Thursday, 30 July 2009

முன்னேறும் இந்தியா!!

இந்தியா உலக அரங்கில் பல அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டுள்ளது. அறிவியலில் முன்னேறிய நாடுகளே இப்போதும் அடுத்த தலைமுறையையும் ஆளும் என்பது நாம் கண்ட உண்மை.

நீண்ட நாட்களாக அமெரிக்கா இந்தியப் பெருங்கடலிலும்,  அரேபிய வளைகுடாவிலும் தன் கப்பற்படைமூலம் ஆதிக்கம் செலுத்திவருகிறது. அதே போல் சீனாவும் ஆசியாவின் மிகப்பெரிய கடற்படையுடன் பலம் பொருந்திய நாடாகத்திகழ்கிறது.

இந்திய கடற்படை அதிகமாக சோவியத் கடற்கலன்களையே கொண்டுள்ளது.

அதுவும் நீர்மூழ்கிக் கப்பல்கள் விசயத்தில் உலகில் நான்கு நாடுகளே நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரித்து  வந்தன.

ஐந்தாவதாக இந்தியா இப்போது அந்த பலமும், தொழில் நுட்பத்திறனும் மிகுந்த வரிசையில் சேர்ந்துள்ளது.

30 ஆண்டுகள் கடின உழைப்பும் $2.9 பில்லியன் செலவுடனும் I N S ARIHANT - இந்தியாவின் முதல் அணுசக்தி நீர்மூழ்கி அரிஹண்ட் தயாரிக்கப்பட்டுள்ளது.

டாக்டர்.பி.கே.அய்யங்கார்-இதன் பின்னணி விஞ்ஞானிகளில் ஒருவர்.Dr.P.K.IYENGAR

இதன் பலங்கள் என்ன?

 

1. நீர்மூழ்கிகள் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ள கடலின் மேல்பரப்புக்கு வரவேண்டும். இதில் அந்தத்தேவை இல்லை. 100 நாட்களுக்கு மேல் நீருக்கடியில் இருக்க முடியும்.

2.தகவலைப் பெற அனுப்ப ஆழ்கடலில் இயலாது. ஆனால் இந்நீர்மூழ்கி மிககுறந்த அலைவரிசை(V L F) தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் ஆழ்கடலிலிருந்தே தகவல் அனுப்பவோ பெறவோ முடியும்.15 வருடத்துக்கு முன்பே இந்திய விஞ்ஞானிகள் இதைக் கண்டுபிடித்து விட்டனர்.

3.இது பல அமெரிக்க நீர்மூழ்கிகளைவிட வேகமானது...

4.இதனால் இந்தியா முப்படையிலும் அணுசக்தியைக் கையாளும் திறன் படைத்த முன்னணி நாடுகள் வரிசையில் சேருகின்றது.

வாழ்க இந்தியா!!

42 comments:

Raju said...

Informative post..!

சொல்லரசன் said...

வளரட்டும் இந்தியா,வாழ்த்துவோம் விஞ்ஞானிகளை.

மங்களூர் சிவா said...

வாழ்க இந்தியா!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

செய்தித் தாளில் படித்த விஷயம்தான் எனினும் எளிமையாக அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

ஈரோடு கதிர் said...

நல்ல செய்தி

நன்றி

நட்புடன் ஜமால் said...

வாழ்க இந்தியா!

தங்களுக்கும் நன்றி.

Suresh Kumar said...

நல்ல தகவல் தான் . ஆயுத தயாரிப்பில் அக்கறை காட்டும் இந்தியாவில் மனிதாபிமானம் அற்று போனதே .

ப்ரியமுடன் வசந்த் said...

ஜெய் ஹிந்த்...

தேவன் மாயம் said...

டக்ளஸ்... said...
Informative post..!///

வாங்க டக்ளஸ்!!

தேவன் மாயம் said...

சொல்லரசன் said...
வளரட்டும் இந்தியா,வாழ்த்துவோம் விஞ்ஞானிகளை///

சொல்லரசு நன்றி!!

தேவன் மாயம் said...

மங்களூர் சிவா said...
வாழ்க இந்தியா///

நன்றி!!

தேவன் மாயம் said...

கதிர் - ஈரோடு said...
நல்ல செய்தி

நன்றி!!

வாங்க கதிர்

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...
வாழ்க இந்தியா!

தங்களுக்கும் நன்றி//

நன்றி !!

தேவன் மாயம் said...

பிரியமுடன்.........வசந்த் said...
ஜெய் ஹிந்த்.///

வாங்க வசந்த்!!

Vidhoosh said...

நேத்துதான் ராக்கி சாவந்த் பற்றிய பதிவை படிச்சிட்டு, மனசுக்குள்ள "ரொம்ப முக்கியம்"னு திட்டிட்டு போனேன்.

ஒருநாள் மொக்கை, மறுநாள் அட்ரா சக்கை அட்ரா சக்கை.
:)

-வித்யா

பாலா said...

நானும் காலரை தூக்கி விட்டுக்கொள்கிறேன்

cheena (சீனா) said...

இந்தியா இன்னும் முன்னேறி வல்லரசு நாடாகவும் ஐக்கிய நாடுகள் சபையில் வீட்டோ பெறவும் - நல்வாழ்த்துகள். பிராத்தனைகள்.

1000 கோடி ரூபாய்க்கும் மேலாக செலவழித்தாலும் மகிழ்ழ்ச்சியே - நாமும் இணைகிறோம் மற்ற நாடுகளுடன்

செய்தி பகிர்வினிற்கும் விளக்கத்திற்கும் நன்றி தேவன்

☀நான் ஆதவன்☀ said...

நல்ல தகவல்கள் டாக்டர்.

சந்தோஷமா இருக்கு இதை படிக்கும் போது.

வால்பையன் said...

மூண்ராவதாக இருக்கும் படத்தில் கப்பலின் முகப்பை பாருங்கள்!
இலங்கையின் கொடி இருக்கிறது!


இது இந்திய தயாரிப்பா!?
இல்லை கூட்டு முயற்சியா!?
இல்லை இலங்கைக்காக தயாரிக்கப்பட்டதா!?

குடந்தை அன்புமணி said...

தகவல் பகிர்வுக்கு நன்றி தேவா சார். விஞ்ஞானத்தில் நம் இந்தியாவின் முன்னேற்றம் பிரமிக்க வைக்கிறது. ஆனால் விவசாயம்...

azhagan said...

Adding a nuclear submarine to our Navy is indeed a good thing. But are we really moving in the right direction?. Are we doing enough for the citizens, with respect to Good water, at least one proper meal a day, proper education to the younger generation?
In my view achievements in these areas will only mean India's prosperity, not more weaponery or sending a man to the moon.

தேவன் மாயம் said...

Blogger Vidhoosh said...

நேத்துதான் ராக்கி சாவந்த் பற்றிய பதிவை படிச்சிட்டு, மனசுக்குள்ள "ரொம்ப முக்கியம்"னு திட்டிட்டு போனேன்.

ஒருநாள் மொக்கை, மறுநாள் அட்ரா சக்கை அட்ரா சக்கை.
:)

-வித்யா///

என் பதிவுகள் மாறிமாறி வரும்... கண்டுக்காதீங்க!!1

தேவன் மாயம் said...

பாலா said...

நானும் காலரை தூக்கி விட்டுக்கொள்கிறேன்///

நல்லா...............

தேவன் மாயம் said...

பாலா said...

நானும் காலரை தூக்கி விட்டுக்கொள்கிறேன்///

நல்லா...............

தேவன் மாயம் said...

cheena (சீனா) said...

இந்தியா இன்னும் முன்னேறி வல்லரசு நாடாகவும் ஐக்கிய நாடுகள் சபையில் வீட்டோ பெறவும் - நல்வாழ்த்துகள். பிராத்தனைகள்.

1000 கோடி ரூபாய்க்கும் மேலாக செலவழித்தாலும் மகிழ்ழ்ச்சியே - நாமும் இணைகிறோம் மற்ற நாடுகளுடன்

செய்தி பகிர்வினிற்கும் விளக்கத்திற்கும் நன்றி தேவன்///

தொடர்ந்து விஞ்ஞானத்தில் முன்னேறாவிட்டால் நசுக்கிவிடுவார்கள்!!

தேவன் மாயம் said...

Blogger ☀நான் ஆதவன்☀ said...

நல்ல தகவல்கள் டாக்டர்.

சந்தோஷமா இருக்கு இதை படிக்கும் போது.///

சந்தோசத்தைப்பகிர்ந்ததற்கு நன்றி!!

தேவன் மாயம் said...

வால்பையன் said...

மூண்ராவதாக இருக்கும் படத்தில் கப்பலின் முகப்பை பாருங்கள்!
இலங்கையின் கொடி இருக்கிறது!


இது இந்திய தயாரிப்பா!?
இல்லை கூட்டு முயற்சியா!?
இல்லை இலங்கைக்காக தயாரிக்கப்பட்டதா!?//

முழுக்க இந்தியத்தயாரிப்பு!!

தேவன் மாயம் said...

குடந்தை அன்புமணி said...

தகவல் பகிர்வுக்கு நன்றி தேவா சார். விஞ்ஞானத்தில் நம் இந்தியாவின் முன்னேற்றம் பிரமிக்க வைக்கிறது. ஆனால் விவசாயம்...///

நம்மதாங்க பண்ணனும்!!

தேவன் மாயம் said...

azhagan said...

Adding a nuclear submarine to our Navy is indeed a good thing. But are we really moving in the right direction?. Are we doing enough for the citizens, with respect to Good water, at least one proper meal a day, proper education to the younger generation?
In my view achievements in these areas will only mean India's prosperity, not more weaponery or sending a man to the moon.//

நல்ல கருத்து!! ஹார்வர்டில் தங்கப் பதக்கம் வாங்கிய நம் மந்திரிகளாலோ, அமார்த்தியா சென்னாலோ செய்யமுடியவில்லை. அப்துல் கலாமை உக்காரவச்சோம் ......முடியல................!!!

யாசவி said...

informative

:-)

Radhakrishnan said...

அற்புதமான அரிய தகவல் ஐயா. மிக்க நன்றி.

Menaga Sathia said...

நல்லத் தகவலை சொல்லிருக்கிங்க தேவா!!.

ஜெய் ஹிந்த்!!

Unknown said...

நல்ல பதிவு...!! நல்ல விளக்கம்...!!


"முன்னேறும் இந்தியா!!" --------> ஆனா... தலைப்புதான் கொஞ்சம் ஓவர் பில்டப் .....!!

தினேஷ் said...

ஜெய் ஹிந்த்

jothi said...

good info,.. thanks

? said...
This comment has been removed by the author.
? said...

//மூண்ராவதாக இருக்கும் படத்தில் கப்பலின் முகப்பை பாருங்கள்!
இலங்கையின் கொடி இருக்கிறது!//

என்ன சார், கண்ட படத்தை போட்டு வால்பையன் முதற் கொண்டு பலரை குழப்பிவிட்டீர்கள்!

நீங்கள் போட்டுள்ள படம் இத்தாலியின் U-212A நீர்மூழ்கி கப்பல்


இந்தியாவின் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பலை படமெடுக்க அரசு அனுமதி இல்லை. ஏனெனில் இவர்கள் பில்டப் தருவது போல் இது முழுக்க இந்திய தொழில்நுட்பம் அல்ல. இதனுடைய டிசைன் ரஷ்யாவின் Borei
நீர்மூழ்கி கப்பலை
அடிப்படையாக கொண்டது. ரஷ்யா இதனை கட்டவும் இயக்கவும் ரகசிய பயிற்சி அளித்ததாம்

இப்படித்தான் அப்துல் கலாம் உட்பட நமது விஞ்ஞானிகளும் அரசியல்'வியாதி'களும், பல சமயங்களில், தொழில்நுட்பத்தினை வெளியிலிருந்து நைசாக இட்டாந்து indigenous எனக் கூவுகிறார்கள்.

ஆ.ஞானசேகரன் said...

நல்ல செய்தி, நல்ல பகிர்வு

வாழ்க வளர்க
இந்தியா!

S.A. நவாஸுதீன் said...

வாழ்க இந்தியா, வளர்க இந்தியர்களின் புகழ்.

सारे जहांसे अचा. हिंदुस्तान हमारा. (சாரே ஜகான்சே அச்சா. ஹிந்துஸ்தான் ஹமாரா)

கிரி said...

சூப்பரு!

அப்துல்மாலிக் said...

Be Proud I am an INDIAN..!!

சரவணன். ச said...

இது ஒன்னும் பெரிய சாதனை இல்லை

படிப்பு அரிவு இல்லாமல் நம் ஈழதமிழனின் ( விடுதலைப் புலிகள்) நீர் மூழ்கி கப்பல் 1000000 .... மடங்கு சிறந்தது.

“ முன்னேறுமா தமிழ் ஈழம்”

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory