ஒருவரின் மரணம் சில பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கவிஞர் ராஜமார்த்தாண்டனின் மரணம் இலக்கியத்தளத்தில் நவீன கவிதைத் தளத்தில் மிகப்பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. நவீன தமிழ் இலக்கியத்தின் மீது தீராத காதலுடன் அவர் இருந்தார்.
6.6.2009 அன்று சாலை விபத்தில் அவர் மரணமைந்தார்.
அவர் கன்யாகுமரி மாவட்டத்தில் சந்தையடி என்ற கிராமத்தில் 1948 ஆம் ஆண்டு பிறந்தார்.இளங்கலை கணிதத்தில் தேர்ச்சி பெற்ற தமிழ்ப் பற்றால் கேரளப் பல்கலைக் கழகத்தில் முதுகலை தமிழ்ப்படிப்பை முடித்து புதுக்கவிதையில் ஆய்வும் செய்தார். தினமணி மதுரைப் பதிப்பில் 20 ஆண்டுகள் ஆசிரியர் குழுவில் இருந்துள்ளார். அதன் பின் காலச்சுவடு இதழில் பணியாற்ற ஆரம்பித்தார்.
மேலே இருக்கும் இரண்டு படங்களும் நான் அவசரமாக வரைந்த பென்சில் படங்கள்.
சிறந்த கவிதை விமரிசகராகத்திகழ்ந்த அவர் புதுக்கவிதைத் தொகுதிக்காக 2003 ல் தமிழக அரசு விருது பெற்றார்.
இந்த ஜூலை காலச்சுவடு இதழில் மறைந்த ஆளுமைகள் என்று கவிஞர்.ராஜமார்த்தாண்டனைப் பற்றி விரிவான கட்டுரைகள் வந்துள்ளன.
இவருடைய முக்கிய நூல்களில் புதுமைப் பித்தனும் கயிற்றரவும்,ராஜமார்த்தாண்டன் கவிதைகள்,புதுக்கவிதை வரலாறு, சுந்தர ராமசாமியின் கவிதைக் கலை ஆகியவை அடங்கும்.
குடியும் ,புகைப்பழக்கமும் அவரது உடலைப் பாதித்தன. இருப்பினும் அதை அவர் வெளியே சொல்லவில்லை. இரண்டு முறை மரணத்தின் வாயிலுக்குச் சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பி சிறிது காலம் இப்பழக்கங்களை விட்டிருந்தார்.பின் உடல் நலம் தேறிய பின் மீண்டும் பழக்கத்துக்கு ஆட்பட்டுவிட்டார்.
நவீன கவிதை இயக்கத்தின் உயிர்மூச்சாக அவர் இருந்தார். எந்த ஒரு புதிய கவிதைத் தொகுதியையும் படித்துவிடும் ஆர்வம் அவரிடம் இருந்தது.
”திராவிட இடதுசாரி இயக்கங்கள் தமிழ் புதுக்கவிதை இயக்கத்தை எதிர்த்து செயல்பட்ட போதெல்லாம் அவர்களுக்கு எதிராக எதிர்வினை புரிந்தவர் இராஜ மார்த்தாண்டன். தமிழ் புதுக்கவிதை இயக்கத்தின் வரலாற்றினையும் பதிவு செய்திருக்கிறார்” என்று திரு.கண்ணன் தன் கட்டுரையில் குறிப்பிடுகிறார். அவருடைய படைப்புகள் தமிழில் நவீன கவிதை எழுதும் நம் வலையுலக நண்பர்களால் அவசியம் படிக்க வேண்டியவை.
இதுவே அவரைப்பற்றி நான் இங்கு எழுதுவதற்குக் காரணமாகவும் அமைகிறது.
காலச்சுவடு இதழிலிருந்து
அவருடைய கவிதை ஒன்று
வான்வெளி துலங்கிற்று!
நேற்றைப் போலிருக்கிறது
ஐம்பதைத் தாண்டியது
இன்றோ அறுபதில்
“சென்றதினி மீளாது...”
என்றாலும் திரும்பிப் பார்க்கிறேன்
சாணேற முழம் சறுக்கிய
கதையாய்
நின்ற நிலையில்
என் பயணம்
அயர்வுடன் முன்னோக்கினால்
சகபயணிகளோ வெகுதொலைவில்
பின்பயணிகளும் கடந்தவண்ணம்
ஒரு துளி மேகமில்லை
ஒரு சிறு பறவையில்லை
வெறுமையாய் வானம்
அடியெடுத்து வைப்பதா
அமர்ந்தோய்வு கொள்வதா?
’தாத்தா...’
குரல் கேட்டுத்திரும்பினால்
பனித்துளி தங்கு
பூவிதழ் சிரிப்பில்
பவன் --- அவன்
குறுநடை தொடர்ந்தேன்
பறவையின் சிறகசைப்பில்
வான்வெளி துலங்கிற்று.
-----------------------------------------------------------------
மேலேயுள்ள செய்திகள் காலச்சுவடிலிருந்து பெறப்பட்டவை! காலச்சுவடு இதழாசிரியருக்கு நன்றியுடன்!!
_______________________________________________
கீழ்க்கண்ட தளங்களில் அவரைப் பற்றி மேலும் படிக்கலாம்.
http://www.kalachuvadu.com/issue-105/page67.asp
.http://www.thinnai.com/?module=displaystory&story_id=60907167&format=htm
.http://www.kalachuvadu.com/issue-115/page44.asp.
--------------------------------------------------------------------------
தமிழ்த்துளி தேவா.
----------------------------------------------------------------------------
இந்தக் கட்டுரை வலைக் கவிஞர்களை சென்றடைய தமிழ்மணம்,தமிலிஷில் வாக்கிடவும்.
-------------------------------------------------------------------------
36 comments:
அற்புதம்...பல கலைகள் தெரியும் போல இருக்கே?
இக்கவிஞரை அதிகம் பரிட்ச்சியமில்லை.
நீங்கள் இட்ட ஓவியம் அழகு.
Blogger பழமைபேசி said...
அற்புதம்...பல கலைகள் தெரியும் போல இருக்கே?///
காலை வணக்கம்!
Blogger நட்புடன் ஜமால் said...
இக்கவிஞரை அதிகம் பரிட்ச்சியமில்லை.
நீங்கள் இட்ட ஓவியம் அழகு.//
நன்றி ஜமால்
நீங்கள் வரைந்திட்ட ஒவியம்
அருமை
வாழ்த்துகள்//
நன்றி திகழ்மிளிர்!
அவரை பற்றி நான் படித்து இருக்கிறேன் என்று நினைக்கிறேன். இதே போல் முக சாயல் உள்ள ஒருவரை வருடங்கள் முன்பு சந்தித்து இருக்கிறேன். அவரா இவர் என்று தெரிய வில்லை .......
இலக்கிய உலகத்திற்கு பெரும் இழப்பு .... வேறு என்ன சொல்ல
"திகழ்மிளிர் said...
நீங்கள் வரைந்திட்ட ஒவியம்
அருமை
வாழ்த்துகள்"
இது ஓர் மரண செய்தியை சொல்லும் பதிவு ...... எதற்கு நீங்க வாழ்த்துக்கள் சொல்லுரிங்க ன்னு புரியல ........
ஒரு மரண செய்திக்கு இவ்வளவு தான் மரியாதையா ???? எனக்கு மேல பின்னோட்டம் போட்டு உள்ள யாரும் வருத்தம் சொல்ல வில்லை ....
கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கு
"பழமைபேசி said...
அற்புதம்...பல கலைகள் தெரியும் போல இருக்கே?"
இங்கே தேவா வின் திறமைகளை பேசுவதற்கு பதில் இறந்தவரை பற்றி பேசலாமே ...
தேவாவின் திறமைகளை பற்றி பேச வேறு ஒரு பதிவு வரும் காலத்தில் வரும்
/ MayVee said...
"திகழ்மிளிர் said...
நீங்கள் வரைந்திட்ட ஒவியம்
அருமை
வாழ்த்துகள்"
இது ஓர் மரண செய்தியை சொல்லும் பதிவு ...... எதற்கு நீங்க வாழ்த்துக்கள் சொல்லுரிங்க ன்னு புரியல ......../
/ MayVee said...
ஒரு மரண செய்திக்கு இவ்வளவு தான் மரியாதையா ???? எனக்கு மேல பின்னோட்டம் போட்டு உள்ள யாரும் வருத்தம் சொல்ல வில்லை ....
கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கு/
உண்மை தான் நண்பரே
மன்னிக்கவும்
இடம் பொருள் ஏவல் அறியாமல்
இடுகையின் பொருளுக்கு பொருத்தா
இடுமொழி இட்டதற்கு மீண்டும் ஒருமுறை மன்னிக்கவும்
அழகான சித்திரங்கள்..,
உணர்வு பூர்வமான முயற்சி.., வாழ்த்துக்கள் ஐயா..,
//”திராவிட இடதுசாரி இயக்கங்கள் தமிழ் புதுக்கவிதை இயக்கத்தை எதிர்த்து செயல்பட்ட போதெல்லாம் //
பற்றி கொஞ்சம் விவரமாகச் சொல்லுங்களேன்
தேவன்மாயம்,
அருமையான பகிர்வு.
பல புதிய விஷயங்களை அறிய முடிந்தது.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
அவரை பற்றி நான் படித்து இருக்கிறேன் என்று நினைக்கிறேன். இதே போல் முக சாயல் உள்ள ஒருவரை வருடங்கள் முன்பு சந்தித்து இருக்கிறேன். அவரா இவர் என்று தெரிய வில்லை .......
இலக்கிய உலகத்திற்கு பெரும் இழப்பு .... வேறு என்ன சொல்ல
//
மேவி ! வருக!
Blogger MayVee said...
"திகழ்மிளிர் said...
நீங்கள் வரைந்திட்ட ஒவியம்
அருமை
வாழ்த்துகள்"
இது ஓர் மரண செய்தியை சொல்லும் பதிவு ...... எதற்கு நீங்க வாழ்த்துக்கள் சொல்லுரிங்க ன்னு புரியல ........//
19 July 2009 19:06
Delete
Blogger MayVee said...
ஒரு மரண செய்திக்கு இவ்வளவு தான் மரியாதையா ???? எனக்கு மேல பின்னோட்டம் போட்டு உள்ள யாரும் வருத்தம் சொல்ல வில்லை ....
கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கு
19 July 2009 19:09
Delete
Blogger MayVee said...
"பழமைபேசி said...
அற்புதம்...பல கலைகள் தெரியும் போல இருக்கே?"
இங்கே தேவா வின் திறமைகளை பேசுவதற்கு பதில் இறந்தவரை பற்றி பேசலாமே ...
தேவாவின் திறமைகளை பற்றி பேச வேறு ஒரு பதிவு வரும் காலத்தில் வரும்
///
மேவி கருத்துக்களுக்கு நன்றி!!
/ MayVee said...
"திகழ்மிளிர் said...
நீங்கள் வரைந்திட்ட ஒவியம்
அருமை
வாழ்த்துகள்"
இது ஓர் மரண செய்தியை சொல்லும் பதிவு ...... எதற்கு நீங்க வாழ்த்துக்கள் சொல்லுரிங்க ன்னு புரியல ......../
/ MayVee said...
ஒரு மரண செய்திக்கு இவ்வளவு தான் மரியாதையா ???? எனக்கு மேல பின்னோட்டம் போட்டு உள்ள யாரும் வருத்தம் சொல்ல வில்லை ....
கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கு/
உண்மை தான் நண்பரே
மன்னிக்கவும்
19 July 2009 19:23
Delete
Blogger திகழ்மிளிர் said...
இடம் பொருள் ஏவல் அறியாமல்
இடுகையின் பொருளுக்கு பொருத்தா
இடுமொழி இட்டதற்கு மீண்டும் ஒருமுறை மன்னிக்கவும்!!
திகழ்மிளிர்!! பரவாயில்லை விடுங்க! வருந்தவேண்டாம்
Blogger SUREஷ் (பழனியிலிருந்து) said...
அழகான சித்திரங்கள்..,
உணர்வு பூர்வமான முயற்சி.., வாழ்த்துக்கள் ஐயா..,///
வாங்க சுரேஷ்!!
//”திராவிட இடதுசாரி இயக்கங்கள் தமிழ் புதுக்கவிதை இயக்கத்தை எதிர்த்து செயல்பட்ட போதெல்லாம் //
பற்றி கொஞ்சம் விவரமாகச் சொல்லுங்களேன்///
எங்கே படிக்கிறாங்க!! உங்களுக்காக பதிவு போட்டா உண்டு!!
தேவன்மாயம்,
அருமையான பகிர்வு.
பல புதிய விஷயங்களை அறிய முடிந்தது.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
///
தமிழுக்கு அர்ப்பணித்த மனிதரைப் பற்றித் தெரிந்து கொல்வோமே
marainthavarukku irangal
ungal padaththirku vaazhththu
மறைந்த கவிஞருக்கு என் அஞ்சலி.. அவரைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி..
அவரைப்பற்றி படித்ததில்லை என்றாலும் உங்கள் மூலம் சிலவற்றை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. நன்றி தேவா சார்.
உங்களின் அவசர ஓவியம் ரொம்ப நல்லா இருக்கு.
கவிஞருக்கு என் அஞ்சலிகள் :((
கவிஞரின் மறைவுக்கு வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்...
பகிர்வுக்கு நன்றி. படம் அருமை பாராட்டுகள் தேவன் சார்
கவிஞர்கள் எல்லாம் கஷ்ட்டப்பட்டு சாகனுமா? கவிதை எழுதறதுக்கே யோசனையா இருக்கு..
கவிஞருக்கு என் அஞ்சலி..
ராஜமார்த்தாண்டன் பற்றிய பகிர்வில் புது விசயங்கள் அறிந்து கொள்ள முடிந்தது. சில கவிதைகள் படித்திருக்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.
உங்களுக்கு ஓவியம் வரையவும் தெரியுமா?
ஓவியம் நன்று.
ராஜ மார்த்தாண்டன் நான் படித்ததில்லை.. அவர் குடும்பத்தாருக்கும், வாசகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
உங்கள் அவசர பென்சில் ஓவியங்கள் நன்றாக உள்ளன.. நீங்கள் ஓவியரா?
ஓவிங்களை அருமையாக தீட்டியுள்ளீர்கள். தொடருங்கள் உங்கள் கலைச்சேவையை.
படங்கள் சூப்பர்...
கலக்குங்க...
:)))
அவரை அதிகம் தெரியாது, நீங்கள் சொல்லி இருக்கும் கவிதை அழகு!
ராஜமார்த்தாண்டன் கவிஞர், திறனாய்வாளர்,தனது மனதில்தோன்றியதை தைரியமாக விமர்சிப்பவர்,இதனால் பல கவிஞர்களிடையே கருத்து மோதல் இருந்தாலும் அவர்களாலே மதிக்கப்படும் மனிதர்,அவருடைய இழப்பு தமிழ்
புதுகவிதைக்கு உலகத்திற்கு பெரிய இழப்பு.
கவிஞரைப் பற்றி நல்ல தகவல்களைத் தந்தீர்கள். ஓவியம் அருமை நண்பரே..
அறிய தந்தமைக்கு நன்றி, அத்தோடு நீங்கள் விந்த படங்கள் பதிவுக்கு பொருத்தமாக இருக்கு நன்றாக அவதானித்தால் புரியும்.
Post a Comment