1.கொக்கைன்http://abidheva.blogspot.com/2010/02/blog-post_22.html
2.கீட்டமைன்http://abidheva.blogspot.com/2010/01/blog-post_24.html
3.ஜாகசனின் போதைhttp://abidheva.blogspot.com/2009/08/blog-post_24.html
4.குழந்தைகளை போதையிலிருந்து காக்கhttp://abidheva.blogspot.com/2009/07/blog-post_08.html
என் முந்தைய இடுகைகளில் போதைப் பொருட்களைப் பற்றியும் அவற்றின் தீய விளைவுகள் பற்றியும் கூறியுள்ளேன். அந்த வரிசையில் பெத்திடின் பற்றியும் பார்ப்போம்.
பெத்திடின்பற்றி அனைவரும் அறிந்திருப்போம். பெத்திடின் என்றால் போதைப்பொருள் என்றுதான் தோன்றும். உண்மையாக பெத்திடின் எதற்காகப் பயன்படுகிறது என்று பார்ப்போம்.
1.பெத்திடின் பொதுவாக எந்த வடிவில் கிடைக்கிறது?
பெத்திடின் பொதுவாக ஊசி மருந்தாகக் கிடைக்கிறது.
2.இது எந்த வகையைச் சேர்ந்தது?
ஓப்பியம் அல்லது அபின் வகையைச் சேர்ந்தது.
3.அபின் என்றால் என்ன?
அபினிச்செடியின் காயைக்கீறினால் ஒரு வித பால் வடியும். இதனைக் காய வைத்தால் கிடைக்கும் தூள் அபின்(OPIUM) எனப்படுகிறது.
4.அபின் காயின் விதைகள் போதைப் பொருளா?
இல்லை. அதற்கு கசகசா என்று பெயர். சமையலில் உபயோகிக்கிறோமே கசகசா அதுதான்.
5.பெத்திடினுக்கும் ஓப்பியத்துக்கும் என்ன தொடர்பு?
பெத்திடின் செயற்கையாக உருவாக்கப்படும் ஓப்பியம்.
6.பெத்திடினின் மருத்துவப்பயன்கள்?
- பித்தப்பை வலி
- சிறுநீரகக் கோளாறுகளால் ஏற்படும் வலி
- பிரசவகால வலி
- பெத்திடின் வலி நிவாரணியாக தற்போது குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படுகிறது.
6.பெத்திடினின் பக்க விளைவுகள் என்ன?
- மயக்கம், கிறுகிறுப்பு, போதை- இதற்காகவே இது போதைப்பொருளாக உபயோகப்படுத்தப்படுகிறது.
7.இதனை போதைப்பொருளாக உபயோகிப்போருக்கு ஏற்படும் விளைவுகள் என்ன?
- நடுக்கம்
- தசைத் துடிப்பு
- மனக் குழப்பம்
- வாய் உலர்ந்து போதல்
- இல்லாத உருவங்கள், சப்தங்களை உணரும் குழப்பமான நிலை.
- கை, கால் வலிப்பு
8.இந்தியாவில் போதைப் பொருள் உபயோகிபோரின் எண்ணிக்கை எவ்வளவு?
ஏறத்தாழ 5 மில்லியன் இந்தியர்கள் ஹெராயின் என்ற பிரவுன் சுகர் உபயோகிக்கிறார்கள்.(இதும் ஓபியம் வகையைச் சேர்ந்தது.).
9.பள்ளி, கல்லூரி மாணவர்களில் போதைமருந்தை உபயோகிப்போர் எவ்வளவு பேர்?
ஆந்திராவிலும் வங்காளத்திலும் 60% மாணவர்கள் போதை மருந்தை உபயோகிப்பதாக ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது.
போதை மருந்துகள் பற்றிய விபரங்களும் விழிப்புணர்வும் பெற்றோருக்கு அவசியம் தேவை. போதைப் பொருள் உபயோகிப்போர் எச்.அய்.வி, ஹெபடைடிஸ் ஆகிய நோய்களுக்கும் ஆளாகிறார்கள். இது தனி மனிதனை மட்டுமல்லாமல் குடும்பத்தையும், நாட்டின் எதிர்காலத்தையும் சீரழிக்கக் கூடியது.
இந்தக் கட்டுரையின் ஆரமபத்தில் கொடுக்கப் பட்டுள்ள சுட்டிகள் மூலம் போதைப்பொருள்கள் பற்றியும் அவற்றை உபயோகிக்கும் இளைஞர்களைக் கண்டறிவதுபற்றியும் அறியலாம்.
15 comments:
டாக்டர்....என்னமோ....என்னமாயமோ...தெரியல?உங்க பதிவ படிச்ச உடனே ......ஒரே கேந்தியா......ஒரு மாதி மயக்கமா இருக்கு டாக்டர்.
'மிகவும் சமுக அக்கறையுள்ளப் பதிவு.வாழ்த்துக்கள்
மதுரை சரவணன் நன்றி!
அன்பின் தேவன்மாயம்
அருமை அர்உமை - இடுகை நன்று - பகிர்வினிற்கு நன்றி
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
ஜெரி படித்ததற்கே இப்பையா?
சீனா அய்யா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு பெருமளவில் கடத்தப்படும் பொருள் இந்த கீட்டமைன்... அடிக்கடி செய்தித் தாள்களில் இதுதான் இடம்பெறுகிறது ...
நல்ல தகவல்கள் தேவா!
7ல் கடைசியை தவிர மற்ற எல்லாமே இருக்கே !!!
விளைவுகளைச் சொல்லியிருக்கிறீர்கள் தேவா.ஆனால் இந்த வேதனையான மயக்கத்தை விரும்பித்தானே இவற்றைப் பாவிக்கிறார்கள் !
சிங்கப்பூருக்குள்ள கசகசாவை ஏன் எடுத்துவரக் கூடாதுங்கிற காரணத்தை அறிந்து கொண்டேன்.
:)
3.அபின் என்றால் என்ன?
அபினிச்செடியின் காயைக்கீறினால் ஒரு வித பால் வடியும். இதனைக் காய வைத்தால் கிடைக்கும் தூள் அபின்(OPIUM) எனப்படுகிறது.
//////
ஓ அதான இது ?
///
4.அபின் காயின் விதைகள் போதைப் பொருளா?
இல்லை. அதற்கு கசகசா என்று பெயர். சமையலில் உபயோகிக்கிறோமே கசகசா அதுதான்.
///
அப்படியா .....
( கோவி.கண்ணன் said...
சிங்கப்பூருக்குள்ள கசகசாவை ஏன் எடுத்துவரக் கூடாதுங்கிற காரணத்தை அறிந்து கொண்டேன்.
:)
)
எல்லாம் எனக்கு புது தகவல்
மிகவும் உபயோகமான பதிவு...
useful sir..
மிகவும் உபயோகமான பதிவு.
உலகில் எத்தனை விழிப்புனர்வு வந்தாலும் படித்தும் பார்த்தும் எத்தனையோ பேர் இன்றும் இதற்க்கெல்லாம் எப்படியோ அடிமையாகி வாழ்வை குலைத்து கொள்கிறார்கள்.
நல்ல பதிவு.உங்களை எல்லார் ப்ளாக்கிலும் பார்க்கமுடிகிறது. நான் இன்று தான் இங்கு வந்தேன் நல்ல ப்ளாக்.
www.vijisvegkitchen.blogspot.com
Post a Comment