பன்றிக்காய்ச்சல் வைரசானது மனிதனிலிருந்து தற்போது பறவையினத்துக்குப் பரவி வருகிறது. முதன் முறையாக இந்த வைரஸ் பறவைகளுக்குப் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
H 5 N 1 -வைரசானது பறவைக்காய்ச்சல் உண்டாக்கும் கிருமி! அது H 1 N 1- பன்றிக்காய்ச்சல் வைரசுடன் கலந்து விட்டால் அது மிகவும் அபாயகரமாக இருக்கும். ஏனெனில் பன்றிக்காய்ச்சலைவிட பறவைக்காய்ச்சலில் இறந்தோரின் எண்ணிக்கை அதிகம்.
பறவைகளின் முட்டை உற்பத்தி குறைந்ததை அடுத்து அவற்றைச் சோதித்துப் பார்த்ததில் அவை பன்றிக்காய்ச்சல் வைரசால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் ஜீன்கள் ஒன்றினைய முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஒரு பறவைக்கு இரண்டு வைரசும் தொற்றினால் இரண்டும் இணைந்து புதிய வைரஸ் உருவாக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறுகிறார் ஜே பட்லர் அமெரிக்க பன்றிக்காய்ச்சல் நிபுணர்.(Jay Butler, director of the H1N1 task force for the US Centres for Disease Control and Prevention in Atlanta.).
பன்றிக்காய்ச்சல் வைரஸ் மனிதனை மற்றும் தொற்றாமல் பறவைகள், பிற விலங்கினங்களைத் தொற்றுமாயின் அது இன்னும் பல மடங்கு பரவுவதற்கு வாய்ப்புள்ளது என்பதே கவலை தரும் விசயம். கனடாவில் மூன்று மாவட்டங்களிலும், அர்ஜெண்டினாவில் இரண்டு இடங்களிலும், ஆஸ்திரேலியாவில் மூன்று இடங்களிலும் பன்றிக்காய்ச்சல் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டாமிஃப்ளூ மாத்திரைக்கு கட்டுப்படாத பன்றிக்காய்ச்சல் வைரஸ்:.
oseltamivir என்ற டாமிஃப்ளூ மாத்திரைகளுக்கு சில பன்றிக்காய்ச்சல் வைரசுகள் அழிவதில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெக்சாஸ், மெக்ஸிகோவின் எல்லைப்புறத்தில் இருவருக்கு டாமிஃப்ளூ எதிர்ப்பு பன்றிக்காய்ச்சல் வைரஸ் தொற்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதல் உறுதிசெய்யப்பட்ட டாமிஃப்ளூ எதிர்ப்பு பன்றிக்காய்ச்சல் வைரஸ் டென்மார்க் நாட்டைச்சேர்ந்தவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் உடல் நிலை தேறிவருகிறது, மேலும் தற்போது அது அவரிடமிருந்து யாருக்கும் பரவவில்லை. இது போன்ற மாத்திரையை எதிர்க்கும் புதிய பன்றிக்காய்ச்சல் வைரஸ்கள் தோன்றுவது தடுக்கமுடியாதது.
இதனால் அமெரிக்க நோய் தடுப்புக்கழகம் டாமிஃப்ளூவுடன் Zanamivir (Relenza)என்ற ஃப்ளூ எதிர்ப்பு மருந்தையும் பரிந்துரை செய்துள்ளது!
Zanamivir (Relenza) கிளாக்ஸோ மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இது பயன்படுத்தப்படுகிறது. மாத்திரையாக இதனை உட்கொள்ளமுடியாது, ஆகையினால் இது உறிஞ்சும் பொடியாக விற்பனை செய்யப்படுகிறது!!
பன்றிக்காய்ச்சல் சம்பந்தமான இடுகைகள்!
1.பன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்
2.பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி புதிய தகவல்கள்!
16 comments:
தகவலுக்கு நன்றி தேவா!
மே மாதத்தில் என் பதிவில் போட்ட கார்ட்டூன் உண்மயாயிரும் போல இருக்கே.
http://kirukkugiren.blogspot.com/2009/05/blog-post.html
பயனுள்ள பதிவு. பகிர்தலுக்கு நன்றி!
அய்யய்யோ.....!! இந்த ரெண்டும் தனி தனியா வந்தாவே தாங்க முடியாது... இதுல இந்த ரெண்டுக்கும் டையப் கொலாப்ரேசன் வேறையா...!! இன்னும் கொஞ்ச நாள்ல டையப் கொலாப்ரேசன்ல எலி காச்சல் வைரஸ் , பாம்பு காச்சல் வைரஸ் ன்னு டிசைன்...டிசைனா சேரும் போல.....??
என்ன கொடும டாக்டர் இது.......???
//பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் ஜீன்கள் ஒன்றினைய முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.//
அய்யய்யோ
இரு ரொம்ப டேஞ்சரான மேட்டரா இருக்கே...
சிக்கன், முட்டையிலெட்டாம் இது பரவுமா சார்?
நல்ல தகவலுக்கு நன்றி.
ஐய்யய்யோ தாங்காதுடா சாமி..
நன்றி டாக்டர்....
தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி..!
முல்லை பெரியாறும் .. துரோகத்தின் வரலாறும்...!!
வாருங்கள் வந்து துரோகத்தை அறிந்து கொள்ளுங்கள் ...!!!
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியா இருக்கே. தகவலுக்கு நன்றி தேவா சார்
ரொம்ப கஷ்டம்தான் :((((
மிக்க நன்றி தேவா!
இன்னும் என்னா என்னா வரப்போகுதோ
ஏதாவது செய்யுங்க டாக்டர் சார்...
ஏதாவது செய்யுங்க டாக்டர் சார்...
இந்தியாவுக்கு அந்த மருந்து வந்துருச்சா!?
Post a Comment