மைக்கேல் ஜாக்சன் மரணம் ஒரு எதிர்பாராத நிகழ்வாக முடிந்துவிட்டது. அவரின் திடீர் மரணம் அவரின் ரசிகர்கள் மட்டும் அல்லாமல் உலக மக்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எப்படி இந்த மரணம் ஏற்பட்டது? இதற்கு என்ன காரணம் என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று. இதனை ஆராய்வது ஜாக்சன் இறந்தது எப்படி? என்று கண்டுபிடிப்பதைவிட நாம் அறியாத சில( அறியவேண்டிய!!) விசயங்களுக்கு நம்மை இட்டுச்செல்கிறது. இந்த செய்திகள் தமிழ் மக்களாகிய நமக்குப் புதிது.
ஜாக்சனின் மருத்துவ அறிக்கை ஜாக்சன் அதிக போதை மருந்துகள் உட்கொண்டார் என்று சொல்கிறது. ஒரு மிகப்பெரிய கலைஞனை நாம் போதைப் பழக்கத்தால் இழந்துவிட்டோம் என்பது மிகப்பெரிய சோகம்.
ஜாக்சன் ஏன் போதைப்பொருட்களை எடுத்துக்கொண்டார்? ஜாகசன் இசைத்துறைக்கு வருவதற்கு முன்பே போதைக்கு அடிமையா? என்ற கேள்விகள் நம்முன் எழாமல் இல்லை.
ஜாக்சன் இறந்த அறையில், ஊசிமருந்துக் குழாய்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஊசி மருந்துகள் காணப்பட்டுள்ளன. இது ஜாக்சனுக்கு மட்டுமல்ல..தற்போது மேற்கத்திய இசைத்துறையில் காணப்படும் சாதாரண நிலைமை ஆகும்.
ஜாக்சன் புரோபஃபால் என்ப்படும் மருந்தை அதிக அளவில் உபயோகித்துள்ளார். இந்த புரோபஃபால் அறுவை சிகிச்சைக்கு உபயோகப்படுத்தப்படும் மயக்க மருந்து ஆகும்.
டிப்ரிவின்(Diprivan, or Propofol) என்ற பெயரில் பிரபலமாக உள்ள ப்ரொபஃபால், மில்க் ஆஃப் அம்னேஷியா என்றும் அழைக்கப்படுகிறது. பால் போல் இருக்கும் இதனை உறக்கம் வராமல் இருக்கும் அம்னேஷியாவிற்குக்கூட உபயோகப்படுத்துகிறார்கள்.
ஈபே( e bay) எனப்படும் ஆன்லைன் ஏல நிறுவனம் கூட இந்த மருந்தை விற்றுள்ளது என்றால் நமது சர்வதேச போதை தடுப்புத்துறை எவ்வளவு மோசமாகச் செயல்படுகிறது என்று பாருங்கள்.
76% மேல் அமெரிக்க மக்கள் கஞ்சாவின் பல்வேறு வடிவ போதை மருந்துகளை உபயோகிக்கிறார்கள்.15.9மில்லியன் 12 வயதுக்கு மேற்பட்டோர் போதை மருந்து உட்கொள்கிறார்கள். 8வது கிரேட் மாணவர்களில் 35%பேர் போதை மருந்தை உட்கொண்டுள்ளனர்.
உங்கள் வீட்டில் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யும் காவல் போதை தடுப்புத்துறையினர்
1. சினிமாத்துறை
2. ஆடை பேஷன் துறை
3. மாடலிங் துறை
4. இசைத்துறை
ஆகியவற்றில் புரளும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொதைப் பொருட்களை ஏன் கண்டுகொள்வதில்லை? ஏர்போர்ட்டில் மட்டும்தான் இவற்றைப் பிடிக்கவேண்டும், வேறு எங்கும் பிடிக்கக் கூடாது என்று ஏதும் சட்டம் உள்ளதா?
பொதுவாக இதனை ஆராய்ந்தால் மேலை நாட்டுப்பாடகர்களில் போதைப் பழக்கம் மிக அதிகம் என்பது தெரிகிறது. எல்லாத்துறைகளிலும் போதைத்தடுப்பு நடவடிக்கைகளைக் கொண்டுவரும் சர்வதேச அமைப்புகள் பாடகர்கள் மேடையில் நிகழ்ச்சிகள் செய்யும் முன் சோதனை செய்வதில்லை. இந்தச் சோதனையை எல்லாத்துறையில் உள்ளோரிடமும் அடிப்படைச் சோதனையாக செயல்படுத்த வேண்டும். இல்லையென்றால் பிரபலங்களின், பாடகர்களின் தலைவிதியை யாராலும் மாற்ற முடியாது.
39 comments:
டாக்டர், அறிவார்த்தமான பதிவு, ஜாக்சன் மறைவு,ஆங்கில பாப் ரசிகர்களுக்கு பெரும் இழப்பு. நான் அவரது அதி தீவிர ரசிகன்,என் மகனுக்கு "ஜாக்சன்"என்று பெயர் வைக்குமளவுக்கு. போதை மருந்து தொடர்பான உங்கள் கேள்விகள் நியாயமானதே.
போதை உலகின் தலை நகரம் எது தெரியுமா? நம்பினால் நம்புங்கள் "கோவா"தான்.
அட! இம்பூட்டு இருக்கா இதன் பின்னாடி ..
------------
மெய்யாலுமே கோவா- வா ...
நல்லாத்தான் யோசிக்கறீங்க
u r right many bollywood stars addicted to drugs
:-)
நல்லதொரு உண்மையான விளக்கம்.
jerry eshananda. said...
டாக்டர், அறிவார்த்தமான பதிவு, ஜாக்சன் மறைவு,ஆங்கில பாப் ரசிகர்களுக்கு பெரும் இழப்பு. நான் அவரது அதி தீவிர ரசிகன்,என் மகனுக்கு "ஜாக்சன்"என்று பெயர் வைக்குமளவுக்கு. போதை மருந்து தொடர்பான உங்கள் கேள்விகள் நியாயமானதே.
போதை உலகின் தலை நகரம் எது தெரியுமா? நம்பினால் நம்புங்கள் "கோவா"தான்///
உங்கள் கருத்துக்கு நன்றி ஈஷா! ஜாக்சன் மீது இவ்வளவு ஈடுபாடா!!
நட்புடன் ஜமால் said...
அட! இம்பூட்டு இருக்கா இதன் பின்னாடி ..
------------
மெய்யாலுமே கோவா- வா ...//
இந்தியாவுக்கு கோவா!!
இயற்கை said...
நல்லாத்தான் யோசிக்கறீங்க!//
நன்றி இயற்கை!!
யாசவி said...
u r right many bollywood stars addicted to drugs
:-)///
உண்மைதான்!!!
துபாய் ராஜா said...
நல்லதொரு உண்மையான விளக்கம்///
துபாய்ராஜா கருத்துக்கு நன்றி!!!
அடி ஆத்தி ,,,,,,,,,,,,, சொல்லவே இல்ல !!!
நல்ல விளக்கம் டாக்டர்!
சரிதான்.
பிரபா said...
அடி ஆத்தி ,,,,,,,,,,,,, சொல்லவே இல்ல !!!
/
உண்மைதாங்க!
தமிழ் பிரியன் said...
நல்ல விளக்கம் டாக்டர்//
உண்மை இதுதான் பிரியன்!!
டக்ளஸ்... said...
சரிதான்.//
டக்ளஸ் நன்றி!!
நல்ல நல்ல தகவல்களை தொகுத்துள்ளீர்கள் அன்பரே...
கஞ்சா போன்ற போதைப்பொருட்களை ஒழிப்பதில் நமது அரசாங்கமும் கொஞ்சம் மெத்தனமாகவே இருக்கிறது.
பொதுவாகவே கலைஞர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுகிறவர்கள், நத்தை[உள்ளே இருக்கிற] மாதிரி மிகவும் மென்மையானவர்கள், சிறு விமரிசனமும் கூட துவளச் செய்துவிடுகிற அளவுக்கு பலவீனமானவர்கள் இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்!
ஆனால் எதுவுமே, கலைஞர்களை, ஏதோ ஒரு பழக்கத்திற்கு அடிமையாகச் செய்வதில் இருந்து காப்பாற்றப்போவதில்லை!
வெளிச்சம் விழுந்ததால், ஜாக்சனுடைய பலவீனம் தெரிய வந்திருக்கிறது. நம்முடையது எப்போது,நமக்கே தெரிய வரும்?
க. பாலாஜி said...
நல்ல நல்ல தகவல்களை தொகுத்துள்ளீர்கள் அன்பரே...
கஞ்சா போன்ற போதைப்பொருட்களை ஒழிப்பதில் நமது அரசாங்கமும் கொஞ்சம் மெத்தனமாகவே இருக்கிறது///
ஆம்!! இன்னும் கூடுதல் கவனம் தேவை!!
கிருஷ்ணமூர்த்தி said...
பொதுவாகவே கலைஞர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுகிறவர்கள், நத்தை[உள்ளே இருக்கிற] மாதிரி மிகவும் மென்மையானவர்கள், சிறு விமரிசனமும் கூட துவளச் செய்துவிடுகிற அளவுக்கு பலவீனமானவர்கள் இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்!
ஆனால் எதுவுமே, கலைஞர்களை, ஏதோ ஒரு பழக்கத்திற்கு அடிமையாகச் செய்வதில் இருந்து காப்பாற்றப்போவதில்லை!
வெளிச்சம் விழுந்ததால், ஜாக்சனுடைய பலவீனம் தெரிய வந்திருக்கிறது. நம்முடையது எப்போது,நமக்கே தெரிய வரும்///
இது ஒருபானைச் சோற்றுக்கு ஒரு சோற்றுக்கு ஒரு சோறு பதம்போல்தான்!!
இந்தியாவில் கூட சாமியார்கள் பலர் கஞ்சா புகைக்கிறார்கள், அவர்களை ஏன் போலிஸ் பிடிப்பதில்லை!
ரொம்ப தெளிவா அறிவுப்பூர்வமா விளக்கி இருக்கீங்க டாக்டர். நன்றி
அருமையான பதிவு.. விஜய்க்கும் நடனத்திற்கும் இருக்கும் நெருங்கிய தொடர்பினால் நானும் இவரை அடிக்கடி கவனித்ததுண்டு..
நல்ல தகவல்களை தொடர்ந்து தருகிறீர்கள், நன்றி நண்பரே.
என்ன சொல்வது. பணம் இருப்பவர்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள் போலிருக்கு
இந்தியாவுக்கு கோவா என்றால் உலகத்துக்கு எது டாக்டர்?
//ஏர்போர்ட்டில் மட்டும்தான் இவற்றைப் பிடிக்கவேண்டும், வேறு எங்கும் பிடிக்கக் கூடாது என்று ஏதும் சட்டம் உள்ளதா? //
கேள்வி கேட்டுள்ள விதம் நன்று.
உள்ளேன் ஐயா சொல்ல வந்தேன்!//இந்தியாவில் கூட சாமியார்கள் பலர் கஞ்சா புகைக்கிறார்கள், அவர்களை ஏன் போலிஸ் பிடிப்பதில்லை!//
வால் கண்ணில் பட்டது:)
வால்பையன் said...
இந்தியாவில் கூட சாமியார்கள் பலர் கஞ்சா புகைக்கிறார்கள், அவர்களை ஏன் போலிஸ் பிடிப்பதில்லை!///
நான் ஒரு சமுதாயப்பிரச்சினையைச் சொன்னால் .......ீங்க சாமியாரைச் சொல்கிீர்கள். சட்டம் ஒன்றுதான்..
டாக்டர் அண்ணே, இன்றுதான் ரிப்போர்ட்டர் புத்தகத்தைப் பார்த்தேன்.மிகவும் மகிழ்வாக உணர்ந்தேன். இன்னும் பல உச்சங்களைத்தொட இறைவனை வேண்டுகின்றேன்.
//நான் ஒரு சமுதாயப்பிரச்சினையைச் சொன்னால் .......ீங்க சாமியாரைச் சொல்கிீர்கள். சட்டம் ஒன்றுதான்.. //
சாமியார் தான் இன்று சமுதாயத்தில் பெரிய பிரச்சனை!
பணமும் புகழும் சேர சேர போதை என்ற வஸ்துக்கு அடிமையாவது (அப்போதான் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்ற நினைப்பு) அதிகரிக்கிறது, இது மறுக்கப்படாத ஒன்று, கேட்டால் ஸ்ட்ரெஸ் அதிகம் என்கிறார்கள்.....
நல்ல தகவல் தேவா சார்
இதை படிக்கும்ப்போது நீங்கள் சொன்ன போதை வஸ்து உபயோகித்தார் என்று நியூஸில் பார்க்கிறேன்
//வால்பையன் said...
//நான் ஒரு சமுதாயப்பிரச்சினையைச் சொன்னால் .......ீங்க சாமியாரைச் சொல்கிீர்கள். சட்டம் ஒன்றுதான்.. //
சாமியார் தான் இன்று சமுதாயத்தில் பெரிய பிரச்சனை!
//
சரிதான்......
//சர்வதேச அமைப்புகள் பாடகர்கள் மேடையில் நிகழ்ச்சிகள் செய்யும் முன் சோதனை செய்வதில்லை.//
nice idea thevan
ஜாக்சன் மரணத்துல ..... உங்கனால முடுஞ்ச அளவுக்கு புதுசா எதையோ பத்த வெச்சுருக்கீங்க...!! நல்லாவே பொகையுது...!! வாழ்த்துக்கள்...!!
//ஏர்போர்ட்டில் மட்டும்தான் இவற்றைப் பிடிக்கவேண்டும், வேறு எங்கும் பிடிக்கக் கூடாது என்று ஏதும் சட்டம் உள்ளதா? //
அட நல்ல கேள்விதானே...
மிக நல்ல விடங்களை பகிர்ந்துள்ளீர்கள் டாக்டர்
//உங்கள் வீட்டில் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யும் காவல் போதை தடுப்புத்துறையினர் 1. சினிமாத்துறை 2. ஆடை பேஷன் துறை 3. மாடலிங் துறை 4. இசைத்துறை ஆகியவற்றில் புரளும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொதைப் பொருட்களை ஏன் கண்டுகொள்வதில்லை? ஏர்போர்ட்டில் மட்டும்தான் இவற்றைப் பிடிக்கவேண்டும், வேறு எங்கும் பிடிக்கக் கூடாது என்று ஏதும் சட்டம் உள்ளதா? //
ஆம் அரசாங்கம் யோசிக்குமா?
Post a Comment