’அன்புடன் வசந்த்’
மிக்க அன்புடன் எனக்கு ஒரு தேவதையை அனுப்பியிருக்கிறார்!!
அவருடைய தளத்திலிருந்து:
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எல்லாருக்கும் மிகப்பெரிய ஆசைகள் கனவுகள் இருக்கும் அது சில சமயம் நிறைவேறாமல் போயிருக்கலாம்.
அந்த ஆசைகளை நிறைவேற்றும் விதமாக உங்கள் கண் முன்னாடி ஏஞ்சல் எனும் தேவதை உங்களிடம் பத்து வரங்கள் தருகிறது . நீங்கள் அதனிடம் என்ன வரம் கேட்பீர்கள்?
இந்த தேவதையை இப்போ ஒரு நாலு பேரோட ஆசைகளை நிறைவேற்ற அனுப்பிவைக்கிறேன் அவர்கள் ஆசையும் நிறைவேறுவதாக.....
1.குழந்தைநிலா ஹேமா
2.தமிழ்துளி தேவா சார்
3.திருமதி.மேனகா சத்யா
4.மனவிலாசம் S.A.நவாஸுதீன்
தொடருங்கள் நண்பர்களே!!”
என்று சொல்லியிருக்காரு நம்ம வசந்த்!!! செய்வோமே!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
1. மாயாவி போல் மறையும் வரம்!!
.என்னடா இவன் இப்படி ஒரு வரம் கேட்கிறானே! என்று யோசிக்கிறீங்களா? சும்மா இல்லீங்கோ!
மாயாவியா பாஸ்போர்ட் இல்லாமல் பிளேட் ஏறி! (இஃகி! இஃகி) ..........நோ ஜோக்ஸ்! பீ சீரியஸ்!!
கொழும்பில் இறங்கி மகிந்த பட்சே மற்றும் அவனுடைய மந்திரிகள் அனைவரையும் என் கையால் கொல்ல வேண்டும்.
*************************************************
2.சூப்பர்மேன் போல் பறக்கும் வரம்!!...
சூப்பர் மேன் கணக்கா ஆகாயத்தில் பறந்து உலகம் பூரா வேலை செய்யும் தமிழர் எல்லாருடைய வீட்டுக்கும் செல்ல ஆசை!( உள்ளே விடுவாங்களா?)
*************************************************
3.ஆபுத்திரன் கை அமுத சுரபி!!-
.மணிமேகலையில் வரும் அமுத சுரபிப் பாத்திரம் வேண்டும்!! நான் தான் சூப்பர் மேனாச்சே! அனைவரும் பசியில்லாமல் வாழ்க!.
*************************************************
4.ஞானப்பால்!! ஞானப்பால் குடிச்ச மாணிக்கவாசகர் தமிழ்ப் பாட்டாக் கொட்ட ஆரம்பிச்சாருங்க! இந்தப்பாலை உலகமெங்கும் வாழும் தமிழ் தெரியாத தமிழ் மக்களின் வாயில் ஊற்ற ஆசை!
*************************************************
5.டார்சான் ...டார்சான் பாத்து இருப்பீங்க! கவலையே இல்லாமல் காட்டில் சுத்தித் திரிவான்! மிருகமெல்லாம் நண்பர்கள்! என்ன ஜாலி! மாதம் ஒரு நாள் டார்சானாக் காட்டுக்குள் திரிய ஆசை!
*************************************************
6.ஆகாய கங்கை!..
ஈசனின் தலயில் இருக்கும் ஆகாய கங்கை! பறந்து போய் சென்னை முதல் எல்லா தண்ணித் தொட்டியிலும் தினமும் ரொப்பிவிட ஆசை! குளிக்காத ஆட்டோ டிரைவர், முதல் பஸ் பயணிவரை ஸ்பாட்டிலேயே தலையில் தண்ணி ஊற்றிவிட ஆசை!
************************************************* 7.லில்லி புட்!.
.குட்டியாக மாறி எறும்புடன் அதன் புற்றுக்குள் போய் நட்புக்கொண்டு ஒரு நாள் அதனுடன் வாழ ஆசை!
*************************************************.
8.என் மனைவியே அத்தனை ஜென்மத்திலும் மனைவியாய் வர..இது ரொம்ப தன்னலமான வரம்தான்! பத்து வரத்தில் ஒன்னு சொந்த உபயோகத்துக்கு... வீட்டுக்கு பயந்து இந்த வரம் கேட்கிறேன்னு நினைகிறீங்களா? சேச்சே!!
*************************************************
9.2000 ஹிட் பெறும் வரம்!.ஒவ்வொரு பதிவு போடும் போதும் 2000 ஹிட் கிடைத்து இஃகி! இஃகி! இஃகி!! ஜாலியா இருக்கும் வரம்!
*************************************************
10.இறந்தவருக்கு உயிர் தரும் வரம்!இந்த வரத்தை வைத்து ஈழத்தில் இறந்த அத்தனை தமிழ்த்தலைவர்களையும், அத்தனை தமிழ் மக்களையும் உயிர்ப்பிக்க ஆசை!
*************************************************