பன்றிக்காய்ச்சல் பற்றிப் பல விசயங்களை அவ்வப்போது பலரும் பதிந்து கொண்டு இருக்கிறோம். அது பற்றிய புதிய தகவல்கள் சிறிதாயினும் அனைவரையும் சென்றடைவது அவசியம்.
டாமிஃப்ளூ மாத்திரையை 48 மணி நேரத்துக்குள் சாப்பிட்டால் வைரஸின் பெருக்கம் தடைபடும் என்று கண்டோம்.
கீழே பழைய இடுகைகள்:
1.பன்றிக் காய்ச்சல்- காத்துக்கொள்ள-14 !!
2.பன்றிக் காய்ச்சல்-2
தற்போது புதிய மருந்து ஒன்றை உபயோகிக்கலாம் என்று புதிய செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.
பாஸ்போ ஆண்டிஜென்(phosphoantigen) என்ற இந்த மருந்து எலும்பு வியாதியான ஆஸ்டியோபோரோசிஸ் என்ற வியாதிக்கு உபயோகப்படுத்தப்படுவது.
டாமிஃப்ளூ - வைரஸின் பெருக்கத்தைக்குறைக்கும் தன்மையுடையது.
ஆனால் பாஸ்போஆண்டிஜென்கள் வைரஸ் பாதித்த செல்களை அழித்துவிடுகின்றனவாம். இதனை எப்படி செய்கிறது என்றால் நோய் எதிர்ப்பு வெள்ளை அணுக்களின் ஒரு பிரிவை இது பல்மடங்கு பெருகச்செய்துவிடுகிறது.
இந்த வெள்ளை அணுக்கள் பெருகி வைரஸ் பாதித்த செல்களை சாப்பிட்டுவிடுகிறதாம். இந்த வெள்ளை அணுக்கள்தான் உடலின் சாதாரண நோய் எதிர்ப்பு சக்தி அளிப்பவை.
இதே H1 N1 வைரஸால் 1918ல் ஸ்பெயினில் வந்த ஸ்பானிஷ் ஃப்ளூவினால் 50மில்லியனிலிருந்து 100 மில்லியன் மக்கள் இறந்தனர்.
ஆயினும் தற்போது வந்துள்ள பன்றிக்காய்ச்சல் ஸ்பானிஷ் ஃப்ளூ போல் கொடுமையானது அல்ல என்பது ஒரு ஆறுதலான விசயம்.
19 comments:
நல்ல தகவல் டாக்டர்...
ஸ்பானிஷ் ஃப்ளூ; கெட்ட செய்தியிலும் ஒரு நல்ல செய்தி.
பீர் | Peer said...
நல்ல தகவல் டாக்டர்...
ஸ்பானிஷ் ஃப்ளூ; கெட்ட செய்தியிலும் ஒரு நல்ல செய்தி.//
இது ஒரு அப்டேட்தான்!!!
நம்பிக்கையூட்டும் நல்ல தகவல்
Dr.எம்.கே.முருகானந்தன் said...
நம்பிக்கையூட்டும் நல்ல தகவல்///
நன்றி!! மருத்துவரே!!!
நல்லதொரு தகவல்.
பால் வார்த்தீங்க....
nalla thagaval doctore
நல்ல தகவல்களைப் பகிர்ந்திருக்கிறீர்கள் தேவா சார்!
முடிந்தால் இதய மாற்று அறுவை சிகிச்சை பற்றிய விரிவான பதிவிட வேண்டுகிறேன்.
நன்றி!
வந்தாச்சா மருந்து
சந்தோஷம்
நன்றி தேவா!
நல்ல தகவல் டாக்டர்!
ரொம்ப நன்றி தேவா சார். தொடர்ந்து இதுபற்றி தகல்கள் தவறாமல் தருவதற்கு
மற்றுமொரு மருந்து வந்தாச்சா
அதை சரியான வழியில் பயன்படுத்தினால் மேலான மக்கள் குணமடைய சாத்தியக்கூறுண்டு
நல்ல பகிர்வு
நல்ல தகவல்கள் தந்த டாக்டருக்கு நன்றி
நல்ல தகவல். நன்றிகள் பல.
அன்புள்ள தேவன் மாயம்
"The population of Spain is approximately 40 million with an overall density of 79 persons per sq km (206 per sq mi)."
ஸ்பெயினில் 1918 ல் 50ல் இருந்து 100 மில்லியன் மக்கள் இறந்தனர் என்பது சரியான தகவல்தானா?? இல்லை உலகெங்கும் இறந்தோர் எண்ணிக்கையா ???
நல்லதொரு தகவல் டாக்டர்.
Also please write in detail about medical insurance.
--vidhya
நல்ல தகவல்..... அருமை... நன்றி.......
Thanks a lot doctor Sir...
Post a Comment