நோய்க்குறிகள் | சாதாரண சளி | பன்றிக்காய்ச்சல் . |
காய்ச்சல் | காய்ச்சல் பெரும்பாலும் குறைவு. | 80% காய்ச்சல் இருக்கும். 100 டிகிரிக்குமேல் காய்ச்சல் 3-4 நாட்களுக்கு இருக்கும். . |
இருமல் | இருமலும் நல்ல சளியும் இருக்கும். | சளியில்லாத வறட்டு இருமல் இருக்கும். . |
உடல் வலி | உடல் வலி மிதமாக இருக்கும். | கடுமையான உடல் வலி பன்றிக்காய்ச்சலில் இருக்கும். . |
மூக்கடைப்பு | மூக்கடைப்பு இருக்கும். தன்னாலேயே ஒரு வாரத்தில் சரியாகிவிடும். . | பன்றிக்காய்ச்சலில் மூக்கடைப்பு அரிது. |
குளிர் நடுக்கம் | குளிர் நடுக்கம் பெரும்பாலும் இருக்காது. . | 60% பன்றிக்காய்ச்சலில் பாதிக்கப்பட்டோருக்கு குளிர் நடுக்கம் இருக்கும். |
உடல் சோர்வு | உடல் சோர்வு குறைவாக இருக்கும். . | உடல் சோர்வு அதிகமாக இருக்கும். |
தும்மல் | தும்மல் சாதாரணமாகக் காணப்படும். . | தும்மல் பன்றிக்காய்ச்சலில் காணப்படுவதில்லை. |
நோய்க்குறிகள் தோன்றும் காலம். | சாதாரண சளி மெதுவாக ஆரம்பிக்கும். சில நாட்களில் அதிகமாகும். | இதன் தாக்குதல் உடனே தெரியும்.3-6 மணி நேரத்தில் அதிக காய்ச்சல், உடல் வலி,பலகீனம் ஆகியவை ஏற்படும். . |
தலைவலி | சாதாரண சளியில் தலைவலி அதிகமாக இருக்காது. | பன்றிக்காய்ச்சலில் தலைவலி மிக அதிகமாக இருக்கும். 80% பேருக்கு தலைவலி இருக்கும். . |
நெஞ்சில் பாரம், வலி | சாதாரண சளியில் நெஞ்சில் வலி, மூச்சுத்திணறல் இருக்காது. | பன்றிக்காய்ச்சலில் நெஞ்சு வலி, மூச்சுத்தினறல், நெஞ்சில் கட்டை போட்டது போன்ற உணர்வு ஆகியவை இருக்கும். |
பன்றிக் காய்ச்சலுக்கும் சாதாரண சளிக்கும் உள்ள வித்தியாசங்களை மேலே கொடுத்து இருக்கிறேன். இவை பொதுவானவைதான். இவற்றை 100% எடுத்துக்கொள்ள வேண்டாம். தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே தொகுத்துள்ளேன்!!
29 comments:
பகிர்தலுக்கு நன்றி!
நன்றி டாக்டர், 4,5 நாளாக தும்மல், சளி, லேசான் இரும்ல் இருந்தது, இப்போ உங்கள் தகவல் மூலம் பயம் நீங்கியது.
நன்றி
நல்ல ஒப்பீடு.. தகவலுக்கு ரொம்ப நன்றி..டாக்டர் சார்.
மிக மிக உபயோகமான இடுகை
மிக்க நன்றி
வால்பையன் said...
பகிர்தலுக்கு நன்றி!
01 September 2009 00:19///
நன்றி.. வால்ஸ்!
இல்யாஸ் said...
நன்றி டாக்டர், 4,5 நாளாக தும்மல், சளி, லேசான் இரும்ல் இருந்தது, இப்போ உங்கள் தகவல் மூலம் பயம் நீங்கியது.
நன்றி!!///
இலியாஸ் சரியாகிவிடும்!!
அதிரை அபூபக்கர் said...
நல்ல ஒப்பீடு.. தகவலுக்கு ரொம்ப நன்றி..டாக்டர் சார்///
அதிரை நன்றி!
கதிர் - ஈரோடு said...
மிக மிக உபயோகமான இடுகை
மிக்க நன்றி
01 September 2009 ///
நன்றி நண்பரே!!
தேவையானதொரு பதிவு தேவா சார். பலரின் பயம் நீக்கும் உங்கள் பதிவு.
S.A. நவாஸுதீன் said...
தேவையானதொரு பதிவு தேவா சார். பலரின் பயம் நீக்கும் உங்கள் பதிவு///
நவாஸ்!! உற்சாகப்படுத்தியதற்கு நன்றி!
நல்ல பகிர்வு தேவா!
எனக்கும் பயம் நீங்கியது.
நன்றி டாக்டர்.மிகவும் பயனுள்ள பயம் போக்கும் இடுகை.
ஆனாலும் இதுவரை பன்றிக் காய்ச்சல் வந்து குணம் ஆனவர்கள் பற்றிய சேதியில்லை.
ஓரளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டபோதிலும் இன்னமும் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவது ஏன்?
குஅந்தைகளை வைத்துக் கொண்டு இதுக்கு பயப்படுவது இன்னும் குறையவில்லை.
உணவு முறையில் என்ன சாப்பிடலாம்னு சொல்லுங்களேன்
ஈ மெயில் செய்தி:தினம் பச்சையாக வெங்காயம்,பூண்டு,மிளகு,கிராம்பு,துளசி சாப்பிடச் சொல்வது சரியா?
நன்றி டாக்டர்.மிகவும் பயனுள்ள பயம் போக்கும் இடுகை.
ஆனாலும் இதுவரை பன்றிக் காய்ச்சல் வந்து குணம் ஆனவர்கள் பற்றிய சேதியில்லை.
ஓரளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டபோதிலும் இன்னமும் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவது ஏன்?
குஅந்தைகளை வைத்துக் கொண்டு இதுக்கு பயப்படுவது இன்னும் குறையவில்லை.
உணவு முறையில் என்ன சாப்பிடலாம்னு சொல்லுங்களேன்
ஈ மெயில் செய்தி:தினம் பச்சையாக வெங்காயம்,பூண்டு,மிளகு,கிராம்பு,துளசி சாப்பிடச் சொல்வது சரியா?
நன்றி மருத்துவர் ஐயா..
Thank you doctor.
நல்ல தகவல் பரிமாற்றம் அன்பரே...எனக்கும் சளி என்பதைப்பற்றி சில சந்தேகங்கள் இருந்தது..இப்போது தெளிவாகிறது...
நன்றி அன்பரே....
நல்ல தகவல் டாக்டர். நன்றி.
--வித்யா
சந்தேகங்கள் மனதில் இருந்தாலும் யாரிடம் கேட்கலாம்னு இருந்தேன். நீங்களே சொல்லீட்டீங்க.
பன்னிகாய்ச்சல் உங்களுக்கு வராமல் இருக்க என் ஆசிர்வாதங்கள்..
அருமையான தகவல்கள். இரண்டிற்கும் இடையே உள்ள அடிப்படை வித்தியாசங்களை சொல்லி ஒரு awareness ஏற்படுத்தியதற்கு மிக்க நன்றி..
thanks doctor.
பயனுள்ள குறிப்புகள் மருத்துவரே .........
இப்போவெல்லாம் சின்ன சளி வந்தாலே அந்த பயம் வந்துடுது....
உங்க பதிவு படிச்சபிறகு நல்ல தெளிவு கிடைச்சிடுச்சி
தொடருங்க
பகிர்வுக்கு நன்றி
மிக மிக தேவையான ஒன்று...
பகிர்தலுக்கு நன்றி
நல்ல பகிர்வுக்கு நன்றி...
மிக்க நன்றி. நிம்மதிப் பெருமூச்சு விட்டேன் உங்கள் பதிவைப் படித்து. நேஹாவுக்கு நேற்று முதல் கடுமையான சளி, மூக்கடைப்பு. காய்ச்சல் இல்லை. டாக்டரிடம் காட்டி அவர் பயப்பட ஒன்றும் இல்லை என்று சொன்னாலும இப்போது உங்கள் பதிவைப் படித்துக் கூடுதல் நம்பிக்கை கொள்கிறேன்.
இரண்டு நாள் முன்பு எனக்கும் சளி கொஞ்சம் பயந்து விட்டேன்..நல்ல வேலை சரி ஆகி விட்டது :-)
உங்கள் இடுகை என் சந்தேகங்களை போக்கியது என்றால் மிகையில்லை
ஆகா -தகவல்களுக்கு நன்றி நண்பரே
ஓ.போ
I’m a new comer to your website and i actually value the excellent content and fantastic layout.â€,;-~
[url=http://srtisi.cfamedia.net]payday loans[/url]
payday loans
Post a Comment