அன்பு நண்பர்களே!
நம் பதிவர்கள் கொலை பற்றியும் அதனால் காவல்துறை மற்றும் சட்டரீதியாக என்ன நடவடிக்கைகள் என்பதுபற்றியும் அறிவது அவசியம்!
அதற்காகவே இந்தச்சிறு பதிவு. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லவும்.
கொலை என்பது என்ன?
கொலையில் சட்டரீதியாக இரண்டு வகைகளாகக் கூறுகிறார்கள்.
1.சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டது, மன்னிக்கப்படுபவை.
2.சட்டரீதியாக தண்டிக்கப்படும் கொலைகள்
2.1-கொலை
2.2-கொலைக்குக்காரணமாக இருத்தல், உயிர் பறிக்கும் வகையில் காயம் ஏற்படுத்துதல்.
1.1.சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டது, மன்னிக்கப்படுபவை
#சட்டரீதியாக மரணதண்டணை வழங்கப்படுதல்
#காவல் துரையினர் சட்டம் ஒழுங்கைக் காக்கும்போது ஏற்படும் இறப்புகள்.
#குற்றம் தடுக்கும்போது மரணம் சம்பவித்தல்- ஒரு பெண்ணைக் கற்பழிக்க முயலும்போது அப்பெண் அவனிடமிருந்து காத்துக்கொள்ளும் போது ஏற்படும் மரணம்.
1.1மன்னிக்கத்தக்கவை
#தற்காத்துக் கொள்வதற்காக வேறு வழியில்லாமல் கொலை செய்தல்.
#விபத்தில் ஏற்படும் மரணம்.
#சட்டரீதியான நடவடிக்கையில் மரணம்
#மனநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளவர் செய்யும் கொலை.
2.சட்டரீதியாக தண்டிக்கப்படும் கொலைகள்
#கொலைசெய்யும் நோக்கத்துடன் மரணம் ஏற்படுத்துதல்
#மரணம் ஏற்படும் அளவுக்கு காயப்படுத்துதல்
#இப்படிச் செய்தால் மரணம் சம்பவிக்கும் என்று தெரிந்து அச்செயலைச் செய்தல்.
ஒரு சண்டையின்போது ரத்தக் குழாய் வெடித்து ஒரு நபர் இறந்துவிட்டார் என்பது பிரேதப் பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டால் அது கொலை அல்ல. இதுபோல் வேறு எந்த சந்தர்ப்பத்திலும் அவர் இறக்க வாய்ப்புள்ளதால் இது கொலையாகக் கருதப்படாது.
ஏற்கெனவே ஒரு நபருக்கு உடல் உள் உறுப்புகளில் வியாதியிருந்தால்-அல்சர், இதயநோய், மண்ணீரல் வீக்கம்,காசநோய்,பார்க்கின்சன் போன்றவை இருக்கும் நபரை ஒருவர் சாதாரணமாகத் தாக்கினார். அதனால் வியாதியுள்ள நபர் நோய் அதிகமாகி இறந்துவிட்டார் என்றால்:-
1. அடித்தவருக்கு கொலை செய்யும் நோக்கம் இல்லை.
2.அவருக்கு இவருக்குள்ள நோய் பற்றித்தெரியாது.
3.அந்தக் காயம் சாதாரண நபருக்கு ஏற்பட்டால் மரணம் ஏற்படாது.
என்றால் அது கொலைக்குற்றம் அல்ல. ஆனால் சாதாரண அல்லது கொடுங்காயங்களுக்கு வழங்கப்படும் தண்டணை வழங்கப்படும்.
உடலின் முக்கிய உறுப்புகளுக்கு சேதம் விளைவிக்கும் செயல்கள்- கத்தியால் நெஞ்சில் குத்துதல், முக்கிய பாகங்களில் ஆயுதங்கள் அல்லது கை,காலால் தாக்குதல் கொலையில் சேரும்.
இந்தியக் குற்றவியல் சட்டம் - பிரிவு 302 படி,Sec.302 I.P.C.கொலைக்குற்றத்துக்கு
1.மரண தண்டணை
2.ஆயுள் தண்டணை
மற்றும் அபராதம்.
இந்தியக் குற்றவியல் சட்டம்- பிரிவு 304-A தவறுதலாக மரணம் ஏற்படுத்துதல்
தவறுதலான ஒரு செயலால் ஒரு மரணத்துக்குக் காரணமானால் இரண்டு வருட கடுங்காவல் மற்றும் அபராதத் தொகை, அல்லது 2 வருட கடுங்காவல் மட்டும்.
இந்தியக் குற்றவியல் சட்டம்-பிரிவு 305-
ஒரு குழந்தை அல்லது மனநலம் குன்றிய ஒருவரின் மரணத்துக்குக் காரணமாக அமைதல்-10 வருட சிறைத்தண்டணை!
இந்தியக் குற்றவியல் சட்டம்-பிரிவு 306-
ஒருவரின் தற்கொலைக்குக் காரணமாக அமைந்தால் ஆயுள் தண்டணை -10 வருடம் வரை மற்றும் அபராதம்.
இந்தியக்குற்றவியல் சட்டம்-பிரிவு 307-
கொலை முயற்சிக்கு 10 வருடம்வரை சிறைத்தண்டணை.
இந்தியக்குற்றவியல் சட்டம்-பிரிவு 309-
தற்கொலை முயற்சிக்கு ஒருவருடம் வரை மற்றும் அபராதம்.
இதில் விளக்கங்கள் நிறைய உள்ளன. சாராம்சத்தை மட்டுமே இங்கு தந்துள்ளேன். விரிவாக வேண்டுமெனில் சொல்லவும்.
தமிழ்த்துளி தேவா.
29 comments:
நல்ல தகவல்கள் டாக்டர். நன்றி
பயனுள்ள பதிவு. நன்றி!
Blogger ☀நான் ஆதவன்☀ said...
நல்ல தகவல்கள் டாக்டர். நன்றி//
நன்றி ஆதவன்!!
shri ramesh sadasivam said...
பயனுள்ள பதிவு. நன்றி!//
வாங்க நண்பரே!!
நிறைய தகவல்கள் நன்றி!
தகவலுக்கு நன்றி ஜி ....
நல்ல பகிர்வு டாக்டர், வழக்கம் போல அசத்தல்.
ஆமா... சட்டத்தில் இருக்கும் ஓட்டைகள் அடுத்த இடுகையில் எதிர்பார்க்கலாமா? :)
என்ன டாக்டர் வக்கீலாயிட்டீங்களா
நல்லா இருக்கு
நெரெய தெரிஞ்சிக்க வேண்டி இருக்கு
நன்றி
வக்கீல் டாக்டரா நீங்க?
ரொம்ப உபயோகமான தகவல் அண்ணே ..
அப்டியே அடிதடிக்கும் உள்ள பிரிவுகள பத்தி கொஞ்சம் சொன்னா நல்லா இருக்கும் ..
தேவா,கொலை செய்றதில இப்பிடி இப்பிடி விதம் விதமா இருக்கா?பயமாத்தான் இருக்கு
உங்க பக்கம் வர.
உண்மையில் தேவையான தகவல்கள்.நன்றி டொக்டர்.
தெளிவான விளக்கம் கொலை பற்றி
நம்ம மக்கள் அடிக்கடி ஏன் இந்த் கொலவெறி நு சொல்றாங்களே இதை எந்த வகைலே சேக்குறது
//காவல் துரையினர் சட்டம் ஒழுங்கைக் காக்கும்போது ஏற்படும் இறப்புகள்//
இதை வைத்துக்கொண்டு வேணும்னே தெரிந்தவரை தாக்குதல்.... இது எந்த வகை சார்
தகவல்கள் தெரிந்ததில் மிக திருப்தி சார்
அப்புறம் ஒண்ணும் மட்டும் சொல்லிக்கிறேன் அஜீத்,விஜய்,தனுஷ்,சிம்பு எல்லாரும் கேட்டுக்கங்கப்பா
//ஒருவரின் தற்கொலைக்குக் காரணமாக அமைந்தால் ஆயுள் தண்டணை -10 வருடம் வரை மற்றும் அபராதம்.//
நல்ல தகவல்கள்..
டாக்டர் நீங்க எப்போழுது வக்கீலானிங்க?
1.இந்திய சட்டப்படி ஒருவன் இறந்துவிட்டான் என்பதை எவ்வாறு உறுதிப்படுத்தபடுகின்றது?
2.மாரடைப்பால் சிகிச்சைகுள் இருக்கும் ஒருவன் (செயற்கை சுவாச கருவிகளுடன்) பிழைக்க வாய்புள்ளதா? செயற்கையாக பொருத்தப்பட்ட கருவிகளை ஒரு மருத்துவரால் அகற்ற முடியுமா? சட்டம் என்ன சொல்கின்றது?
3.அப்படி சிகிச்சையில் இருக்கும் நபரின் செயற்கை கருவிகளை அவரது உறவினர் அனுமதியுடன் எடுத்தால் சில(பல) நேரங்களில் அந்த நபர் இறக்க நேரிடுகின்றது. இது கொலையா? யார் குற்றவாளி?
இன்னும் பின்னர் கேட்கலாம்
நல்ல தகவல்கள்
நன்றி
வக்கீல் தேவா!
நல்ல பயனுள்ள பதிவு.....!! நன்றி....
//cheena (சீனா) said...
என்ன டாக்டர் வக்கீலாயிட்டீங்களா//
repeat.
தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள். நன்றி தேவா சார்
நல்ல தகவல்கள் டாக்டர். நன்றி
தேவையான தகவல்கள்...
வாழ்த்துக்கள்.....
it was very useful. could u please blog on books related to murder and investigation.
பயனுள்ள பதிவு டாக்டர்... நன்றி!!!!
நீங்க டாக்டர்ன்னு நினைத்தேன்...
நீங்க பெரிய வக்கீலா இருப்பீங்க போல???
:)))
நான் ஒரு தப்பும் பண்ணால சாமி...
:)))
பகிர்வுக்கு நன்றி அண்ணா...
பயனுள்ள பதிவு டாக்டர்... நன்றி!!!!
விருது வாங்க என் வலைப்பூவுக்கு வாங்க
நீங்க ஒரு சகலகலாவல்லவருங்கோ
:))
ஐயா என் மேல் 307 வழக்கு உள்ளது அதை எவ்வாறு முடிப்பது சமரசம் மூலம் தீர்வு கிடைக்குமா
Post a Comment