Monday, 20 July 2009

சாப்பிட்ட பின் மாரடைப்பு!

சாப்பிட்டபின் இரத்தத்தில் சக்கரை 140 க்குக் கீழ் இருக்க வேண்டும். சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு 160 மி.கி. க்குக் கீழ் இருக்க வேண்டும்.

சாப்பிட்ட பின் மாரடைப்பு ஏற்படுவது இந்தியர்களில் அதிகம் காணப்படுகிறது. இந்தியர்களாகிய நாம் தானிய உணவுகளை அதிகமாக உண்கிறோம்.

இதனால் நமக்கு உணவு உட்கொண்ட உடன் சர்க்கரை அளவு இரத்தத்தில் அதிகமாகிறது. இதனால் இரத்தக் குழாய்கள் உடனடியாக பாதிக்கப் படும்.

அதே போல் இரவு உணவு 9-11 மணிவரைதான் உண்கிறோம். இது மிகவும் ஆபத்தானது.

சாப்பிட்ட 2 மணிநேரத்தில் இரத்தத்தில் சர்க்கரை அதிகமாகும். 10 மணிக்கு உணவு சாப்பிட்டால் இரவு 12 மணிக்கு உணவு செரித்து இரத்தத்தில் இனிப்பு அதிகரித்து இரவு முழுக்க அதிகமாகவே இருக்கும்.

இதனால் பகலில் இரத்தப் பரிசோதனை செய்யும் போது குறைவாக சர்க்கரை தெரிவது கண்டு நாம் ஏமாந்து விடுகிறோம். இதனால் இரவு முழுக்க சர்க்கரை உடலை பதம் பார்த்துவிடுகிறது.

மேலை நாட்டினர் சக்கரை  நோயாளிகள் 6-7 க்குள் குறைந்த  உணவு சாப்பிட்டு முடித்து விடுகிறார்கள். இதனால் இரவில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கலாம்.

சாப்பிட்ட பின் ஏன் சக்கரை அதிகமாகிறது?

1.இட்லி.தோசை,சப்பாத்தி,உப்புமா,பொங்கல்,சேமியா,சேவை போன்றவற்றில் மாவுச்சத்து அதிகம். இவற்றை உண்பது சக்கரையைக் கூட்டும்.

2.மூன்று வேளையும் காய்கறிகளற்ற( நார்ச்சத்து இல்லாத) உணவை உண்பது.

3.பாலிஷ் செய்த தானியங்கள், மைதாவில் செய்த நான், ரொட்டி,பன்,பிரட், பீட்ஸா போன்றவை உண்பது.

தீர்வு என்ன?

1.மதியம் தூக்கம் வரும் அளவு உண்ணக் கூடாது.

2.இரவு 8 மணிக்குள் உண்ண வேண்டும்.

3.காய்கறிகளை உண்ண வேண்டும். மேலே சொன்ன தானிய உணவுகளைக் குறைக்க வேண்டும்.

3.தினமும் உடல் பயிற்சி செய்ய வேண்டும்.

4.வாரம் இரண்டு நாட்கள் மதியம் , இரவு சாப்பிட்ட பின் சக்கரை அளவு பார்க்க வேண்டும்.

46 comments:

நட்புடன் ஜமால் said...

நல்ல தகவல்

நன்றி தேவா!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பார்த்தீங்களா தலைவரே...,

இந்த இடுகையைப் படித்த உடனே பின்னூட்டம் கூட போடாமல் உடற்பயிற்சி செய்ய ஓடிக் கொண்டு இருக்கிறார்கள்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இப்போது நேரம் காலை 7.30 தலைவரே..,

தேவன் மாயம் said...

Blogger நட்புடன் ஜமால் said...

நல்ல தகவல்

நன்றி தேவா!
//

வாங்க ஜமால்

தேவன் மாயம் said...

Blogger SUREஷ் (பழனியிலிருந்து) said...

பார்த்தீங்களா தலைவரே...,

இந்த இடுகையைப் படித்த உடனே பின்னூட்டம் கூட போடாமல் உடற்பயிற்சி செய்ய ஓடிக் கொண்டு இருக்கிறார்கள்//

ஆகா kuththuthe

cheena (சீனா) said...

அது சரி - நானும் காலையில் நடக்கிறேன் - கலை மூனே மூணு இட்லி சாபீட்டுடு ரத்தம் 90 நிமிடம் கழித்துச் செக பண்ணி சந்தோசப்பட்டுக்க்றேன்

இப்படி பயமுறுத்துறீங்களே -

எச்சரிக்கை மணிக்கு நன்றி

தேவன் மாயம் said...

அது சரி - நானும் காலையில் நடக்கிறேன் - கலை மூனே மூணு இட்லி சாபீட்டுடு ரத்தம் 90 நிமிடம் கழித்துச் செக பண்ணி சந்தோசப்பட்டுக்க்றேன்

இப்படி பயமுறுத்துறீங்களே -

எச்சரிக்கை மணிக்கு நன்றி///

புது செய்தி இது!!

Unknown said...

நல்ல பதிவு... தொடருங்கள்... கூடுமான வரையில் நீங்கள் அளித்த குறிப்பினை பின்தொடர பார்க்கிறேன்.

இராகவன் நைஜிரியா said...

நன்றி மருத்துவர் தேவா அவர்களே...

அவசியமான இடுகை...

ப்ரியமுடன் வசந்த் said...

//1.இட்லி.தோசை,சப்பாத்தி,உப்புமா,பொங்கல்,சேமியா,சேவை போன்றவற்றில் மாவுச்சத்து அதிகம். இவற்றை உண்பது சக்கரையைக் கூட்டும்.//

என்னோட ஆசையில மண்ணள்ளி போட்டுட்டீங்களே டாக்டர் மண்ணள்ளி போட்டுட்டீங்களே......

ப்ரியமுடன் வசந்த் said...

ஆஹா இது சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமா? அப்ப நமக்கு இல்ல வெட்டுடா வசந்த் வெட்டு இட்லி யாவது தோசையாவது வயிறு ஃபுல்லாகிற வரைக்கும் வெட்டு

ப்ரியமுடன் வசந்த் said...

சக்கரை நோயாளிகளுக்கு தேவையான சக்கரை இது.........

வால்பையன் said...

எச்சரிக்கைக்கு நன்றி தல!

எனக்கும் சர்க்கரை இருக்கு!
ஆரம்ப நிலையில்!

Suresh Kumar said...

நல்ல தகவல்கள் நன்றி டாக்டர்

குடந்தை அன்புமணி said...

சர்க்கரை நோயாளிகள் கவனிக்க வேண்டிய விசயம். எனக்கில்ல. இருந்தாலும் அலட்சியப்படுத்தக் கூடிய விசயமல்ல. உணவு விசயத்தில் நானும் பின்பற்ற முயற்சிக்கிறேன்.

S.A. நவாஸுதீன் said...

பயனுள்ள தகவல் பரிமாற்றம், நன்றி தேவா சார்

மேவி... said...

nalla info sir

சொல்லரசன் said...

பயனுள்ள இடுக்கை டாக்டர் சார் பின்பற்றுகிறேன்

துளசி கோபால் said...

நானும் கவனிச்சுக்கிட்டேதான் இருக்கேன்.

இந்தியாவில் குறிப்பாத் தமிழ் நாட்டில் பார்த்தீங்கன்னா, வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்த்தும் காஃபி & மாலைச் சிற்றுண்டி சாப்புடறாங்க. அப்பவே மணி ஆறரை ஆயிருக்கும். அஞ்சரைக்கு வேலை முடிஞ்சு வீடு வரணுமே.

அப்புறம் இரவுச் சாப்பாடு ஒன்பதரை , பத்து ஆகுது. தங்க்ஸ்கள் அவுங்க சீரியலைப் பார்க்கும் நேரம் தொந்திரவு பண்ணப்பிடாது.

அந்த மாலை டிஃபனை வேணாமுன்னு ஒதுக்குனால் எல்லாம் சரியாகும். மக்கள்ஸ் கேப்பாங்களா?

நியூஸியில் மாலை காஃபி டைம் 4 மணி. யார்யார் எங்கே இருக்காங்களோ அங்கே. ஆறரைக்கு டீ டைம். இரவு உணவுக்கு அங்கே டீ ன்னு பெயர்:-)

நம்ம தோழி ஒருத்தர் வெள்ளைக்கார நண்பர் குடும்பத்தை 'டீ'க்கு வான்னு ( இந்தியா டீ டைம்)கூப்புட்டுட்டு .....
அது பெரிய தமாஷாப் போச்சு:-)

Ashok D said...

Very useful devan

புதுப்பாலம் said...

சக்கரை வியாதி உள்ளவர்கள் சாப்பிட உகந்த பழங்கள், உணவுகள் சிலவற்றை தெரிந்தவர்கள் இங்கு குறிப்பிடவும்.

அன்புடன்
இஸ்மாயில் கனி

க.பாலாசி said...

நல்லதொரு தகவல் பகிர்வு, தங்களின் தகவல் பணியை தொடருங்கள். தெரிந்து கொள்ள தேடிவருகிறோம்.

Unknown said...

நன்றிங்க டாக்டர்.........!!! நெறைய விஷயம் தெருஞ்சுகிட்டேன் ....!!!!

pudugaithendral said...

அருமையான தகவல்கள்.

அச்சடிச்சு எல்லோர் கையிலும் கொடுக்க முடியாட்டியும் முடிஞ்சவரை மெயிலில் அனுப்பி படிக்க வைக்க முயற்சிக்கிறேன்

pudugaithendral said...

மீ த 25த்

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல தகவல்..நன்றி..;-)))))))

நாமக்கல் சிபி said...

நல்ல தகவல்கள் விழிப்புணர்வும் கூட! பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

Anonymous said...

சார் பழைய பல்லவி தான் பயனுள்ள பதிவு..ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நானும் எழுதறேனே என்னதுக்கு...

Admin said...

நல்ல தகவல்கள் நன்றிகள்..

சுந்தர் said...

//இரவு சாப்பிட்ட பின் சக்கரை அளவு பார்க்க வேண்டும// எங்கே கிச்சன்லையா ?

Menaga Sathia said...

நல்ல தகவல்கள் மருத்துவரே!!நன்றி.

சுந்தர் said...

//Blogger cheena (சீனா) said...

அது சரி - நானும் காலையில் நடக்கிறேன் // அய்யா , உங்க வீட்ல இருந்து , உங்க ஆபிசுக்கு நடந்தா பத்தாது., அப்டியே பெரியார் பஸ் ஸ்டாண்ட் வரை தினமும் நடங்க ,

cheena (சீனா) said...

சுந்தர் said...

அய்யா , உங்க வீட்ல இருந்து , உங்க ஆபிசுக்கு நடந்தா பத்தாது., அப்டியே பெரியார் பஸ் ஸ்டாண்ட் வரை தினமும் நடங்க ,

21 July 2009 02:41


இல்ல சுந்தர்

நான் தெப்பக்குளத்த ரெண்டு ரவுண்டு வரேன் - பின்ன அது வரைக்கும் போய்ட்டு வர தூரத்தையும் சேத்துகணும் - சரியா

டாக்டர் சொல்லட்ட்டும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல தகவல்

முனைவர் இரா.குணசீலன் said...

பயனுள்ள தகவல்...

தினேஷ் said...

ரொம்ப தேங்க்ஸ்ண்ணே..

வழிப்போக்கன் said...

பயனுள்ள தகவல்...
நன்றி அண்ணா....

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல பயனுள்ள தகவல் டாக்டர் .அடுத்து மதுரை எப்போ?

அப்துல்மாலிக் said...

தேவா சார் இப்போ என்னாதான் சொல்லவாரீங்க

சாப்பிடனுமா இல்லே கூடாதா

நீங்க சொன்ன உணவுவகைகள் தவிர்த்து பார்த்தால் தினமும் பட்டினிதான்...

//தினமும் உடல் பயிற்சி செய்ய வேண்டும்./

இது இருந்தால் எது வேணுமினாலும் சாப்பிடலாமுலே

ஹேமா said...

நன்றி டொக்டர்.உபயோகமான பதிவு.

பீர் | Peer said...

//அதே போல் இரவு உணவு 9-11 மணிவரைதான் உண்கிறோம்.//

இவை விளங்கவில்லையே டாக்டர்... :?

jothi said...

good one to read,..

jothi said...

நல்ல பதிவு தேவன் மயம்,. எல்லாம் தெரிந்தது, எதுவும் பாலோ பண்ண முடியலையே,.. என்ன பண்றது??

Anonymous said...

good information.
thank you

"உழவன்" "Uzhavan" said...

தகவலுக்கு நன்றி சார்

அத்திரி said...

நல்ல தகவல்................நன்றி

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory