அன்பின் வலை நண்பர்களே!! போன பதிவைப் படித்து பின்னூட்டமிட்ட நண்பர்கள் சில கேள்விகள் கேட்டுள்ளனர். அவற்றிற்கு சிறு விளக்கம் அளிக்கவே இந்தப் பதிவு!! போன பதிவைப் படிக்காதவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் படிக்கலாம்!
மூன்று மாதத்தில் உடலில் எவ்வளவு சக்கரை இருந்தது -ஒரு சோதனை!
அந்த சோதனையின் பெயர் Hb A1c
கேள்விகள்:
1.கேள்வி:
சீனா said... அன்பின் தேவன் மாயம்!
பயனுள்ள தகவல் - யாரெல்லாம் Hb A1c இச்சோதனை செய்து கொள்ள வேண்டும்? -
நான் மாதா மாதாம் பாஃஸ்டிங் - பீப்பி சோதனை செய்து கண்ட்ரோலில் இருப்பதாக திருப்தி அடைகிறேன். இச்(Hb A1c)சோதனையும் செய்து கொள்ள வேண்டுமா?
பதில்: மாதாமாதம் சாப்பிடாமல் சக்கரை பார்ப்பது நல்லதுதான். சாப்பிட்ட பின்னும் பார்க்க வேண்டும். குறிப்பாக மதியம் உணவுக்குப் பிறகு 2 மணி நேரம் கழித்துப் பார்க்கவேண்டும். அப்படிப்பார்த்தால் அது 140-160 க்கு மேல் இருந்தால் உணவுக்கட்டுப்பாடு தேவை. அல்லது மருத்துவரை அணுகவேண்டும்.
Hb A1c- ஒரு வருடத்துக்கு ஒரு முறை செய்து கொள்ளலாம்!
********************************************************************************
12 September 2009 19:3
2.மங்களூர் சிவா said...
டாக்டர் நல்ல தகவல். சாதாரணமாக செய்யப்படும் ப்ளட் குளுகோஸ் டெஸ்ட்டும் (randon) இதும் ஒன்றா வேறு வேறா?
சாதாரணமாக செய்யப்படும் ப்ளட் குளுகோஸ் டெஸ்ட்டும் (randon) இதுவும்(Hb A1c) வேறு வேறு!! HB A1c - என்பது இரத்த சிவப்பணுக்கள் மேல் ஒட்டி இருக்கும் சக்கரையைக் கணக்கிடுவது. அதாவது கடந்த மூன்று மாதங்களாக இரத்தத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இரத்த சிவப்பணு தன் மேல் எவ்வளவு சக்கரையைப் பூசிக்கொண்டுள்ளது என்பதனை அளப்பது!!
.வேறு எனில் இந்த டெஸ்ட்டுக்கு எவ்வளவு செலவாகும்?
இந்த சோதனைக்கு 250 லிருந்து 350 ரூபாய்வரை ஆகும்!
இதன் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?
1. ஏழு அல்லது 7க்குக்கீழ்- சக்கரை அளவு மிகச்சரியாக உள்ளது.
2. ஏழுக்கும் எட்டுக்கும் இடையில் - 7%-8%- பரவாயில்லை. 7க்கு குறைக்க வேண்டும்!
3.எட்டுக்கும் 10க்கும் இடையில்-இரத்தத்தில் சக்கரை மிக அதிகம்!
4.பத்துக்கு மேல்->10% - உங்கள் சக்கரை அளவு மிக மிக அதிகம்!!
சாதாரணமாக செய்யப்படும் ப்ளட் குளுகோஸ் டெஸ்ட்: (randon): இரத்தத்தில் சக்கரை பார்ப்பதென்பது அன்று அப்போது எவ்வளவு சக்கரை எவ்வளவு இரத்தத்தில் இருக்கிறது என்பதைக் கணக்கிடுவது!! இதன் அளவு கீழ்க்கண்டவாறு இருக்கும்!
இரத்தத்தில் சக்கரை சாப்பிடும் முன்: 80-110 இரத்தத்தில் சக்கரை சாப்பிட்ட பின்: 100-140
இதுதான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் !! நன்றி *************************************************************************************** .
3.அபுஅஃப்ஸர் said... //சோதனையின் பெயர் (Hb A1c) //
இதே பெயரை சொல்லி சோதனை செய்துக்கொள்ளனுமா?
சர்க்கரை அளவை 85 முதல் 110 வரை இருக்கலாம் என்று கால்குலேட் பண்ணி சொல்லுகிறார்கள்,
இதற்கு தாங்கள் சொன்ன அளவிற்கும் என்ன வித்தியாசம்? 13 September 2009 11:06
பதில்: ஆமாம்! அந்தப் (Hb A1c) பெயர் சொல்லியே செய்து கொள்ளலாம்!
சக்கரை அளவு ஏற்க்குறைய 85 முதல் 110 வரை இருக்கலாம் என்று சொல்வது அப்போது ஓடிக்கொண்டிருக்கும் இரத்தத்தில் எவ்வளவு சக்கரை கலந்துள்ளது என்பதைக்குறிக்கும்.
HbA1c என்பது கடந்த மூன்று மாதங்களாக இரத்தத்தில் இருந்த சக்கரை இரத்த சிவப்பணுமேல் எவ்வளவு ஒட்டியுள்ளது என்று தெரிந்துகொள்ள உதவும்!
12 September 2009 22:01
*************************************************
மேலும் சக்கரை நோய் இடுகைகள் படிக்க:
ரம்ஜான் நோம்பும் சக்கரை நோயும்!!
16 comments:
சிறந்த பதிவு சார்!
இதை போன்று மெடிக்கல் சம்பந்தமான பதிவுகளை தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இளவட்டம் said...
சிறந்த பதிவு சார்!
இதை போன்று மெடிக்கல் சம்பந்தமான பதிவுகளை தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
14 September 2009 01:36///
உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!!
மருத்துவம் பற்றிப் போட்டா பிளாக் காத்தாடுதே!!
மிகவும் பயனுள்ள தகவல் அன்பரே...சர்க்கரை நோயினைப்பற்றி இதுவரையில் எனக்கு அதிகம் தெரிந்ததில்லை...இப்போதுதான் தெரிந்துகொள்கிறேன்...நன்றி அன்பரே...
//உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!!
மருத்துவம் பற்றிப் போட்டா பிளாக் காத்தாடுதே!!//
சில நேரங்களில் அப்படி இருக்கலாம்...அதற்காக நல்ல தகவல்களை பகிர்ந்து கொள்ளாமல் இருக்கலாமா?
தங்களின் சேவை தொடரட்டும்....
voted 3/3
உங்களது சேவை மகிழ்ச்சி அளிக்கிறது டாக்டர். May God bless you.
முந்தைய இடுகையில் கேட்க்கப்பட்ட சந்தேகங்களுக்கு தெளிவாக பதில்களை ஒரு தனி இடுகையாக இட்டிருப்பது சிறப்பு. நன்றி தேவா சார்
சரி!சரி! உங்க பிலீங்க்ஸ் எனக்கு புரியுது.
என்ன பண்ண!
கலந்து கட்டி அடிங்க.
முன்கூட்டிய, 7 மணி நேரம் பின் தேதியிட்ட பிறந்த நாள் வாழ்த்துகள்!
க.பாலாஜி said...
மிகவும் பயனுள்ள தகவல் அன்பரே...சர்க்கரை நோயினைப்பற்றி இதுவரையில் எனக்கு அதிகம் தெரிந்ததில்லை...இப்போதுதான் தெரிந்துகொள்கிறேன்...நன்றி அன்பரே...
//உங்கள் கருத்தை வரவேற்கிறேன்!!
மருத்துவம் பற்றிப் போட்டா பிளாக் காத்தாடுதே!!//
சில நேரங்களில் அப்படி இருக்கலாம்...அதற்காக நல்ல தகவல்களை பகிர்ந்து கொள்ளாமல் இருக்கலாமா?
தங்களின் சேவை தொடரட்டும்....
voted 3/3
14 September 2009 02:15///
மிக்க நன்றி நண்பரே!
ஷஃபிக்ஸ்/Suffix said...
உங்களது சேவை மகிழ்ச்சி அளிக்கிறது டாக்டர். May God bless you.///
வாழ்த்துக்களுக்கு நன்றி!
S.A. நவாஸுதீன் said...
முந்தைய இடுகையில் கேட்க்கப்பட்ட சந்தேகங்களுக்கு தெளிவாக பதில்களை ஒரு தனி இடுகையாக இட்டிருப்பது சிறப்பு. நன்றி தேவா சார்
14 September 2009//
நவாஸ்! தொடர்ந்த உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி!
பழமைபேசி said...
முன்கூட்டிய, 7 மணி நேரம் பின் தேதியிட்ட பிறந்த நாள் வாழ்த்துகள்!
14 September 2009 04:40///
இது... என் பிறந்த நாள் எப்படித் தெரியும்! மிக்க நன்றி!
சந்தேகங்களுக்கு தெளிவான பதில் நன்றி
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
எல்லா வள்மும் பெற்று நீடுழி வாழிய பல்லாண்டு
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அய்யா.
தேவா சிர், நேற்று உங்கள் பிறந்தநாளா? தெரியாமல் போச்சே. பரவாயில்லை. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டாக்டர்
பகிர்வுக்கு மிக்க நன்றி தேவா சார்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும்!!
மிக்க நன்றி டாக்டர்.
Post a Comment