Friday 21 August 2009

செமென்யா ஆணா? பெண்ணா?

தென்னாப்பிரிக்க வீராங்கணை கேஸ்டர் செமன்யா

Caster Semenya of South Africa celebrates after she won the women's 800 metres final during the world athletics championships at the Olympic stadium in Berlin.

தென்னாப்பிரிக்காவின் கேஸ்டர் செமென்யா 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை செய்திருக்கிறார்.

உலகமே வியக்கும் வண்ணம் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 1:55.45 என்ற நேரத்தில் பெர்லினில் உலக சாதனை செய்திருந்தாலும் IAAF அவருடைய பாலினம் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளது. ஏனெனில் அவர் உடலில் ஆண் தன்மை ( மீசை போன்றவை, குரல்,தசை அமைப்பு) காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவில் இதற்கு போதிய வசதியில்லை என்று கூறப்படுகிறது. அதுவே இவ்வளவு குழப்பத்துக்கும் காரணம்.

ஏன் சோதனையில் குழப்பம்.?

பொதுவான விதி என்னவென்றால்

1. X X குரோமோசோம்கள் இருந்தால் ஆண்

2. X Y  குரோமோசோம்கள் இருந்தால் பெண்

ஆனாலும் இது பொதுதான். இதில் நிறையக் குழப்பங்கள் உள்ளன!! குழப்பங்களுக்குக் காரணம் அதிகமாகவோ,குறைவாகவோ சில குரோமோசோம்கள் சிலருக்கு பிறவியிலேயே இருந்துவிடுவதுதான். இப்படி அமைந்து விட்டால் ஆணா பெண்ணா என்று கண்டுபிடிப்பதில் குழப்பங்கள் ஏற்படுகின்றன.

ஆயினும் இந்த வீராங்கனையை வளர்த்த அவருடைய பாட்டி ”அவள் பெண்தான். இதில் சந்தேகம் ஏதுமில்லை” என்று உறுதியாகக் கூறுகிறார்.

தென்னாப்பிரிக்க ஒலிம்பிக் சங்கத்தலைவர் சாம் செமென்யா இப்படி நடத்தப்படுவதை கண்டணம் செய்துள்ளார். ஒரு மிகப்பெரிய போட்டியில் வெற்றி பெறும்போது இப்படி செய்வதற்கு எதிர்ப்புத்தெரிவித்துள்ளார்.

”அவர் அயராது பயிற்சியில் ஈடுபடுவார் என்றும் இந்தக்கல்லூரிக்கு வருமுன் அவருக்கு சரியான பயிற்சி கிடைக்கவில்லை” என்று கூறும் அவர் படிக்கும் பிரிட்டோரியா பல்கலைக்கழகம் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. 

பார்ப்பதற்கு வித்தியாசமாகத் தெரிந்தாலும் செமென்யாவின் தந்தை ”செமன்யா பிறக்கும்போது பெண்ணாகத்தான் பிறந்தார், வளர்ந்ததும் அப்படித்தான் என்று கூறுகிறார். அவள் பெண்தான்! இதனை நான் இலட்சம் முறை சொல்லுவேன்.தயவு செய்து என் மகளை விட்டுவிடுங்கள்” என்று உணர்ச்சிவசப்பட்டுக்கூறியுள்ளார்.

இது மருத்துவதுறையில் உள்ளோர், மரபணுத்துறையினர், எண்டோக்ரைன் சுரப்பி நிபுணர், என்று பலரும் சோதித்து முடிவு செய்யவேண்டிய விசயம். அதை போட்டிகளில் கலந்து கொள்ளும் முன்பே செய்திருக்கலாம்.

ஒருவர் போட்டிகளில் கலந்து கொள்ளும் முன் இதை சோதனை செய்யாமல் ,பதக்கம் வென்றவுடன்  சந்தேகப்படுவது, அந்த குறிப்பிட்ட வீரரின் மன நிலையை பாதிக்கும் என்பதே இதில் கவலைக்குரிய விசயம். 

28 comments:

*இயற்கை ராஜி* said...

//ஒருவர் போட்டிகளில் கலந்து கொள்ளும் முன் இதை சோதனை செய்யாமல் ,பதக்கம் வென்றவுடன் சந்தேகப்படுவது, அந்த குறிப்பிட்ட வீரரின் மன நிலையை பாதிக்கும் என்பதே இதில் கவலைக்குரிய விசயம். //

it discourages a lot..
(Sorry fr english)

தேவன் மாயம் said...

Blogger இய‌ற்கை said...

//ஒருவர் போட்டிகளில் கலந்து கொள்ளும் முன் இதை சோதனை செய்யாமல் ,பதக்கம் வென்றவுடன் சந்தேகப்படுவது, அந்த குறிப்பிட்ட வீரரின் மன நிலையை பாதிக்கும் என்பதே இதில் கவலைக்குரிய விசயம். /
ஆம உண்மைதான்!!

Ashok D said...

ரய்ட்டு.....

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அதிலும்; கறுப்பினம்; ஆசியரெனில் இன்னும் அதிகமாக ஆடுவார்கள்.
அவர் வெல்லுமுன் ஏன்? இந்த சந்தேகம் எழவில்லை.
இப்படி இம்சைப்பபடுத்தக் கூடாது.
இந்தியாவிலும் சாந்தி எனும் பெண்ணையும் இப்படியே வதைத்தார்கள்.

மங்களூர் சிவா said...

//ஒருவர் போட்டிகளில் கலந்து கொள்ளும் முன் இதை சோதனை செய்யாமல் ,பதக்கம் வென்றவுடன் சந்தேகப்படுவது, அந்த குறிப்பிட்ட வீரரின் மன நிலையை பாதிக்கும் என்பதே இதில் கவலைக்குரிய விசயம். //

கண்டிப்பாக :((

sri said...

Yeah neenga solradhu correct dhaan avangalukku romba kasthama dhaan erukkum

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சாந்தி செய்தி வ்சந்தபோது ஒரு பத்திரிக்கையில் படித்தேன்.

பெண்ணில்லை என்று பதக்கம் திரும்ப வாங்கப் பட்ட பெண் சில ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தையைப் பெற்றாராம்.

ஒரு பெண் தான் பெண்தான் என்பதை நிரூபிக்க இதைவிட என்னதான் செய்யமுடியும்.

மணிநரேன் said...

டாக்டர் தேவா...
நீங்கள் குறிப்பிட்டுள்ள பொதுவான விதி மாறியுள்ளது என நினைக்கிறேன். சற்று சரிபார்க்கவும்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ரைட் கிளிக் தடைச் செய்துவிட்டீர்கள் போல..,

ஒவ்வொருமுறையும் பின்னூட்டம்போட உங்கள் பக்கத்தைவிட்டு வெளியேற வேண்டி உள்ளது. மீண்டும் புதிதாக ஒருமுறை திறக்க வேண்டி உள்ளது.

வால்பையன் said...

முதலிலேயே சோதணை செய்ய வேண்டும் என்பதையே நானும் வழிமொழிகிறேன்!

Jerry Eshananda said...

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

நட்புடன் ஜமால் said...

கருப்பர்கள் என்றால் கொடுமை தான்

எது எப்பத்தான் நிக்குமோ

ப்ரியமுடன் வசந்த் said...

:(

வருத்தப்படக்கூடிய விஷயம் சார்

ப்ரியமுடன் வசந்த் said...

நம்ம ஊர்லயும் அமுதாவுக்கு அப்படித்தானே நடந்தது...

ரொம்ப பாவம் சார் அவங்க

முட்டாள் பசங்க ஆண்களும் பெண்களும் மட்டுமா இருக்கிறார்கள் அவர்களும் இருக்கிறார்கள்தானே அவர்களுக்கென்று தனியாவாவது போட்டி நடத்தலாம்

ப்ரியமுடன் வசந்த் said...

இந்த போட்டியில் வெற்றி பெற்ற்அ அந்த பெண் மற்ற பெண்களை வெற்றிகொண்டது பெருமைதான்.....

தேவன் மாயம் said...

D.R.Ashok said...

ரய்ட்டு.....///
ஒகே
----------------------------

21 August 2009 08:03
Delete
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அதிலும்; கறுப்பினம்; ஆசியரெனில் இன்னும் அதிகமாக ஆடுவார்கள்.
அவர் வெல்லுமுன் ஏன்? இந்த சந்தேகம் எழவில்லை.
இப்படி இம்சைப்பபடுத்தக் கூடாது.
இந்தியாவிலும் சாந்தி எனும் பெண்ணையும் இப்படியே வதைத்தார்கள்.///
உன்மைதான் யோகன்!!
----------------------------

தேவன் மாயம் said...

மங்களூர் சிவா said...

//ஒருவர் போட்டிகளில் கலந்து கொள்ளும் முன் இதை சோதனை செய்யாமல் ,பதக்கம் வென்றவுடன் சந்தேகப்படுவது, அந்த குறிப்பிட்ட வீரரின் மன நிலையை பாதிக்கும் என்பதே இதில் கவலைக்குரிய விசயம். //

கண்டிப்பாக :((//

உங்கள் வருகைக்கு நன்றி!

தேவன் மாயம் said...

Blogger Srivats said...

Yeah neenga solradhu correct dhaan avangalukku romba kasthama dhaan erukkum///

முதல் வருகைக்கு நன்றி !!!

தேவன் மாயம் said...

SUREஷ் (பழனியிலிருந்து) said...

சாந்தி செய்தி வ்சந்தபோது ஒரு பத்திரிக்கையில் படித்தேன்.

பெண்ணில்லை என்று பதக்கம் திரும்ப வாங்கப் பட்ட பெண் சில ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தையைப் பெற்றாராம்.

ஒரு பெண் தான் பெண்தான் என்பதை நிரூபிக்க இதைவிட என்னதான் செய்யமுடியும்.///

அப்படியா சுரேஷ்!! அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்

தேவன் மாயம் said...

மணிநரேன் said...

டாக்டர் தேவா...
நீங்கள் குறிப்பிட்டுள்ள பொதுவான விதி மாறியுள்ளது என நினைக்கிறேன். சற்று சரிபார்க்கவும்.//

இது கொஞ்சம் பெரிய வேலை.

தேவன் மாயம் said...

SUREஷ் (பழனியிலிருந்து) said...

ரைட் கிளிக் தடைச் செய்துவிட்டீர்கள் போல..,

ஒவ்வொருமுறையும் பின்னூட்டம்போட உங்கள் பக்கத்தைவிட்டு வெளியேற வேண்டி உள்ளது. மீண்டும் புதிதாக ஒருமுறை திறக்க வேண்டி உள்ளது.///

கஷ்டமா இருந்தா எடுத்துவிடுவோம்.

தேவன் மாயம் said...

வால்பையன் said...

முதலிலேயே சோதணை செய்ய வேண்டும் என்பதையே நானும் வழிமொழிகிறேன்!..///

வரவேற்கிறேன் வால்ஸ்!!

தேவன் மாயம் said...

Delete
Blogger பிரியமுடன்...வசந்த் said...

:(

வருத்தப்படக்கூடிய விஷயம் சார்

21 August 2009 11:14
Delete
Blogger பிரியமுடன்...வசந்த் said...

நம்ம ஊர்லயும் அமுதாவுக்கு அப்படித்தானே நடந்தது...

ரொம்ப பாவம் சார் அவங்க

முட்டாள் பசங்க ஆண்களும் பெண்களும் மட்டுமா இருக்கிறார்கள் அவர்களும் இருக்கிறார்கள்தானே அவர்களுக்கென்று தனியாவாவது போட்டி நடத்தலாம்

21 August 2009 11:16
Delete
Blogger பிரியமுடன்...வசந்த் said...

இந்த போட்டியில் வெற்றி பெற்ற்அ அந்த பெண் மற்ற பெண்களை வெற்றிகொண்டது பெருமைதான்.....///

கருத்துக்கள் பிரமாதம். கொஞ்சம் முன்பே சோதித்திருக்கலாம்!!

குடந்தை அன்புமணி said...

//ஒருவர் போட்டிகளில் கலந்து கொள்ளும் முன் இதை சோதனை செய்யாமல் ,பதக்கம் வென்றவுடன் சந்தேகப்படுவது, அந்த குறிப்பிட்ட வீரரின் மன நிலையை பாதிக்கும் என்பதே இதில் கவலைக்குரிய விசயம். //

//ஒருவர் போட்டிகளில் கலந்து கொள்ளும் முன் இதை சோதனை செய்யாமல் ,பதக்கம் வென்றவுடன் சந்தேகப்படுவது, அந்த குறிப்பிட்ட வீரரின் மன நிலையை பாதிக்கும் என்பதே இதில் கவலைக்குரிய விசயம். //

நிச்சயமாக மனநிலை பாதிக்கத்தான் செய்யும்.

சப்ராஸ் அபூ பக்கர் said...

///அதை போட்டிகளில் கலந்து கொள்ளும் முன்பே செய்திருக்கலாம். ஒருவர் போட்டிகளில் கலந்து கொள்ளும் முன் இதை சோதனை செய்யாமல் ,பதக்கம் வென்றவுடன் சந்தேகப்படுவது, அந்த குறிப்பிட்ட வீரரின் மன நிலையை பாதிக்கும் என்பதே இதில் கவலைக்குரிய விசயம். ///

பொதுவாக போட்டிகளில் அதிகமாக நடக்கின்ற விடயம் தான் இது. ஏதாவது சாதித்து விட்டால் அவரிடம் எந்த இடத்தில் பிழை தேடலாம் என்பதே அது...

இங்கேயும் அப்படித் தான் இல்லையா? பொறுத்திருந்து பார்ப்போம்.....

S.A. நவாஸுதீன் said...

ஒருவர் போட்டிகளில் கலந்து கொள்ளும் முன் இதை சோதனை செய்யாமல் ,பதக்கம் வென்றவுடன் சந்தேகப்படுவது, அந்த குறிப்பிட்ட வீரரின் மன நிலையை பாதிக்கும் என்பதே இதில் கவலைக்குரிய விசயம்.

சரியாச் சொன்னீங்க டாக்டர்.

மணிநரேன் said...

//தேவன் மாயம் said...
இது கொஞ்சம் பெரிய வேலை.//

புரியவில்லையே??

தேவா...நான் குறிப்பிட்டது
//பொதுவான விதி என்னவென்றால் 1. X X குரோமோசோம்கள் இருந்தால் ஆண் 2. X Y குரோமோசோம்கள் இருந்தால் பெண்//

இதைப்பற்றித்தான்.

XX பெண்; XY ஆண் தானே விதி.

ஆ.ஞானசேகரன் said...

//ஒருவர் போட்டிகளில் கலந்து கொள்ளும் முன் இதை சோதனை செய்யாமல் ,பதக்கம் வென்றவுடன் சந்தேகப்படுவது, அந்த குறிப்பிட்ட வீரரின் மன நிலையை பாதிக்கும் என்பதே இதில் கவலைக்குரிய விசயம். //

வழிமொழிகின்றேன்

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory