேன்!!!

பின்னூட்டமே
ஒரு பதிவாட்டம்
இருக்கே நண்பரே!!

நீங்கள் சொல்வதும்
யோசிக்கவேண்டியதுதான்!!
===============================

12 July 2009 07:37

பனையூரான் said...

நல்ல பகிர்வு

nitham manasil utham said...

மிகவும் தேவையான பதிவு , நன்றி மருத்துவருக்கு,

அதே நேரம், எவ்வகையான உணவுமுறை நமக்கு ஏற்பானது, எவ்வகையான உடற்பயிற்சிகள் ஆரோக்கியத்திற்கு உகந்தது' என்பனபற்றியும் உங்களிடமிருந்து ஒரு பதிவினை எதிர்பார்க்கிறேன்.

அமர பாரதி said...

நீங்க சொல்றது சரிதான் சார். ஆனால் கிரில் செய்யப்பட்ட இறைச்சி உடலுக்கு நல்லது. அதை சிகரெட்டுடன் ஒப்பீடு செய்வது எந்த வகையில் சரி என்று தெரியவில்லை. ஆதி கால முறைப்படி கிரில் செய்வதால் கொழுப்பு உருக்கப்பட்டு விடுகிறது.

நிஜமா நல்லவன் said...

அந்த சுவைக்கு அடிமையாகிட்டோமே..:(

உமா said...

பழங்கள் காய்கறிக் கூட நம்பி வாங்க முடியலையே. மெழுகு தடவறது, செயர்க்கை முறையில பழுக்க வைக்கிறது, இராசாயண உரம் இப்படி எல்லாமே நமக்கு எதிரியாத்தான் இருக்கு. எங்கள் வீட்டில் எப்போதும் வீட்டுச் சமையல் தான். நம் உழைப்புக்கு ஏற்றவாறு சாப்பாட்டை மாற்றவேண்டும். சாப்பாட்டிற்கு ஏற்ற வாறு உழைக்க வேண்டும்.குழந்தைகளுக்கு உடற்பயிற்சியை பழக்கவேண்டும்.
நல்லப் பதிவு.

என்.கே.அஷோக்பரன் said...

இந்த விரைவு உணவுகள் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியவை. என்ன செய்ய நாக்கு என்றொன்றுண்டு, அது விரும்பும் சுவையென்றொன்றுண்டு, அது இவர்களது உணவில் நிறையவே உண்டு - அதனால் கட்டாயம் நோய்நொடியும் நமக்கு உண்டு!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory